நானும் அவரும் ஒரே இடத்தில்தான் வேலை செய்றோம். ரொம்ப நாளா அவரோட பேரு கூட எனக்கு சரியாத் தெரியாது. அவருக்கு வயது ஒரு 45-50 இருக்கலாம். தலையில் நெறையா முடியிருக்கும், பெரிய தொப்பை இருக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்குப் பிறகு அவர் பெயர் "ஸ்டீவ்"னு தெரிஞ்சுக்கிட்டேன். ஏனோ தெரியலை, "ஹால்வே"ல அவரைப் பார்க்கும்போது, அவரிடம் நான் பேசுவதுண்டு. "பேஸ் பால்" பத்தி பேச ஆரம்பிச்சுட்டா அவர் பேசிக்கிட்டே இருப்பாரு. ஏதாவது ஆரம்பிச்சுவுட்டுட்டு அவரைப் பேச விட்டுட்டு கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஆமா "ஸ்டீவ்" ஒரு "வைட் அமெரிக்கன்" தான். அவரை ஹாலில் பார்த்துவிட்டால் ஏதாவது "பேஸ் பால்" பத்தி நிச்சயம் பேச ஆரம்பிப்பேன். அவர், எனக்கு கரண்ட் அப்டேட் கொடுத்துருவாரு!
இந்தவாட்டி பேசும்போது "ஸ்டீவ்" க்கு, ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணும், ஹைஸ்கூல் சீனியர் படிச்சுக்கிட்டு இருக்கும் ஒரு பையனும் உண்டு என்றார். அந்த பையனை நான் பார்த்து இருக்கேன், "உங்க பொண்ணு என்ன பண்றா?' என்று கேட்டதும், "பொண்ணு கல்லூரியில் ஃப்ரெஷ்மேன், "ஆக்ர்க்கிடெக்ட் படிக்கிறா" அவ "ரொம்ப ஸ்மார்ட்" நல்ல கல்லூரில படிக்கிறாள் என்றார் பெருமையுடன். "பையன் கொஞ்சம் வேற மாதிரி இருக்கான் . "கார், ஆட்டோமொபில்" ல இண்டெரெஸ்ட் ஜாஸ்தியா இருக்கு. மெக்கானிக்கா வந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு $70 சம்பாரிக்கலாம். என்ன வேலைனா என்ன? பிடிச்சு பண்ணனும்"னு சொன்னார், ஸ்டீவ்.
அடுத்து திடீர்னு "உனக்கு என் எக்ஸ் மனைவி தெரியும்ல?" என்றார். "இல்லையே, தெரியாது"னு சொன்னேன். இங்கேதான் "பார்மக்காலஜி" டிவிஷன்ல இருக்கா இல்ல? லாரென்? தெரியாது? நீ கட்டாயம் பார்த்து இருப்ப" என்றார். எனக்கு "யாருனு தெரியலை"னு அதோட விட்டுட்டேன்.
இவரோட "எக்ஸ் வைஃப்பும்" இங்கேதான் பக்கத்திலேயே இருக்காரா!னு ஆச்சர்யத்துடனும் யோசனையுடனும் போயி "வெப் சைட்" ல தேடிப்பார்த்தேன். அவங்க படம் வந்தது. ஆமா நான் அவங்களப் பார்த்து இருக்கேன். "ஓ இவங்கதான் அவரோட "எக்ஸ்"ஸா!" னு அதிசயமா இருந்துச்சு. இந்தம்மா, லாரென், ஒரு மாதிரி வித்தியாசமா இருப்பாரு. யாரோடையும் ரொம்ப பேசுறமாரித் தெரியாது. ஆக, கணவர், ஸ்டீவு ம், எக்ஸ் ஃவைப் லாரெனும் பக்கதிலேயே வேலை செய்துகொண்டு இருக்காங்களா?னு அதிசயமா இருந்துச்சு.
****
இதுக்கிடையில் கெமிக்கல் எல்லாம் டெலிவர் பண்ணுறதுக்குனு "ஸ்காட்"னு ஒருத்தர் இருப்பாரு. பயங்கர குண்டா, தலையை கம்ப்ளீட்டா ஷேவ் பண்ணி இருப்பாரு நம்ம ஸ்காட்.இவருக்கும் ஸ்டீவ் வயசுதான் இருக்கும். சும்மா இவரோடயும் ஏதாவது ஃபுட்பால், பேஸ் பால் பத்தி பேசுவதுண்டு.
அடுத்த நாளோ என்னமோ நான் "ஸ்காட்"டிடம் பேசும்போது, "நம்ம ஸ்டீவோட எக்ஸ் வைஃப் இவர்தானாமில்லை?. எனக்கு இவ்ளோ நாளாத் தெரியாது. நல்லவேளை அவரே சொல்லிட்டாருனு " சொன்னேன்.
உடனே, ஸ்காட், "ஆமா, வருண், ரொம்ப கவனமாகத்தான் யாரைப்பத்தியும் பேசனும். யாருக்கு யாரு சொந்தம்னு நமக்கு தெரியாது"னு சொல்லிட்டு, You know who she ( லாரென்) is married to now?னு கேட்டாரு. "இல்லையே தெரியாது, ஸ்காட்" னு சொன்னேன். உடனே ஸ்காட், "நம்ம "மாத்யூ(மேட்)" தெரியுமில்லை? நைட்ரஜன், ஹைட்ரஜன் சிலிண்டர் எல்லாம் டெலிவெர் பண்ணுவாருல்ல? அவரைத்தான் இந்தம்மா, லாரென், இப்போ கல்யாணம் பண்ணியிருக்கு!" என்றார். அப்போ ஸ்டீவ்? னு கேட்டேன். இல்லை ஸ்டீவ் மறுகல்யாணம் செய்யலை! னு சொன்னாரு.
மேத்யூ என்கிற "மேட்"டையும் எனக்கு நல்லாத் தெரியும். "மேட்"டும் அதே "ஏஜ் க்ரூப்"தான் ஆனால் ரொம்ப "ஃபிட்"ட்டா பார்க்க கொஞ்சம் "ரஃப்"பா இருப்பாரு. இவரும் தலையை முழுவதும் ஷேவ் பண்ணிட்டு நம்ம சிவாஜி மொட்டை பாஸ் ரஜினி மாரித்தான் இருப்பாரு!
பொதுவாக என் கோ-வொர்க்கர்ஸ் தவிர்த்து பேசுற அளவுக்கு தெரிஞ்சவங்களே ரொம்ப ரொம்ப கம்மி. என்ன காரணம்னு தெரியாது, இவங்க மூனு பேரோடையும் (ஸ்டீவ், ஸ்காட் & மேட்) தனித்தனியா ஏதாவது ஸ்போர்ட்ஸ் பத்தி பேசுவேன். எனக்குத் தெரிந்த அந்த மூனு பேருல, ஒருவர் (ஸ்டீவ்) மனைவியை இன்னொருவர் (மேட்) மணந்து (மறுமணம்) இருப்பதாக மூனாமவர் (ஸ்காட்) சொல்றாரு!!! அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியடைந்தேன்.
"Small world"(மிகச்சிறிய உலகம் இது) னு இதைத்தான் சொல்லுவாங்க. :)
Thursday, August 30, 2012
Tuesday, August 28, 2012
இங்குமா இந்து முஸ்லிம் கலவரம்?!
பதிவுலகில் இன்றைய "ட்ரெண்ட்" என்னனா இஸ்லாமியப் பதிவர்கள் "பதிவுலக
ஆக்கிரப்பை" கட்டுப் படுத்தனும்னு ரொம்பப்பேரு சீரிஸாக போராடுராங்க. வேடிக்கையான போராட்டம் இது! ஒரு பதிவர் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் அந்தப் பதிவருக்கு தொடர்ந்து எதிர் கருத்து தெரிவிச்சால், அந்தப் பதிவரை நேரில் சந்திக்கும்போது உங்களுக்கு கஷ்டமா/பயம்மா/சங்கோஜமா இருக்குமா? அப்போ தொடர்ந்து எதிர் கருத்து சொல்லும் அவர் உங்க எதிரியா? அப்போ ரெண்டு நல்லவங்களுக்குள்ளே நூறு விழுக்காடுகள் கருத்துவேறுபாடுகள் வராதா?
"இவன் நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுவான், மாற்றுக் கருத்து சொல்லுவான் இவனை நேரே சந்திக்கும்போது என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!" என்கிற ஐயம் எல்லாம் வருமா உங்களுக்கு? அப்போ நீங்க இன்னும் "மனவளர்ச்சி" அடையவில்லை! அப்படித்தானே?
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லைனு சொல்லிக்கிட்டு அதைப் பத்தி எந்னேரமும் விமர்சிக்கிற பெரியமனிதர்களை என்ன சொல்லுவது? :) இந்தப் "போராட்டத்தால்" ஒரு சில தரமான பதிவர்களும் தரம் குறைய ஆரம்பிச்சுட்டாங்க என்பது உண்மை.
"அஞ்சா சிங்கம்" னு ஒருவர், ஒரு இஸ்லாமியர் பதிவை/அவர் சொன்ன கருத்தை எதிர்த்துப் போராட/விவாதிக்க ஒவ்வொரு தளமாக சென்று அந்தப் பதிவுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அழைப்புப் பின்னூட்டமிட்டு அந்தந்த ஏரியா சண்டியர்களை அழச்சுட்டுப்போயி அந்த இஸ்லாமியப் பதிவர் தளத்தில் வாதாடுகிறார். இதெல்லாம் வேடிக்கையாக இல்லையா? ஒரு பதிவில் உள்ள கருத்து பிடிக்கலைனா நீங்க, உங்க கருத்தை சொல்லலாம். அதை விட்டுப்புட்டு உலகறிய ஆட்களை சேர்த்துட்டுப் போறதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் இல்லையா? என்னவோ போங்கப்பா!
ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)

Thursday, August 23, 2012
பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!
# முகம் தெரியாத "மனிதாபிமானி" வரப்போகும் பதிவர் கூட்டத்தில் மது நுழைந்துவிடுமோ? என்கிற கேள்விக்குறியை பெரிதாக்கி, சில பதிவர்கள் "பொதுவில் உலகறிய" செய்த "தனிப்பட்ட" உரையாடலை "படமெடுத்து"ப் போட்டு ஒரு கலகத்தை ஆரம்பித்துள்ளார். ஏன் இந்த தேவையில்லாத பயம்? என்ற கேள்வி கேட்கலாம் என்று போனால், ஈரோட்டில் நடந்த சந்திப்பில் பதிவர்கள் குடித்துவிட்டு கூட்டத்துக்கு வந்ததாக ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறார்.
உடனே, இஸ்லாமிய மதத்தவரை மிகவும் ம(மி)திக்கும் ஒரு பொதுநலவாதிப் பதிவர், பதிவர் ஒருவர் அடிக்கடி மகுடப்பதிவர் ஆவதால் ஏற்பட்ட பொறாமையில் அவரை கவிழ்த்தவே மனிதாபிமானி இந்தப் பதிவு எழுதியதாக சொல்லிப் பதிவு போடுகிறார் .
அடுத்து ஹலால் பீர் பற்றி ஒரு விவாதம். இப்படி தொடர்ந்து போயிக்கிட்டே இருக்கு!
சரி, # இந்த மனிதாபிமானி யாராக இருக்கட்டும், அவர் மதவாதியோ இல்லைனா நாத்திகரோ, அவருக்கு ஒரு முகமோ, இல்லை பல முகங்களோ, எப்படிவேணா இருக்கட்டும். அவர் பதிவில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது..
* பதிவர் சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்கள், சந்திப்புக்கு முன்னாலும், சந்திப்பின் போதும், அல்கஹாலை தவிர்க்கலாமே?
* அப்படி மது குடிக்கனும்னா, சந்திப்பு முடிந்த பிறகு மது அருந்த விரும்புபவர்கள் ஒன்றுகூடி வேறொரு இடத்தில் மது அருந்தலாமே?
* அதேபோல், பதிவர் சந்திப்பின்போது யாரும் தன் மதம் பற்றி, அதன் உயர்வு பற்றியும் பேசுவதில்லை, பேசமாட்டார்கள் என நம்புகிறேன்.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்குமாமே? :)
---------------
# "மனிதாபிமானி" முகம் தெரியாதவர் என்று சொன்னது என் தவறு..
பின்னூட்டம் 2

- Aashiq Ahamed said...
- உங்கள் மீது அமைதி நிலவுவதாக,
வருண்,
மனிதாபிமானி தளம் பலரால் எழுதப்படும் தளம். நான் அந்த பதிவை எழுதியதால் நன்றி என்று என் பெயர் பதிவின் இறுதியில் போடப்பட்டுள்ளது. ஆக, பதிவை எழுதியது முகம் தெரியா ஆள் என்பது சரியல்ல.
மற்றப்படி உங்கள் பதிவோடு ஒத்துப்போகின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
பதிவர் கூட்டம்,
பதிவர் பஞ்சாயத்து
Wednesday, August 22, 2012
ராமலக்ஷ்மியின் முத்துச்சரம்! தளவிமர்சனம்
இன்றைய காலகட்டத்தில் வலைதளத்தில் எழுதுவது மிகவும் எளிதான காரியம். இன்று யாரு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வலைதளம் ஆரம்பிச்சு எழுதித்தள்ளி பலருடன் நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அரைகுறைத் தமிழில் என்னைப்போல பல எழுத்துப்பிழைகளுடன், கருத்துப்பிழைகளுடன் உப்புப்பெறாத சினிமா பற்றி எழுதலாம், உலக நடப்புகளை எங்காவது படித்து வந்து எழுதலாம், என்றுமே தீராத மதப் பிரச்சினை, அழியாத சாதிப் பிரச்சினை இத்யாதி இத்யாதி என்று யாரு வேணா பதிவுகள் எழுதலாம். அதானால்தான் ஆயிரக்கணக்கான தமிழ் வலைதளங்கள் வந்துகொண்டும், நின்று நிலைக்காமல் வந்த சில ஆண்டுகளில் மறைந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால்...
என்ன ஆனால்???
ஒரு தரமான வலைபூ ஆரம்பித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதும் ஒவ்வொரு பதிவிலும் வலைதளத்தின் தரம் குறையாமல் மிகுந்த சிரத்தையுடன், பொது நோக்குடன், தன் சிந்தனைகளை அழகாக கவிதை, கதைகள் வடிவில் சொல்லி வருவது கடினம். மேலும் அப்படி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது, யாரு மனதையும் புண்படுத்தாமல், வலையுலகில் தன் வாசகர்களின் நட்பை ஒருபோதும் இழக்காமல், பல ஆண்டுகள் வலையுலக ராணிபோல் வலம் வருதுவது ரொம்ப ரொம்ப கடினமான விடயம். நிலையாமை, "தரம் குறையாமை" தான் பலருக்கு பெரும் பிரச்சினை. ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் வலைதளம் அந்த "அரிதான" காலப்போக்கில் தரம் குறையாமல் உயர்தரமாகவே நிலைத்து நிற்கும் வகையைச் சேரும்.
* பொதுவாக ஒரு வலைதளத்துக்கு சென்று ஒரு பதிவை படிக்க வேண்டுமேனு சரியாக்கூடப் படிக்காமல் "நல்ல பதிவு" னு ஒப்புக்கு சொல்லிட்டு, த ம 1 அல்லது த ம நாலுனு ஓட்டுப்போட்டுட்டு போகவும் செய்யலாம். "பதிவை படிச்சானோ இல்லையோ "நல்ல பதிவு"னு சொல்லிட்டு போகிறார்" னு சொல்லும் "குற்றச்சாட்டு"க்கு பயந்து நான் பதிவைப் படித்துவிட்டு "நல்ல பதிவு" னு ஒரு வரி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் தயங்குவேன். ஆனால், முத்துச்சரத்தில் வருகிற கதையோ அல்லது கவிதையோ வாசிக்கும்போது, பல தருணங்களில் உண்மையிலேயே குறை எதுவுமே இல்லாமல், குறை சொல்ல முடியாமல் இருக்கும் அந்தப் பதிவு. அதில் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு, முழுமனதுடன் "நல்ல பதிவு" னு ஒரே வரிசொல்லனும்னு பலதடவை எனக்கு தோன்றியுள்ளது.
* நீண்டகாலமாகவே நான் முத்துச்சரம் தளம் சென்று பின்னூட்ட மிடுவதில்லை! காரணம் என்னனு கேட்டீங்கனா.. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க! என் போல "ரெப்யுட்டேஷன்" உள்ளவர்கள் பின்னூட்டங்கள் முத்துச்சரத்தில் வந்தால், மோசமான "ரெப்யுட்டேஷன்" உள்ள என்னால் முத்துச்சரம் தரம் குறைந்துவிடுமே என்கிற ஐயம்தான் காரணம். இதென்ன, புரியலையேனு சொல்றீங்களா? புரியலைனா விட்டுடுங்க!
ஆமா, இப்போ என்ன திடீர்னு ஒரே ஒரு வலைதளத்தை, அதுவும் ராமலக்ஷ்மியின் முத்துச்சரத்தை மட்டும் எடுத்து விமர்சனம்? நெறையவே நல்ல தளங்கள் முத்துச்சரத்துக்கு இணையாக இல்லையா?னு கேட்கிறீங்களா?
என்னுடைய முந்தைய பதிவில் நடத்திய புதிர் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அவங்க எதிர்பார்க்காத பரிசு கொடுக்கப்படும்னு சொல்லியிருந்தேன். வெற்றிபெற்றவர்களில் ஒருவர், திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள்! நான் சொன்னதுபோல, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உண்மையான பரிசு, முத்துச்சரம் பற்றிய என்னுடைய உண்மையான இந்த விமர்சனம்தான்! :)
நன்றி, வணக்கம்! :)
பி கு: அடுத்து இன்னொரு "வின்னரான" "ஹாரிபாட்டரு"க்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்...யோசிச்சுக்கிட்டே இருக்கேன்..

Tuesday, August 21, 2012
பிரபல புகைப்படப் புதிர்!!! முந்துங்கள்!
இதில் ஐந்து பெரிய பிரபலங்களுடைய புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இவரகள் யாருனு சொல்லனும், அம்புட்டுத்தாங்க!
5 பேரையும் சரியா கண்டுபிடிச்சுட்டா, நீங்க நெனச்சே பார்க்காத பரிசு கிடைக்கும்!

புகைப்படம் 1 |
புகைப்படம் 2 |
புகைப்படம் 3 |
புகைப்படம் 4 |
புகைப்படம் 5 |
Friday, August 17, 2012
கிருஷ்ணனை அழச்சுண்டு வந்து ஒப்பாரிவைக்கும் ஓசை!
என்னவோ ஓசைனு வலைதளம் வச்சு நடத்துற இவரு யாருனு தெரியலை! பாவம் இவரை தி க காரங்க ரொம்பத்தான் பதபதைக்க வச்சுப்புட்டாங்க போலயிருக்கு, படுபாவிகள்! சரி, ரொம்பவும் தி க காரர்கள் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டு புலம்பும் இவரு என்னதான் சொல்ல வர்ராரு, இவருக்கு நியாயம் எதுனு தெரியுதானு கவனமாகப் பார்ப்போம்!
ஆமா எதுக்கு இந்த பட்டிமன்றம் என்கிற பேரில் நடத்துற இந்த ஒப்பாரியெல்லாம்?
உங்க திருட்டு பகவானை, பொம்பள பொறுக்கினு தி க காரனுக கேவலப்படுத்திப்புட்டானுகளேனு ரொம்ப கோபமாகி இப்படி ஒப்பாரி வைக்கிறீங்களாக்கும்?
பகுத்தறிவாளன் அயோக்கியன்னு சொல்வதால், பகவான் செஞ்ச அயோக்கியத்தனம் எல்லாம் சரியாகிவிடாது! அது ஏன் உங்களுக்கு புரியமாட்டேன்கிது?
அப்புறம் உங்கள மாரி ஆத்திகர்கள் மட்டும்தான் யோக்கியர்கள் என்பதுபோல் அவர்களை மட்டும் விட்டு விட்டு பகுத்தறிவாளன்னு சொல்றவனுக செய்ற அயோக்கியத்தனத்தை மட்டும் பேசுவது நீங்க செய்ற பச்சை அயோக்கியத்தனம்!
உங்க மேலே தப்பில்லை! உங்க பதிவை நான் வாசிக்க வந்தேன் பாருங்க என்னை என்ன செய்யலாம்?
என்ன ஓசையோ என்ன எழவோ ஒரே ஒப்பாரி ஓசையாத்தான் இருக்கு!
---------------------------------------------------
வெண்ணை திருடியவனும் தேனை நக்கியவனும்..
///* கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின தினம், பகுத்தறிவு ஏடு விடுதலை - குழந்தைகள் கிருஷ்ணனை போல வேடமிட்டிருந்த படத்தை போட்டு, "சென்னையில் ஒரு பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கிருஷ்ணன் - ராதை வேடம் அணிந்து ஊர்வலமாம்! அட மோசக்காரர்களே! சிறுவயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடும் கயவன் கிருஷ்ணன். அவனைப்போல பள்ளிப் பிள்ளைகளும் கேடு கெட்டுப் போக வேண்டுமா? இதற்கா பள்ளிக் கூடங்களுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பது?
ஒழுக்கக் கேடு விளைவதற்கு விதை போடாதீர்கள்!" என்று சொல்லி இருந்தது. நல்ல கருத்தாக இருந்தாலும் குழந்தை பருவத்தில் விளையாட்டாய் வெண்ணெய் திருடியதை பெரிது படுத்தும் பகுத்தறிவு "ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டோம்" என்கிற அகந்தையில் - தங்களின் ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக "தேனை எடுத்தவன் நக்காமலா இருப்பான்" என்று திருட்டு தேனை நக்கியவரை - பாதிக்கு பாதி சிந்திக்கும் மோசக்கார பகுத்தறிவு - திருட்டை செய்தவனின் பாசக்கார நட்பில் மறந்துவிட்டதோ?
வெண்ணெய் திருடியவனை பற்றி பேசும்போது தேனை நக்கியவரையோ அல்லது திருடியவரையோ பற்றியும் பேசி தான் ஆக வேண்டும். சரியான தீர்ப்பு வழங்க வேண்டாமா? கடவுள் அயோக்கியனே. அதை எடுத்து சொல்பவன் - எம் பார்வைக்கு நேர்மையாளனாக இருக்க வேண்டும். கடவுளை விட அவன் பெரிய பித்தலாட்டக்காரனாக இருக்கிறானே.. வெண்ணெய் திருடியவன் தெரிகிற கண்ணுக்கு, புறங்கையால் திருட்டு தேனை நக்கியவரை தெரியவில்லையா?
பகுத்தறிவு கண்ணாடி பழுது பட்டுவிட்டதா? பார்வையில் கோளாறா... அல்லது மண்டையிலேயே கோளாறா... கடவுள் செய்த அதே தப்பை பகுத்தறிவாளனும் செய்தால்...///
சரி, ஓசை, வெண்ணை திருடியதும் தப்புத்தான். புறங்கையால் திருட்டுத்தேனை நக்கியதும் தப்புத்தான்.
* ஆனால் புறங்கையால் திருட்டுத்தேனை நக்கியவர்களை சட்டத்தின் முன்னால நிறுத்தலாம்!
* பத்திரிக்கையில் போட்டு, வலைதளத்தில் எழுதி கேவலப்படுத்தலாம்.
உங்க "திருடர்" பகவான் கிருஷ்ணரை எந்தச் சட்டத்தின் முன்னால நிறுத்துறது?!!
பகவான் வெண்ணை திருடினார்னு குழந்தைகள்ட்ட சொன்னால், "அது தப்பு இல்லையா?" னு குழந்தை கேட்க்குமே! அதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?
"பகவான் செய்தால் தப்பில்லை!" "அவரு பகவான்! பகவான் என்ன வேணாலும் செய்யலாம்!" னா??
நெஜம்மாவே யாருக்கு மண்டையில் கோளாறுனு தெரியலை எனக்கு இப்போ?!
//உண்டியலில் மக்கள் தானாக போடும் பணத்தையே தவறு என்று சொல்லும் நாத்திகம் - மக்களின் வரி பணத்தை கொள்ளையிடும் தேனை நக்கும் கழக வியாதிகளை பற்றி பேச வேண்டாமா? கண்ணனின் காம விளையாட்டுக்களை பேசுவோர் - பகுத்தறிவாளர்கள் விளையாடிய விளையாட்டுகளை பேச வேண்டாமா?//கட்டாயம் பேசனும், பேசுங்க! என்ன பேசுறீங்கனு பார்ப்போம்.
///அண்ணாவே ஒளிவு மறைவில்லாமல் சொன்னாரே "நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல" என்று. அண்ணா "எல்லாவற்றிலும் அண்ணா" தான் போலும். பெரும்பாலான பகுத்தறிவுகள் - அந்த காலத்தில் ஸ்டெப்னி வைத்திருந்தவர்கள் தானே. அத்தகைய புள்ளிகள் தான் கண்ணனின் விளையாடல்கள் பற்றி பேசுவது. ஒரு சந்தேகம். "பகுத்தறிவால் அப்படி பேசுகிறார்களா - அல்லது பொறாமையால் பேசுகிறார்களா". பகவான் யோக்கியனா? பகுத்தறிவாளன் யோக்கியனா? என்கிற ஒரு சிறு பட்டிமன்றத்தை நமக்குள்ளாகவே நடத்தி பார்ப்போம்.///
பகவானையும், பகுத்தறிவாளனையும் பத்தி பிறமனை நோக்குகிறவனுகனு விமர்சிச்சாச்சு! இருக்கட்டும்!
///ஏன் எனில் கடவுள் செய்த அயோக்கியத்தனம் அனைத்தையும் - கடவுளை எதிர்த்தவனும் செய்திருக்கிறான். "பகவான் திருடினானா? இதோ பகுத்தறிவாளனும் அல்லவா திருடி இருக்கிறான்". பகவான் பல பெண்களோடு விளையாடி இருந்தானா? இதோ பகுத்தறிவு பேசிய பெரிய மனுஷன்களும் பல பெண்களாடு விளையாடி தான் இருந்து இருக்கிறார்கள். அதனால் இருவரையும் உண்மையான பகுத்தறிவு தராசு தட்டில் உட்கார வைத்து "எவன் உயர்ந்தவன் (குணத்தால்)" என்றோ, "எவன் தாழ்ந்தவன் (பொறுக்கித்தனத்தால்)" என்றோ பார்த்து விடுவோம்.//
* ஆக பகவானும் அயோக்கியன்! பகுத்தறிவாளனும் அயோக்கியன்!
* சரி, உங்கள மாதிரி பகவானுக்கு வக்காலத்து வாங்கும் ஆத்திகர்கள் எல்லாரும் பத்தினிகளும், ஏக பத்தினி விரதர்களும்னு சொல்றீங்களா?
* இல்லைனா அவனுகளும் "பிறமனை நோக்கும்" அயோக்கினுக தானா?
விபரம் சொல்லவும்!
//ஏன் எனில் தராசையே ஒழுங்காக பிடிக்க தெரியாத இன்றைய பகுத்தறிவால் - எடை மட்டும் சரியாக போட வருமா என்ன? //
உங்களுக்கும் தராசு ஒழுங்கா பிடிக்கத் தெரியிறமாதிரி தெரியலையே! உங்களை மொதல்ல பரிசோதிக்கனும்- தராசு பிடிக்கத் தெரியுதான்னு..
எடுங்க தராசை!
எடுத்தாச்சா?
பிடிங்க!
தொடருங்க!
///அதோடு முன்னுதாரணமாக கொள்ள தகுதியானவன் "பகவானா... பகுத்தறிவாளனா..." என்றும் பார்ப்போம்.
பள்ளி ஆண்டு விழா மேடையில் சில குழந்தைகள் கடவுள் வேடமிட்டும், சில குழந்தைகள் பகுத்தறிவு தலைவர்கள் வேடமிட்டும் நிற்கிறது. பார்வையாளர்கள் பகுதியில் ஆத்திக பெற்றோர்களும், நாத்திக பெற்றோர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.???
நல்லது
///நாத்திக பெற்றோரில் ஒருவர், "வெண்ணெய் திருடியவனின் வேடமிட்டு இருக்கு அந்த குழந்தை" என்று கூற, பதிலுக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு குழந்தையின் பெற்றோர், "அதோ அந்த குழந்தை தேனை திருடி நக்கியவரின் வேஷம் போட்டு இருக்கு" என்று சொல்கிறார்.
மேடையில் தீராத விளையாட்டு பிள்ளை வேடமிட்டிருந்த ஒரு குழந்தையை பார்த்து, ஒரு பகுத்தறிவு பெற்றோர் "ஈவ் டீசிங் பண்றவனை உள்ள தூக்கி போடணும்" என்றதும், ஒரு ஆத்திக தகப்பன் - தாடி வைத்து பெரியவர் போல வேடமிட்டிருந்த சிறுவனை பார்த்து, "கேலி பண்ணினதுக்கே ஈவ் டீசிங்கன்னா காலம் போன கடைசில கொள்ளுப்பேத்தி வயசுல பெண்ணை மணந்தது ஆயிரம் பலாத்காரத்துக்கு சமம். இவரை என்ன பண்ணலாம்" என்று கூறுகிறார் . அதை கேட்டு கடுப்படையும் ஒரு தந்தை - வில்லும் அம்புமாக உள்ள ஒரு சிறுவனை காட்டி, "மறைஞ்சிருந்து வாலியை கொன்றவன். ஆனால் கடவுளாம். கொடுமைடா. " என்று கூற, இன்னொரு தந்தை -ரத்தக்கண்ணீர் நாயகனை போல வேடமிட்டிருக்கும் சிறுவனை பார்த்து,"கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்ட, எங்கள் பொன்மனச்செம்மலை - புண்மனச்செம்மலாக்கி சிவந்த கரங்களை ரத்த சிவப்பாக, சின்னாபின்னப் படுத்தி சுட்டது அவன் தான். கொலையும் செய்வானா பகுத்தறிவாளன். என்ன கொடுமைடா" என்று கேட்க - ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றை ஒன்று முறைக்க - குழந்தைகள் மேடையில் ஆடுவதையும், பெற்றோர் கீழே பேசி கொள்வதையும் பார்க்கும் ஆண்டு விழா ஒருங்கிணைப்பாளர்///
என்ன கற்பனையோ என்ன எழவோ இது!!!
ஆனா ஒண்ணு நான் சொல்லியே ஆகனும்.
உமக்கு தராசு ஒழுங்கப் பிடிக்கத் தெரிலைனு நல்லாத் தெரியுது!
இந்திய சட்டத்தின் படி ஒரு பெண் "மேஜர்" ஆக இருந்தால், அவளா விரும்பி "தாத்தா" வையும் மணக்கலாம். அதுதான் சட்டம்! நம்ம ஆத்திகர்கள் ஜெமினி கணேசன், ராஜேஷ் கண்ணா இவங்களாம்கூட அப்படி இப்படி செஞ்சாங்களே?
* வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வதை ஆயிரம் பலாத்காரத்துக்கு சமம்னு பச்சைப் பொய் சொன்ன உங்களை உள்ள தூக்கிப் போடனும்!
* அப்புறம் அது ஏன் எம் சி யாரு ஏதோ ஏகபத்தினி விரதர், அப்பாவிங்கிற மாரி ஒரு ஒப்பாரி? நீங்க தராசு பிடிக்கிற லட்சணத்துல ஆத்திகன் எல்லாம் ஏகபத்தினி விரதனாயிடுவானுகளே? அதனாலதானோ? :)
///"வாயை மூடுங்கய்யா முட்டா பசங்களா. தெரிஞ்சு போச்சு ரெண்டு பேரின் லட்சணங்களும். நிச்சயம் அடுத்த வருஷம் ஆண்டு விழாவுக்கு பூனை, கிளி ன்னோ இல்ல மிக்கிமௌஸ், டாம் அன் ஜெரி மாதிரி வேஷங்கள் போட்டு குழந்தைகளை மேடை ஏற்றுவேனே ஒழிய - இனி கடவுள் வேஷமும் வேண்டாம். எந்த பெரிய மனுஷனின் வேஷமும் வேணாம். குழந்தைகள் மாறு வேஷமிட்டு பெருமை படுத்துற அளவுக்கு யாருக்கும் தகுதி இல்லை. குழந்தைகளை நாங்க ஒழுங்கா வளர்க்கணும்" என்றார். அவர் தொல்வதில் இருநூறு சத உண்மைகள் இருந்தது.//
அடுத்தவருடம் கடவுளையும் பகுத்தறிவாளனையும் தூக்கி எறிந்துவிட்டு, ஆத்திகர் உங்களுடைய வேஷம் போடச் சொல்லலாம்!நீங்க எப்படி?
நல்ல ரோல் மாடல்தானே? :)))
-------------------------------
ஆமா எதுக்கு இந்த பட்டிமன்றம் என்கிற பேரில் நடத்துற இந்த ஒப்பாரியெல்லாம்?
உங்க திருட்டு பகவானை, பொம்பள பொறுக்கினு தி க காரனுக கேவலப்படுத்திப்புட்டானுகளேனு ரொம்ப கோபமாகி இப்படி ஒப்பாரி வைக்கிறீங்களாக்கும்?
பகுத்தறிவாளன் அயோக்கியன்னு சொல்வதால், பகவான் செஞ்ச அயோக்கியத்தனம் எல்லாம் சரியாகிவிடாது! அது ஏன் உங்களுக்கு புரியமாட்டேன்கிது?
அப்புறம் உங்கள மாரி ஆத்திகர்கள் மட்டும்தான் யோக்கியர்கள் என்பதுபோல் அவர்களை மட்டும் விட்டு விட்டு பகுத்தறிவாளன்னு சொல்றவனுக செய்ற அயோக்கியத்தனத்தை மட்டும் பேசுவது நீங்க செய்ற பச்சை அயோக்கியத்தனம்!
உங்க மேலே தப்பில்லை! உங்க பதிவை நான் வாசிக்க வந்தேன் பாருங்க என்னை என்ன செய்யலாம்?
என்ன ஓசையோ என்ன எழவோ ஒரே ஒப்பாரி ஓசையாத்தான் இருக்கு!
Wednesday, August 15, 2012
பின்னூட்டப் பிரச்சினைகள்! கலகலப்ரியாவின் பதிவு!
நான் இப்போ கமெண்ட் மாடெரேசன் செய்ற பதிவர்களிடம் போயி ரொம்ப மெனக்கட்டு என் கருத்தை சொல்லிப்புட்டு, அவங்க வெளியிடுறாங்களா? இல்லையா? னு எட்டிப் பார்க்கிறது இல்லை. கெடைக்கிற நேரத்தில் ஏதாவது திறந்து போட்டுருக்க பெட்டியிலேதான் போயி எதையாவது சொல்றது.
ஆனால் பதிவர்கள் காமெண்ட் மாடெரேசன் செய்து வெளியிடுவது தப்புனு நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன்.
பல பாடங்களுக்குப் பிறகு, தேவையில்லாமல், அவமானப்படுவதை தவிர்க்க பல தரமான பதிவர்கள்தான் கமெண்ட் மாடெரேசன் செஞ்சி காமெண்ட்ஸை வெளியிடுறாங்க.
எதுக்கு பதிவெழுதி நம்மை நாமே அவமானப்படுத்திக்கனும்? தவறில்லை.
ஆனால் பதிவு விவாதம் செய்ய வேண்டிய ஒண்ணாயிருந்தால்?
அப்படியிருக்கும்போது, விவாதம் செய்ய இலகுவாக இல்லை என்ற குறைபாட்டை யாரும் இல்லைனு சொல்ல முடியாது!
நான், "ஜெயமோகனும் பிச்சைக்காரர்களும்" காரசாரமான ஒரு பதிவு போட்டேன். நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை ரசித்து ரசித்து எடுத்து, அஹோரிகளை என்னவோ பெரிய இவனுகள் என்பதுபோல காட்டி..
சுத்தமாகப் பிடிக்கலை.. பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாதுனு நெனைக்கிறவன் நான்.
அந்தப் பதிவில் "முத்து" என்பவரிடம் இருந்து வந்த பின்னூட்டம் இது, (இதை ஏற்கனவே எழுதியிருக்கேன்)
நான் காமெண்ட்களை மாடெரேசன் செய்து வெளியிடுவதில்லை என்பதால், யாரு இந்த "முத்து"னு கொஞ்சம் தேடிப் பார்த்தேன். நான் கண்டுபிடிச்சது அவரு யாராயிருந்தாலும், ஒரு சுமாரான "அனானிமஸ்" ப்ளாகர்.
சரி நம்மள இப்படி விமர்சிக்கிறாரே இவரு மட்டும் பெரிய கொம்பனா என்னனு தெரிஞ்சிக்க, "முத்து" எதுவும் "முத்து" என்கிற ஐ டியிலே உயர் தரமான பதிவு எழுதியிருக்காரா?னு போயிப் பார்த்தால், "முத்து" என்கிற பேரில் ஒண்ணுமே எழுதவில்லை!
யாருடா இது? நம்ம தளத்துக்கு வந்து, நம்ம தகுதியை இவரே எடைபோட்டு, இவரே முடிவு செய்து, ஜெயமோகனைப் பத்தி விமர்சிக்க நீ தகுதியில்லாதவன்னு இந்தாளு எப்படி என் தளத்தில் வந்து சொல்லலாம்?
ஆமா, ஏன் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு "ஜெயமோஹன்"க்கு வக்காலத்து?
இந்த முத்து ஒரு சாதாரண ஜெயமோஹன் ஜால்ராவா? இல்லைனா ஒருவேளை இது மாறுவேடத்தில் வந்திருக்கும் "பெரிய பிரபலமா" இருக்குமோ? என்ற கேள்விகள் என்னுள் எழாமல் இல்லை!
இப்படியெல்லாம் யோசிச்சு பார்த்துப்புட்டு, யாராயிருந்தால் என்ன?
" உனக்கு செயமோஹன் பெரிய ஆள்னா அவர் தளத்தில் போயி அவருக்கு ஆராதணை செஞ்சுக்கோ! நான் யாருடைய படைப்பையும் எப்படி வேணா என் தளத்தில் விமர்சிப்பேன்" னு சண்டை ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு உருண்டோம் (ஒரு 30 பின்னூட்டங்கள்).
இப்போது அந்த பின்னூட்டங்கள் எல்லாம் இன்னும் வெளிக்காட்டாமல் மறைந்து இருக்கு.
அப்புறம் கொஞ்ச நாளானதுக்கு அப்புறம்.. இந்த எண்ணத்தை சரி என்பதுபோல, கலகலப்ரியா தளத்தில், கலகலப்ரியா ஜெயமோஹனை விமர்சனம் செய்தபோது (அங்கே காமெண்ட் மாடெரேசன் உண்டு!, அதனால இஷ்டத்துக்கு எழுத முடியாது),
இதே முத்து ஜெயமோஹன் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர் என்பதுபோல தொடர்ந்து வாதாடினார், .. கலகலப் ப்ரியா தளத்திலிருந்து சில பின்னூட்டங்கள்..
////Muthu said... அரவிந்தன் கன்னையன் என்பவருக்கு (அவருடையதை நேர்மையான விமர்சனம் என்று வேறு சொல்கிறீர்கள் பாருங்கள் ... அடடா ....) அளித்த பெரும் விளக்கக் கட்டுரையிலேயே உங்களது கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு தெளிவான பதில் இருக்கிறது. அதை படித்த பிறகும் இப்படி ஒரு பதிவா என்று சற்று வியப்பாகவே இருக்கிறது.
அன்புடன் முத்துக்குமார்//// -------------------
///சமூகம் ஏற்றுக்கொண்டபடியே ஒரு உறவுக்கான ஒப்பந்தம் புரிந்து அந்த உறவை (பாலியல் சார்ந்த என்பது முக்கியமானது) வெளிப்படையாக பேணிகொண்டிருக்கும்போதே சமூகம் ஏற்றுக்கொள்ளாத - ரகசியமான - ஏற்கனவேயான ஒப்பந்தத்திற்கெதிராக கொள்ளும் ஒரு உறவை (இதுவும் பாலியல் சார்ந்த என்பது வெளிப்படை) கள்ள உறவென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? உமது உடமையை உமக்குத்தெரியாமல் அபகரிப்பதை கள்ளம் / திருட்டு என்ற வார்த்தைகளில்தானே அழைப்பீர்கள் ? உங்கள் அகராதியில் இல்லை - உங்களுக்கு உவப்பாக இல்லை என்பதற்காக அந்த வார்த்தையை நீக்கி விட முடியுமா என்ன ? அந்த கள்ள உறவு விவகாரத்தை ஏன் குறிப்பிட நேர்ந்தது என்பதற்கும் முன் சொன்ன கட்டுரையிலேயே விளக்கம் உள்ளது. அயன் ராண்ட்-ஐ மட்டம் தட்டவோ கீழ்மைப்படுத்தவோ அல்ல என்பது முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது. கள்ள உறவு என்ற பதம் உங்களுக்கு அசூயையை ஏற்படுத்தினால் நேர்மையற்ற உறவு, நெறியற்ற உறவு, முறையற்ற உறவு என்றெல்லாம் கூட பாலிஷாக சொல்லிக்கொள்ளலாம். விஷயம் என்னவோ ஒன்றுதான்.
அன்புடன் முத்துக்குமார்////
----------------------
இந்த முத்து யாரு என்பது இங்கே முக்கியமல்ல! ஒருவேளை என் பதிவில் நான் கமண்ட் மாடெரேசன் வச்சிருந்தால் இந்தத் தொல்லையே வந்திருக்காது என்பதை கருத்தில் கொள்ளனும்.
நான் பின்னூட்டங்களை மாடெரேசன் செய்து வெளியிட்டு இருந்தால் கப்பு சிப்புனு இந்த முத்து என்கிற மேதாவியுடைய பின்னூட்டத்தை டெலீட் செஞ்சுட்டு ரொம்ப நல்லவனாவே இருந்து இருக்கலாம். அதுக்கப்புறம் முத்து எங்கேயாவது போயி முட்டிக்க வேண்டியதுதான். இல்லைனா, அவர் "தளத்தில்" என் பதிவையும் என்னையும் விமர்சிக்கலாம்! அந்த உரிமை அவருக்கு நிச்சயம் உண்டு!
அதனால காமெண்ட் மாடெரேசன் செய்றவங்க எல்லாம் செய்றது தப்பு , ஜால்ரா பின்னூட்டங்கள்தான் வெளியிடுறாங்க என்பதுபோல் வாதம் செய்வதும் ஒரு தவறான ஒரு புரிதல்தான்.

Muthu said...
ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ?
15 June 2010 8:20 PM

Thursday, August 9, 2012
எது அருவருப்பான வேலை?
தனக்கு எவ்வளவு மாதச்சம்பளம்னு யோசித்துப் பார்த்தான் பிரகாஷ்! சமீபத்தில் மிகப்பெரிய போனஸ் ஒண்ணு கொடுத்தாங்க அவன் சாதனைக்கு. ஆனால் அவன் செய்ற வேலைய நெனச்சா அவனுக்கே குற்றவுணர்வா இருந்துச்சு. படிச்சு வந்து சமூகத்துக்கு அவன் உதவுறானா? இல்லை படிச்சு வந்து சமூகத்தை பாழாக்கிறானா? அவனுக்கு பதில் தெரியும்! நான் செய்யலைனா இன்னொருத்தன் செய்யப்போறான்? னு அவனுக்கே அவன் சொல்லும் சமாதானம் எல்லாம் இப்போ அவனிடமே எடுபடவில்லை!
சாக்கடை அள்ளுறதெல்லாம் புனிதமான வேலை! என்ன இருந்தாலும் அவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்றாங்க. ஆனா அந்தமாரி நல்லவேலையைச் செய்ய நம்மாளுக எவனும் முன்வரமாட்டான்! நம்ம ஊர்ல உயர்சாதி இந்தியனுக்கு என்னைக்குமே மூளை கெடையாது! இல்லாத கடவுளுக்கு ஓடி ஓடி சேவை செய்வான்! இதுபோல் நல்லவேலை செய்றவங்களை கீழ்சாதினு கேவலப்படுத்துவான்!
ஆமா அசுத்தத்தை அகற்றும் அவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்று ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிக சம்பளம் கொடுத்தால் என்ன? சமுதாயத்துக்கு உதவிக்கொண்டே அவனும் அவங்க பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கலாம். அப்போத்தானே அவங்களும் நாளைக்கு ஒரு நல்ல படிப்புப் படிச்சு ஒரு உயர்தர வாழ்க்கை வாழ வாய்ப்வாவது அமையும்! இப்படியெல்லாம் நம்மாளு யோசிப்பானா?. இவனுக அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுகதான் இந்த உயர்சாதி இந்தியர்கள்.
பிரகாஷ், தனக்குள்ளே பேசிக்கொண்டான்..நான் செய்யும் வேலையில் காமப் பசியைத்தான் தூண்டுறேன். அறியாச் சிறுவர்களை கெடுக்கிறேன். எவ்வளவு ஒரு கேவலமான தொழில் இது! நிச்சயமாக ஒரு வேசி செய்றதைவிட கேவலமான தொழில்! ஆனால் இன்னும் வயித்துப்பொழைப்புக்காக அதே வேலையில்தான் இருக்கான், பிரகாஷ். யாருக்குத் தெரியப்போது பிரகாஷ், என்ன தொழில் செய்றான்னு? அதையெல்லாம் வெளியே சொல்ல அவன் என்ன முட்டாளா?
அவன் படிச்சதென்னவோ சாஃப்ட் வேர் இஞ்சினியரிங்தான். இருந்தாலும் அவன் இன்று தான் என்ன தொழில் செய்கிறேன் என்று வெளிப்படையாக யாரிடமும் தைரியமாகச் சொல்லமுடியாத நிலை. ஆமா இன்னைக்கு லட்ச லட்சமாக சம்பாரிக்கும் ஒரு சாஃப்ட்-போர்ன் -இஞ்சினியர்! அப்படினா? போர்ன்சைட் நடத்துறவங்களுக்கு வெப்-டிசைனர் மற்றும் தள அட்மினிஸ்ட்ரேட்டர்!
இந்த "புனிதமான வேலை" செய்துதான் பிரகாஷ் சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான்! ஆனால் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும் அவன் நாற்றம் என்றுமே அவனைவிட்டுப் போனதில்லை!

Monday, August 6, 2012
மதுரையில் ஒரு சிறு வீட்டின் விலை மில்லியன் டாலரா?!
சுமாரான பணக்காரங்ககூட இன்னைக்கு சென்னையிலே தி நகர்ல எல்லாம் வீடு வாங்குறது குதிரைக் கொம்புனு சொல்லுவாங்க. தி நகர், அண்ணா நகர்ல சொந்த வீடு வச்சுருக்கவா எல்லாம் மில்லியன் டாலர் வீடு வச்சிருக்கவா!! ஆமங்க நம்ம ஊர்ப் பணம் 5 கோடி என்பது 1 மில்லியன் டாலர். நம்மூர்ல இம்பூட்டு மில்லியனர்கள் இருக்காங்கனு எனக்கு இந்தமாரி கணக்குபோட்டு பார்த்தப்போத்தான் தெரியுது. சரி, சென்னை, மும்பை, டெல்லி எல்லாம் அப்படினு நெனச்சா, சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடு விற்பனை விளம்பரம் (மதுரையில்):
இந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. இருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு!!!
வீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை!
இது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)
Property for sale
Property with clean title available in Madurai. An old house in the heart of the city very near Meenakshi Amman temple, ideal for establishing a lucrative facility for a variety of shopping, hostel, business, storage purposes. Area is 2350 sq. ft. Rate proposed- Rs.15,000/sq.ft.
Contact: pavalamani_pragasam@yahoo.com
இந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. இருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு!!!
வீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை!
இது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)
Thursday, August 2, 2012
மரணம் வந்தால் தெரிந்துவிடும்!
மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!
என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.
மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!
------------
இது ஒரு தேவையான மீள்பதிவு!
அன்று (Sunday 31 August 2008), இதே கருத்துக்கு பின்னூட்டங்கள் எப்படி இருந்தன என்பதை இங்கே சொடுக்கி படிக்கவும். இதில் பின்னூட்டங்கள் இட்டவர்களில் ஒரு சிலர் பதிவுலகில் "இறந்துட்டாங்க"னு கூட சொல்லலாம்! :(

Subscribe to:
Posts (Atom)