Friday, June 2, 2017

பிராமண யோக்கியர்கள்!

பரமசிவம் சார் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கோபால கிருஷ்ண கோகலே நல்ல பிராமணர்னு காந்தி சொன்னதாக முடித்துள்ளார். பிராமணர்களில் யோக்கியர்களே இல்லையா?

சோ ராமசாமி, ஜெயலலிதா, ராஜாஜி, கமல்ஹாசன்,  டோண்டு ராகவன், சங்கராச்சார்யா, பாரதியார்  இவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான்.

இதில் யாரையுமே சுத்தமான யோக்கியன்னு சொல்லமுடியாதுதான்

சரி, பிராமணர்களை விட்டுவிட்டு திராவிடர்களில் சுத்தமான யோக்கியர்கள் இருக்காங்களா? னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா? கவனிக்கவும், அதுவும் கஷ்டம்தான்.

பிராமணர்கள் யோக்கியர்களாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு தேவையற்றது.

பிராமணர்களுடன் சேர்ந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனா என்ன இவர்களோடு வாழ்ந்து கொண்டே இவர்களை நம்பாமல், எந்நேரமும்  சந்தர்ப்பவாதியாக எப்படியும் சுயநலமாக மாறலாம் என்பதை மனதில் வைத்து இவர்களை நம்பாமலே இவர்களோடு "நண்பர்களாக" நடித்துக் கொண்டே வாழலாம். Keep your friends close but your enemies closerனு சொல்வதுபோல். நம்மில் பலர் அப்படித்தான் நடித்துக்கொண்டே இவர்களை நம்பாமல் இவர்களுடன் வாழ்கிறார்கள்.

அல்லது

இவர்களிடம் நேரிடையாகவே சொல்லிவிடலாம்.  வீணாக நடிக்காமல், நட்பு பாராட்டாமல், ஒதுக்கி வைத்து, "நமக்கும் உங்களுக்கும் ஆகாதுங்க. நீங்க ஏதாவது நாளைக்கு செய்யும்போது  நான் எதையாவது சொல்லிவிடுவேன். இதெதுக்கு நாம் பேசாமல் ஒதுங்கியே வாழுவோமே?  நீங்க, நீங்களாவே இருங்க! நான் நானாவே இருக்கேன். நடிக்காமல், ஒருவரை ஒருவர் நம்பாமல், பிடிக்காமலே சேர்ந்து வாழுவோமே?" என்று  தெளிவு படுத்திவிட்டு எதையும் மூடி மறைக்காமல், "அவர்களைப் பிடிக்காது" என்று அவர்களுக்குத் தெளிவாக சொல்லிவிட்டு எதிரிகளாகவே தொடர்ந்து  வாழலாம். பெரியார் வாழ்ந்ததுபோல்.


அல்லது மூனாவது வகை,

இவர்களை எந்த வகையிலும் பிரிக்காமல், நம்மைப் போலவே இவர்களையும் எண்ணி பிராமண முத்திரையைத் தவிர்த்து வாழலாம். அப்படி யாரும் வாழ்றாங்களா? னு எனக்குத் தெரியவில்லை! அப்படி வாழ்வதாகச் சொன்னாலும் நான் அதை நம்புவேனா? னு எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்டியாவது ஒரு வகையில் "தங்களை" நம்மிடம் இருந்து பிரித்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் னு நான் நம்புகிறேன். இந்த "நம்பிக்கை" என்னுடைய குறைபாடாகவும் இருக்கலாம் அல்லது  என் நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.

இன்னொரு உண்மை என்னவென்றால்

எந்த ஒரு நல்லவனும் அல்லது நண்பனும் ஒரு சில நேரம் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் தவறாகத்தான் தோனும். அந்த "நல்ல நண்பன்" பிராமணன் என்றாகிவிட்டால்  நம்மிடம் ஊறிப்போயி உள்ள "ப்ரிஜடிஸ்" "இவன் பிராமணன் என்பதால்தான் இப்படி நடந்து கொண்டான்" என்கிற ஒரு முத்திரையை நாம் குத்துவோம். நான் பார்த்தவரைக்கும் இதுபோல் எல்லா சாதியிலும் உள்ள நண்பர்கள் ஒரு நேரம் இல்லைனா இன்னொரு நேரம் நாம் எதிர்பார்ப்பது போலல்லாமல் "சுயநலமாக" நடந்து கொள்வது இயல்பு. அவர்கள் பிராமணரல்லாததால் நாம் அவர்களை "பிராமண முத்திரை" பதிக்க முடியாமல்ப் போய்விடுகிறது.

எப்படியோ நம்மிடம்  பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள்  அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும். திராவிடர்களைவிட "உயர்ந்த மனிதனாக" நம்மிடம் அவர்கள்  பல தருணங்களில் நடந்து கொண்டால்..

அப்படி எதுவும் அவர்கள் செய்வார்களா?

இல்லை "மனிதர்களைவிட பகவாந்தான் எனக்கு முக்கியம்" என்று இதுபோல் ஒரு "பிரமணத் துவேச ப்ரிஜடிஸை" அகற்ற முயலாமல், அதை சட்டை செய்யாமல்  இதேபோலே தொடர்வார்களா? என்பதை காலம்தான் சொல்லும்.

2 comments:

'பசி'பரமசிவம் said...

வணக்கம் வருண்.

பதிவுலகில் காலடி வைத்த நாளிலிருந்து, அவ்வப்போது பின்னூட்டப் பெட்டியை இழுத்து மூடிவிட்டுத் ‘தனிமை சுகம்’ தேடும்[நடிகர் ரஜினி இமயமலையைத் தேடி ஓடுவது போல] விசித்திர குணம்[கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்!] கொண்டவன் நான்.

இந்தப் பதிவுக்கு[‘உலகில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லையா?’] முன்பு. ‘கள்ள உடலுறவும்...’ பதிவு வெளியிட்டபோதே பின்னூட்ட வசதி நிராகரிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்

இது இங்கு ஒரு பிரச்சினையே அல்ல.

‘உலகில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லையா?’ என்னும் தலைப்பிலான ஒரு பதிவை நான் ஏன் வெளியிட்டேன் என்பதற்கான காரணம் மட்டுமே இங்கு அறியத்தக்கது.

பெரியார் மீது அளவுகடந்த மதிப்புக்கொண்டவன் நான். அதை உறுதிப்படுத்த, அவர் குறித்து நான் எழுதிய பதிவுகளே போதிய சான்றுகளாகும்.

இந்நிலையில், என் நண்பர் அனுப்பிய பெரியார் குறித்த நூலில், காந்திக்கும் பெரியாருக்கும் இடையிலான உரையாடலைப் படிக்க நேர்ந்தது; பெரியாரின் வாதத் திறமை என்னை வெகுவாகக் கவர்ந்தது; மகிழ்வித்தது.

இந்த மகிழ்ச்சியைப் பிறரிடமும் பகிரும் ஆசையில் இதைப் பதிவாக்கினேன். ‘வெகு சுவையான பழைய சம்பவம்’ என்றும் குறிப்பிட்டுள்ளேன். பெரியார் பிராமணர்களைக் கடுமையாகச் சாடியதற்கான காரணங்கள் ஏற்கனவே விரிவாகப் பலராலும் பட்டியலிடப்பட்டுவிட்டன என்பதால் அது குறித்து எழுதவோ விவாதிக்கவோ நான் விரும்பவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது[பிராமண ஜாதியைக் குறிப்பிட்டு நான் பதிவுகள் எழுதியதில்லை என்பதும் அறியத்தக்கது].

பிராமணர்களையோ அவர்களின்மீது அனுதாபம் கொண்ட பிறரையோ, இத்தலைப்பு கேள்வி எழுப்பத் தூண்டும். அது தொடர்பான பதிவுகள் வரும் என்று எதிர்பார்த்தேன்.

அது நடக்கவில்லை. நீங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள்.

‘எப்படியோ நம்மிடம் பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள் அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும்’ என்று பிரச்சினைக்கு ஒரு தீர்வும் தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

ஆயினும், சில சந்தேகங்கள்.

‘பிராமணர்கள் யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர்கள் யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பர்க்கத் தேவையில்லை[காரணம், பிராமணன் அல்லாதவர்களிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்பதே].

பிற அயோக்கியர்களில், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்ப்பவர்களும், தாய்மொழியாம் தமிழை அவமதிப்பவர்களும் இருக்கிற அதே வேளையில், மொழிப்பற்றும் இனப்பற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பில் ஈடுபாடும் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை.

இவர்களைப் போல, ‘சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் நீச பாஷை’என்று சொல்லித் தமிழ் இழிவுபடுத்தப்பட்டதை/படுவதைக் கண்டிக்கிற பிராமணர்கள் இருக்கிறார்களா?

மனம் திருந்தி கோயில் வழிபாட்டு மொழியாகத் தமிழை ஏற்பவர்கள் இருக்கிறார்களா?

‘வ.ரா.’வுக்குப் பிறகு பகுத்தறிவு[கமலகாசன்? தனி ஆய்வு தேவை] பேசுகிற ஒரு சில பிராமணர்களையேனும் பார்க்க முடிந்ததா? முடிகிறதா?

ஆளுபவராக இல்லையென்றாலும், ஆளுபவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, சஸ்கிருதத் திணிப்பில் இப்போதும் ஈடுபடுகிற பிராமணனை, பெரியார் இருந்தால் ‘அயோக்கியன் என்று சாடுவாரா மாட்டாரா?

பிராமணன் அல்லாத சாமியார்கள் தவறிழைக்கும் போது, விலாவாரியாகச் செய்தி வெளியிட்டுக் குதூகளிக்கிற பிராமணச் சார்பு பத்திரிகைகள்[தினமலர், காலைக்கதிர், தினமணி{கோயங்கா குடும்பத்துப் பத்திரிகை என்றாலும் ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள்}, குமுதம்எ{ஸ்.ஏ.பி குடும்பத்தாரிடமிருந்து பறிக்கப்பட்டது}, கல்கி போன்றவை, அவாள் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அன்னாரைத் தெய்வ நிலையில் வைத்துப் போற்றுவது ஏன்?

புளுகர்கள் எழுதி வைத்த பொய்க்கதைகளை வாரம் தவறாமல்[இணைப்பு] வெளியிட்டு மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் இவர்களை அயோக்கியர்கள் என்று சொல்லாமல் நல்லவர்கள் என்று பாராட்டலாமா?[பிராமணர் அல்லாதவர்களின் பத்திரிகைகளும்[தினத்தந்தி, தினகரன் போன்றவை] விதிவிலக்கல்ல.

சுயநல அரசியல்வாதிகளும் சுயநலம் மிக்க பிரபல எழுத்தாளர்கள் பலரும் நீங்கள் குறிப்பிட்டது போல இவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் நட்பு பாராட்டித்தானே பிழைப்பு நடத்துகிறார்கள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லை மீறும் வாதப்பிரதிவாதங்களையும் கருத்து விளக்கங்களையும் தவிர்ப்பதற்காகவே, ‘காந்தி பெரியார்’ இடையேயான உரையாடலோடு பதிவை முடித்துக்கொண்டேன்.

இது, தங்களின் வலைத்தளம். வரம்பு கடந்து ஏதேனும் சொல்லியிருந்தால் பொறுத்தருளுங்கள்.

நன்றி வருண்.

வருண் said...

என் நண்பர்களில் தமிழ் பிராமணர்கள் நிறைய உண்டு சார். என்னுடைய நெருங்கிய தோழிகூட ப்ராமின் தான். பழக்க வழக்கம், நட்பு, மற்றவருக்கு உதவுவது போன்றவற்றில் இவர்கள் பிராமின் அல்லாதவர்களைவிட ஒரு படி மேல் என்று கூட என் அனுபவத்தில் சொல்வேன். ஆனால் தனிப்பட்ட ப்ராமின் என்பது வேறு பொத்தாம் பொதுவாக அவர்களைப் பற்றி நாம்(ன்) வைத்திருக்கும் கருத்து வேறு.

இந்தப் பதிவெழும்போது இவ்விருவரையூம் கலந்துவிட்டேன். எப்படி இவர்களை தனித் தனியாக பிரிப்பதென்று தெரியவில்லை.

மற்றபடி இதர சாதியினர் பலர் ப்ராமின்ஸைவிட சந்தர்ப்பவாதியாகவும், மதவெறியர்களாகவும் நான் அறிய நடந்துள்ளனர். இதே நபர்கள் ப்ராமினாக இருந்து இருந்தால் அந்த பிரிஜடிஸ் முத்திரையை குத்தியிருப்போம். இப்போ இவார்களுக்கு என்ன முத்திரை குத்துவது? என்கிற குழப்ப நிலை உருவாகுது.