Friday, April 15, 2016

நோபல் பரிசு வெல்ல ஒரு கண்ணாவது வேண்டும்!

"உங்களுக்குத் தெரியுமா?" "கவனம்" னு நாம் இன்று தெரிந்து கொண்ட ஒரு உண்மையை பலரிடமும் சொல்வது என்னைப்போல் ஒரு சிலருக்கு வழக்கம். இந்த ரோட்டில் ட்ராஃபிக் ஜாம். வேற ரூட்ல போங்க!னு சொல்வது அல்லது ஒரு எக்ஸ்ப்ளோஸிவ் ரியாக்சன் கேர்ரி அவ்ட் பண்ணும் போதும் நம் கலீக் கிடம் "கவனம்" என்று சொல்து போல் அமையும். நாம் சொல்வதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? என்பது வேற விசயம். சொல்வது நம் "நல்ல ஹாபிட்". இதெல்லாம் இண்டிவிஜுவாலிட்டி. கடவுள் அப்படி செய்தால் நம்மை "கவ்னிச்சுக்குவ்வார்" என்கிற சுயநலம் இல்லை. நாம் அடைந்த துன்பம், கஷ்டம் பாவம் அவன் அடையவேண்டாம் என்பதில் ஏதோ ஒரு திருப்தி.

விளையாட்டு மைதானத்தில் எங்களோட விளையாடும் ஒரு வெளிநாட்டு நண்பர் லங் கேன்சர் சர்வைவர் னு எனக்கு பல மாதங்களுக்கு அப்புறம்தான் தெரியும். அந்த உண்மை தெரிந்தபோது  இது பற்றி ஏற்கனவே தெரிந்ந்தவர்கள் என்னிடம் ஏன் சொல்லவில்லை னு கோபம் வந்தது. ஒரு சில விசயங்களை மற்றவர்களிடமும் சொல்லணும் என்பது என் நம்பிக்கை. சொல்லப்பட வேண்டிய இதுபோல் "ரகசியங்கள்" அவ்வகையைச் சாரும்.

தலைப்புக்கு வருவோம்.

இவர் பெயர் "கார்ல் பேர்ரி ஷார்ப்லெஸ்"! நோபல் பரிசு வென்றவர். எம் ஐ டி ல ஆரம்ப காலங்களில் இருந்துவிட்டு பின்னால் ஸ்க்ரிப்ஸ் ரிசேர்ச் இண்ஸ்டிடூட்க்கு போயி அங்கேயே இன்றும் பணியாற்றுகிறார்.

எப்படி  நோபல்ப்  பரிசு வென்றார்?

ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் சாதித்ததற்காக! "ஷார்ப்ளஸ் ஈப்பாக்ஸிடேஷன்".

போனவாரம் எதார்த்தமாக இவ்வரைப்பற்றி வாசிக்கும்போது 1970 களில் இவருக்கு ஒரு ஆய்வக ஆராச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு கண் பார்வை இழந்துவிட்டது என்பதை அறிந்தேன். இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ந்து இருக்கும் எனக்குத்தான் கடைசியாகக் தெரிகிறது என்று நினைத்துக்கொண்டு பலரிடம் இதைப் பகிர்ந்தபோது, அவர்களுக்கும் தெரியாது என்பதை உணர்ந்தேன்.

அதாவது கவனக்குறைவு என்பது நோபல் பரிசு வென்றவர்கள்கூட செய்வதுதான். ஆய்வகத்தில் எவ்வளவுதான் கவனமாக "சேஃப்ட்டி க்ளாஸ்" அணிந்து இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் அணியாமல் இருந்தாலும் உங்கள் கண் பறிபோக வாய்ப்புண்டு என்பதே பாடம்.

http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2001/illpres/images/fig16-sharpless.jpg
Karl Barry Sharpless (Nobel prize winner)


ஷார்ப்லஸ் எம் ஐ டி யில் அஸிஸ்டன்ட் பேராசிரியராக பணிபுரியும்போது, வேலைகளை முடித்துவிட்டு சேஃப்ட்டி க்ளாஸை கழட்டி வைத்துவிட்டு வெளியில் போகும்போது மாணவன் ஒருவனிடம் தான் செய்யச் சொன்ன எக்ஸ்பெரிமெண்டை எப்படி போச்சுனு கேக்கப் போயிருக்கிறார். அப்போது மாணவன் ஒரு சின்ன க்ளாஸ் ட்யூபை லிக்விட் நைட்ரஜனில் கூல் பண்ணி சீல் பண்ணிக்கொண்டு இருக்கிறான். அப்போது அந்த ட்யூப் -100 செல்சியஸ்க்கும்  கீழ் இருக்கிறது. அதில் லிக்விட் ஆக்ஸிஜன் (எக்ஸ்ப்லோசிவ்) ) கொஞ்சம் கண்டன்ஸ் ஆகி இருக்கிறது. அதை இவர் தன் கண் முன்னால் வைத்து உள்ளிருக்கும் திரவத்தைப் பார்க்கும்போது அந்த சிறிய ட்யூப் வெடித்து கண்களில் அந்த உடைந்த கண்ணாடிகள் தாக்க. அவருக்கு இரண்டு கண்களும் போகலாம் என்று நிலை வந்து.. கடைசியில் ஒரு கண்ணை இழந்து இன்னொரு கண்ணை இழக்காததால்தான் பின்னால் இவரால் நோபல் பரிசை வெல்ல முடிந்தது. ஆக அவர் அதிர்ஷ்டத்தால் ஒரு கண்ணையாவது அவர் இழக்காததால்தான் அவர் நோபல் பரிசை பெற முடிந்தது. இரண்டு கண்ணையும் இழந்து இருந்தால் அவர் அறிவியலில் இருந்து ஓய்வு பெற்று வேறு ஏதாவது செய்து இருப்பார்.

அவரே சொல்கிறார்.. கேட்டுக்கோங்க! ஏன் ஆங்கிலம்? அவருக்குத் தமிழ் தெரியாது..

A cautionary tale from the past



The following essay was written some time ago, but continues to pop up on laboratory doors around MIT, most recently at the Ceramics Processing Research Laboratory where it was read by a Tech Talk reporter. It is reprinted here with Dr. Sharpless' permission in an effort to reach everyone in the MIT community. Dr. Sharpless was a long-time member of the MIT faculty, last holding the Arthur C. Cope Professorship in Chemistry. He is now at the Scripps Research Institute in California.

Many of you may know that I was blinded in one eye during a lab accident in 1970, shortly after I arrived at MIT as an assistant professor. I always wore glasses whenever I was at my bench, and while I felt I conscientiously observed safety measures, my experience proves one can't be too cautious about wearing safety glasses.

As I prepared to go home from the lab during the early hours of the morning of the accident, I looked in the bays to see what my co-workers were doing, and then returned to my own bench, removed my safety glasses, and put on my parka. As I was walking to the door, I passed the bench where a first-year graduate student was flame-sealing an NMR tube. I asked how it was going, and he replied, "Good, I've got it sealed."

He was sealing off the tube at atmospheric pressure under a flow of nitrogen gas while cooling the tube in a liquid nitrogen bath, a technique neither of us had performed before. Nor, I regret to say, had we looked up the procedure, which we subsequently discovered to be incorrect.

I stopped by his bench, picked up the tube from the bath, and held it to the light. The tube immediately frosted over, and, as I wiped it to better see the contents, I noticed that the solvent level was exceedingly high. Suddenly the solvent level dropped several inches. Though I instantly realized condensed oxygen had been sealed in the NMR tube, I was quite literally unable to move a muscle before it exploded. Glass fragments shredded my cornea, penetrated the iris, and cause the partial collapse of one eye. My only other injuries were superficial face cuts.

My first two weeks at Mass Eye & Ear were spent totally immobilized and with both eyes bandaged. The pain was terrific, but my fear was even greater: I had been warned that when my eyes were uncovered there was a small chance I might blind in both eyes due to "sympathetic ophthalmia." Because eyes are walled off from the rest of the body in utero, eye protein driven into the blood stream can raise an immune response that leads to the "killing" of the uninjured eye. My disappointment at having no functional vision in my injured eye was, needless to say, surpassed by my joy at retaining full vision in my good eye.

The lesson to be learned from my experience is straightforward: there's simply never an adequate excuse for not wearing safety glasses in the laboratory at all times.

A version of this article appeared in the March 11, 1992 issue of MIT Tech Talk (Volume 36, Number 23).



2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உருப்படியான தகவல் ஒன்றை அறிந்தோம்

ஆரூர் பாஸ்கர் said...

நல்ல தகவல் வருண்.

வெற்றி படிக்கட்டை ஏற ஓரு விழி தேவைப்பட்டிருக்கிறது.