Friday, May 25, 2018

நான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்!

அம்மா சொல்லுவாங்க, "என்னப்பா  இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் "கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்சர் வருது?"

நான் சொல்லும் பதில் "அமெரிக்காவிலும் எனக்குத் தெரிய நெறையப் பேருக்கு கேன்சர் வருதும்மா. என்னை சுத்தி உள்ளவங்களுக்கே வருது. கேன்சர் வந்து அதை க்யூர் பண்ண முடியாமல் செத்துக்கொண்டும்தான் இருக்காங்க. அமெரிக்காவில் வாழ்றவன் எல்லாம் கேன்சரில் சாகிறதில்லை என்பதெல்லாம் கெடையாது. இங்கேயும் அதே நிலைதான்"

"அப்போ இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்னப்பா பெரிய வித்தியாசம்.இங்கே திரும்பி வந்திற வேண்டியதுதானப்பா?" . அம்மா அவங்க பாயிண்ட்க்கு வழக்கம்போல போயிட்டாங்க.

"இங்கே வந்து வாழ்றது கஷ்டம்மா".

"என்னப்பா பேசுற வருண்! அப்போ நாங்கல்லாம் இங்கே வாழவில்லையா? ? அங்கேயும்தான் துப்பாக்கிய வச்சு பச்சைக் குழந்தையை எல்லாம் சுட்டுக் கொல்றதா டெய்லி செய்தி வருது..புயலடிச்சு வீடெல்லாம் அழிஞ்சு போகுதுனு சொல்றாங்க. நம்ம ஊரைவிட அங்கே மோசமாகத் தெரியுதுப்பா. ஒரு நல்லது கெட்டதுக்கு நெனச்சா வர முடியுதா? திரும்பி வந்திருப்பா"

"ஆமாம்மா..உண்மைதான். இங்கே யாரு வேணா துப்பாக்கி வச்சுக்கலாம். நம்ம ஊரில் அதுபோல் கிடையாது. சட்டக்காவலர்கள் மட்டும்தான் துப்பாக்கி வச்சு இருப்பாங்க. அதனால அப்பப்போ எவனாவது இப்படி செய்துகொண்டே இருக்காங்க. அதுபோக சுழல் காற்று, புயல் எல்லாமே இங்கே அதிகம்தான். இருந்தாலும் இந்தியாவில் வாழ பயம்மாத்தான் இருக்கு."

"ஏன்ப்பா..இங்கேதான பிறந்து படிச்சு, அங்கே போன? எங்கேயிருந்தோ குதிச்சவன் மாதிரிப் பேசாத.." அம்மா கோபமாக.

"இப்போ இல்லைனு யார் சொன்னா? இந்தியாவில் சட்டம் ஒழுங்கு இல்லை. எங்கே பார்த்தாலும் லஞ்சம், ஊழல்..காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுமளவுக்கு மக்கள் முன்னேறிட்டாங்க. ஜல்லிக்கட்டுனு காட்டுமிராண்டிகள் போல மாட்டை அடக்கிறேன்னு திரிகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை. குடிக்கக் குளிக்கத் தண்ணீர் இல்லை.  எங்கே பார்த்தாலும் கூட்டம். இதெல்லாம் இன்றைய இந்திய வளர்ச்சி. அந்தளவுக்கு நான் அமெரிக்காவில் வளரவில்லை. அங்கே எல்லாமே ஸ்லோவாகத்தான் கோய்க்கொண்டு இருக்கு. ஃபேஸ் புக், வாட்ஸ் அப் எல்லாம் நம்ம ஊரில்தான் அதிகமா யூஸ் பண்ணுறாங்க. இதுபோல் வேகமாக முன்னேறிக்கொண்டு போகும் இந்த இன்றைய இந்திய கலாச்சாரத்தில் நான் சர்வைவ் ஆகிறது கஷ்டம்." என்று உண்மையைச் சொன்னேன்.

"இந்த நாட்டில்தானே நீ படிச்சு, இந்தப் படிப்பை வைத்துத்தானே அமெரிக்காவில் வேலை வாங்கின? இந்த நாட்டுக்காக நீ திருப்பி செய்ய வேண்டாமா?" அம்மா என்னை குற்றவாளிக்கூட்டில் நிறுத்த முயன்றார்கள்.

"உண்மைதான். இந்தியாவில் ஃப்ரீ எஜுகேஷன்லதான் நான் படிச்சு அமெரிக்கா போனேன். என் படிப்பின் அஸ்திவாரம் இந்தியாவில் இந்திய ஆசிரியர்களால் போடப்பட்டதுதான். இல்லைனு சொல்லவில்லை. ஆனால்..

"என்ன ஆனால்?"

"இப்போ என்னவோ என் படிப்பிற்கான வேலை செய்ய ஆளே இல்லாமல் அந்த வேலையை காலியாக் வைத்துக்கொண்டு இந்தியாவில் எல்லோரும் என் வருகைக்காக ஏங்கிற மாதிரி சொல்றீங்க? அப்படி எல்லாம் இல்லவே இல்லை. என் படிப்பிற்கான வேலை பார்க்க இங்கே ஆயிரம் பேர் படிச்சவன் வரிசையில் நின்றுகொண்டு இருக்கான். ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவுக்கு தொந்தரவு கொடுக்காமல் இங்கிருந்து போயி மற்றவருக்கு இன்னும் அதிக வேலை வாய்ப்பு கொடுத்து உதவுறேன். இங்கே உள்ள நாலு சொம்பு தண்ணீரில் எனக்கொரு சொம்பு கொடுனு போட்டி போடாமல், நீங்களே வச்சுக்கோங்கப்பானு பெருந்தன்மையுடன் போறேன். எந்த வகையிலும் நான் இந்தியாவுக்கு துரோகமோ அல்லது அதுபோல் எதுவும் செய்யவில்லை. நான் இங்கிருந்து போனதால் இந்த நாட்டிற்கு ஒரு பாரமா இல்லாமல் உதவத்தான் செய்றேன். அதான் உண்மை."

"நீ வீம்புக்கு பேசுறியா என்னனு தெரியலை. சரி வந்து சாப்பிடு. எப்பயும் போல முயலுக்கு மூனுகால்தான் நிப்ப நீ"

Mothers are always like that. They always want you to listen to them even after all these years. Because you are her child- that will never change ever. So,  it is considered "rude" if you ask them to listen to you!  தாய் சொல்லை தட்டக் கூடாது சரியா? :)

 I seriously think that I am helping India by leaving the "great"  country.

* The population is growing SO FAST.  1.34 billion people!! My leaving only makes India somewhat less populated. Am I correct?

* There is LOT of water scarcity, especially where I grew up, in my hometown. There is no ground water even if you dig deep for miles. This was not the case before- when I was growing up. So, my leaving only helps others to get more water, at least some water.

* If I am there, I would become part of the corrupt India. When you are in Rome, be a Roman. When you are in Corrupt India, you would become corrupt too. Correct? :)  Obviously I will not keep myself off from corruption when I become part of the system we have now. இல்லைனா பிழைக்கத் தெரியாத கிறுக்குப்பயலா இருக்கான்னு எல்லாக்  கிறுக்கனும் எனக்கு பட்டம் கொடுப்பானுக. One more corrupt Indian will be added. I am being away from India only makes India less corrupt.

* முன்னால எல்லாம் நண்பர்கள் ஒண்ணு சேர்ந்தால் -கல்லூரி விடுமுறை நாட்களில்- லாங் வாக் போவோம். ஏதாவது ஒரு கடையில் மிக்சர் டீ சாப்பிடுவோம். இப்போ எல்லாம் எல்லாரும் டாஸ்மாக் தான் போறாங்க. இதுதான் இன்றைய நம் "நண்பர்கள்" கலாச்சாரம். நான் இன்னும் குடிகாரப் பயலா ஆகவில்லை. I wont consume alcohol and help the economy to grow. The money will get stuck with me. It is NOT good for the country. Or not?

So, seriously, it is hard for me to survive in the "modern fucking India". Because India is SO FUCKED UP! Who can survive?  Not me! I dont have that "skills", unfortunately.

Well, what if they deport all the naturalized citizens? It is possible. When I dont have the choice of living here or there, it is a different story. I will obviously get more survival skills! :)





4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொன்ன நண்பர்கள் கலாச்சாரத்திற்காகவே இங்கே வர வேண்டும்... வாழ்க நலம்...

ஆனாலும்...

அம்மா பிள்ளை யாராக இருந்தாலும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்...

அதனால்...

வ ர லா ம்...

ஸ்ரீராம். said...

உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. குறிப்பாக " இப்போ என்னவோ என் படிப்பிற்கான வேலை செய்ய ஆளே இல்லாமல் அந்த வேலையை காலியாக் வைத்துக்கொண்டு..." என்று தொடங்கும் பாராவும் கடைசி சில வரிகளும்.

வருடத்துக்கு ஒருமுறையாவது வந்து அம்மாவைப் பார்த்துச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் இந்தியா வந்தாலும் நீங்கள் நிலை மாறமாட்டீர்கள். அதனால் நீங்கள் இந்தியா வந்து, உங்களால் ஓரிருவராவது இங்கு இந்தியாவில் மாறினால் அதுவும் நல்ல விஷயம்தானே...

'பசி'பரமசிவம் said...

இப்போதைக்கு இங்கே வரமுடியலேன்னாலும்,வழக்கம்போல இங்குள்ள தமிழனுக்கு உறைக்கிற மாதிரி பதிவு எழுத மறக்காதீங்க.

G.M Balasubramaniam said...

சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல ஆகுமா