Wednesday, June 2, 2010

எங்கும் பார்ப்பான்! எதிலும் பார்ப்பான்!

சுகுனா திவாகர் பதிவை வாசிச்சுட்டு எனக்கு பயங்கர சிரிப்பு! என்னப்பா இப்படி எல்லோருமே எட்டப்பராகிவிட்டீங்க! கருத்து மோதல் ல இப்படி நண்பனை எல்லாம் காட்டிக்கொடுத்து ஒரு காரசாரமான பதிவைப் போட்டு பொழைப்பு நடத்துறீங்க!

"இன்னொருவர் இ-மெயிலை திருடி அதை அனுப்பும் ஒரு உலகமஹாத்திருடனை நண்பராகக் கொண்டவர் சுகுனா திவாகர்" என்கிற அந்தக்கேவலமான பகுதியைப் பற்றி யாருமே கவலைப்படலை!
சிவராமனை எப்படியோ கவுத்திப்புட்டாரு சுகுனானு தான் எல்லாரும் கை தட்டுறாங்க! இன்னொருவருடைய இ-மெயிலை வாசிக்கிற சுகுனா திவாகர் ஒரு ஈனப்"பார்ப்பான்" (உயர் சாதி பிள்ளைமகனாம்!) என்பதை யாரும் மறக்க வேணாம்!

நரசிம்மை பார்ப்பனத் திமிர், இதுதான் பார்ப்பீனியம் னு சிவராமன் திட்டிப்புட்டாரு சிவராமனும் பார்ப்பான் என்றால், இப்படி நரசிம்மை பார்ப்பனத் திமிர்னு சொல்வதில் இவருக்கு ஒரு இன்பம் இருக்குமோ?னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்ப்பா! ஒருவேளை பார்ப்பனத்திமிர் னு சொல்வதே பார்ப்பனத்திமிர்தானோ? :)

இப்போ, சுகுனா என்கிற "பார்ப்பனர்" (உயர்சாதி பிள்ள்ளை மகனாம்!), நான் செத்தாலும் பரவாயில்லை உன்னையும் நான் என்னோட சேர்த்து கொன்னுட்டுத்தான் போவேன்னு, சிவராமனை பார்த்து "பூணூல் போட்டுக்கொண்டு, குங்குமப்பொட்டு வச்சுக்கொண்டு பெரியாரிஸம் பேசும் பார்ப்பான் னு திட்டுறாரு!" அதோட நீ மட்டுமல்ல, நீ நட்பு பாராட்டும் ஜ்னாவரம் சுந்தரும் பார்ப்பான், பத்ரியும் பார்ப்பான்னு கண்டமேனிக்கு செல்லமா திட்டிப்புட்டாரு.

சிவராமன் விடுவாரா?, பதிலுக்கு பதில், சுகுனா திவாகரை "கருவரையிலையே நான் பார்ப்பன திமிரை தூக்கி எறிந்தவன்னு சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் "பார்ப்பான்" (பிள்ளைமகன்)"னு திட்டுறாரு!

மொத்தத்திலே பதிவுலகில் என்ன நடக்குதுனா, பார்ப்பனர்களுக்குள்ள ஒருவரை ஒருவர் "பார்ப்பான்" "உனக்குத்தான் பார்ப்பனத் திமிர்" னு செல்லம்மா திட்டிக்கிறாங்க, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக்கிறாங்க, போல இருக்குனு சொல்லலாமா?

இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் சோ ராமசாமிபோல பெரியவர்கள், நம்ம பார்ப்பன குழந்தைகள்தான் எல்லாம் சும்மா அடிச்சுக்குதுகனு நெனச்சுக்குவாங்க . "எங்கே பிராமணன்" எப்பிசோட் காப்பி பேஸ்ட் பண்ணுறவர்ல இருந்து, பெரியாரிஸம் பேசுபவர்கள் வரை எல்லாம் நம்ம பார்ப்பனக் குழந்தைகள்தான் போலனு புன்னகையுடன் பார்த்து ரசிக்கிறார்கள் பல பார்ப்பனர்கள்.

ஆக மொத்தத்தில் எங்கும் பார்ப்பான், எதிலும் பார்ப்பான் தான் பதிவுலகில்! னு நீங்க ஒத்துக்க வேண்டிய ஒரு அவசியம் உண்டாயிருக்கு இப்போ! எங்கே பிராமனன் ல இருந்து பெரியாரிஸம், " தசாவதாரம் ஒரு பார்ப்பீனியமலம்" னு எழுதியவர்கள் வரை.

ஆனா, உங்களுக்குள்ள ஏன்ப்பா இப்படி கேவலமா அடிச்சுக்கிறீங்க?

இதெல்லாம் சண்டை இல்லங்க, வேற எப்படி நாங்க பாப்புளர் ஆகிறது? னு சொன்னாலும் சொல்லுவா! :)

ஆமா, வருண், நீயும் பார்ப்பான் தானே? னு கேக்காதீங்க! நமக்கு நம்ம சாதி தெரியாதுங்க! மறந்து போச்சு! :)))))

தமிழ் பதிவுலகில் நட்பா?! "வினவு"வது துரோகி!

திரு. சிவராமன் அவர்கள் வினவில் பங்கெடுத்து அவர் எழுதிய ஒரு பகுதிதான் "பதிவரசியல்" என்று சுகுனா திவாகர், ஒருவர் நட்பை காப்பாத்த இன்னொருவருக்கு துரோகம் செய்தார்.

துரோகிகள் லிஸ்ட் பெருசாகிக்கிட்டே போகுது! நண்பர்கள் லிஸ்ட் பகுதியில் யாருமில்லை! எல்லாரும் துரோகி லிஸ்ட்ல போயிட்டாங்க!

சுகுனா திவாகர் துரோகியாகி, சிவராமனை பார்ப்பனராகவும், துரோகியாகவும் ஆக்கிவிட்டார்.

இப்போ தலைக்குமேல் வெள்ளம் போனவுடன் வினவு, சிவராமனுடைய காண்ட்ரிப்யூஷனை (வினவு முகமூடியை கலைத்து) வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

சுத்திவளைச்சுப்பார்த்தால் நட்பு என்பது தமிழ்ப்பதிவுலகில் இல்லை! எல்லாருமே தூரோகிகள்தான் என்று தெளிவாகிறது.

இதுல யாரு பெரிய துரோகி? யாரு முதுகிலே யார் குத்தினானு ஆராச்சி பண்ணி ஒரு பத்து பி எச் டி தீஸிஸ் எழுதலாம்!

வினவு சொன்ன சில மேட்டர் கீழே!!

மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.

இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார்.

சரி அதைவிடுங்க, எனக்கு வினவுவின் பதிவில் இருந்து வந்த ஷாக் என்னனா, மேலே கொடுக்கப்பட்டுள்ள விசயம். அதாவது, சிவராமன் தன்னுடைய "பாஸ்வேர்டை" நண்பருக்கு கொடுத்து இருந்தாராம்.

பாஸ்வேர்ட் எனபது ஒருவருடைய, மனைவி, காதலியை விட பர்சனல் மேட்டர் இல்லையா? அதை எப்படி இன்னொருவரிடம் (நண்பராம்?? அதாவது துரோகிக்கு) கொடுப்பாங்க? என்னவோ போங்கப்பா!

Tuesday, June 1, 2010

மன்னிப்பு எப்படி கேக்கனும், திரு மாதவராஜ்!

மரியாதைக்குரிய, திருவாளர். மாதவராஜ் அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறாங்கனு தெரியலை. நரசிம் செய்த தவறுக்கு, அவரை உலகமே திட்டிவிட்டது. அந்தப்பதிவையும் எடுத்தாச்சு. அதுக்கப்புறம் மன்னிப்பும் கேட்டாச்சு!

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் இன்னும் இந்த மாதவராஜ் அடங்குவனா என்கிறார்!!! இவருக்கு என்னதான் வேணும்னு தெரியலை எனக்கு!

திரு. மாதவராஜ்! உங்க கால்லயும், சந்தனமுல்லை காலிலும் வேற யார் யார் காலில் விழுந்து மன்னிப்புக்கேக்கனும் ? மன்னிப்பு எப்படிக் கேக்கனுனு சொல்றதுலயும் நீங்கதான் பெரிய ஆள் போல இருக்கு, மாதவராஜ்!

என்னனு விபரத்தை தெளிவா ஒரு பதிவில் போட்டீங்கனா நல்லாயிருக்கும்!

* மன்னிப்பு எப்படி கேக்கனும்?

* யார் யார் காலில் விழனும்?

நரசிம் மட்டும் விழுந்தாப்போதுமா? அவங்க அம்மா அப்பா, செத்துப்போன தாத்தா, பிறக்கப்போற பையன் எல்லாரும் மன்னிப்புக் கேக்கனுமா? னு தெளிவா எழுதுங்க இன்னொரு பதிவில்.

வேற எப்படி கொஞ்ச நாளைக்கு பொழைப்ப ஓட்டுறது, சொல்லுங்க!