வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?
***வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது.***
அதாவது, வெள்ளைக்காரன் வந்துதான் எல்லா சாதி கலகத்தையும் நமக்குள்ள உண்டாக்கிவிட்டுட்டான். வேதங்கள் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் தவிர மற்றவர்களிடம் இருந்து விலக்கப்பட்டது என்பது பொய் என்கிறார். சரி, அப்படியே எடுத்துக்குவோம்..
கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு நிகழ்வை (கதை?)வாசிங்க!!!
இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்
ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது
ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.
வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.
சரி என்ன விசயம்னு பார்ப்போம்!
அதாவது சூலம் ஆடுச்சாம். எந்த மந்திரம் சொல்லும்போதும் சூல ஆட்டம் நிற்கவில்லையாம்! உடனே அந்த "இளையவன்" ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்ரீக விதிப்படி உயிர்பலியாக உருவகித்து, அந்த சூலத்தில் அடித்து பிளந்ததும். ஆடிக்கிட்டு இருந்த சூலம், ஆடாமல் (உயிர்பலி கெடச்சதும்) நின்னுடுச்சாம்!!!
நெஜம்மாவே இது ஒரு உண்மையான நிகழ்வா? அப்படினா.. அந்த அதர்வமந்திரம் அந்த சூல ஆட்டத்தை நிறுத்திப்புடுச்சுனு எல்லாரும் நம்புறாகளா?
இல்லைனா இது சும்மா ஒரு கதையா??
இது நெஜம்மாவே நடந்த ஒரு நிகழ்வென்றால், என்னை இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னால்..
ஏதோ நிலநடுக்கத்தில் சூலம் ஆடியிருக்கலாம். பல மந்திரங்கள் சொல்லும்போது, அந்த நில நடுக்கம் எதார்த்தமாக நிற்கவில்ல! அப்புறம், இந்த இளையவர், அதர்வமந்திரம் சொல்லி "தேங்கா உயிர்பலி" கொடுத்த போது எதார்த்தமாக அந்த நிலநடுக்கும் நின்றுவிட்டது!
இதப்போயி, அந்த இளையவரின் அதர்வ மந்திர சக்திதான் நிறுத்திப்புடுச்சுனு சொல்வதெல்லாம் அறியாமை இல்லையா?!