Wednesday, July 25, 2012

பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!

யாரையாவது கட்டி அழனும் இவனுகளுக்கு! "பகவான் சத்ய சாய்பாபா பொணமான பிறகு, பகவான் நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் சேர்த்துக் கட்டி அழுதுட்டுப் போகட்டும்!" "என்னனு தொலையுதுகள் இந்தப் பண்டாரங்கள்" னு கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் எல்லாம் அவன் அவன் வேலையைப் பார்த்துக்கிட்டு நாகரிகமாக ஒதுங்கி போய்விட்ட இந்த காலகட்டத்தில்  நாத்திகம் சாடும் சண்டியர்கள் உருவாகியுள்ளனர்.

வா மணிகண்டன்னு ஒரு பண்டாரம் பெரியாரிஸ்ட் பத்தி ஒரு பதிவு எழுதியிருக்கு!

பதிவின் தலைப்பு!

 பெரியாரிஸ்ட்களின் சரிவு காலம்

வா மணிகண்டனா? யாருடா இந்தப் பண்டாரம்னு போயிப் பார்த்தால், மின்னல் கதைகள் னு தலைப்புப்போட்டு எதயோ எழுதிக்கொண்டு இருக்கு.

தாழ்த்தப்பட்டவர்கள் பத்தி,  "சக்கிலிப் பையன்" னு ஒரு கதை! 

"ஊரை ஏமாத்தி பொழைப்பு நடத்துற உயர்சாதி பார்ப்பான்லாம் சொர்க்கத்துக்கு போகமாட்டான், இதுபோல் எல்லோர் அசுத்தத்தையும் சுத்தம் செய்யும் "நற்தொழில்" செய்யும்  இவர்கள்தான் உண்மையில் சொர்க்கம் போவார்கள், போகத் தகுதியானவர்கள்" னு  ஏதாவது  "புது மாதிரியான மாரல்"  எதுவும் இந்தப் பண்டாரத்தோட கதையில்  இருக்கானு போயிப் பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!

மின்னல் கதையோ, பின்னல் கதையோ, இல்லை பண்டாரங்கள் கதையோ புனைவுனு என்னவோ எழுதிட்டுப் போகட்டும்.

என்ன?  பெரியாரிஸ்ட் சரிவு காலமா? சரி என்னதான் இந்தப் பண்டாரம் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்குனு போயிப் பார்த்தால்.. ஒரே உளறலாத்தான் இருக்கு..
’பெரியாரிஸ்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை.
* இந்தப் பண்டாரம் பெரியாரிஸ்டா இருக்கனும்னு விரும்பினாராம்?

* கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாராம்!

* ஆனால் ஒரு சாதி வெறியனாவும் இருந்தாராம்.  

இந்தப் பண்டாரம்  பண்டாரமாகுமுன்னாலேயும் தன்னை "பெரியாரிஸ்டு" னு சொல்லிக்கிறதில்லையாம்.

அதாவது என்ன சொல்ல வர்ரான்னா, இவன் எப்படியெல்லாம் முட்டாளா இருந்தானோ அப்படி இருப்பவர்கள்தான் பெரியாரிஸ்டாம்!  இதுதான் இந்தப் பண்டாரத்தோட "பெரியாரிஸ்ட்" தியரி!

What an IDIOT! Nobody wants to become a "periyarist" or "rationalist" moron! You just don't find any meaning praying senseless God. You appreciate people who had similar thoughts. That is  why you appreciate தந்தை பெரியார்!

You try to resolve your problems without going complaining/crying to the "God"! It is as simple as that.

அப்புறம் இந்தப் பண்டாரத்துக்கு,

 * திடீர்னு சாதியம் பத்தி தெளிவு வந்துருச்சாம்!  

சாதியம் பத்தி தெளிவு வருதா? அதான் இது கதைகள் சாதித்தலைப்புகளுடன்  படு கேவலமாக இருக்குபோல!

* உடனே கடவுள் நம்பிக்கையும் வந்துடுச்சாம்!  

என்னவோ இவ்ளோ நாளு இல்லாதது வந்துடுச்சுனு கதைவிடுது!

* பெண்ணியம் பேசுறதுல நம்பிக்கை இல்லையாம். 

 நீ பெண்ணியம் பேசி கிழிச்சுட்டாலும்!

இவன் தளத்துக்குப் போயி, என்னய்யா  சொல்ல வர்ற நீர்? உம்மை மாதிரி பண்டாரத்தை எல்லாம் பெரியாரிஸ்டுனு எவன் சொல்லச்சொன்னான்? நீர் பண்டாரம்னே பெருமையா சொல்லிக்கோ!ஆமா என்னத்துக்கு பெரியாரிஸ்டின் சரிவு காலம்னு எதையோ உளறிக்கிட்டு திரிகிறனு போயி கேக்கப் போனால், இந்தக் கோழை காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி ஜால்ரா பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுக்கிட்டு இருக்கான்!

தேவையில்லாமல் இந்த பண்டாரங்கள் "பெரியாரிஸ்ட் சரிவு காலம்"னு எதையாவது விஷமத்தனமாக உளறிவிட்டு, என்னவோ இவனுக நியாயமாகப் பேசுவதுபோலவும், இவனுககிட்ட மற்றவர்கள் வம்புக்கு வர்ற மாதிரி காமெண்ட் மாடெரேஷன் வச்சுக்கிறது.

மணிகண்டா! பெரியாரிஸ்ட் பத்தி உம்மை மாதிரி பண்டாரங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை! மின்னல் கதைகள்னு எதையாவது உளறித்தள்ளும்! பெரியாரை விட்டுடும்! புரியுதா?

20 comments:

Anonymous said...

அப்படி போடுங்க அரிவாளை !!!

அவர் சொல்ல நினைப்பது இது தான் ...

நாத்திகராக இருப்பவர்கள் சாதி வெறிப் பிடித்தவர்கள் ... ஆத்திகமான பின் சாதி வெறி போய்விடும் என்பது ..

ஹிஹி !!! ஆனால் சாதி வெறி போய்விடாது மாறாக மனதுக்குள் ஒழிந்துக் கொண்டு சிங்கியடிக்கும் என்பதை அவரே நிரூபித்துவிட்டார் ... !!!

பெரியாரிஸ்ட் என்பது மதமா என்ன ... அவரு அப்படித்தான் நினைத்துள்ளார். அந்த மதத்தில் இருந்தேன் அப்புறம் மதம் மாறி மனம் மாறி தெளிந்துவிட்டேன் என்பது .. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல .. மதவாதிகள் எல்லாம் இப்படித் தான் சொல்லி அலைகின்றார்கள்

வருண் said...

***நாத்திகராக இருப்பவர்கள் சாதி வெறிப் பிடித்தவர்கள் ... ஆத்திகமான பின் சாதி வெறி போய்விடும் என்பது ..***

ஏதோ உளறிட்டுப் போறான்னு இதையெல்லாம் விட முடியாதுங்க!

இவன் எழுதியிருக்க "சக்கிலிப் பையன்" கதையை வாசிச்சால், இவன் நிச்சயம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவனல்லனு தெளிவாகத் தெரியும்!

நிச்சயம் இவன் ஒரு "உயர் சாதி திராவிடக் கபோதி"தான்! All he is worried is saving his ass from his "relatives" like any other "high-class hindu moron"!

சாதியை விட்டுத் தொலைய முடியலைனு சாதி பெருமை பேச முனைகிறான்!!!!

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமை.

சாதி மதம் மனிதனுக்கு தேவை இல்லை!

சாதிப் பெருமை பேசும் ஆத்திகன்,நாத்திகன் யாரும் மனிதன் அல்ல.

சமத்துவம் பேசுவது போல் சாதிப்பெருமை பேசுவது அநாகரிகம் .சாதிப்பெயர் பயன்படுத்திய திரு மணிகண்டனுக்கு கண்டனம்.

நன்றி

வருண் said...

உயர் சாதி ஹிந்துக்கள் எல்லாம் அவன் அவன் குண்டியை அவனே கழுவித்தானே சுத்தம் செய்தா(றா)னுக? இல்லை அதுக்கும் ஒரு சாதி உருவாக்கினானுகளா? எவ்வளவு மூளை வளர்ச்சி இல்லாதவனா, அடிமுட்டாளா இருந்திருந்தால் "இதுக்கு"னு "ஒரு வகுப்பை" உருவாக்கி இருப்பானுக அயோக்கியனுக!

சதீஷ் செல்லதுரை said...

நாத்திகராக இருப்பவர்கள் சாதி வெறிப் பிடித்தவர்கள் ... ஆத்திகமான பின் சாதி வெறி போய்விடும் என்பது ..

ஹிஹி !!! ஆனால் சாதி வெறி போய்விடாது மாறாக மனதுக்குள் ஒழிந்துக் கொண்டு சிங்கியடிக்கும் என்பதை அவரே நிரூபித்துவிட்டார் ... !!!
இங்கே ஒரு கொடுமைய பாருங்க....பண்டார கொடுமைதான்..http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.html.

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

பரிதி.முத்துராசன் said...

நண்பரே
நாத்திகம் சாடும் சண்டியர்கள்
இப்போது நிறைய.......நானும் இவர்களின் அவஸ்த்தை அனுபவிக்கிறேன் ...இன்னும் தொடர்கிறது ...அதனால் கமென்ட் காலத்தை எடுத்துவிட்டேன் உமது இப்பதிவு நல்ல சிந்தனை ..வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

You sound raw as usual,but it is an exceptional one to score a point.

கபிலன் said...

***நாத்திகராக இருப்பவர்கள் சாதி வெறிப் பிடித்தவர்கள் ... ஆத்திகமான பின் சாதி வெறி போய்விடும் என்பது ..***

ஆத்திகர்களிடத்தில் சாதி இருக்கும்...நாத்திகர்களிடத்தில் சாதி வெறி இருக்கும்...
இது வேண்டுமானால் உண்மை. பெரியாரிலிருந்து, வீரமணி வரைக்கும்...

வருண் said...

***கபிலன் said...

***நாத்திகராக இருப்பவர்கள் சாதி வெறிப் பிடித்தவர்கள் ... ஆத்திகமான பின் சாதி வெறி போய்விடும் என்பது ..***

ஆத்திகர்களிடத்தில் சாதி இருக்கும்...நாத்திகர்களிடத்தில் சாதி வெறி இருக்கும்...
இது வேண்டுமானால் உண்மை. பெரியாரிலிருந்து, வீரமணி வரைக்கும்...
26 July 2012 5:20 AM ***

கபிலா: சக்கிலியர்கள்னு ஒரு சாதியை உருவாக்கி, இவனுக செய்ற அசுத்தத்தை எல்லாம் இவர்கள்தான் சுத்தம் செய்யனும்னு காலங்காலமாக அவர்களை மனசித்ரவதை செய்தது யாரு, பெரியாரா இல்லை வீரமணியா?. இல்லை கடவுளை வணங்கி வழிபட்டுக்கொண்டு இருந்த அடிமுட்டாள்களான உன் மற்றும் என் முப்பாட்டனாரா?

இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க!

ஒரு சிறுகுழந்தையை அடித்து வளத்தாளே அவங்க காண்பிடெண்ஸ் போயிடும், அவங்க பின்னால பெருசா சாதிக்க முடியாதுனு சொல்றாங்க, சப்போஸ் நீயும் நானும் இந்த சுத்தம் செய்யும் கம்யுனிட்டில பிறந்து இந்த மிருகங்களின் இன்னல் களுக்கு ஆளாகியிருந்தால் கண்ஃபிடெண்ஸ் எங்கேயிருந்து வரும்?

எப்படி நம்மஎந்தக்காலத்திலும் முன்னேற முடியும்?

பெரியார், வீரமணியை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு யோசியும்!

வா.மணிகண்டன் said...

அன்புள்ள வருண்,

வணக்கம்.

பெரியாரியம் பற்றிய எனது புரிதலை நான் எழுதியிருப்பது உங்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. உங்களின் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

கண்டனத்தை பதிவு செய்த உங்களின் சொற்பிரயோகங்கள் சற்று நாகரிகமானதாக இருந்திருக்கலாம் என விரும்புகிறேன்.அப்படியிருந்திருக்குமெனில் இதே பதிவு ஒரு திறந்த மனதிலான விவாதத்தை உருவாக்கியிருக்கக் கூடும்.

சக்கிலிப்பையன் கதையோடு சேர்த்து பறவளவு, துலுக்கன் போன்ற சாதிய,மத ரீதியிலான கதைகளும் நிசப்தம் தளத்தில் இருக்கின்றன. அவைகளையும் ஒரு முறை வாசித்துவிடுங்கள்.

அவை யாவுமே கொங்குப்பகுதியின் ஆதிக்க சாதிகள் மீதான என எதிர்ப்புதானேயொழிய எனது சாதிவெறி இல்லை.

சக்கிலிப்பையன் கதைச் சம்பவங்கள் இன்னமும் கொங்குப்பகுதியின் நிதர்சனங்கள்தான்.

நிசப்தம் தளம் 2005 ஆம் ஆண்டிலிருந்து இயங்குகிறது. அந்தச் சமயத்தில் கமெண்ட் மாடரேஷன் கட்டாயம் என்பது தமிழ்மணத்தின் விதி. அதை அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு கமெண்ட்டையும் நான் நிராகரித்தது இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமெண்ட் மாடரேஷனை நீக்குவதில் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.

மற்றபடி கதையைப் பற்றிய உரையாடலை துவக்கி வைத்த உங்களுக்கு எனது நன்றியும் அன்பும்.

அன்புடன்,
வா.மணிகண்டன்.

வருண் said...

மணிகண்டன்! விளக்கத்திற்கு நன்றி. என் கோபத்தை நீங்க சரியாக எடுத்துக்கொண்டதுக்கு நன்றி.

***சக்கிலிப்பையன் கதைச் சம்பவங்கள் இன்னமும் கொங்குப்பகுதியின் நிதர்சனங்கள்தான்.***

நான் சொல்ல வருவது...
கொங்குப் பகுதியில் எளியவர்களான "இவர்களை" இழிவு படுத்துவதில், எத்தனை விழுக்காடு ஆத்திகர்கள்? எத்தனை விழுக்காடு நாத்திகர்கள்?னு உங்க மனதைத் தொட்டுப் பார்த்தால் தெரியும்!

மற்றபடி உங்க கதையில் உள்ள ஹீரோ ஒரு முதுகெலும்பில்லாத வனாகத்தான் இருக்கு. (கதையிலாவது ஒரு முதுகெலும்புள்ள ஹீரோவை உருவாக்கியிருக்கலாம்! )நாலு சுவருக்குள் தன் நிலைமையை எண்ணி, தன் பிம்பத்தில் காறி துப்புவதால் எந்தவித முன்னேற்றமும் நடக்கப் போவதில்லை, கண்ணாடியை அசுத்தம் செய்வதைத்தவிர!

வா.மணிகண்டன் said...

அன்புள்ள வருண்,

கடிதத்தையும், புனைகதையையும் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகம் என்றுதான் நம்புகிறேன்.

புனைகதை என்பது ஒரு சித்திரத்தை உருவாக்குவது. வாசகனுக்குள் ஒரு சலனத்தை உருவாக்குவதுதான் அதன் அடிப்படையான வேலை என்று நினைக்கிறேன்.

புனைகதை புரட்சி பேசத்தேவையில்லை என்பதால்
அதில் வரும் நாயகன் வீரனாகவும், முதுகெலும்புள்ளவனாகவும் வர வேண்டும் என்பது ‘ஹீரோயிசக்’ கதைகளுக்கும், மிகை யதார்த்தக் கதைகளுக்கும் பொருந்தலாம்.

நான் அந்தக் கதையில் பதிவு செய்ய விரும்பியது யதார்த்தமான ஒரு ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவனின் மனநிலையை.

நன்றி.

வா.மணிகண்டன்

வருண் said...

***கடிதத்தையும், புனைகதையையும் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ***

***சக்கிலிப்பையன் கதைச் சம்பவங்கள் இன்னமும் கொங்குப்பகுதியின் நிதர்சனங்கள்தான்.***

உங்க புனைகதையும் நிதர்சனம்னுதான் சொல்றீங்க. உங்க கடிதமும் நிதர்சனம்தான். இதில் குழப்பவோ குழம்பவோ எதுவும் இல்லை!

உங்க கதைகள் மற்றும் கடிதங்கள மூலம் உங்களைப் பார்க்க முடியுது. அதுதான் உங்களுக்குப் புரியாத பிரச்சினை. சரி, விடுங்க! தொடருங்கள் உங்க பாதையில்!

சார்வாகன் said...

வணக்கம் திரு மணிகண்டன்,

சாதிப் பெயர்களை அப்படியே பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.ஒவ்வொரு சாதிக்கும் சில இழி சொல் உண்டு.பயன்பாட்டில் இருப்பதை ஒழிக்க முயல் வேண்டுமே தவிர ,இயல்பு என கட்டக் கூடாது.

தாழ்த்தப் பட்டவர் என்று கூட சொல்லக் கூடாது,யாரும் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல,உழைக்கும் சாதி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்.
************
//புனைகதை என்பது ஒரு சித்திரத்தை உருவாக்குவது. வாசகனுக்குள் ஒரு சலனத்தை உருவாக்குவதுதான் அதன் அடிப்படையான வேலை என்று நினைக்கிறேன்.//

சரி உருவாக்கிய சித்திரம் எது?

//புனைகதை புரட்சி பேசத்தேவையில்லை என்பதால்
அதில் வரும் நாயகன் வீரனாகவும், முதுகெலும்புள்ளவனாகவும் வர வேண்டும் என்பது ‘ஹீரோயிசக்’ கதைகளுக்கும், மிகை யதார்த்தக் கதைகளுக்கும் பொருந்தலாம்.

நான் அந்தக் கதையில் பதிவு செய்ய விரும்பியது யதார்த்தமான ஒரு ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவனின் மனநிலையை. //

என்ன சலனம் உருவாக்க முனைகிறீர்கள்?

அதாவது ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்தவன் ஒன்று எளியவர்களை ஒடுக்குவான்,இல்லையெனில் கண்டுகொள்ள மாட்டான்.இது ஒரு இயல்பான விடயம்.

சபாஷ் சரியான அவதானிப்பு.யதார்த்த ஆதிக்க சாதியினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறீர்களா???????????

கொஞ்சம் விளக்குங்களேன் திரு மணிகண்டன்

நன்றி

வருண் said...

தமிழன், தமிழ்ப்பண்பாடு மண்ணாங்கட்டினு நம்ம உளறிக்கொண்டு திரிகிறோம். ஒரு சகதமிழன் படும் இன்னல்களைப் பார்த்து, அவன் நிலையில் நம்மை நிறுத்திப் பார்த்து, உலகில் எந்த மூலையிலும் நடக்காத இதுபோல் ஒரு சாதி அடிப்படையில் ஒருவரை ஒதுக்கி வைப்பது, இழிவாக நினைப்பது தமிழனுடைய இழிவான செயல், தமிழனுடைய கேவலமான கலாச்சாரம்/பண்பாடுனு சத்தமாக சொல்லாமல், இப்படித்தான் நிலைமை இன்னும் இருக்கு, கொங்குதமிழனுக்கும் அறிவு கெடையாது, ஒரு சகதமிழனை தன்னைப்போல இன்னொரு தமிழன் நினைக்கமாட்டான். ஆனால் தனியறையில் அதை நெனைத்து தன் இயலாமையை நினைத்து ஒப்பாரி வைப்பான், இல்லை வைப்பதுபோல நடிப்பான் னு அவரு கதைமூலம் சொல்ல வர்ராரு, நம்ம மணிகண்டரு.

மணிகண்டரு, கதையில் வரும் பரதனா இருந்து இருந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும். அப்படி இல்லையே? கண்ணாடியில் தன் முகம் பார்த்து காறித் துப்பும் நம்ம உயர்சாதி ஆத்திக ஹீரோ போலல்லவா தெரிகிறது.

கேட்டால், இல்லை இது புனைவு எனபார்..

இல்லை இதுதான் நித்ர்சனம் என்பார்..

என்னால் என்ன செய்ய முடியும், இதுதான் நம்ம தமிழ்பண்பாடு என்பார்..

கபிலன் said...

"சக்கிலியர்கள்னு ஒரு சாதியை உருவாக்கி, இவனுக செய்ற அசுத்தத்தை எல்லாம் இவர்கள்தான் சுத்தம் செய்யனும்னு காலங்காலமாக அவர்களை மனசித்ரவதை செய்தது யாரு, பெரியாரா இல்லை வீரமணியா?. "

இந்த மாதிரி நீங்க பேசினீங்க சாதியை ஒழிச்சிட முடியுமா. இப்போ நாம வாழ்ற காலத்துல, மற்றும் அடுத்த சந்ததியினருக்கு இந்த சாதி அழுக்கை கற்றுக் கொடுக்கக் கூடாது. அதுல ஆத்திகர்கள் பெரும்பாலும் கவனமா இருக்காங்க.

பெரியாரோ இல்லை மற்ற தலைவர்களோ போராடியதால் சாதி ஏற்றத்தாழ்வு குறையல. காலமாற்றத்தில் காணாமல் போய் கொண்டிருக்கிறது சாதி. அதனை மூளையில் ஏற்றி காழ்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டுமானால் தங்களைப் போன்றவர்களின் வாதம் உதவும்.

சாதி ஒழியணும் அப்படின்னு நிஜமா நினைக்குறவங்க.....இது போன்ற பகுத்தறிவு ( ஹி ஹி ?) இட்லி தோசைக்கெல்லாம் ஏமாற மாட்டாங்க...
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

வருண் said...

***அதுல ஆத்திகர்கள் பெரும்பாலும் கவனமா இருக்காங்க. ***

ஆமா நீங்களும், மணிகண்டரும் ஆத்திகர் ரொம்ப கவனமா இருக்கீங்க. சாதி ஒழிய ஆண்டவனை வேண்டிக்கிறீங்க. பகவான் அருள் புரிவாரு.. நான் நாத்திகன், சாதிவெறிபிடிச்சி அலைகிறேன். அப்படித்தானே? ஏங்க, சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு?

Vijay Anand said...

மணிகண்டன் சரியாகத்தான் சொல்கிறார். இந்த பதிவு உங்களுடைய தெளிவு, அறிவு மற்றும் மனநிலையை தெளிவாக எடுத்துக்காட்டு கிறது. இன்று உங்கள் பதிவை படித்து எனது நேரத்தை வீணடித்து விட்டேன். இந்த குப்பையை எழுதாமல் இருத்தல் நலம்

வருண் said...

***Vijay Anand said...

மணிகண்டன் சரியாகத்தான் சொல்கிறார். இந்த பதிவு உங்களுடைய தெளிவு, அறிவு மற்றும் மனநிலையை தெளிவாக எடுத்துக்காட்டு கிறது.***

உம்மைப்போல் பண்டாரங்களுக்கு அப்படித்தான் தோணும்! இதில் எந்தவித அதிசயமும் இல்லை!

***இன்று உங்கள் பதிவை படித்து எனது நேரத்தை வீணடித்து விட்டேன். ***

ஏன்? இல்லைனா ஏதாவது கோயில்ல போயி பண்ணுற அயோக்கியத்தனத்தையெல்லாம் கண்ண்டுக்காம விட்டுறச் சொல்லி பகவானிடம் ஏதாவது "டீல்" போட்டு இருப்பியாக்கும்.

**இந்த குப்பையை எழுதாமல் இருத்தல் நலம் ***

நீ இங்ஏ வந்து செருப்படி வாங்காமல் இருப்பது அதைவிட நலம்! வந்துட்டான் வெளக்கெண்ணை விஜய் ஆனந்த், நானும் பண்டாரம்தான்னு பறை சாற்ற!