Thursday, January 26, 2017

சு சுவாமி உலகநயாகரா ரெண்டு பார்ப்பனர்களுக்குள் தகராறு

சுப்பிரமணியம் சாமி பொறந்த ஊர் சோழவந்தான். தமிழ் பார்ப்பனர். பின்னால் டெல்லியில் போயி குடியேறி டெல்லிவாலா ஆகிவிட்டவர். ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றது மட்டுமன்றி, அங்கே பேராசிரியராக பணிபுரிந்தவர், இவர்.

நம்ம உலக நாயகர், இராமநாதபுரத்தில் பிறந்து பரமக்குடியில் சிறு பிராயத்தில் வளர்ந்த பார்ப்பனர்.

இந்த ரெண்டு பார்ப்பனர்களில் ஒருவர், சு சுவாமி தன்னை இந்தியன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு எதிர்ப்பு.

இரெண்டாமவர், தன்னைத் தமிழன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தருபவர் இவர்.  என்ன ஒண்ணு சல்லிக்கட்டில் இவர் இன்னும் கலந்துக்கவில்லை. மற்றபடி, சல்லிக்கட்டில் எவனாவது செத்தால், அது வீரமரணம். அதுக்காக சல்லிக்கட்டை எல்லா நிறுத்த வேண்டியதில்லை. வாகனங்கள் ஓடும்போது நடக்கும் ஆக்ஸிடென்ட் போலதான் இதுவும். அதுக்காக வாகனங்களை தடை செய்ய முடியுமா? என்றெல்லாம் விதண்டாவாதம் செய்பவர்.

இவங்க ரெண்டு பேரும் ட்விட்டரில் கன்னாபின்னானு அடிச்சுக்கிட்டு நாறுகிறார்கள். இந்த சண்டையை யார் ஆரம்பித்ததென்று தெரியவில்லை.

சுப்பிரமணியன் சாமி புதிதாக "porki" என்னும்  ஒரு உயர்தர அடைமொழியில் தமிழர்களைத் திட்டி சரமாறியாக ட்விட் செய்து கொண்டு இருக்கிறார். எப்படி இது ஆரம்பித்ததுனு தெரியவில்லை. மேலும் சட்டம் தெரிந்தவர் இவர்!

இவருடைய "பொர்க்கி" ட்வீட்கள் சில!


12h12 hours ago
Porkis obviously don't like nationalists and patriots. Yet the crave for their attention by tweeting to them. Pathetic

13h13 hours ago
Why are Porkis so glum on India's Republic Day? Does the day not suit their traitorous outlook? Their White Masters have abandoned them?

How foolish for cinemawallah Kamalhasan to suggest that CM should have met the demonstrators. CM tried in Madurai and what happened?


 கமலஹாசன் ட்வீட்கள் சில:

Salute twitterattis of peace. 2 rabble rousers:Happy republic day. Respect my nation and its people. Sare jahanse accha Hindustan hamara.

Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா

Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.

 இணையதள உலகில் பேச்சுச் சுதந்திரம் கிடைத்ததால் ஏற்பட்ட விளைவு இது!

ரெண்டு பார்ப்பனர்கள் அடிச்சுக்கிட்டு நாறுறாங்க நமக்கென்ன? னு போயிடுவானா என்ன தமிழன்? அதான் இல்லை! வழக்கம்போல ஒரு பார்ப்பனரை திராவிடத் தலைவனாக்கி விடுவான். அவன் தான் தமிழன்!



8 comments:

G.M Balasubramaniam said...

இரண்டு பேர் தூற்றிக் கொள்கிறார்கள் பார்ப்பனராகப் பிறந்ததால் வருணின் பார்வை படுகிறதோ

ஜோதிஜி said...

சு சாமி குறித்து முழுமையாக நோண்டி நொங்கெடுத்து எழுதப்பட்ட கட்டுரை எங்கேயாவது உண்டா? நீண்ட நாள் ஆசை?

gopalasamy said...

I request Ulaka Nayakan Kamal to hire a Good Supreme court lawyer to argue for Jallikkattu. Spending a few crores is not a big deal for him.

வருண் said...

***G.M Balasubramaniam said...

இரண்டு பேர் தூற்றிக் கொள்கிறார்கள் பார்ப்பனராகப் பிறந்ததால் வருணின் பார்வை படுகிறதோ?***

இன்றைய இணையதள வசதி பல வகையில் நன்மை பயக்கின்றன. அறிவியல் சம்மந்தமாக எவ்வளவோ கற்றுக்க்கொள்ள முடிகிறது. அதே நேரம் இதுபோல் "ஹை க்ளாஸ்" மக்கள் "லோ க்ளாஸா" நடந்துகொள்வதையும் கவனிக்க முடியுது சார். வருகைக்கு நன்றி, ஜி எம் பி சார்.


வருண் said...

***ஜோதிஜி திருப்பூர் said...

சு சாமி குறித்து முழுமையாக நோண்டி நொங்கெடுத்து எழுதப்பட்ட கட்டுரை எங்கேயாவது உண்டா? நீண்ட நாள் ஆசை? ***

சு சாமியின் "பொறுக்கி" ட்வீட்களை பார்க்கும்போது, 77 வயதில் அவரே அவர் தரத்தை இன்னும் பலமடங்கு குறைத்துக் கொள்வார்னு தோணுது. அரசியல்வாதிகளியே "கழிவு" இவர்னு அவருக்கும் தெரியும். வேற யாரும் இவரை விமர்சிக்கப் போனால் குழப்பம்தான் மிஞ்சும். இவரை ஃப்ரீயா விட்டுடுறது நல்லது.

வருண் said...

***Gopala krishnan said...

I request Ulaka Nayakan Kamal to hire a Good Supreme court lawyer to argue for Jallikkattu. Spending a few crores is not a big deal for him. ***

He seems like very lonely these days. Twitting is somehow helping him. I think he is going to to continue twitting like this for a while. It is just a "time pass" for him until he gets busy with his movies, thats all.

'பரிவை' சே.குமார் said...

நடக்கட்டும் நடக்கட்டும்...
சு.சாமிக்கு படிச்ச அளவுக்கு பண்பு இல்லை... ரொம்பவே நாறிக்கிட்டு இருக்கார்...

Kasthuri Rengan said...

இறுதி வரி நச்
செமை ஜி