Thursday, January 22, 2009

இயக்குனர் பாலாவின் “மிருகவெறி”!

உலகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் உண்டு! என்ன நம்ம தமிழர்களிலேயே உண்டு. மனித தெய்வங்களையும், அப்பாவிகளையும் பார்க்கலாம். மிருகங்களையும் பார்க்கலாம்! இதில் திராவிடர்களும் அடங்குவார்கள்! பார்ப்பனர்களும் அடங்குவார்கள்! கொலைசெய்யப்பட்ட சங்கர் ராமன் பார்ப்பனர்தான். கொலைகுற்றம் சாட்டப்பட்டவரும் பார்ப்பனர்தான்.

சினிமா என்பதை பொழுதுபோக்காக எடுத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்பதெல்லாம் ஏதோ கொலைக்குற்றம் போல பலர் பேசுவதுண்டு. ஆனால் சினிமானு வந்துவிட்டாலே பலதரப்பட்ட விவாதங்கள், மற்றும் குழப்பம்தான். இந்த நடிகர்கள் அரசியல் கருத்தை சொல்ல ஆரம்பித்ததும், உல்கத்தில் எங்கும் இல்லா ஒரு குழப்பமான நிலைமை நம் தமிழர்களுக்கு.

தமிழ் சினிமாவை யாரும் சாதாரண ஒரு "பிக்ஷனாக" எடுத்துக்கொள்வதில்லை. அதுவும் நம்ம ரசிகப்பெருமக்கள் இருக்காங்களே! அவங்களுக்கு பிடித்த நடிகர் என்ன பண்ணினாலும் அது அவங்களுக்கு நல்லாத்தான் தெரியும்! ஒரு சில விமர்சகர்கள் மனசாட்சியே இல்லாமல் ஒருதலை பட்சமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் விமர்சிப்பதையும் பார்க்கலாம்!

சரி தலைப்புக்கு வருவோம். பாலானு ஒரு இளம் இயக்குனர் வந்து இருக்காரு இல்லையா? ஒரு 10 வருசமாக தமிழ் சினிமா உலகில் இருக்கும் இவர் இதுவரை இயக்கி வெளிவந்துள்ள படங்கள் மூணு படம்தான். நாலாவது நான் கடவுள் என்கிற படம்! வெளிவரப்போகிறது. இதில் முதலில் விக்ரம் நடிப்பதாக இருந்தது, பிறகு அஜீத், பிறகு ஆர்யா நடிக்கிறார். இதிலிருந்து அஜீத் வெளியானது பெரிய அதிர்ச்சியை விளைவித்தது. அஜீத் ரசிகர்களுக்கு மன்க்கசப்பு வேறு.

அந்தக்காலத்துல இருந்த ராமநாரயணன், எஸ் பி முத்துராமன் இயக்குனர்கள் போல 2 மாதத்திற்கு ஒரு படம் என்று வெளியிடுவதெல்லாம் மலையேறிப்போச்சு. இப்போ எல்லாம் நம்ம ஆளுங்க ஹாலிவுட் லெவெலுக்கு ஆகிவிட்டார்கள். அதுவும் நம் தமிழ் இயக்குனர்கள். அதாவது 2 வருடத்திற்கு ஒரு படம்தான் இவர்கள் படைப்பில் வெளி வருது. நடிகர்களும் அப்படித்தான், ரஜினி முதலில் படங்களை குறைத்தார். பிறகு கமலும் ரொம்ப குறைத்துவிட்டார். இப்போ இளம் நடிகர்கள் கூட அப்படித்தான் நடிக்கிறாங்க. அந்தக்காலத்து சிவாஜி எம் ஜி ஆர் போலவோ இல்லை கமல் ரஜினி போலவோ இவர்கள் இன்று இல்லை! அதுவும் விக்ரம்லாம் வருசத்துக்கு ஒரு படம்கூட இப்போ வெளியிடுவது இல்லை! இது நம்மில் பெரிய முன்னேற்றம் தான். விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புகூட படங்களை குறைத்துவிட்டார்கள்!


தேனி-போடி பக்கத்திலிருந்து வந்தவர் நம்ம இயக்குனர் பாலா. முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர் இவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியமோ இல்லை பொருளாதாரமோ தடவி தடவிப்படித்தவர். ஆனால் இவருக்குள் ஒரு பெரிய திறமை இருந்ததை யாரும் அன்று உணரவில்லை. பாலு மகேந்திராவிடம் கொஞ்சநாள் இணை இயக்குனராக பணியாற்றி இப்போ இவர் ஒரு சிறப்பான இயக்குனர் என்று பாராட்டப்பட்டு வருகிறார்.

இவர் படங்கள், சேது (விக்ரம் க்கு மறுவாழ்வு கொடுத்த படம்), நந்தா (சூர்யாவை ஒரு நல்ல நடிகனாக்கிய படம்) மற்றும் கடைசியாக வந்த பிதாமகன் (சூர்யா விக்ரம்) எல்லாமே க்ரிடிக்ஸ்களால் பாராட்டப்பட்டவை! இவர் படங்களை நம்ம விமர்சகர்கள் மிகவும் மதிப்பதுண்டு.

இவர் படங்களுக்கு பொதுவாக இசை அமைப்பது இளையராஜா தான். ஏனோதானோனு எடுக்காமல் நிறைய நேரம் செலவழித்து நல்ல படம் கொடுப்பவர் இவர்.

பொதுவாக பாலா படங்களில் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை (இது எல்லோருக்கும் பிடிக்கும்) என்னவெண்றால், வருகிற கதாநாயகன் ஒரு மாதிரி “சைக்கோ” வாக இருப்பான். அவனிடம் ஒரு பயங்கரமான மிருகத்தனம் இருக்கும்!

சேதுவில் பொறுப்பில்லாத விக்ரமிடம் உள்ள மிருகத்தனம். மேலும் அவன் அண்ணனிடம் அவன் நடக்கிறவிதம், பயங்கர எரிச்சலா இருக்கும்! காலேஜ்க்கு போறேன் னு ஊர் சுத்துகிற பொறுக்கிக்கு என்ன திமிர் வேண்டிக்கிடக்கு? இந்த மாதிரி காலேஜுக்குப்போறேன் னு ஊர் சுத்துகிற இளைஞர்கள் நம்ம பாழாப்போன கலாச்சாரத்தில்தான் உண்டு. எருமைமாடு மாதிரி வளர்ந்தவனையெல்லாம் "போய் சம்பாரிச்சு சாப்பிடு", "வெளியே போ"னு அனுப்பிவிடுவார்கள் வெள்ளைக்காரர்கள்! நம்ம ஊரில் மாதிரி இதுகளை வச்சு கொஞ்சுவது இல்லை!

அதேபோல் நந்தாவில் “சூர்யா” ஒரு சைக்கோ பாத்திரம்தான். அதுவும் சூர்யாவுக்கு ஒரு நீல நிறத்தில் விழிகளை மாற்றி ஒரு மனித மிருகம்போலவே காட்டுவார் பாலா. சேதுவில் விக்ரமிடம் உள்ள அந்த வெறியை இந்த சூர்யாவிடமும் பார்க்கலாம். பெத்த அம்மாவே அந்த “மிருகத்தை” கொல்வதுபோல காட்டி முடிப்பார்!

அதேபோலதான் பிதாமகன் விக்ரம் பாத்திரமும்!

இப்போ வரப்போகிற "நான் கடவுள்" ஸ்டில்ஸ் பார்த்தால், ஆர்யாவும் அதேபோல் ஒரு “மிருகம்”தான் என்று தோனுது!

அதிலென்ன தப்பு? தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை, இந்த மாதிரி “வெறிபிடித்த” பாத்திரங்களை உருவாக்கும் பாலாவிடம் ஒரு “மிருகவெறி” இருக்கோ என்கிற ஐயம் எனக்கு! இதைப்போல ஒரு "ஸ்டீரியோ டைப்பிங்" நாயகர்களை மட்டும்தான் இவரால் உருவாக்க முடியுமா? இதைத்தவிர வேற எந்த பாத்திரமும் இவரால் உருவாக்க முடியாதா?

Even in நிறைய Hollywood movies, கொலகாரனைக்கூட ஒரு நல்ல ஹீரோவாக எல்லோராலும் விரும்பத்தக்க ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கலாம். நீங்க சில பாப்புளர் ஆங்கிலப்படங்கள் பார்த்தீங்கன்னா, “Unforgiven” ல Clint Eastwood உடைய, William munny, பாத்திரம் மற்றும் The Godfather ல Micheal and Vito பாத்திரங்களில் கூட ஹீரோக்களிடம் அந்த மிருகவெறிய காட்டமாட்டார்கள்! அந்த ஹீரோக்கள் கொலைகாரகள்தான்!

There are some famous dialogs about killings in these movies,

* It is hell of a thing Killing a man! Take away all he has got and all he is ever going to have!- Clint Eastwood in Unforgiven

* What history has taught us is YOU CAN KILL ANYBODY!- Al Pacino in Godfather-2

ஆனால் பாலாவின் கதாநாயகர்கள் இதுபோல் மனதில் நிக்கும் ஹீரோக்களாக இல்லாமல் வெறும் “மனித மிருகங்களா”த்தான் எனக்கு தோனுது! அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் ஒரு விரும்பத்தக்க கதாநாயகர்களாக இருப்பதில்லை! நான் கடவுள் ஆர்யாவும் இதேபோல்தான் ஒரு மிருகவெறி பிடித்த பாத்திரமாக அமையும் என்று நான் நம்புகிறேன்!

29 comments:

கிரி said...

நல்ல வேளை உங்களுக்கு முன்னாடியே பதிவை போட்டு விட்டேன்.. இல்லேன்னா எதிர்பதிவுன்னு கூறி இருப்பாங்க ஹா ஹா ஹா

வருண் said...

வாங்க கிரி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நான் என் பதிவை பதித்த பிறகுதான் உங்க பதிவை பார்த்தேன்.

நீங்க பெரிய பாலா-இசைஞானி விசிறியா!!!

உங்க "ஆத்துக்கு" அப்புறமா வந்து பார்க்கிறேன் :-)

Anonymous said...

Why does his community come into picture in the review?

வருண் said...

anony: What is your problem? Why should not it come?! I dont understand why it bothers you so much?

கிரி said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நான் என் பதிவை பதித்த பிறகுதான் உங்க பதிவை பார்த்தேன்.//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருண்.

//நீங்க பெரிய பாலா-இசைஞானி விசிறியா!!!//

ஆமாம் நான் பாலாவின் தீவிர விசிறி ஹா ஹா ..ஆனால் இளையராஜாவின் தீவிர விசிறி என்று சொல்ல முடியாது..அவர் இசையில் வந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும், உண்மையை கூறி விடுவேன்.. ..உண்மையை சொன்னாலே அவரை உயர்த்தி கூறுவதை போல உள்ளது, அதனாலே நீங்கள் என்னை ரசிகரா என்று கேட்டு இருக்கிறீர்கள். இசைஞானிக்கு தீவிர ரசிகன் இல்லை, ஆனால் அவரது இசையை ரசிக்க பிடிக்கும் :-)

Anonymous said...

"இசைஞானிக்கு தீவிர ரசிகன் இல்லை, ஆனால் அவரது இசையை ரசிக்க பிடிக்கும் :-)"
neegal kulappal Njaani Kamal Hassanin rasikanaa?:P:P:P

வருண் said...

***இசைஞானிக்கு தீவிர ரசிகன் இல்லை, ஆனால் அவரது இசையை ரசிக்க பிடிக்கும் :-)***

நன்றி, கிரி :-)

வருண் said...

அனானி:

எதுக்குங்க இந்த திரியில் வம்பெல்லாம்?

எம்.எம்.அப்துல்லா said...

//neegal kulappal Njaani Kamal Hassanin rasikanaa?:P:P:P

//

ரஜினி கிரிய பார்த்து இப்படி ஒரு கேள்வியா?? என்னா வில்லத்தனம்

:))))))))))

Sunantha said...

It may be true..but what's your problem? you can't define how others should perceive a cini-hero,movie or life..

If possible understand the psychology of bala and his movies for your self improvement, instead of giving vague/useless statements like 'bala has 'mirugaveri''.

But I feel bala is too much for you..:)

குப்பன்.யாஹூ said...

pls chnage yr screen colr, its irritating to the eyes to read,

just a request.

வாசுகி said...
This comment has been removed by the author.
வாசுகி said...

//neegal kulappal Njaani Kamal Hassanin rasikanaa?:P:P:P//

//ரஜினி கிரிய பார்த்து இப்படி ஒரு கேள்வியா?? என்னா வில்லத்தனம்//

ஹி ஹி.

வருண் said...

***எம்.எம்.அப்துல்லா said...
//neegal kulappal Njaani Kamal Hassanin rasikanaa?:P:P:P

//
ரஜினி கிரிய பார்த்து இப்படி ஒரு கேள்வியா?? என்னா வில்லத்தனம்
:))))))))))

22 January, 2009 8:45 PM***

***வாசுகி said...
//neegal kulappal Njaani Kamal Hassanin rasikanaa?:P:P:P//

//ரஜினி கிரிய பார்த்து இப்படி ஒரு கேள்வியா?? என்னா வில்லத்தனம்//

ஹி ஹி.***

Thanks for your visit, Abdullah and Vasuki!

I guess, anony knows too much about "Rajni Giri" :) :)

வருண் said...

***குப்பன்_யாஹூ said...
pls chnage yr screen colr, its irritating to the eyes to read,

just a request.

23 January, 2009 2:25 AM***

Thanks for stopping by "குப்பன்_யாஹூ". I am afraid I can't do that, Sir.

If you really care to read my scribblings, you could read from bloglines,
http://web.bloglines.com/preview?siteid=18133301

As you could see it has a different background which wont irritate your eyes!

You can also subscribe our blog posts from them. It is a FREE subscription!

I am sorry that I could not fulfill your humble request! :(

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

பாலா மற்றும் கெளதம் மேனன் ஒரே வகையான சைக்கோக்கள் தான் என்பது எனது கருத்து !

வருண் said...

***பாஸ்கர் said...
பாலா மற்றும் கெளதம் மேனன் ஒரே வகையான சைக்கோக்கள் தான் என்பது எனது கருத்து !

23 January, 2009 7:19 AM***

உண்மைதான் பாஸ்கர்! நீங்கள் சொல்வதை என்னால் அழகாக உணரமுடியுது. உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்வதற்கு நன்றி, பாஸ்கர் :)

வருண் said...

***raam said...
It may be true..but what's your problem?***

That (the human animal characters)is my problem and I write about what I feel and my concern here. You can disagree with me :)

**you can't define how others should perceive a cini-hero,movie or life..**

I can not?!!!

Or should not?!

I dont think I defined anything like that.

I was wondering whether he can come with characters without that "animal feelings" in them!

***If possible understand the psychology of bala and his movies for your self improvement, instead of giving vague/useless statements like 'bala has 'mirugaveri''.***

Understand the psychology of Bala? LOL!

Why do you think everybody should think and be like what you think as what one should do? :)

***But I feel bala is too much for you..:)

23 January, 2009 12:43 AM***

May be this post is too much for you! I was only gently criticizing him! :)

ராஜ நடராஜன் said...

கிரி வீட்டுக்குப் போயிட்டு இங்க வந்தா இரண்டு பேரும் வூடு கட்டி விளையாடிறீங்களோன்னு சந்தேகம் வந்துச்சு.ஆனால் கிரி முந்திகிட்டு முதல் பின்னூட்டம் போட்டுட்டார்:)

வருண் said...

***கிரி வீட்டுக்குப் போயிட்டு இங்க வந்தா இரண்டு பேரும் வூடு கட்டி விளையாடிறீங்களோன்னு சந்தேகம் வந்துச்சு.ஆனால் கிரி முந்திகிட்டு முதல் பின்னூட்டம் போட்டுட்டார்:)***

வாங்க நடராஜன்!

ஆமாம், இது ஒரு "கோ-இண்சிடென்ஸ்" தான், நடராஜன்!

கிரி, பாலா விசிறியா இருப்பார்னு நான் நினைத்துப் பார்க்கவே இல்லை! :) :) :)

Sundar சுந்தர் said...

//இந்த மாதிரி “வெறிபிடித்த” பாத்திரங்களை உருவாக்கும் பாலாவிடம் ஒரு “மிருகவெறி” இருக்கோ என்கிற ஐயம் எனக்கு!//

your bias?
//***** வகுப்பை சேர்ந்தவர் இவர்//
so what. how is it relevant?

Shree said...

Just a thought...

If Bala's heroes were portrayed as lovable villains like Clint Eastwood & Al Pacino... then andha characters pole copy aducha madhiri irukum (Nayagan Kamal - God Father-a copy aducha maadhiri).

Bala-vin heroes just lovable chocolate boys pole irundha... oru sarasari padam aagividum.

Pithamagan-le surya's role was lovable and cute... can't deny that.

Ella directorsum ore pole hero-image project pannanumna edhukku namaku ivlo directors? edhukku ivlo scripters?

Manidharil palavagai... Bala heroes oru vagai. Ulagathule idhupole manidhargalum irupaar allava... andha nijathin nizhal dhaan Bala padangal.

enna naan solradhu :)

வருண் said...

***Sundar said...
//இந்த மாதிரி “வெறிபிடித்த” பாத்திரங்களை உருவாக்கும் பாலாவிடம் ஒரு “மிருகவெறி” இருக்கோ என்கிற ஐயம் எனக்கு!//

your bias?
//***** வகுப்பை சேர்ந்தவர் இவர்//
so what. how is it relevant?

28 January, 2009 1:13 AM***

Sundar!

We are all biased. We can only pretend that we are not.:) :) :)

Anyway, I see variety in the "heros" of Ameer who has come up with three movies so far, just like Bala. Ameer is another good director. I am afraid I dont see that with Bala's heros!

His "background" is certainly not relevant to this topic. Since I know his background I mentioned that. I have a habit of mentioning the celebrity's background when I am writing thabout them -if I know it for sure. It is just an information about him what he is, that is all. Moreover BR comes from similar background, he never created any of such "sicko characters".

Thanks for your criticisms! :)

வருண் said...

Shree!

I never said that he does not have originality. He certainly does have that and that is why he is loved by critics.

yes, Surya's character in pithamagan is a fine "lovable one". But, I am afraid you are not going to see such a character in "naan kadavuL"

See my comparison of Bala's heros with Ameer's heros, Shree in the response to Sunder!

அது சரி(18185106603874041862) said...

நிறைய சொல்ல வேண்டி இருக்கு...ஆனா டைம் இல்ல...அப்புறமா சொல்றேன்...

Nilofer Anbarasu said...

//தேனி-போடி பக்கத்திலிருந்து வந்தவர் நம்ம இயக்குனர் பாலா. முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர் இவர்.//
இவர் ஜாதிய பத்தி யாராவது கேட்டாங்களா? ஏன் தேவையில்லாமல் இதெல்லாம் போடுறீங்க.

//இதைப்போல ஒரு "ஸ்டீரியோ டைப்பிங்" நாயகர்களை மட்டும்தான் இவரால் உருவாக்க முடியுமா? இதைத்தவிர வேற எந்த பாத்திரமும் இவரால் உருவாக்க முடியாதா?//
ஏன் பிதாமகனில் வந்த சூரியா கதாபாத்திரத்தை மறந்துட்டீங்கா? இன்னைக்கும் மனதில் நிற்கும் ஒரு அருமையான கேரக்டர்.
//நான் கடவுள் ஆர்யாவும் இதேபோல்தான் ஒரு மிருகவெறி பிடித்த பாத்திரமாக அமையும் என்று நான் நம்புகிறேன்! //
நானும் நம்புகிறேன், ஆனால் அதை ஒரு குறையாக பார்க்கவில்லை.

Anonymous said...

These movies are only stories. You can not call the writer/director psyco.

வருண் said...

Dear Anbarasu!

***Nilofer Anbarasu said...
//தேனி-போடி பக்கத்திலிருந்து வந்தவர் நம்ம இயக்குனர் பாலா. முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர் இவர்.//
இவர் ஜாதிய பத்தி யாராவது கேட்டாங்களா? ஏன் தேவையில்லாமல் இதெல்லாம் போடுறீங்க. ***

As you can see I have mentioned about KaNNadasan's background, Lata Rajnikanth's background as well. This is not the first time.

I am sure some people are interested in knowing that too, but some get irritated.

What to do?

All kinds of people visit, some do care, some dont! :-)

வருண் said...

***Anonymous said...
These movies are only stories. You can not call the writer/director psyco.***

Of course, movies are stories and my statements are just speculations. That is all. :-)