"என்ன மோகன்! என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.
"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.
"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"
"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.
மோகனுக்கும்
அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம்,
அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல்
முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக
தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.
மோகன் ஒரு நாள் உட்கார்ந்து
தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ
அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு,
கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும்
பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல
நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை
என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க
முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த
பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர
வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த
வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று
செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும்
செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில்
வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க
வேண்டியதுதான் வயதான காலத்தில்.
எதுக்காக சம்பாரிக்கிறோம்?
யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு.
மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன்
குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக
உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல்
சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி
சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல
குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக
தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.
யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.
தன்
அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும்
நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி
வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை
அவனுக்கு.
அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க
கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே
குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல்
தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான்
வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட
மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்
குடும்பத்தலைவன்!
ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன்
விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports
car வேணும் என்றான். அதன் விலை $30,000.
"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.
"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.
"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.
"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.
"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.
"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"
"ஒரு
புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும்
இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன்
சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு
மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.
அவன்
சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன்
மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த
நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி
கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.
புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.
"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.
"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.
அவன்
மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன்
இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப
வாழ்க்கையை.
நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி
மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான
ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால்
நிம்மதியாக!
ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது.
அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம்
செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான்
சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே
பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி
இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான்
பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!
இப்போ இந்தியா வர ஒரு
மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ்
இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட
வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான
அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான்.
அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய
நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று
வந்தான்.
கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய்
இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று
தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி
கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.
*******
மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)
No comments:
Post a Comment