Wednesday, May 14, 2014

காயத்ரியின் பகல்கனவு! (ஸ்ட்ரிக்ட்லி வயதுவந்தவர்களுக்கு மட்டும்!)

காயத்ரிக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம்  ஆகிறது. வருடங்கள் போனதே தெரியலை. இப்போ எல்லாம் ஹரி அவளை சரியாக் "கண்டுகொள்வதே" இல்லை.

"ஆமா, நல்லா டி வி பாருங்க, ஸ்போர்ட்ஸ் பாருங்க, "எல்லாம்" பாருங்க! என்னையும் கொஞ்சம் கண்டுக்கிறதுதானே?" னு மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு கவர்ச்சியா மினி ஸ்கேர்ட் டுடன், ஒரு ரிவீலிங்கா டாப்ஸும் போட்டுக்கொண்டு வந்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரி அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"ஏன்டி இந்த வயசுல இப்படி அலையிற?" ங்கிறமாதிரி ஏதோ வினோதமாக அவளைப் பார்த்தான் ஹரி. பக்கத்தில் உக்காந்ததால் பேருக்கு அவள் கன்னத்தில் ஒரு முத்தம். அதைக் கொடுக்காமல் இருந்தாலே பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு. இந்த ஊரில் உள்ள அமரிக்கர்கள் மனைவியிடம் ஃபோன் பேசிட்டு மறக்காமல் "ஐ லவ் யு" சொல்லிட்டு வைக்கிற மாதிரி இருந்தது அவளுக்கு.

இந்தியாவில் இருக்கும்போது நல்லாத்தானே இருந்தாரு, ஒரே ரொமாண்டிக்கா! அமெரிக்கா வந்து ஒரு நாலு வருஷம்தான் ஆகுது. அதிலிருந்து வேலை அதிகம், பையனா பார்த்துக்கனும்னு போனதுனாலேயே என்னவோ தெரியல, ஒண்ணும் பெருசா ரொமான்ஸே இல்லை. ஒரே ஒரு பையன்தான், அவனும் இப்போ வீட்டில் இல்லை, ஸ்கூல்ல ஏதோ கேம்ப்க்கு போயிட்டான். அவன் திரும்பி வீட்டுக்கு வர நாலு நாள் ஆகும். இப்போதைக்கு ப்ரைவஸிக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை, நெறையாவே இருக்கு. ஆனால் இவர்மட்டும் ஏன் இப்படி ஜடமா இருக்கிறார்? ஒருவேளை  இவருக்கு டெஸ்டாஸ்டீரோன் லெவெல் கொறைஞ்சிருச்சா? என்னனு தெரியலை. இல்லைனா இந்தியாவிலே மாதிரி இவருக்கு ஆளும் பேருமா கூட்டமா இருந்தாத்தான் இவருக்கு மூடு வருமா? இதையெல்லாம் அவரிடம் வெளிப்படையாக் கேட்டு டிஸ்கஸ் பண்றதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. அவளா அவரைப் புரிஞ்சுக்கனும்! இந்த நாலு நாள்ல இவரை ஏதாவது ஒரு வழி பண்ணியே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நான் இந்த அவ்ட்ஃபிட்ல செக்ஸியா இருக்கேனா?" என்று கடைசியில் அவளே அடக்கமுடியாமல் கேட்டுவிட்டாள். அப்படிச் சொல்லி அவன் அருகில் நல்லா உரசுராப்பில உக்காந்து கணவனை செட்யூஸ் பண்ண ட்ரை பண்ணினாள், காயத்ரி. ஹரிக்கு என்னமோ அந்த அரைகுறை ட்ரெஸ்ல அவளைப்பார்த்து ஒண்ணும் உணர்ச்சியெல்லாம் பொங்கி வரலை, ஆனால் அவள் தேவையை புரிந்துகொண்டு, ஏதோ கடமையைச் செய்வதுபோல போனது அன்று இரவு.

காயத்ரிக்கு கடமைக்காக காதலோ, காமமோ சுத்தமாக பிடிக்காது. வாரம் ஒருமுறையானாலும், ஏன் மாதம் ஒரு முறையானாலும் பரவாயில்லை, ஆனால் ஹரி அவகிட்ட வந்து நல்லா வழியனும், அவளையும் அவள் அழகையும் அப்படி இப்படி அனுபவிச்சு பார்த்து ரசிக்கனும், அவன் பார்க்கும் பார்வையிலே அவளுக்கு உடம்பில் நெறைய கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கனும். அப்புறம் அவளை திடீர்னு கட்டி அணைச்சு அவ இடுப்பில், உதட்டில், மார்பில், கழுத்தில் எல்லா எடத்துலயும் கிஸ் பண்ணி அவளை அவன் மெய் மறக்க வைத்து, ஒரு சின்ன ஆர்கஸம் அவளுக்கு வருமளவுக்கு முத்தம் கொடுத்து அவ மூடை ஏத்தி அவளை ரெடியாக்கனும்! அது மாதிரி அன்புதான் காய்த்ரிக்கு வேணும். அதுதான் அவளுக்குப் பிடிக்கும். அதெல்லாம் அமெரிக்கா வந்தபிறகு நடந்தமாதிரியே இல்லை. இப்போ அந்த ஆசையெல்லாம் அவளுடைய பகல்கனவு மாதிரி ஆயிடுத்து. அவள் கனவை நனவாக்காமல் ஏதோ இதுவும் ஒரு வேலை போல் அவன் செய்வதால் ஹரிமேலே எரிச்சலும் கோபமுமாத்தான் வந்தது அவளுக்கு.

அடுத்தநாள் ஃப்ரெண்ஸ்ட்ட லேடீஸ் நைட் அவுட் ல இதைப்பத்தி பட்டும் படாமலும் நாசூக்காக பேசினாள். "நீ ஒண்ணும் கவலைப்படாதே! இங்கேயும் அதே கதைதான்" என்று சிரித்தாள்கள் தோழிகலெல்லாம். அப்போத்தான் புரிந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலனு. அவ்ளோதானா? காதல், காம வாழ்க்கை எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சதுபோல என்று ஒரே கவலை அவளுக்கு. ஆனால், அவள் தன்னைத்தானே அவள் பாத்ரூமில் கண்ணாடியில் பார்க்கும்போது இன்னும் அழகா எடுப்பா, கவர்ச்சியாத்தான் இருந்தாள். அதை உறுதிப்படுத்துவதுபோல வொர்க்ல, ஷாப்பிங் போகயிலே எல்லாம் நெறையவே அட்டன்ஷன் கெடச்சது, காயத்ரிக்கு. நேத்துக்கூட ஒரு கடையில் உள்ள செக் அவுட்ல உள்ள டெல்லர் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான். தேவையே இல்லாமல் அவளிடம் வழிஞ்சான். காயத்ரிக்கு எரிச்சல்தான் வரும் கண்டவனும் தன்னை அளவுக்கதிகமா பார்க்கிறது, தன்னுடன் தேவையே பேசுவது இதெல்லாம். கல்யாணம் ஆனவள்னு இதுகளிடம் சொல்ல "ரிங்"கா போட்டுக்கொண்டு அலையமுடியும்? என்று தனக்குள்ளே திட்டிக்கொள்வாள்.

ஃப்ரெண்டு ஒருத்தி ஏதோ ஐடியா கொடுதாள்னு ஒருமாதிரி விக்டோரியா சீக்ரட்ஸ் போயி, புதுசா ஒரு ஸ்பெஷல் பேண்டிஸ் ஒரு பேரை வாங்கி வந்திருந்தாள் காயத்ரி. அன்று சனிக்கிழமை, கீழே பேஸ்மெண்ட்ல லாண்ட்ரி போடும்போது அரைகுறையா ஒரு சின்ன ஸ்கேர்ட் மட்டும் போட்டுக்கொண்டு உள்ளே அந்த புது பேண்டிஸை போட்டு இருந்தாள். வேணும்னே பழைய க்ளோத்ஸை ட்ராப் பன்ணிட்டு எடுப்பதுபோல் உட்கார்ந்தாள். அவளுக்கு உதவ எதிர்புறமாக உட்கார்ந்து துணிகளை எடுத்த ஹரி, அவளையும், அவள் உள் ஆடையையும் நல்லாவே கவனித்தான்.

"என்ன காய்த்ரி பேண்டிஸ் கிழிஞ்சி இருக்கு? நல்லது எதுவும் இல்லையா? இதிலேகூட சிக்கனமா? நாளைக்கு போய் ஒரு டசன் எடுத்துண்டு வரலாம்" என்றான் விபரம் புரியாமல்.

"உங்களை என்ன பண்றது?", னு நினைத்துக் கொண்டாள் மனசுக்குள்ளேயே. "இது புது பேண்டிஸ்தான்யா மக்கு" னு ஹரியிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.

அடுத்த நாள் எரிச்சலும் கோபமுமா இருந்தாள். வாஷிங் மெஷினில் ஏதோ கோளாறுன்னு அவள் போட்டுக்க ஒண்ணும் மாட்டாமல் ஷூட்கேஸ்ல தேடி ஒரு பழைய சேலையையும், அதுக்கு மேட்சிங் ப்ளவ்ஸையும் மாட்டிக்கொண்டு இருந்தாள். நல்லவேளை ப்ளவ்ஸ் சைஸ் இன்னும் அவளுக்கு ஃபிட் ஆவதுபோல சரியா இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து மாடர்ன் ட்ரெஸ்தான் இப்போலாம் காயத்ரிக்குப் பிடிக்கும். சேலையெல்லாம் இந்தியாவிலே கட்டியதுதான். அந்த சேலையை உடம்பெல்லாம் மாட்டிக்கொண்டு திரியிறது சுத்தமா பிடிக்காது, காயத்ரிக்கு.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்ல உக்காந்து முக்கியமான ப்ராஜக்ட் ஒண்ணுல சீரியஸா வேலை செய்துகொண்டிருந்த ஹரிட்ட அவசரமாக காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள்.

"என்ன காலையிலே வேற அவுட்ஃபிட் போட்டிருந்த, திடீர்னு சேலையில் இருக்க?" னு விசாரித்தான் ஹரி.

"ஆமா, புது வாஷிங் மெஷின் வாங்கனும் போல. இது அவ்வளவுதான். கரெக்ட்டா என் ட்ரெஸ் எல்லாத்தையும் போடும்போது மெஷின் போயிடுத்து. வாரண்ட்டி இருக்குனு கால் பண்ணினால் சர்விஸ்க்கு ஆட்கள் நாளைக்குத்தான் வருவார்களாம்! அதான் இந்த சேலையை உடம்புமுழுவதும் சுத்திக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு" என்றாள் எரிச்சலாக.

"இங்கே வா உன்னிடம் முக்கியமான ஒண்ணு கேக்கனும்" னு அவளை கையைப்பிடிச்சு பக்கத்தில் இழுத்தான் ஹரி.

"அடுப்புல பால் இருக்கு, விடுங்க" என்று ஓடிப்போயி அடுப்பில் இருந்ததை கவனித்தாள். அவளுக்கு இன்னும் புரியலை.

"ஹேய் காயத்ரி! இழுத்துப்போத்தினால்தான்டி நீ பயங்கர செக்ஸியா இருக்க !" னு அவள் காதருகில் முனுமுனுத்தான். அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து பின்னால் இருந்து கட்டி அணைத்தான். அவள் கழுத்தில் அவன் இதழ்கள் பதிந்தது. என்றும் போலில்லாமல் வித்தியாசமாக அவனுடைய முத்தங்கள் சத்தமாகவும் அவள் உடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் கைகள் அவள் உடம்பில் தெரிந்த எல்லா "கேப்" களிலும் ஊர்ந்தது, பிறகு கைகளை அவன் உதடுகளும் ஃபாளோ பண்ணின. காய்த்ரி ஸ்ட்வை ஆஃப் பண்ணினாள் . ஸ்டவ்வில் உள்ள நெருப்பு அணைந்தது, ஆனால் அவன் கொடுக்கும் முத்தத்தால் அவள் உடல் கொதித்தது, பொங்கியது. அதன்பிறகு அவள் எதுவும் பெருசா பேசவில்லை. இன்று என்னவோ புதுமாதிரியாக அவளுக்கு வழங்கும் அன்புடன் அவன் அவளை ஹீரோயினாக வைத்து ஒரு கதையும் சேர்த்துச் சொன்னான். ரொம்ப ரொம்ப மோசமான கதை அது. ஆனால், அதுதான் அவளை எளிதாக அவனுக்கு முன்னால் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது . எவ்வளவு நாளாச்சு இப்படி இவர் "அன்பா" இருந்து!

ஷவரில் குளித்துக்கொண்டிருக்கும்போது இன்பத்தில் ஆழ்த்திய ஹரியை நினைத்தாள், "யாரையும் கேட்டால், இவர் ஒர் பக்கா ஜெண்டில்மேன் னு சொல்வாங்க. இவர் வண்டவாளம் எல்லாம் எனக்குத்தானே தெரியும்? வர வர ரொம்ப ரொம்ப மோசம் இவர்" என்று எண்ணி வெட்கப்பட்டாள். அங்கே பாத்ரூம் ஓரத்தில் இவ்வளவுக்கும் காரணமான, தன் கனவை நனவாக்கிய அந்த பழைய புடவையைப் பார்த்து தனக்குள் சிரித்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவள், அப்போது பாத்ரூமில் நுழைந்த ஹரியிடம் , "ப்ராஜெக்ட் டெட் லைன், நாளைக்குனு சொன்னீங்க! ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடுச்சே? பாவம் நீங்க!" என்றாள் கிண்டலாக.

"நீதான் சதி பண்ணிட்டடி! ஏன் எனக்கு ப்ரமோஷன் கெடைக்கிறது பிடிக்கலையா? உன்னைவிட ரொம்ப அதிக சாலரி வாங்கிடுவேன்னு இப்படி செக்ஸியா சேலையைக் கட்டி வந்து கவுத்தீட்டயேடி" என்று அவள் பின்புறம் தட்டிவிட்டு அவள் கன்னத்தில் லேசா முத்தமிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு "அரைகுறை" காயத்ரியைவிட, உடம்பெல்லாம் மறைத்து சேலையில் இருக்கும் "பத்தினி" காயத்ரிதான் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது இப்போதாவது தெளிவாகப் புரிந்ததே. "நல்ல வேளை வாஷிங் மெஷின் "ரிப்பேர்" ஆச்சு" னு தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டாள். ஒருவழியாக அவள் பகல்கனவு நனவானது. 
 *********************

இது ஒரு மீள்பதிவே!

காயத்ரியின் பகல்கனவு! (18 + ONLY)

Tuesday, May 13, 2014

அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!

"என்ன மோகன்! என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.

"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.

"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"

"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.

மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.

மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.

எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.

யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.

தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.

அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!

ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.

"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.

"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.

"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.

"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.

"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.

"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"

"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.

அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.

புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.

"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.

"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.

அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.

நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!

ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!

இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.

கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.

*******

மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)

Monday, May 12, 2014

நீதான் ஒண்ட வந்த பிடாரி!

"ஏண்டா அந்த ஆளுக்கு இப்படி ஒரு "மூக்கு உடை" கொடுத்த கார்த்திக்? பாவம்டா அவன்! அவன் மூஞ்சி போன போக்கை பார்த்தியா?" என்றான் சுந்தர்.

"நான் என்னடா செய்தேன்? "சரி அப்போ நீங்க உட்காருங்க! நான் நிக்கிறேன்" னு சொன்னேன். இதிலென்ன பெரிய தப்பு?!"

"என்னடா சுந்தர்? என்னாச்சுடா?" என்றான் அப்போத்தான் அந்த ரூம் உள்ளே வந்த ஆனந்த்.

"இல்லடா இன்னைக்கு ஆட்டோக்காரர்கள்  எல்லாம் ஸ்ட்ரைக்காம்! படம் பார்த்துட்டு ஆட்டோ கிடைக்காமல் பஸ்ல ஏறி சிவாஜி நகர்ல இருந்து வந்தோம். வரும்போது நானும், கார்த்திக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏறியதால் உட்கார இடம் கெடச்சது. அது 3 பேர் உட்காருகிற சீட். அந்த சீட்ல இன்னொரு குண்டான ஆளும் ஜன்னல் ஓரத்தில் இருந்தான். அந்த குண்டான ஆளு, நான் கார்த்திக் மூனு பேரும் உட்கார்ந்து இருந்தோம் அந்த சீட்ல. நான் நடுவில், கார்த்திக் இந்த உக்காந்து ஓரமா இருந்தான். அடுத்த ஸ்டாப்ல ஒரு ஆள் ஏறி கார்த்திக் பக்கத்தில் நின்னுகொண்டு வந்தான். அவனுக்கு 35 வயசுபோல இருக்கும். நல்லாத்தான் கிழங்கு மாதிரி இருந்தான். அவன் கார்த்திக்கிடம் மெதுவா சொன்னான் "கொஞ்சம் தள்ளி உட்காருங்க! நானும் உட்கார்ந்துக்கிறேன்"னான்.

"சரி, அதுக்கு இவன் என்ன  சொன்னான்?"

"உடனே கார்த்திக் சொன்னான், "இது  மூனு பேர் உட்காருகிற சீட், சார். நீங்களும் உட்கார்ந்தா யாரும் ஒழுங்கா வசதியா உட்காரமுடியாது" னு  இடம் கொடுக்க முடியாதுனு சொன்னான். ஆனால் அவன் இவனை விடலை. "கொஞ்சம் தள்ளி உட்காருங்க அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம்" னு விடாமல் நிக்கிறான்"

"எரிச்சலில் அவனை திட்டிவிட்டானா கார்த்திக்?"

"இல்லைடா, திட்டலாம் இல்லை! "அப்போ நீங்க உட்காருங்க சார் ! நான் நிக்கிறேன்!" என்றேன். இதைப்போய் பெருசா சொல்லிக்கிட்டு இருக்கான், சுந்தர்"

"அது ஒரு செம சிக்ஸ் டா அவனுக்கு. பாவம் அவன் மூஞ்சி போன போக்க பார்க்கனும் நீ!"

"ஏண்டா கண்டவனையும் போட்டு கடிக்கிற, கார்த்திக்?"

"இங்கே பாரு! நான் உண்மையிலேயேதான் சொன்னேன். I was ready to give my seat to him. It will be VERY uncomfortable for everybody otherwise. அந்த சீட்ல நாலு பேர் உட்காருவது இம்பாஸிபிள்டா. I could stand more comfortably than sitting with great difficulty. அதனாலதான் சொன்னேன். நம்பினால் நம்பு!  I really meant it"

"என்னவோ போ! அவன் இனிமேல் யாரிடமும் இப்படி இடம் கேக்க மாட்டான்" என்றான் சுந்தர்.

"நீ வேற! இவனுகளைப் புரியாமல் நீ பேசுற! காலம்பூராம் அவன் இப்படித்தான் இருப்பான்!

"ஏண்டா டேய்!"

 " சரி, இதைக்கேளுடா! ஒரு நாலு மாசத்துக்கு முன்னாலே  மதுரைக்கு போக வேண்டியதாப்போச்சு. கடைசி நேரத்தில் போனதால, ட்ரயின், டீலக்ஸ் பஸ் எதுலயும் டிக்கட் புக் பண்ண முடியலை. தீபாவளிக்கூட்டம் என்பதால் டிக்கட்டுக்கு சாண்ஸே இல்லை. சரி, மக்களோட மக்களா போவோமேனு மெஜெஸ்டிக்ல ஒரு சேலம் பஸ்ஸை பிடிச்சு போனேன். சேலம் போய் மதுரைக்கு மாறி போய்க்கலாம்னு. நான் கடைசி சீட்ல உட்கார்ந்து இருந்தேன் இன்னும் 5 பேரோட சேர்த்து. கடைசி சீட்னால பஸ் தூக்கி தூக்கிப் போட்டுக்கிட்டே போச்சு. ஹொசூர் போனதும் அங்கே இதே மாதிரி அப்பாவி வேசத்துடன் வந்தான் ஒருத்தன்" "சார் கொஞ்சம் எடம் கொடுங்க, ஓரமா உட்கார்ந்துக்கிறேன்" என்றான் மரியாதையா.

"நானும், சரி தொலையிறான் னு உட்காரவிட்டேன். உட்கார்ந்தான் அந்த அப்பாவி. ஒரு அரை மணி நேரத்தில் என்ன ஆச்சுனா, எல்லாமே மாறிப் போயிடுச்சு! நான் ஏதோ அவன் இடத்தில் உட்கார்ந்த மாதிரி ஓரத்தில் ஒண்டிக்கிட்டு இருக்கேன். அவன் எதைப் பத்தியும் கவலைபடாமல் 2 பேர்க்கு தேவையான சீட் எடத்தை எடுத்துக்கிட்டான். என்னால சுத்தமா உட்காரவே முடியலை. இதை எவனாவது புதுசா ஏறுறவன் பார்க்கிறான்னு வச்சுக்கோ.  என்ன நெனைப்பான் தெரியுமா? நாந்தான் அங்கே ஒண்ட வந்த பிடாரினு நெனைப்பான். Seriously, If anybody, who does not know the "history" sees us, it will look as if he was generous enough to accommodate me in his seat! He does not even remember I let him sit, there! You believe that? We have got these sort of cheap bastards everywhere"

"நீ என்னடா பண்ணின?"

"என்ன பண்ண சொல்ற? அவனுக்கு ஞாபகப்படுத்த சொல்றியா? நீதான் ஒண்ட வந்த பிடாரினு?  வேற வழி தெரியாமல் நான் பேசாமல் எழுந்து நின்னுட்டேன். இதைக்கேளு! அப்பவும் அவன்,  அவனுக்கு இடம் கொடுத்த நான் நிக்கிறதைப்பத்தி கவலையே படலைடா! அவன்  அந்த ரெண்டு ஆளு இடத்தில் வசதியா உட்கார்ந்துட்டு வரான், சந்தோஷமா!"

"அந்த கசப்பான அனுபவத்தில் இவனிடம் இப்படி "ரியாக்ட்" பண்ணுறியாக்கும்?"

"இல்லடா, இவனுகளை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் விட்டேனா, அதையும் நம்ம ஊர் மாதிரி கேவலமா ஆக்கிவிடுவானுக! காட்டுமிராண்டிகள்! கொஞ்சம்கூட புத்தியே கிடையாது"


இதுவும் ஒரு மீள் பதிவே! தலைப்பு கொஞ்சம் "அர்த்தமுள்ளதாக" மாற்றப் பட்டுள்ளது!