Tuesday, June 1, 2010

மன்னிப்பு எப்படி கேக்கனும், திரு மாதவராஜ்!

மரியாதைக்குரிய, திருவாளர். மாதவராஜ் அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறாங்கனு தெரியலை. நரசிம் செய்த தவறுக்கு, அவரை உலகமே திட்டிவிட்டது. அந்தப்பதிவையும் எடுத்தாச்சு. அதுக்கப்புறம் மன்னிப்பும் கேட்டாச்சு!

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் இன்னும் இந்த மாதவராஜ் அடங்குவனா என்கிறார்!!! இவருக்கு என்னதான் வேணும்னு தெரியலை எனக்கு!

திரு. மாதவராஜ்! உங்க கால்லயும், சந்தனமுல்லை காலிலும் வேற யார் யார் காலில் விழுந்து மன்னிப்புக்கேக்கனும் ? மன்னிப்பு எப்படிக் கேக்கனுனு சொல்றதுலயும் நீங்கதான் பெரிய ஆள் போல இருக்கு, மாதவராஜ்!

என்னனு விபரத்தை தெளிவா ஒரு பதிவில் போட்டீங்கனா நல்லாயிருக்கும்!

* மன்னிப்பு எப்படி கேக்கனும்?

* யார் யார் காலில் விழனும்?

நரசிம் மட்டும் விழுந்தாப்போதுமா? அவங்க அம்மா அப்பா, செத்துப்போன தாத்தா, பிறக்கப்போற பையன் எல்லாரும் மன்னிப்புக் கேக்கனுமா? னு தெளிவா எழுதுங்க இன்னொரு பதிவில்.

வேற எப்படி கொஞ்ச நாளைக்கு பொழைப்ப ஓட்டுறது, சொல்லுங்க!

12 comments:

மாதவராஜ் said...

நான் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. இன்னும் அதனை ஒரு புனைவு என்கிறார். முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ளட்டும். அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். இதனை எனது பதிவிலும், பின்னூட்டத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

வருண் said...

இதுபோல் எல்லாரும் தாக்கி (செய்த தவறுக்குத்தான்) அவரை நிலைகுலைய வச்சுவிட்ட இந்த நிலையில் அவரால தெளிவா எழுதமுடியும்னு எனக்குத் தோனலை.

பெரியமனசு செய்து நம்மதான் மன்னிச்சு விட்டுவிட்டால் என்னங்க?

What are we going to achieve? Whatever happened is happened, you all condemned and insulted him back!

Let us forgive and forget னு நான் சொல்றேங்க! :)

மாதவராஜ் said...

இந்த நிலையிலும் தெளிவாக அவர் புனைவு என்று சொல்வதில்தான் எனது கோபமும், வருத்தமும். நண்பரே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வலியை கொஞ்சம் மனதளவில், சிந்தனையளவில் அறிய முற்படுங்கள். எல்லாம் புரியும்.

தான் செய்தது குற்றம் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்பதற்கும், தெரிந்து செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் உண்டுதானே நண்பரே!

தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

வருண் said...

எனக்கு உங்க நல்லெண்ணம் புரியுது. அதேபோல் எனக்கு பாதிக்கப்பட்டவர் வலியும் புரியுது-அதையெல்லாம் எபப்டி காட்டுறதுனு தெரியலை. ஆனால் நடந்தது நடந்துவிட்டது. இதை அதிகப்படியா பேசப்பேச எனக்கென்னவோ இது தேவையில்லாத கோணத்தில் போற மாதிரி இருக்குங்க! இதை ஒரு முற்றுப்புள்ளி வச்சு முடிக்கனும், அவ்வளவுதான் என் கோரிக்கை!

ரவி said...

//பெரியமனசு செய்து நம்மதான் மன்னிச்சு விட்டுவிட்டால் என்னங்க?
//

உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் ?

சரி, கயல்விழி இந்த சம்பவத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லவேயில்லையே ?

மணிகண்டன் said...

ரவி, உங்களுக்கு வருணிடம் கயல்விழி சம்பந்தமாக கேள்வி கேட்கும் அதிகாரம் யார் கொடுத்தார்களோ அவரே தான் வருணுக்கும் கொடுத்தார்கள் :)-

மாதவராஜ் - நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் ? நரசிம் எழுதியது புனைவு தானே. அதில் தானே முல்லையை அசிங்கமாக எழுதினார். இப்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளார். மனப்பூர்வமாக கேட்டாலும் முல்லைக்கு அது போதாமல் இருக்கலாம். அவர் எழுதிய வார்த்தைகள் அப்படி. அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அவரின் குடும்பத்தோடு அவர் முடிவு எடுக்கலாம்.

நீங்கள் யார் குறுக்கே ? ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு. உங்களிடம் மரியாதை இல்லை என்று நரசிம் கூறியதால் உங்களுக்கு கோபமா ? நீங்களே ஏன் சென்ற வருடம் மற்ற அனைத்து பதிவர்களும் தீபாவுக்கு செய்த தவறை செய்கிறீர்கள் ? மனிதனை நிதானத்துக்கு வரவிடாமல் விடாமல் பதிவிட்டு கொண்டே இருக்கிறீர்களே?

கோவி.கண்ணன் said...

:(

நர்சிம் மற்றும் சந்தன முல்லை எதிர் எதிரே பார்த்தாலும் கூட இனி பேசிக் கொள்ளக் கூடாது என்பது போன்ற தீர்பை இவர்கள் எழுதுகிறார்கள்.

நடந்த பிரச்சனைக்கு மன்னிப்புக் கேட்ட பிறகும் இவர்கள் ஏன் இவ்வளவு மூர்க்கமா ? ச்சே......

வர்க தீண்டாமை போல இந்த பிரச்சனை நெருப்பு என்னிக்கு அணையக் கூடாதுன்னு நினைக்கிறார்கள்.

நல்லவேளை திரட்டி இவர்கள் கையில் இல்லை இருந்தால் தன்னிச்சையாக யார் யாரெல்லாம் எதிர்ப்பு காட்டினார்களோ அவர்களையெல்லாம் விலக்கி இருப்பார்கள்.

சாதிவெறி பிடித்த சமூகத்தின் கட்ட பஞ்சாயத்தில் பஞ்சமர்கள் என்று தீண்டாமைக் கொடுமைகளால் ஒதுக்கப்பட்டோர்களை ஒவ்வொருவர் காலிலும் விழச் சொல்லுவது போல் விழனும் மாதவராஜ் நினைக்கிறாரான்னு தெரியல.

நர்சிம் மற்றும் சந்தனமுல்லை ஆகியோர் நேரடியாக பேசி இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டனும் தேவையற்ற தலையிடுகளினால் இவை நீண்டு கொண்டே செல்கிறது.

கோவி.கண்ணன் said...

//நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். //

நான் எழுதிய 'பதிவு' - என்று அவர் துவங்கி இருந்தாலும் அது என்ன பதிவு ? .......'புனைவு என்ற பெயரில் நான் எழுதிய ஆபாசம்' என்று இவர் ஏன் சொல்லவில்லைன்னு மாற்றிக் கேட்பாங்க.

நான் எழுதிய 'புனைவு என்ற பெயரில் நான் எழுதிய ஆபாசம்' - இதுக்கு பேரு எழுத்தா......இதை இவன் இன்னும் எழுத்துன்னு சொல்லிக் கொள்கிறான் அதனால் நான் மன்னிக்க மாட்டேன் என்பார்கள்

நான் எழுதிய ஆபாச புனைவு - என்று துவங்கி இருந்தாலும் ஆபாச பதிவை புனைவு என்கிறான் என்பார்கள்.

நான் ஒரு தரம் முடிவு செய்திட்டா என் பேச்சை நானே கேட்காமாட்டேன் என்பவர் போலும் திரு மாதவராஜ்.

பெரியமனுசன் என்றே மதிக்கிறோம், பிரச்சனையை இழுக்காமல் தீர்க்க முயலுங்க சார்.

எல் கே said...

நண்பர் கோவி அவர்களே, ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை முடிந்துவிட்டால் கஷ்டம். அதனால் அவர்கள் இந்த பிரச்சனையை முடிக்க விடாமல் இருகிறார்கள்

வருண் said...

செந்தழல் ரவி said...
//பெரியமனசு செய்து நம்மதான் மன்னிச்சு விட்டுவிட்டால் என்னங்க?
//

உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் ? ***

ரவி,

என்னங்க காமெடி பண்ணுறீங்க? அதிகாரமா? அதிகாரம் கேள்விக்குறியோட முடியாதுங்க!
அது அதிகாரம் இல்லை, ஒரு மாதிரியான வேண்டுதல்.

***சரி, கயல்விழி இந்த சம்பவத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லவேயில்லையே ?

1 June 2010 3:00 PM***

கயல்விழிதான் பதில் சொல்லனும். :)
It is possible she might have an opinion difference iwth me on this issue! :)

வருண் said...

***மணிகண்டன் said...
ரவி, உங்களுக்கு வருணிடம் கயல்விழி சம்பந்தமாக கேள்வி கேட்கும் அதிகாரம் யார் கொடுத்தார்களோ அவரே தான் வருணுக்கும் கொடுத்தார்கள் :)-

மாதவராஜ் - நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் ? நரசிம் எழுதியது புனைவு தானே. அதில் தானே முல்லையை அசிங்கமாக எழுதினார். இப்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளார். மனப்பூர்வமாக கேட்டாலும் முல்லைக்கு அது போதாமல் இருக்கலாம். அவர் எழுதிய வார்த்தைகள் அப்படி. அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அவரின் குடும்பத்தோடு அவர் முடிவு எடுக்கலாம்.

நீங்கள் யார் குறுக்கே ? ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு. உங்களிடம் மரியாதை இல்லை என்று நரசிம் கூறியதால் உங்களுக்கு கோபமா ? நீங்களே ஏன் சென்ற வருடம் மற்ற அனைத்து பதிவர்களும் தீபாவுக்கு செய்த தவறை செய்கிறீர்கள் ? மனிதனை நிதானத்துக்கு வரவிடாமல் விடாமல் பதிவிட்டு கொண்டே இருக்கிறீர்களே?***

மாதவராஜ் அவர்கள் பதிவுத் தலைப்பிலேயே "த்தூ" னு துப்பீட்டாரு!

வினவு இஷ்டத்துக்கு திட்டி கேவலப்படுத்தியாச்சு

சிவராமன் பின்னூட்டத்தில், வினவை ஆதரிச்சி திட்டி, எனக்கு பணவுதவி செஞ்ச்தால நான் உனக்கு சப்போர்ட்பண்னமாட்டேன்னு "உயிர் காப்பான் தோழன்"ங்கிற பழமொழியை எல்லாம் உடைப்பில் போடுனு திடீர்னு நரசிம்மை பார்ப்பானா பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

மன்னிப்பும் நரசிம் கேட்டாச்சு.

அதுக்கப்புறமும் இவருக்கு (மாரா)திருப்தியா இல்லை :(

வருண் said...

^^^கோவி.கண்ணன் said...
//நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். //

நான் எழுதிய 'பதிவு' - என்று அவர் துவங்கி இருந்தாலும் அது என்ன பதிவு ? .......'புனைவு என்ற பெயரில் நான் எழுதிய ஆபாசம்' என்று இவர் ஏன் சொல்லவில்லைன்னு மாற்றிக் கேட்பாங்க.

நான் எழுதிய 'புனைவு என்ற பெயரில் நான் எழுதிய ஆபாசம்' - இதுக்கு பேரு எழுத்தா......இதை இவன் இன்னும் எழுத்துன்னு சொல்லிக் கொள்கிறான் அதனால் நான் மன்னிக்க மாட்டேன் என்பார்கள்

நான் எழுதிய ஆபாச புனைவு - என்று துவங்கி இருந்தாலும் ஆபாச பதிவை புனைவு என்கிறான் என்பார்கள்.

நான் ஒரு தரம் முடிவு செய்திட்டா என் பேச்சை நானே கேட்காமாட்டேன் என்பவர் போலும் திரு மாதவராஜ்.

பெரியமனுசன் என்றே மதிக்கிறோம், பிரச்சனையை இழுக்காமல் தீர்க்க முயலுங்க சார்.

1 June 2010 6:19 PM ***

நரசிம் மேலே இவருக்குள்ள தனிப்பட்ட வெறுப்பு இவரை எங்கே கொண்டுபோய் விடப்போதோ தெரியலை! :(