"என்னம்மா அமெரிக்காவிலிருந்துகொண்டு விஜய் டிவி பார்க்கிற, பத்மா? அதுவும் கம்ப்யூட்டரிலேயே!" என்றார் சம்மர்க்கும் அமெரிக்கா வந்திருந்த வயதான மாமனார்.
"இல்ல மாமா "இப்படிக்கு ரோஸ்"னு ஒரு ஷோ. நம்ம ஊரில் உள்ள பிரச்சினைகளையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது. நல்லாயிருக்கும்! சும்மா ஆண்லைன்லயே பார்க்கலாம்"
"தப்பா நெனச்சுக்காதே இந்த ரோஸ்.. இவரை பெண்பால்தான் என்று ஏற்றுக்கொண்டார்களா? ஆணா பிறந்து ஏன் பெண்ணாகிவிட்டார் இவர்?"
"இவர் ஆணாகப் பிறந்தாலும் தன்னை பெண்ணுனு உணர்கிறார் போல, மாமா! இவரைப்போல் இருப்பவர்களை ட்ரேன்ஸ்ஜெண்டர்னு சொல்றாங்க. தமிழ்ல திருநங்கைனு சொல்றாங்க! இவரை "ஷி" னுதான் சொல்லனும் "ஹி" இல்லை, மாமா"
"நான் இந்த ஷோவே பார்க்கிறது இல்லைம்மா!"
"ஏன் உங்களுக்குப் பிடிக்கலை?"
"இல்லம்மா இவரைப் பார்க்கும்போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருதும்மா! அதான் பார்க்கிறது இல்லை!" அவர் குரல் தழுதழுத்தது.
"பழசா? என்னனு கொஞ்சம் விபர்மா சொல்லுங்களேன்?"
"இது 35 வருசத்துக்கு முன்னால நடந்த கதைம்மா, பத்மா. உன் ஹஸ்பண்ட் சுந்தருக்கு ஒரு அண்ணன் இருந்தாம்மா. அவன்தான் எனக்கு மூத்த மகன். பேரு சேகர்!"
"ஏதோ கொஞ்ச வயதில் தற்கொலை செய்து இறந்துட்டதாக சுந்தர் சொல்லியிருக்காரு மாமா!"
"ஆமாம்மா. 21 வய்திலேயே இந்த உலகத்தைவிட்டுப் போயிட்டான். தற்கொலை என்பதால போஸ்ட்மார்ட்டம் பண்ணி, போலிஸெல்லாம் வந்து எல்லாரையும் விசாரிச்சு.. ஒருவழியா எல்லாத்தையும் சரிக்கட்டி எப்படியோ முடிஞ்சது."
"தற்கொலை கேஸ்னா போஸ்ட்மார்ட்டம் பண்ணித்தானே ஆகனும், மாமா?"
"ஆமாம்மா. சேகரும் இந்த ரோஸ் மாதிரித்தான் இருந்தாம்மா, பத்மா. பொண்ணு மாதிரி சேலை கட்டி டாண்ஸ் ஆடுறது, பொண்ணு மாதிரி மேக்-அப் போடுவது, தலையில் பூ வைத்துக்கொளவ்து, இப்படி வித்தியாச மாகத்தான் இருந்தான்ம்மா. சுந்தர் மாதிரி அவன் கெடையாதும்மா"
"ஒருவேளை அவரும் ட்ரேண்ஸ்ஜெண்டரா இருந்திருக்கலாமா மாமா?!"
"அப்படித்தான் இப்ப தோனுதும்மா. ஆனா முப்பதஞ்சு வருடம் முன்னால அவனை யாராலையும் புரிஞ்சுக்க முடியலை! அவனை தெருவில், பள்ளியிலே, காலேஜிலே எல்லா இடத்திலேயும் பலவிதமாக கேலி பண்ணி நரக வேதனை அனுபவிச்சாம்மா, பத்மா!"
"நீங்களாவது புரிஞ்சுக்கிட்டிங்களா மாமா?"
"எனக்குக்கூட ஒரே குழப்பம்மா. ஏன் இப்படி இருக்கான்? அவனை வச்சு என்ன பண்ணுறதுனே தெரியலை. அவனுக்கு எப்படி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது? யார்ட்டப்போயி பொண்ணு கேக்கிறது? என்ன செய்றதுனே புரியலைம்மா!"
"நம்ம ஊர்ல இதையெல்லாம் இப்பக்கூட புரிஞ்சிக்கிறதில்லை மாமா. இது இயற்கையிலேயே வருகிற ஒண்ணு. "
"இல்லம்மா ஆணா பிறந்தவன், ஆண் உடலுறுப்புகள் உள்ள ஒருவன், பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவதைப் பிடிக்காமல் நானே ஒவ்வொருதர்ம் ரொம்ப திட்டி இருக்கேன்ம்மா! அப்புறம் மனசுக்கு கஷ்டமா இருக்கும்."
"நம்ம ஊர்ல இடதுகை பழக்கம் உள்ளவர்களைக்கூட, இடது கை பழக்கம் உள்ளவர்களாக வர விடுவதில்லையே மாமா! ஒரு ஆண் பெண்போல நடந்தால் எப்படி புரிஞ்சிக்குவாங்க? இதை புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்! வித்தியாசமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ்க்கை கஷ்டம்தான்"
"நானாவது அவனை புரிந்து நடந்து இருக்கனும். இப்போ யோசித்துப் பார்த்தால் அவன் தற்கொலைக்கு நானும் ஒரு காரணம்தான்ம்மா!"
"அவரை சரியா புரிந்துகொள்ளாமல்த்தான மாமா திட்டி இருக்கீங்க? என்னவோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் வருகிற ட்ரேண்ஸ்ஜெண்டர்களை (திருநங்கைகளை) யாவது சரியாகப் புரிந்து கொள்ளுவோம் மாமா!"
"ஆமாம்மா காலம் கடந்து வந்த ஞானோதயம்தான்!" என்றார் கண்ணீரோடு.
"இப்போ எல்லாம் நம்ம ஊர்களிலேயே இவர்களை புரிஞ்சு நடந்துக்கிறாங்க மாமா!"
"உண்மைதான்ம்மா பத்மா! 40 வருடம் முன்னாலே இப்படி ஒரு ரோஸை ப்ரோக்ராம் கொடுக்க வச்சிருக்க மாட்டாங்க!"
"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"
6 comments:
"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"
.....True.... :-)
அருமையான பகிர்வு வருண்..
இந்த தலைப்புல இருக்கிற மாமாங்கிற வார்த்தையை எடுத்துருங்களேன்.. யாராவது தலைப்பை மட்டும் படிச்சி தப்பா நினைச்சிக்கப் போறாங்க?
//"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!" //
உண்மை.
[நான் சொல்ல நினைத்ததையே சித்ராவும் சொல்லியிருக்காங்க. நானும் சொல்லி விட்டேன்]
***Blogger Chitra said...
"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"
.....True.... :-)
2 May 2010 7:40 PM***
வாங்க, சித்ரா :)
***முகிலன் said...
அருமையான பகிர்வு வருண்..
இந்த தலைப்புல இருக்கிற மாமாங்கிற வார்த்தையை எடுத்துருங்களேன்.. யாராவது தலைப்பை மட்டும் படிச்சி தப்பா நினைச்சிக்கப் போறாங்க?
2 May 2010 8:18 PM***
நன்றி முகிலன். :)
தலைப்பை மாத்தியாச்சுங்க :)
***Blogger ராமலக்ஷ்மி said...
//"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!" //
உண்மை.
[நான் சொல்ல நினைத்ததையே சித்ராவும் சொல்லியிருக்காங்க. நானும் சொல்லி விட்டேன்]
2 May 2010 8:19 PM***
வாங்க ராமலக்ஷ்மி! :) பகிர்தலுக்கு நன்றிங்க :)
Post a Comment