Showing posts with label பார்ப்பனர். Show all posts
Showing posts with label பார்ப்பனர். Show all posts

Thursday, August 1, 2013

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது.

வியாசன்..

* தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார்.

* பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்..

* ராஜ ராஜ சோழன் செய்த சாதனைகளை எல்லாம் சிங்களவர்கள் அழிக்கிறார்கள்! தமிழர்களின் சாதனைகளை எல்லாம் வரலாற்றில் இருந்து அகற்றப்படுகிறது என்கிறார்.

இந்தியாவில், பாபர் மசூதியை அகற்றவில்லையா? அதுபோல்தான்  இதையும் செய்கிறார்கள் என்று விளக்க முயன்றால்.. "நம் தமிழர்கள் அப்படி செய்யவில்லை!" "நினைக்கவில்லை" என்கிறார். இவருக்கு தமிழர் சம்மந்தமில்லாத எந்த ஒரு பிரச்சினையும், பிரச்சினையே இல்லை! நம்ம ஊர் காந்தியெல்லாம் ஒரு மனுஷனே இல்லை! பெரியாரை எல்லாம் எள்ளளவும் இவர் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை! புத்தனை அறவே வெறுப்பவர் இவர்னு நினைக்கிறேன். பொதுவாக மேற்கூறிய  எல்லா விசயங்களிலும் நம்ம ஊர் பார்ப்பனர்கள் நிலைப்பாடும் வியாசன் நிலைப்பாடு போல்தான்! பார்ப்பானுக்கு புத்தனையும், காந்தியையும், பெரியாரையும் பிடிக்காதுனு பார்ப்பனரை கவனித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்!

இவர் வியாசர்னு பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ பதிவுலகில் தமிழ் பிராமணர்களிடம் அன்பாவும் பரிவாகவும் நடந்துகொள்கிறார். யாரோ ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க இருக்கிறேன், என்கிறார் இந்த அன்பர். இவரை ஏதாவது விவாதங்களில் சாடினால் நான் உங்க "மாப்பிள்ளை"தான்னு அன்புடனும் கோபத்துடனும் சொந்தம் கொண்டாடுகிறார். :)

எனக்கு இவர் சிந்தனைகள் சரியாகப் பிடிபட மாட்டேன் என்கிறது. இவர் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இதேபோல் உணர்ந்து இருக்கிறேன்.

தமிழன் என்கிற அடையாளம் தவிர நாம் இவ்வுலகில் வாழும் ஒரு "நல்ல மனுஷன்" "கெட்டவன்" என்கிற ஒரு பொது அடையாளமும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழன் என்கிற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, உலக நடப்பை, நல்லது கெட்டதை பார்க்கவும் செய்யலாம். ஒரு சாதாரண மனிதனாக. உலக விசயங்களை நாம் விவாதிக்கலாம். இதுபோல் விவாதங்கள செய்வது, நல்லவற்றை மற்றவர்களிடம் கண்டறிந்து வியப்பது, போன்றவை வியாசன் மட்டுமல்லாமல் பல ஈழத்தமிழர்களால் முடியவே முடியாதா?! அவர்களால் சுத்திச் சுத்தி தமிழன், தமிழ் என்கிற ஒரு அடையாளத்திலிருந்து வெளிவர முடியாது என்றே எனக்குத் தோனுகிறது!

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும்  இவர்களிடம் ஏதோ ஒன்று இவர்களிடம் இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா? இல்லைனா இயற்கையிலேயே இவர்கள் இப்படித்தானா? என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.

புத்தர், காந்தி, பெரியார் போன்றவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை இவர்களால் சுத்தமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் ஏதாவது சொல்லியிருந்தால் மட்டுமே அந்தக் கருத்தை கவனிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். மற்றவர்கள், அது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் அவர்களை, அவர்கள் சொன்ன கருத்துக்களை புறக்கணிக்கிறார்கள்.

உலகம் என்கிற கடலில்  தமிழர்கள் ஒரு சின்னத்துளிதான் என்பது இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை! தமிழனல்லாதவன் எவனாக இருந்தாலும், அவனுடைய  நற்சிந்தனைகளை, வரவேற்பது,  பாராட்டுவது போன்ற பெரிய மனது இவர்களிடம் இல்லை என்றும் பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வகையில் இது நம் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் குறுகிய சிந்தனை  போலவே இவர்கள் சிந்தனையும் இருப்பதாக எனக்குத் தோனுகிறது. பார்ப்பனர்களுக்கு திராவிடர்கள் வாழ்க்கை முறை பண்பாடுகூட சரியாத் தெரியாதுனு சொல்லலாம். அவர்கள் பிரச்சினை, இந்து மதத்தை காப்பாத்தனும், பார்ப்பானை எவனும் எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது பத்திரிக்கை வேசித்தனம் செய்யும் சோமாரி ராமசாமியாக இருந்தாலும் சரி, தன்னை உயர்சாதினு பிதற்றும் எந்த அரைவேக்காட்டுப் பார்ப்பானாக இருந்தாலும் சரி! அல்லது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கராச்சாரியாக இருந்தாலும் சரி! பார்ப்பான் நிலைப்பாடு ஒண்ணே ஒண்ணுதான். நம்மோடைய இருந்து, நம்முடனே வாழ்ந்து தண்ணீரும் எண்ணையும்போல்தான் பார்ப்பனர்கள் என்றுமே  நம்முடன் வாழ்கிறார்கள்.  ஈழத்தமிழர்களும் நம் பார்ப்பனர்களைப் போலவே "தமிழன்" "தமிழ் அடையாளம்" என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த மிகப் பெரிய உலகில்  வாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.

இது உண்மையா? என்னைப்போல் வேறு யாரும் உணர்ந்து இருக்கீங்களா? இல்லை நான் சும்மா பிதற்றுகிறேனா? நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! நன்றி

Saturday, June 8, 2013

நான் அந்தமாதிரி பார்ப்பனர் இல்லை! அகல்-நகல் பார்ப்பான்!

யாருப்பா இது அகல்னு ஒரு உலகமகா யோக்கியன் புதுசா உருவாகியிருக்கான்? தான் பெரிய உலகமகா யோக்கியன்கிறதை காந்தி, புத்தர்கூட இவ்ளோ தைரியமா சொன்னதில்லை !  அப்படி என்ன சொல்லிப்புட்டாருனு யோசிக்கிறீங்களா?

இங்கே போய்ப் பாருங்க!

* நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல!

* சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன்.

* உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன்.


எனக்குப் புரியவில்லை!  நான் ஒரு உயர்தரப் பார்ப்பான்னு சொல்றானா?  இல்லைனா பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கும் உயர்சாதி திராவிட முண்டம்னு சொல்றானா? இல்லைனா பார்ப்பனர்களுக்கு முழுமூச்சாக வக்காலத்து வாங்கும் தாழ்த்தப்பட்டவன்னு சொல்றானா?


 * இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும். 

 இவன் இவன் தளத்தில் ஊருப்பயலுக கமெண்டை எல்லாம் பப்ளிஷ் பண்ணமாட்டானாம்! ஆனால் இவன் எழுதுற எல்லாத்தையும் பப்ளிஷ் பண்ணிப்புடணுமாம்! ஏன்னா இவன் ஒரு ஆள்தான் உலகத்திலேயே யோக்கியனாம்! அவனே சொல்லிகிறான்ப்பா!


* அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன். 

 துச்சமாவா? அப்புறம் எதுக்கு இந்த ஒப்பாரியை நகல் எடுத்து அவன் தளத்தில் வெளியிடுறானாம்? துச்சமா மதிக்கிறதுனா என்னனே இந்த முண்டத்துக்கு தெரியாதா?


* எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல! இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன்.

 சமத்துவமா வாழணும்னா "பார்ப்பனர் பார்ப்பனர்,, நான் பார்ப்பான் இல்லை"னு எதுக்கு சாதித் தம்பட்டம்? இதுதான் சமத்துவத்தை செயல்படுத்தும் விதமா?

* உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !

ஒருவருடைய உடல் ஊனத்தை விமர்சிக்கிறவனை எதிர்த்ததால இவனுக்கு "யோக்கியன்" பட்டம் அவனே கொடுக்கிறானாம்!


சரி, இதெதுக்கு இந்த சுய தம்பட்டம்? மனுஷ்ய புத்திரன் ஏதோ சொல்லக் கூடாததை சொல்லிப்புட்டாராம்..

அப்படி என்ன சொன்னாரு?


மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்


சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.

ஆனால்,

அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.

இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?

என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.

சின்மயி விசயத்தை அவர் ஒரு பிரபலமாக மட்டும்தான் பார்க்கணும்னு இவன் வியாக்யாணம் எல்லாம் சரி.

இவனுக்கு என்னுடைய கேள்விகள்...

* சின்மயி தன்னை ஒரு ஹையங்கார் என்று உலகறிய பிதற்றியது யார் தப்பு?

* தன் சாதியை ஒரு பெரிய தகுதியாக பிதற்றினதால்தானே இன்று  மனுஷ்ய புத்திரன் முதல்க்கொண்டு அனைவரும் சின்மயியை பார்ப்பனராக, "ஹையங்காராக" பார்க்கிறோம்?

* அது ஏன் இந்த முட்டாளுக்குப் புரியவில்லை? என்னவோ சின்மயியின் சாதிச்சான்றிதழை மனுஷ்யபுத்திரன் தேடி தோண்டி எடுத்ததுபோல் எதற்கு இந்த பிதற்றல்??


தான் பெரிய யோக்கியன்னு இந்தப் பார்ப்பான் உலகுக்கு நிரூபித்து விட்டானாம்?

எப்படி எப்படி?

மனுஷ்யபுத்திரன் ஒரு "physically challenged person"  என்பதை விமர்சிச்சவனை எதிர்த்துப் பேசிய யோக்கியன்  இவன் ஒருத்தந்தானாம். அதனால இவன் சமத்துவவாதி மற்றும் உலகமகா யோக்கியன் தகுதியைப் பெற்றுவிட்டனாம்! அவனே அவனுக்கு சான்றிதழ் கொடுத்துக்கிறான்ப்பா! எந்தவித கூச்சமோ, சங்கோஜமோ இல்லாமல்!