Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, June 2, 2009

கோழைகள் எல்லாம் துரோகிகளா?

சாதாரண மனிதர்கள் கோழையாக இருப்பது இயற்கை! கோழைகளை பல நேரங்களில் நாம் துரோகிப் பட்டம் கொடுத்து கீழே அமர்த்திவிடுகிறோம். கோழைகள் பலவகை! நம்மில் பல கோழைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடந்தான். இன்றும், இப்பொழுதும்தான்!

1) ஒரு வியாபாரியிடம் வந்து ஒரு ரெளடி நல்ல வியாபரம் நடந்துக் னொண்டிருக்கும்போது மிரட்டுகிறான். எனக்கு இப்போ தண்ணியடிக்க 200 ரூபாய் கொடு என்று. இவன் கலாட்டாவால் கடைக்கு வந்த கஸ்டமர் எல்லாம் பயந்து நடுங்குகிறார்கள்.


* அந்த கடைக்காரன் போலிஸை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு ரூ 500 லஞ்சம் கொடுத்து, ரெளடியை ஜெயிலில் தள்ளலாம். ஆனால் அதோடு இது முடியாது.

* அதைவிடுத்து, அந்தக்கடைக்காரர் இன்னொரு ரெளடி கும்பளை ரூ 300 செலவழித்து "ஹயர்" பண்ணி அவனை சமாளிக்கலாம். ஆனால் அதுவும் அதோட முடியாது.

* ஆனால் அதையும் விடுத்து, நான் ஒரு வியாபாரி. ஏன் என் பொழைப்புல மண்ணள்ளி போடற என்று அவனிடம் கெஞ்சும் தொணியில் பேசி 100 அல்லது 200 ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவது படு கோழைத்தனம்தான். அந்த ரெளடி திரும்பவும் நாளை வரலாம். ஆனால் அதைத்தான் பொதுவாக செய்கிறான் ஒரு வியாபாரி. இதுவும் இதோட முடிவதில்லை. பொதுவாக பல வியாபாரிகள் கோழையாக்த்தான் வாழ்கிறார்கள்.


2) அதுபோல் தமிழ் ஈழத்திற்காக புலிப்படை போராடுவது நியாயம்தான். ஆனால் போராட்டம்னு வந்தால் உயிர் சேதம் வரும். என் மனைவி மகள் மற்றும் தங்கைகள் கற்பு சூரையாடப்படலாம். நான் ஒரு கோழை! என்னால் அதுபோல் விளைவுகளை தாங்க முடியாது. இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் அநியாயத்திற்கு கடவுள் இவர்களை தண்டிப்பான். கடவுள் நிச்சயம் இருக்கான். அநியாயம் செய்பவர்களை அவன் இன்று அல்லது நின்று கேட்பான் என்று போராடாமல், புலிகள் கொள்கைக்கு ஆதரவு கொடுக்காமல் பயந்து திரியும் கோழைத் தமிழர்களும் நிச்சயம் உண்டு. மனதைரியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

* அதுபோல் பயந்து கோழையாக இருக்கும் தமிழர்களுக்கு, துரோகிப்பட்டம் சூட்டுவது சரியா?

* இதுபோல் கோழைகள் பரிதாபத்துக்கு உரியவர்கள் இல்லையா?

* இல்லை இதுபோல் கோழைகளும் துரோகிகள்தானா?


3) ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதாற காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதலில் பல சிக்கல்கள். அவனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையில் இது நிச்சயம் சரிப்பட்டு வராது என்று தெளிவாகத் தெரியுது. ஆனால் அவனால் காதலிக்காமலும் இருக்க முடியவில்லை. அவள் அவனை அன்பால் குளிப்பாட்டுகிறாள். He could not resist. The emotions take over. நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும்னு நிலைமை வரும்போது, அவன், உலகம் சந்தர்ப்ப சூழ்நிலை இவைகளுக்கு பயந்து ஒரு கோழையாகிறான். இதுபோல் கோழைகள் சினிமாவில் மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தில் பல லட்சம், பல கோடிகள் இன்றும் வாழ்கிறார்கள்.

அதனால் கோழை என்பவன் மனிதர்களில் அசாதாரணம் அல்ல என்பதை நாம் உணருகிறோமா? அதை நாம் ஏற்றுக்கொள்ளனும்! கோழைகளுக்கு எல்லாம் தூரோகிப்பட்டம் சூட்டுவது தவறு இல்லையா?

Monday, June 1, 2009

இலங்கை தமிழரில் இன்னொரு வகை!

இலங்கையில் தமிழீழப் போராட்டமும், இனப்படுகொலையும் ஒரு புறமிருக்க, ஒரு சில தமிழர்கள் இந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்ததைப் பார்த்து மனதாற சந்தோஷப்படுகிறார்கள்.

எனக்குத்தெரிய இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர் ஒருவர், இன்றைய நிலையை,
"Sri Lanka _ One Country One Nation" என்று தன் மனதுக்குள் கொண்டாடுகிறார். பொதுவாக இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் தமிழ் ஈழம் மலர ஆசைப்படவே இல்லை!

தமிழீழப்பிரச்சினை பற்றிய ஞானத்தில் கற்றுக்குட்டி நான். அறிந்துகொள்ள கேட்கிறேன்!

அது ஏன் இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும், தமிழீழத்தை வரவேற்கவில்லை?

சிங்களவரோடு அவர்களால் எப்படி சேர்ந்து வாழ முடிகிறது?

இந்த இனப்படுகொலையைப் பார்த்து அவர்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை? :(

இந்த நியாயமான தமிழீழப் "போராட்டத்தை' அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?

மதத்தால் அவர்கள் வேறுபட்டாலும் மொழியால் அவர்களும் தமிழர்கள் தானே?

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. தாய் மொழி தமிழ். தயவு செய்து இந்த கேள்வி இந்த நேரம் நான் எழுப்பியதால் வீண் தனிநபர் தாக்கு வேண்டாம். நன்றி!

Friday, October 31, 2008

ரஜினி-கமல்!!! இது உண்மையா?!

கீழே உள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!

-----------------------------------
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி-கமல், நடிகர்கள் 'பேசா' உண்ணாவிரதம்?

[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 10:02.05 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!. இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே. சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

----------------------------

Friday, October 24, 2008

எனது ஈழச்சிந்தனைகள்

இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.