Tuesday, May 4, 2010

கொறிப்பதற்கு நொறுக்குகள் (யு கே-வில் சுறா)!


* யு கே பாக்ஸ் ஆஃபிஸில் விஜயின் 50 வது படமான சுறா, கலக்சன் ஓ கே யா இருக்கு! இந்தப்படம் 7 திரையரங்குகளில் திரையிடப்பட்டு (7 X 6331), 44318 பவுண்ட்ஸ் கலக்சன் ஆகி இந்த வாரம் யு கேவில் 22 இடத்தைப் பெற்றுள்ளது. இது ஏற்க்குறைய வேட்டைக்காரன் கலக்சன் அளவுதான். ஆனால் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டு அதே அளவு கலக்சன் வந்திருக்கு. ஈழத் தமிழர்களுக்கு அவர் மேலிருந்த கோபம் குறைந்துவிட்டதா?




* நியூயார்க் டைம் ஸ்கொயர் ல குண்டுவைக்க முயன்ற பயங்கரவாதி என நம்பப்படும் Mr. Faisal Shahzad, பிடிபட்டு உள்ளார். இவர், தன்னை பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் 5 மாதங்கள் ட்ரயின் பண்ணியதாக ஒத்துக்கொண்டார். இவர் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவ்ருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உண்டு.

* குஷ்புவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்கள்/அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஒண்ணு இருக்கு. நம்ம கடவுள்களே ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிட்டாங்கனு சொல்லி உச்சநீதிமன்றம் ஜஸ்டிஃபை பண்ணியது படுகேவலமான ஒண்ணு. கடவுள்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிற்கவைக்க முடியாது. Unlike human beings Gods do not have to obey or follow law!

* கமலஹாசன் முதல்வருக்கு சோப் அடித்ததை பெருசுபடுத்துவது ரொம்ப அதிகம்னு தோனறுகிறது. ஒருவரைப் பற்றி மேடையில் பேசனும்னா சோப் அடிக்காமல் வெளக்கெண்ணையா கொடுக்க முடியும்? வயதில் முதிர்ந்த திரு கருணாநிதியை அவர் தமிழ் அறிவைச் சொல்லிப் பாராட்டுவதில் எனக்கெதுவும் தவறாக தோணவில்லை! அஜீத் பேசியதை முதல்வர் பெருசுபடுத்தாமல் விட்டு இருக்கலாம்தான். அதுக்காக பாராட்டுமேடையில் போய் கமலஹாசனும் முதல்வரை திட்டனும்னு எதிர்பார்க்கிறதெல்லாம்...

* ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான கார்கள் லிஸ்ட் இங்கே!
Top 10 Best-Selling Cars April 2010:

Ford F-Series: 40,946
Honda Accord: 31,766 (including 2,455 Crosstours)
Chevrolet Silverado: 29,618
Toyota Corolla: 27,932
Toyota Camry: 27,914
Honda Civic: 25,042
Ford Escape: 19,146
Ford Fusion: 18,971
Hyundai Sonata: 18,536
Honda CR-V: 16,661

கடந்த மாதம் மேலே இருந்த டொயோட்டா கேம்ரி இந்த மாதம் ஹாண்டா அக்கார்ட் க்கு கீழே போய்விட்டது!

Sunday, May 2, 2010

திருநங்கை! ஹி இல்லை, ஷி!!

"என்னம்மா அமெரிக்காவிலிருந்துகொண்டு விஜய் டிவி பார்க்கிற, பத்மா? அதுவும் கம்ப்யூட்டரிலேயே!" என்றார் சம்மர்க்கும் அமெரிக்கா வந்திருந்த வயதான மாமனார்.

"இல்ல மாமா "இப்படிக்கு ரோஸ்"னு ஒரு ஷோ. நம்ம ஊரில் உள்ள பிரச்சினைகளையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது. நல்லாயிருக்கும்! சும்மா ஆண்லைன்லயே பார்க்கலாம்"

"தப்பா நெனச்சுக்காதே இந்த ரோஸ்.. இவரை பெண்பால்தான் என்று ஏற்றுக்கொண்டார்களா? ஆணா பிறந்து ஏன் பெண்ணாகிவிட்டார் இவர்?"

"இவர் ஆணாகப் பிறந்தாலும் தன்னை பெண்ணுனு உணர்கிறார் போல, மாமா! இவரைப்போல் இருப்பவர்களை ட்ரேன்ஸ்ஜெண்டர்னு சொல்றாங்க. தமிழ்ல திருநங்கைனு சொல்றாங்க! இவரை "ஷி" னுதான் சொல்லனும் "ஹி" இல்லை, மாமா"

"நான் இந்த ஷோவே பார்க்கிறது இல்லைம்மா!"

"ஏன் உங்களுக்குப் பிடிக்கலை?"

"இல்லம்மா இவரைப் பார்க்கும்போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருதும்மா! அதான் பார்க்கிறது இல்லை!" அவர் குரல் தழுதழுத்தது.

"பழசா? என்னனு கொஞ்சம் விபர்மா சொல்லுங்களேன்?"

"இது 35 வருசத்துக்கு முன்னால நடந்த கதைம்மா, பத்மா. உன் ஹஸ்பண்ட் சுந்தருக்கு ஒரு அண்ணன் இருந்தாம்மா. அவன்தான் எனக்கு மூத்த மகன். பேரு சேகர்!"

"ஏதோ கொஞ்ச வயதில் தற்கொலை செய்து இறந்துட்டதாக சுந்தர் சொல்லியிருக்காரு மாமா!"

"ஆமாம்மா. 21 வய்திலேயே இந்த உலகத்தைவிட்டுப் போயிட்டான். தற்கொலை என்பதால போஸ்ட்மார்ட்டம் பண்ணி, போலிஸெல்லாம் வந்து எல்லாரையும் விசாரிச்சு.. ஒருவழியா எல்லாத்தையும் சரிக்கட்டி எப்படியோ முடிஞ்சது."

"தற்கொலை கேஸ்னா போஸ்ட்மார்ட்டம் பண்ணித்தானே ஆகனும், மாமா?"

"ஆமாம்மா. சேகரும் இந்த ரோஸ் மாதிரித்தான் இருந்தாம்மா, பத்மா. பொண்ணு மாதிரி சேலை கட்டி டாண்ஸ் ஆடுறது, பொண்ணு மாதிரி மேக்-அப் போடுவது, தலையில் பூ வைத்துக்கொளவ்து, இப்படி வித்தியாச மாகத்தான் இருந்தான்ம்மா. சுந்தர் மாதிரி அவன் கெடையாதும்மா"

"ஒருவேளை அவரும் ட்ரேண்ஸ்ஜெண்டரா இருந்திருக்கலாமா மாமா?!"

"அப்படித்தான் இப்ப தோனுதும்மா. ஆனா முப்பதஞ்சு வருடம் முன்னால அவனை யாராலையும் புரிஞ்சுக்க முடியலை! அவனை தெருவில், பள்ளியிலே, காலேஜிலே எல்லா இடத்திலேயும் பலவிதமாக கேலி பண்ணி நரக வேதனை அனுபவிச்சாம்மா, பத்மா!"

"நீங்களாவது புரிஞ்சுக்கிட்டிங்களா மாமா?"

"எனக்குக்கூட ஒரே குழப்பம்மா. ஏன் இப்படி இருக்கான்? அவனை வச்சு என்ன பண்ணுறதுனே தெரியலை. அவனுக்கு எப்படி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது? யார்ட்டப்போயி பொண்ணு கேக்கிறது? என்ன செய்றதுனே புரியலைம்மா!"

"நம்ம ஊர்ல இதையெல்லாம் இப்பக்கூட புரிஞ்சிக்கிறதில்லை மாமா. இது இயற்கையிலேயே வருகிற ஒண்ணு. "

"இல்லம்மா ஆணா பிறந்தவன், ஆண் உடலுறுப்புகள் உள்ள ஒருவன், பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவதைப் பிடிக்காமல் நானே ஒவ்வொருதர்ம் ரொம்ப திட்டி இருக்கேன்ம்மா! அப்புறம் மனசுக்கு கஷ்டமா இருக்கும்."

"நம்ம ஊர்ல இடதுகை பழக்கம் உள்ளவர்களைக்கூட, இடது கை பழக்கம் உள்ளவர்களாக வர விடுவதில்லையே மாமா! ஒரு ஆண் பெண்போல நடந்தால் எப்படி புரிஞ்சிக்குவாங்க? இதை புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்! வித்தியாசமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ்க்கை கஷ்டம்தான்"

"நானாவது அவனை புரிந்து நடந்து இருக்கனும். இப்போ யோசித்துப் பார்த்தால் அவன் தற்கொலைக்கு நானும் ஒரு காரணம்தான்ம்மா!"

"அவரை சரியா புரிந்துகொள்ளாமல்த்தான மாமா திட்டி இருக்கீங்க? என்னவோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் வருகிற ட்ரேண்ஸ்ஜெண்டர்களை (திருநங்கைகளை) யாவது சரியாகப் புரிந்து கொள்ளுவோம் மாமா!"

"ஆமாம்மா காலம் கடந்து வந்த ஞானோதயம்தான்!" என்றார் கண்ணீரோடு.

"இப்போ எல்லாம் நம்ம ஊர்களிலேயே இவர்களை புரிஞ்சு நடந்துக்கிறாங்க மாமா!"

"உண்மைதான்ம்மா பத்மா! 40 வருடம் முன்னாலே இப்படி ஒரு ரோஸை ப்ரோக்ராம் கொடுக்க வச்சிருக்க மாட்டாங்க!"

"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"

Saturday, May 1, 2010

நீங்க ஜெண்டில்மேனா? இல்ல, சுயநலவாதியா?

* உங்க காதலி உங்களை டம்ப் பண்ணியதும் அவளைத்திட்டாமல் உங்க கிட்ட உள்ள குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பெருசுபண்ணி உங்களை நீங்களே கொறைச்சுக்குவீங்களா?

* உங்களுடைய "ரைவல்" உங்களை "பீட்" பண்ணி ஒரு உலகத்தர அவார்ட் வாங்கியதைப் பார்த்து, போகட்டும், என்ன இருந்தாலும் இவர் நம்ம “கலீக்” ஒரு “இந்தியன்” அதுவும் “தமிழன்” என்று உங்க எதிரி வெற்றி பெற்றைதை நினைத்து பெருமையடைவீங்களா?

* உறவுகொள்ளும்போது உங்களை சந்தோஷத்தைவிட உங்க பார்ட்னரை சந்தோஷப்படுத்தி அவரை முதலில் உச்சுக்கு கொண்டு சென்று அவர் அடையும் இன்பத்தைப் பார்த்து ரசிப்பீங்களா?

* கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து, அவர்கள் உணர்ச்சிகளை மதித்து வாழும் பெரிய தியாகியா நீங்கள்?

* யாரையும் பலவந்தப் படுத்தியதே இல்லையா? காமமா இருக்கட்டும், காதலா இருக்கட்டும், நட்பா இருக்கட்டும், எதிலுமே அடுத்தவரை உங்கள் விருப்பத்திற்கு இணங்க வலியுறத்த மாட்டீங்களா?

* உங்களைப் பற்றி உங்க "கலீக்ஸ்" மற்றும் “நண்பர்கள்” பொறணி பேசுவதை ஒட்டுக்கேக்கப் பிடிக்காதா?

* பழிக்குப் பழி வாங்கனும்னு வெறி வந்தாலும், கொஞ்ச நேரம் யோசித்தபின் “தொலையிறான் விடு” இதோட இவன் “அக்கவுண்ட்”டை க்ளோஸ் பண்ணி இவனிடம் இருந்து ஒதுங்கிப் போவோம்னு முடிவுக்கு வருவீங்களா?

* பொய் சொல்லப் பிடிக்காதா?

* சினிமால வர்ற சோகமான காட்சிக்கு அழுதுடுவீங்களா?

* மனசறிஞ்சி யாருக்கும் துரோகம் பண்ணியதில்லையா?

* எதிரியா இருந்தாலும் அவர்கள் துன்பத்துக்கு உள்ளாவதை ரசிக்க முடியாதா? பரிதாபப்படுவீங்களா?

இப்படியெல்லாம் நீங்க இருப்பதால் உங்களை நீங்களே பெரிய ஜெண்டில்மேன் நு நெனச்சுக்கிட்டிங்கனா அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உண்மை என்னனா சாதாரண ஆறறிவு உள்ள மனிதர்கள் எல்லாமே உங்களைப் போலதான் நடந்துகொள்ளுவாங்க. நீங்க மட்டுமல்ல உங்களைப் போல நடந்துகொள்ளும் பல கோடி மக்கள் வாழ்றாங்கனு தெரிஞ்சுக்கோங்க! அதனால் உங்களை நீங்களே ஜெண்டில்மேனாக நினைத்து உயர்த்திக் கொள்வது "gentleman-ness" கெடையாது.

மேலும் இன்னொரு கோணத்துல பார்த்தால், நீங்க ஏன் இப்படி நடக்கிறீங்கனா, உங்க மனசாட்சிக்கு பயந்த ஒரு கோழை நீங்கள்! இதுபோல் நடக்காமல் வேறு மாதிரி இதற்கு எதிர்மாறாக நடந்தால், உங்க நிம்மதி போயிடும்! உங்களுக்கு தூக்கம் வராது! அதனால, உங்களை ஜெண்டில்மேன் நு சொல்வதைவிட உங்களை சுயநலவாதினு யாராவது சொன்னால் அவர்கள் சொல்வதில் தவறில்லைனு புரிஞ்சுக்கோங்க- just like a gentleman!

பின்குறிப்பு: Disclaimer: I am not able to find an "equal word" for women. Anyway, I dont mean only "men" here. It is meant for "gentlewoman" as well!