Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Wednesday, May 23, 2012

அதர்வ வேதம் பற்றி ஜெயமோஹன்!

 வரவர நான் ஜெயமோஹன் ரசிகராகிவிட்டேனானு எனக்கே சந்தேகம் வருது. அவர் தளத்தில் உள்ள ஒரு வேதம் சம்மந்தப்பட்ட பதிவை வாசிக்க நேர்ந்தது. இதுல என்ன சொல்ல வர்ரார்னா, 

வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?


***வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது.***

அதாவது, வெள்ளைக்காரன் வந்துதான் எல்லா சாதி கலகத்தையும் நமக்குள்ள உண்டாக்கிவிட்டுட்டான். வேதங்கள் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் தவிர மற்றவர்களிடம் இருந்து விலக்கப்பட்டது என்பது பொய் என்கிறார். சரி, அப்படியே எடுத்துக்குவோம்..

கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு நிகழ்வை (கதை?)வாசிங்க!!!


இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.

வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.

சரி என்ன விசயம்னு பார்ப்போம்!

அதாவது சூலம் ஆடுச்சாம்.  எந்த மந்திரம் சொல்லும்போதும் சூல ஆட்டம் நிற்கவில்லையாம்! உடனே அந்த "இளையவன்" ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்ரீக விதிப்படி உயிர்பலியாக உருவகித்து, அந்த சூலத்தில் அடித்து பிளந்ததும். ஆடிக்கிட்டு இருந்த சூலம், ஆடாமல் (உயிர்பலி கெடச்சதும்) நின்னுடுச்சாம்!!!

நெஜம்மாவே இது ஒரு உண்மையான நிகழ்வா? அப்படினா.. அந்த அதர்வமந்திரம் அந்த சூல ஆட்டத்தை நிறுத்திப்புடுச்சுனு எல்லாரும் நம்புறாகளா?

இல்லைனா இது சும்மா ஒரு கதையா??

இது நெஜம்மாவே நடந்த ஒரு நிகழ்வென்றால், என்னை இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னால்.. 

ஏதோ நிலநடுக்கத்தில் சூலம் ஆடியிருக்கலாம். பல மந்திரங்கள் சொல்லும்போது, அந்த நில நடுக்கம் எதார்த்தமாக நிற்கவில்ல! அப்புறம், இந்த இளையவர், அதர்வமந்திரம் சொல்லி "தேங்கா உயிர்பலி" கொடுத்த போது எதார்த்தமாக அந்த நிலநடுக்கும் நின்றுவிட்டது!

இதப்போயி, அந்த இளையவரின் அதர்வ மந்திர சக்திதான் நிறுத்திப்புடுச்சுனு சொல்வதெல்லாம் அறியாமை இல்லையா?!

Thursday, January 1, 2009

ரஜினியின் பாபாஜியின் சிறுநீரகங்கள்!

யாரோ ஒரு பாபாஜீ என்கிற சித்தர், 2000 ஆண்டுகள் வாழ்கிறார் என்கிறார்கள். அதை நம்ம ரசினி நம்புகிறார். சரி, இதை அவர் பர்சனல் மேட்டர்னு விடமுடியாதுதான்.

காரணம்? இது சமீபத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக இருக்கிறது.

இங்கே பாபாஜி 2000 ஆண்டு வாழ்வதுல் உள்ள முக்கியமாக பிரச்சினை ஒன்று சொல்ல வேண்டும்! மனித உடம்பில் உள்ள முக்கிய உறுப்புக்கள் (இதயம், ஈரல், நுரையீரல், மேலும் செக்ஸ் ஹார்மோன்ஸ்,) போன்றவை ஒருவருக்கு வயதாக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்துகொண்டுதான் போகின்றன. மேலும் வயதாக ஆக, ஒரு வருக்கு எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே போவது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இதில், சிறு நீரகம் என்பது சந்தேகமே இல்லாமல் வருடத்திற்கு வருடம் பழுதடைந்து கொண்டுதான் போகிறது என்பது அறிவியலில் நிரூபித்த உண்மை.

Unlike any other vital organs, one's Kidney function goes down as one gets older and older no matter how healthy the person is!

அதாவது ஒருவர் 200 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் பிறக்கும்போது இருந்த அவருடன் வந்த 2 சிறுநீரகத்தை வைத்து வாழவேமுடியாது. அவைகள் 200 வருடங்களில் முற்றிலும் பழுதடைந்துவிடும் என்பது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. 200 ஆண்டுகளுக்குள் சிறுநீரகம் பழுதடைந்தால் 2000 ஆண்டுகள் அதே சிறுநீரகத்தை வைத்து வாழ்வது என்பது JUST IMPOSSIBLE!

Wednesday, November 19, 2008

நாத்தீகர்களும் கடவுளும்!

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!

நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!