கமலின் விஸ்வரூபம் படம், உலகத் தரத்தில் எடுக்கப்பட்டு, உலக அளவில் பேசட்டு, விமர்சகர்களாலும் மற்றும் ஹாலிவுட் ஜாம்பவான்கள், பேர்ரி ஆஸ்பான் போன்றவர்களாலும் ஆஹா ஓஹோனு புகழப்பட்டாலும், சிறந்த வெளிநாட்டுப் படம் ஆஸ்கருக்கு இந்தப்படத்தை யாரும் பரிந்துரை செய்யவில்லை!
ஆனால் விஸ்வரூபம் படத்தைப் பார்த்துட்டு கமலுடைய நாட்டுப் பற்றையும் கலை ஆர்வத்தையும் வியந்து அவருடைய தாய்நாட்டில் அவருக்கு பத்மபூசன் விருது கொடுத்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்துக்கள்!
விரைவில வரவிருக்கும் விஸ்வரூபம் ரெண்டுக்கு ஆஸ்கரும், கமலுக்கு பாரத ரத்னா விருதும் கிடைக்க வாய்ப்பிருக்குனு நம்பப்படுகிறது!
Monday, January 27, 2014
Friday, January 24, 2014
நிசப்தம் வா மணிகண்டன் மேல் வயித்தெரிச்சல்?!
பதிவுலகில் ஒரு சில பதிவர்கள், தொடர்ந்து எழுதும்போது, எழுத்தில் ஒரு ரிதம் பெற்று பலரையும் கவர்ந்து தனக்கென்று ஒரு இடம் பெற்று விடுகிறார்கள். ஒரு சிலர் அப்படி ஒரு இடத்தை, தகுதியைப் பெற்று விட்டார்கள் என்பதை அறிவது எளிது. எப்படி? பெரிய மனுசன் போர்வையில் வாழ்ந்துகொண்டு தான் பெரிய புடுங்கினு நினைப்பில் இருக்கும் ஒரு சில வயித்தெரிச்சல் கோஷ்டி எல்லாம் அந்தப் பதிவரைப் பார்த்து வயிரெரிந்து ஊரறிய விமர்சிப்பது உலகிற்கே தெரியும்.
சுஜாதா விருது பெற்ற நிசப்தம் மணிகண்டனுடைய எழுத்து எனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டுள்ளார். வாசகர்கள் பலரையும் கவரும் வண்ணம் எழுதக் கத்துக்கொண்டுள்ளார். எழுத்தில் ஒரு நல்ல ஃப்ளோ கிடைத்து நன்றாவே எழுதுகிறார். அப்படி ஒரு மேல்ப் படிக்குப் ஒரு தமிழ்ப் பதிவர் போகும்போது அவரைப் பாராட்டணும். இல்லைனா அவர் எழுத்து உனக்குப் பிடிக்கலையா, "இவன் என்ன பெரிய இவன்?" "நாந்தான் பெரிய புடுங்கி" னு முழுவதும் தவிர்த்துவிட்டுப் போயிடணும். இது ரெண்டையும் செய்ய வக்கிலாத கோமாளி என்ன செய்வான்? தன்னை பெரிய மேதாவினு நினைத்துக்கொண்டு அந்த நெனைப்பில் திரியும் இவர்கள் பலவாறு அந்தப் பதிவவரை தாக்குவதைக் காணலாம்!
மணிகண்டன் யாருனே எனக்குத் தெரியாது. இவர் சாதீயப் பதிவையும், ஆத்திக நம்பிக்கையையும் நான் இந்தத் தளத்திலேயே விமர்சிச்சு இருக்கேன். அதே நேரத்தில் நமக்குப் பிடிக்கிதோ இல்லையோ அவர் முன்னேற்றத்தை, ஒரு சக தமிழனாகப் பார்த்து பாராட்ட கத்துக்கணும் என்கிற நம்பிக்கையில் வாழ்பவன் நான். அவர் எழுத்தைப் பார்த்து, அவர் முன்னேற்றத்தைப் பார்த்து வயிரெரிந்து, எதற்கெடுத்தாலும் அவரை விமர்சிப்பது, அவர் பதிவை விமர்சிப்பது, நக்கலடிப்பது என்பதெல்லாம் கீழ்த்தர்மான செயல்! அப்படி கோஷ்டி சேர்ந்துகொண்டு அவரை கலாய்ப்பது ஈனத்தமிழன் செய்வது.
அப்படி ஒரு சில அரைவேக்காடுகள் செய்வது அந்தப் பதிவரின் முன்னேற்றத்தை ஒரு படி உயர்த்துமே தவிர நிச்சயம் கீழே இறக்காது!
தொடர்புடைய பதிவுகள்..
பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!

ருசிகர சினிமாச் செய்திகள்!
சத்யராஜ் ஹீரோவா நடிச்சு, கலவரம்னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்குபோல. இதென்ன "டப்" படமா என்னனு தெரியலை. பிஹைண்ட் வுட்ஸ் (Behindwoods), சைஃபை (sify, இப்படித்தான் நான் தமிழ்ல சொல்றது), rediff மற்றும் வலையுலகில் ஒரு பயகூட இதுக்கு விமர்சனம்னு என்ன எழவையும் எழுதக்காணோம். ஹிந்துல மட்டும் ஏதோ வந்தது. ஏன் இப்படி ஒரு படத்தை ஒரு மனதா எல்லோரும் புறக்கணிக்கிறாங்கனு தெரியலை.
விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும்போது, பேர்ரி ஆஸ்பான், அந்தப்படத்தை தொடர்ந்து பத்துத்தர பார்த்து ரசித்ததாவும், அவர் குடும்பமே வந்து பார்த்து மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யமாப் பார்த்து கமலை வானளாவ புகழ்ந்ததாகவும் கமலே சொல்லாமல் சொல்லி விஸ்வரூபத்தை இஷ்டத்துக்கு ப்ரமோட் பண்ணினார்.அதன் பிறகு ஆஸ்பான் இவரை வைத்து படம் தயாரிக்கப் போவதாகவும் பல செய்திகள் வந்தன.அது மாதிரி எதுவும் நடக்கிறதா எதுவும் தெரியலை. அதுக்குள்ள கமலுக்கும் ஆஸ்பானுக்கும் கருத்து வேறுபாடு வந்து ப்ராஜெக்ட் நின்றுச்சா என்ன?
ரஜினியின் மகள் சவுந்தர்யா, அப்பாவை வைத்து பொம்மைப்படம் ஒண்ணு (அதான்ப்பா கோச்சடையான்) எடுக்கிறாரு எடுக்கிறாரு எடுத்துக்கிட்டே இருக்காரு. சங்கர், எந்திரன், சிவாஜி எடுத்தபோது இழுத்த இழுவையைவிட பல மடங்கு இழுக்கிறார். கடைசியில் ஆடியோ வெளியே வரப்போதாம். வந்தால்த்தான்/வந்த பிறகுதான் நான் அதை நம்புவேன். இதெல்லாம் ரஜினிக்குத் தேவையா? மகள்னா அன்பா இருக்க வேண்டியதுதான். எதுக்கு இதுபோல் ஒரு ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கனும்? அப்படியே அவரிடம் திறமை இருந்தால், இளநடிகர்களை வச்சு ஏதாவது சின்ன ப்ராஜெக்ட் பண்ணி தன் இயக்கத்திறமை வலிமைப்படுத்தாமல் ஏன்ப்பா இப்படி?
பொங்கலுக்கு ஜில்லாவும், வீரமும் மோதியது. அதென்னனு தெரியவில்லை இணையதள மீடியா மற்றும் சின்னத்திரை மீடியா எல்லாருமே இந்த இரு படங்களின் வெற்றி, விமர்சனம் பற்றி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்க. ரெண்டு படமுமே வெற்றி! ரெண்டுமே சுமார்தான்! ரெண்டுமே பாக்ஸ் ஆஃபிஸ் ல பக்கத்தில் பக்கதில் நிக்கிதுனு ஒரேயடியா யார் வெற்றி பெற்றார்கள்னு சொல்ல மறுக்கிறார்கள். இது சினிமா வரலாற்றில் ஒரு புதுமையான நிலை! I have never seen any such a "tie" in any box office war between two big stars, let it be Sivaji vs MGR or Rajni vs Kamal!

Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
சினிமா,
சினிமா செய்திகள்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Posts (Atom)