Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Wednesday, March 3, 2010

ஜெயமோஹன் தான் இந்துமதக் காவலரா?!

இந்த ஒளிபரப்பால் நித்யானந்தானு ஒரு அயோக்கியன் ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுவதை விட்டுட்டு ஒரு சில அரைவேக்காடுகள் ஏதோ இந்த சாமியார்தான் இந்து மதத்தை கட்டிக் காத்தது போலவும் இவன் மாட்டியதும் இந்துக்களுக்கு அவமானம் இந்து எதிரிகள் வாங்கி தந்தார்களானு ஏதேதோ பிதற்ற,

அன்புள்ள ஜெ,

சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில் நித்யானந்தர் என்ற புகழ்பெற்ற சாமியார் ஒரு நடிகையுடன் இருக்கும் அந்தரங்கமான காட்சியை வெளியிட்டார்கள். எனக்கு அந்த சாமியார் மீது எந்தவகையான ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்காட்சி அதிர்ச்சியளித்தது. இந்து ஞான மார்க்கம் என்றுமில்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த ஊடகத் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் காலம் இது. அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன். இந்தநிலையில் இந்தமாதிரியான ஆபாச நிகழ்ச்சிகள் அந்தப்போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன. இந்த ஒரு நிகழ்ச்சியைவைத்தே இந்துமதத்தில் உள்ள துறவு என்ற விஷயமே கேவலப்படுத்தப்படும் என்பதை உடனே பல இடங்களில் இருந்து வந்த ‘கமெண்டுகளை’ வைத்தே அறிந்துகொண்டேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்

சிவராமன்,சென்னை

from jeyamohan's site!

அதுக்கு நம்ம இந்து மதக்காவலர் ஜெயமோஹன் பெரிய விளக்கம் எழுதியிருக்கார்.

அவர் விளக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது ஒரு கேள்வினு இதை பிரசுரிச்சு, இவர் அதுக்கு கொடுக்கும் பெரிய விளக்கத்தை வாசிக்கும்போது ஏதோ இதுபோல போலிச்சாமியார்கள்தான் இந்துமத்தின் ஆணிவேர்கள் போலவும், இதுபோல சாமியார்கள்தான் இந்து மதத்தை வளர்த்து வருவது போலவும், இந்து மதத்தைப் பற்றி தேவையே இல்லாமல் ஒரு லெக்ச்சர் அடிக்கிறார் .

இவர் இந்தக் கேள்வியைப் மேற்கோள் காட்டி, இவர் டி வி எல்லாம் பார்ப்பதில்லைனு ஒரு சுயவிளம்பரத்துடன் இந்து மதத்தை "டிஃபெண்ட்" பண்ணுவதை வாசிக்கும்போது உண்மையிலேயே எரிச்சலாயிருக்கு.

இதற்கு என்ன அவசியம் இப்போ??

காவியக்கட்டிக்கொண்டு மனமருத்துவர் வேலையைச் செய்பவன் எல்லாம் இந்து மதத்தை வளர்ப்பவனா? அப்படித்தான் இந்துக்கள் நம்புகிறார்களா? இவனுகளை பார்த்தாலே ஏமாற்றுக்காரர்கள்னு தெரியலையா? இவனுகள் சாதனைகளை கேட்டாலே மூளை உள்ள எவனுக்கும் புரியும்!

These guys are nothing but UNEDUCATED shrinks! They found a way to use the "kaavi" to attract weak-minded individuals by pretending to be a "God" or something for running their cheap lifes. There are millions of morons are there to believe these "kaavi guys" including reputed writers!

Some poor bastards get caught (just like our nithi) and some get away with it. It is going to continue like this for ever unless we get rid of them completely. There is absolutely no need for this kind of uneducated shrinks! We need to wipe them out completely!

I dont understand what is going on in Jeyamohan's site as a consequence of this incident .. It is not necessary to go on define and defend hinduism. We all need to be happy that one cheat's true face is revealed! That is it.

For some reason Jeyamohan sounds like a scary hindutava!!! He seems to have got disturbed as nithi's true face is revealed!

Dont worry hinduttavaas. Hinduism will live long without all these kaavi saamiyaars! After all you have got innumerable Gods to help!

Tuesday, March 2, 2010

சாருவுக்கு ரொம்ப கெட்ட நேரமா?

தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுடன் கருத்து வேற்றுமை வருவது, அவர் எழுத்தில் உள்ள குறைகள் விமர்சனத்துக்குள்ளாவது எல்லாம் பதிவுலகில் ரொம்ப சாதாரண விசயம். பலரையும் விமர்சனம் செய்யும் எழுத்தாளர் யாரும் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாது. இது போல் விமர்சனங்களால் மேலும் மேலும் "நொட்டோரியஸாக" பிரபலமானவர் சாருனு கூட சிலர் இவர் புகழ் பாடுவதைப் பார்க்கலாம். இவரைப் புகழ்ந்து, இவரை ஆதரித்து தன் பிழைப்பை ஓட்டுபவர்களும், இவரை விமர்சனம் செய்து தன் பதிவுகளை வாசிக்க வைப்பவர்களும் கணக்கிலடங்காது.

ஆனால், சமீபத்தில் இவருக்கு வேறு விதமான பிரச்சினைகள் ஆரம்பமாகி யுள்ளது. பிரபல பதிவர் ஒருவர் இவர் எழுதியதாக வந்த ஒரு சில சிறு கதைகள் இவருடையதல்ல! அந்த கரு மற்றும் கதைக்கு சொந்தக்காரர் இன்னொருவர் என்கிற குற்ற்ச்சாட்டை வைத்தபோது அதைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆடிப் போயிட்டேன்.

சாரு நிவேதிதாவா இப்படி எல்லாம் செய்வார்? இவர் அந்த அளவுக்கு கீழே இறங்கிப்போகும் அளவுக்கு என்ன அவசியம்? என்கிற குழப்பத்தின் மேலே குழப்பம். ஆனால் இந்த "கதை திருட்டு" விசயத்தை பொய் என்று யாரும் அடித்து சொல்ல முன்வரவில்லை! இவருக்கு தினம் ஜால்ரா அடிப்பவர்களும் இது பொய் குற்றச்சாட்டு என்று சொல்ல முன்வரவில்லை! இது பலரையும் தைரியமாக விமர்சிக்கும் ஒரு போஸ்ட்-மாடர்ன் எடுத்தாளருக்கு மிகப்பெரிய அடி, சறுக்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அது போதாதென்று இன்று இன்னொரு பெரிய சறுக்கல்! இவர் கடவுளைக் கண்டேன் என்று யாரை ஒரு நல்ல சாமியார், கடவுள் என்று கட்டுரை மேல் கட்டுரை எழுதி சொல்லிக்கொண்டு இருந்தாரோ அந்த, சுவாமி நிதயானந்தாவுடைய வீடியோ பிரபல தொலைக்காட்சியில் வெளி வந்துள்ளது. எப்படி? இன்னொரு நடிகையுடன் படுக்கையில் இவர் இருப்பதுபோல. யாரு? நம்ம கடவுள் நித்யானந்தா!! நம்ம ஊர் "கடவுளுக்கு" இது சாதாரணம்தான்னு நீங்க சொல்லலாம். ஆனால் நித்யானந்தா, தான் பெண்களுடன் உறவுகள் வைத்துள்ளதாக இதுவரை வெளியே சொன்னதில்லை.

சாமியாரெல்லாம் இப்படித்தான். இதென்ன பெரிய விசயம் னு சொல்லலாம். ஆனால் நித்தியானந்தாவை விட்டுவிட்டு நித்தியின் இந்த முகத்தை மறைத்து இவரை கடவுளாக்க முயற்சி செய்த சாரு நிவேதிதா மேல்தான் எல்லோரும் எரிச்சலும் கோபமுமாக இருக்கிறார்கள். சாருவுடைய கடவுளை கண்டேனில் நித்யானந்தா- ரஞ்சிதா எப்பிசோட் ஒண்ணையும் இவர் எழுதியிருந்தால் இவரை யாரும் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதா இந்த சாமியாரின் பலமுகங்களை மறைத்தது பெரிய குற்றம் என்பதுபோல் பலர் உணர்கிறார்கள். நித்யானந்தாவை திட்டுவதற்கு பதிலாக சாருவைத்தான் அதிகம் திட்டுகிறார்கள்.

பாவம் சாரு! இவருக்கு ரொம்ப கெட்ட நேரம் போல இருக்கு! :( எல்லோரையும் போல் நித்தியானந்தாவை நம்பி மோசம்போனவர்களில் முதல் ஆள் இவர்தானோ என்னவோ!

Friday, October 24, 2008

எனது ஈழச்சிந்தனைகள்

இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.