Friday, March 19, 2010

தெய்வமகன் - திரை விமர்சனம்


Fairytales ல இருந்து எல்லாக் கதைகளிலுமே பொதுவாக அழகா இருக்கவங்களுக்குத்தான் இந்த உலகம் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. பார்க்க நல்லா இல்லாதவனும் அழகான பெண்ணை மணக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். கவனித்துப்பார்த்தால் பொதுவாக அழகில்லாதாவர்களுக்கு எதிரி அவர்கள்தான். தன்னைப்போல் உள்ளவர்களை சமமாக மதிக்காமல், இன்னொரு அழகான பெண் அல்லது ஆணைத்தான் மதிக்கிறார்கள், மணக்க விரும்புகிறார்கள்! இந்த அளவுக்கு சின்னப்புத்தி உள்ளவர்கள்தான் மனிதர்கள்! என்பதை தெளிவாகக் காட்டும் படம்தான் தெய்வமகன்!

*******************************************

சிவாஜியின் சொந்தப் படம் இது. சாந்தி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஏ சி திருலோகசந்தர் இயக்கிய படம். இசை எம் எஸ் விஸ்வநாதன்! சிவாஜி, மூன்று வேடங்கள்ல நடிச்சு (சங்கர், கண்ணன், விஜய்) கிளப்பியிருப்பார்!

கதை என்ன? அப்பா சிவாஜி சங்கர், முகத்தில் ஒரு பெரிய விஹாரமான வடு இருக்கும். ப்ளாஸ்டிக் சர்ஜரி, பெண்களின் மார்பகத்தை கவர்ச்சியாக்கவும், நல்லாயிருக்கிற மூக்கை சிறியதாக்கவும் பயன்படும்போது அது "abuse" னு சொல்லலாம், பணத்திமிர்னு சொல்லலாம். அதே சமயத்தில் இது போல் விஹாரமான முகத்தை சரிபண்ண உதவுவதற்கும் பயன்படும் போதுதான் அதை கண்டுபிடித்தவர்கள் முழு திருப்தியடைவார்கள். In other words it serves its purpose or not? ஆனால் சங்கர் காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இல்லை!இருந்தாலும் அதை சரி செய்ய சங்கரிடம் பணம் இல்லை! ஏன்னா, சங்கர் ஏழை! அதனால் சங்கர் தன்னுடைய அந்த விஹார முகத்தால் சிறுவயதிலிருந்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி இருப்பார். நம்ம ஜெயராம் மாதிரி சின்னப்புத்தி உள்ளவர்கள் தமிழ்நாட்டில் ஏகப்பட்டபேர் இருக்காங்க இல்லையா? சங்கர் தன் விஹார முகத்தை வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று உழைத்து பெரிய பணக்காரர் ஆயிடுவார். அவர் புண்பட்ட மனதைப் புரிந்துகொண்டு அவரையும் ஒரு அழகான பெண் (பண்டரிபாய்) மணந்துகொள்வார். இருந்தாலும் அவர் முகத்தில் உள்ள அந்த வடுவால் மனதில் உண்டான வடு இன்னும் மாறாது, காலத்தால் அழியாது.

சங்கருக்கு தன் அழகான மனைவி கர்ப்பிணியானவுடன், தனக்கு அவளைப்போல் ஒரு அழகான குழந்தை பிறக்கனும்னு என்கிற பேராசை! தன் குழந்தை தன்னைப்போல் விஹார முகத்துடன் பிறந்தால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகும்னு பயம். தன் வாரிசு தன்னைப்போல் பிறக்கக்கூடாது என்று நினைக்கவேண்டிய பரிதாப நிலை சங்கருக்கு! ஆனால், என்ன செய்றது? குழந்தை இவரைப்போலவே பிறந்துவிடும்! அதே விஹார முகத்துடன்! இட் இஸ் ஜெனடிக்ஸ்! ஹெரிடிட்டரி! விதி!

ஆனால் சங்கருக்கு தான் அனுபவித்த கொடுமையை தன் குழந்தையும் அனுபவிக்கக்கூடாது என்கிற பிடிவாதம். அதற்காக அந்தப் பச்சைக் குழந்தையை கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டார்! டாக்டரான தன் சிநேகிதன் ராஜுவிடம் (மேஜர் சுந்தர்ராஜன்) குழந்தை இறந்து பிறந்துவிட்டதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, அந்தக்குழந்தையை கொன்றுவிடு என்பார் சங்கர் இரக்கமே இல்லாமல்.

நண்பர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வரும், "உன் முகம் என் முகம்போல் இல்லை அதனால் இதில் வரும் விளைவுகள் உனக்குப்புரியாது" என்று கார்னர் பண்ணி தன் குழந்தையை கொன்றுவிடு என்பார் சங்கர் பிடிவாதமாக. அதன் பிறகு இந்த விசயத்தால் நண்பர்களுக்குள் உறவு முறியும். அதோட சங்கரும் ராஜுவும் பிரிந்துவிடுவார்கள். சங்கர் தன் மனைவியிடம் குழந்தை இறந்தே பிறந்ததாக சொல்லிவிடுவார். சங்கர் மனைவிக்கு கணவனைநம்பியே ஆகவேண்டிய நிலைமை! ஏமாற்றப்படுவார்!

ஆனால் டாக்டர் ராஜு (சுந்தர்ராஜன்) குழந்தையைக் கொல்லாமல் ஒரு அனாதை ஆசிரமத்தில் கொண்டுபோய் பாபா (நாகையா) என்பவரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லுவார். மேலும் குழந்தையைப்பற்றி எந்த விளக்கமும் என்னால சொல்ல முடியாது என்பார். குழந்தையைக் கொடுத்துவிட்டு டாக்டரும் போயிடுவார். அந்த, பாபா, முகம் விஹாரமாக இருந்தாலும் குழந்தையின் இனிமையான அழும்குரலைக்கேட்டு இரண்டாவது "அண்ணன் சிவாஜிக்கு" கண்ணன் னு பேர் வைத்து அவரை வளர்ப்பார்.

சில்வர் ஸ்பூனுடன் பிறந்த கண்ணன், முகம் அழகா இல்லை என்கிற ஒரே காரணத்தால் அனாதை ஆசிரமத்தில் வளருவார். அப்படி வளரும்போது அப்பா சங்கர் நினைத்தது, பயந்ததுபோலவே கண்ணன் கஷ்டப்படுவார், பல இன்னல்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவான். சக மாணவர்களிடம் இருந்து வரும் தாக்குதல்களால் ("bullying")பல இன்னல்களுக்கு ஆளாவார்.

* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலில் கண்ணன் வளர்ந்து பெரியவனாவது போல காட்டியிருப்பார்கள்.

வயதாகிவிட்டதால் கண்ணனை வளர்த்த பாபா மரணப்படுக்கையில் இருப்பார். அந்த நேரத்தில் கண்ணன் இந்த விஹாரமுகத்துடன் தன் உதவியுமில்லாம எப்படி இந்த உலகத்தில் வாழமுடியும்னு என்கிற பயம் வந்துவிடும் அவருக்கு! சாகிறதுக்கு முன்னால கண்ணனைக்கொண்டு வந்து சேர்த்த டாக்டருடைய முகவரியைக் கண்ணனிடம் கொடுத்து, நீ அனாதையில்லை! உனக்கு அப்பா அம்மா யாருனு இவருக்குத் தெரியும்னு சொல்லிவிடுவார். சொல்லி டாக்டர் ராஜுவுடைய விலாசத்தையும் கொடுத்துவிட்டு போயேவிடுவார்.

தன்னை வளர்த்த பாபா இப்படி ஒரு பெரிய உண்மையை சொல்லிவிட்டு இறந்தவுடன் கண்ணன், அப்பா அம்மாவை அறிந்துகொள்ளும் ஆவலில் மேஜரை (டாக்டர் ராஜு) வை அவர் வீட்டில் சென்று பார்ப்பார். பார்த்தவுடனேயே கண்ணன் யாருனு மேஜருக்கு புரிந்துவிடும். அப்படி ஒரு "அழகான" மறக்க முடியாத முகம் கண்ணனுக்கு- அவர் பழைய நண்பர் சங்கரைப் போலவே! இருந்தாலும் தெரியாதுனு சொல்லி சமாளிக்கப்பார்ப்பார். கண்ணன் மிகவும் பலசாலியாகயும் மேலும் தன் தாய் தந்தையை அறிந்துகொள்ளும் ஒர் வெறியுடன் இருப்பார். டாக்டர் ராஜுவை "ஃபோர்ஸ்" பண்ணி அறிந்துகொள்வார்.

தன்னை "அனாதையாக்க" காரணம் என்ன? என்று கேட்கும்போது. கண்ணாடியில் உன் முகத்தைப்பார் என்பார் டாக்டர்! உடனே கண்ணன் சிரிப்பார், சத்தமாக! நான் ஏதோ தகாதமுறையில் பிறந்தேன் என்று நினைத்தேன். ப்பூ இதுதானா காரணம் என்று சிரிப்பார்.
சிரித்துவிட்டு உடனே அம்மா அப்பாவைப் பார்க்கும் ஆவலில் அவங்க வீட்டுக்குப்போவார். அம்மா தூங்கிக்கொண்டிருப்பார். அவரைப்போல் இல்லாமல் அழகாக இருப்பார். தன் அம்மா அழகா இருக்கார் என்று சந்தோஷப்படுவார்.

அதன்பிறகு கண்ணன், தன் தந்தை சங்கரைப் பார்ப்பார். இவரைப்போலவே வடுவுடன் விஹாரமுகத்துடன் தந்தை இருப்பதைப் பார்ப்பார். அவருக்கு ஓரளவுக்கு எல்லாம் புரியும். மறைந்திருந்து திருடன் போல பார்த்துவிட்டு, சங்கர் கண்னனை திருடன் என்று நினைத்து அவரை பிடிக்க முயல்வத்ற்கு முன்னே சிறு காயத்துடன் தப்பி ஓடிவிடுவார் கண்ணன்.

அவருக்கு தன் தாய் தந்தையை பார்த்த சந்தோஷம். டாக்டர்தான் இப்போ "கார்டியன்" போல இருப்பதால், டாக்டர் ராஜுவிடம் போய் தான் தாய் தந்தையை பார்த்துவிட்டதை இந்தப்பாடல் மூலம் சொல்லுவார்.

* "தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை!"

என்கிற டி எம் எஸ் பாடல் வரும்.

சங்கரின் இரண்டாவது அழகான மகனும் இன்னொரு சிவாஜி, விஜய் (?). இந்த விஜய் ரோல்ல ரொம்ப இண்ணொசண்டாக, ரொமாண்டிக்கா ஜாலியான பண்கக்காரப் பையனாக நடித்து இருப்பார் சிவாஜி.

ஜோடி: டாக்டர் ராஜு (மேஜர்)வுடைய அழகான மகள். அவர் யாருமில்லை நம்ம அம்மையார் செல்வி ஜெயலலிதாதான்!

காமெடிக்கு: நாகேஷ்!

சிவாஜி (விஜய்) க்கும் ஜெ ஜெ க்கும் முதலில் ஊடல்,பிறகு காதல் அப்புறம் ஒரு பாடல் வரும். எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு ரொமாண்டிக் சாங் இது :)

* காதல் மலர்க் கூட்டம் ஒன்று வீதி வழிபோகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார்! என்கிற பாடல்.

விஜய், ஜெ ஜெயுடைய தோழிகள் எல்லோரையும் புகழ்ந்து பாடி அவர்களை தன் வலையில் விழவைப்பதாகப் போகும். நான் ரொம்ப ரசித்த பாடல் இது!


அதுக்கப்புறம் படத்தை டி வி டி ல பாருங்க! :)
-------------------------------

This is a serious movie. அபூர்வ சகோதரர்கள் அப்பு வைப்போல் கேரக்டரை பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கண்ணன் கேரக்டரில் சிவாஜி ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள் என்பதை நேற்று வந்த கமல் ரசிகர்கள் எத்தனைபேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.

Sivaji has already done every role any actor can ever dream to do in 50s, 60s and 70s itself and EXCEPTIONALLY WELL too though he has not been awarded a "worthless" national award!

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்னோசண்ட் ஓ.கே.., அதுக்காக வாயில் விரலைவைத்து கடித்துக் கொண்டு இருப்பதுபோல ஓவர் இன்னோசண்ட்டாக ஒரு பாத்திரம் படைத்திருப்பார்களே.., அந்தப் பாத்திரத்தால்தான் ஆஸ்கர் கிடைக்காமல் போனதாமே நிஜமா தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் படத்தின் ரீமேக் கர்ணா பார்த்துவிட்டீர்களா தல.., அதில் அண்ணனுக்கு ஜோடி ரஞ்சிதா தல..,

வருண் said...

வாங்க சுரேஷ்!

* அந்த இண்ணொசண்ட் கேரக்டர் உண்மையிலேயே நீங்க கேலி பண்ணுவதுபோலதான் இருந்தது சுரேஷ்!

காதல்மலர் கூட்டமொன்று பாட்டில் மட்டும் இண்ணொசண்ஸ் தெரியாது :)))

ஆஸ்கரா? அந்தக் கதை எனக்குத் தெரியாதே! :)

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்தப் படத்தின் ரீமேக் கர்ணா பார்த்துவிட்டீர்களா தல.., அதில் அண்ணனுக்கு ஜோடி ரஞ்சிதா தல..,

19 March 2010 12:22 PM***

கர்ணாவா? இருங்க என்னனு பார்த்துட்டு வந்து சொல்றேன் :)))

நாளும் நலமே விளையட்டும் said...

கதை ஓட்டத்தை அப்படியே சொல்லி இருகிறீர்கள்.
நல்லா இருக்கு,


ஏன்பா? பார்த்த படத்தில் இப்படி (சுரேஷ்) ஓட்டைக் கண்டுபிடிக்கிறார்!
ஆஸ்கார் பெற்ற ஆங்கிலப் படப் பாத்திரப் படைப்பு எல்லாமே நம்புற மாதிரியா இருக்கு?
எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் நிறைய பேர் ஒரு மகிழ்வில் வாயில் விரல் வைப்பர்.

\உடனே என் நம்பர் எல்லோரும் அப்படி என சொல்ல வந்து விடாதீர்!

Unknown said...

எண்ணத தியேட்டர்ல ஓடுது ஹாஹாஹ்நல்ல எழுதி இருக்கிரிங்க

அரவிந்த் said...

நண்பரே, நல்ல விமர்சனம், வித்தியாசமாக இருந்தது. பாடல்களைக் குறிப்பிட்ட விதம் அருமை.

மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் பாத்திரம் (அகோரமான/குள்ளமான) என்பதைத் தவிர, வேறெந்த ஒற்றுமையும் அப்பு - கண்ணன் பாத்திரங்களில் எனக்கு தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் தசாவதாரத்தை உதாரணம் காட்டியிருந்தாலும் (மேக்கப்புக்காக) சரி. சிவாஜியை விட கமல் உயர்ந்தவர் என்று யாரோ சொன்னதற்காக நீங்கள் இதைக் கூறியிருந்தால், மன்னிக்கவும். உங்களுக்கும், அவருக்கும் வித்தியாசம் இல்லை. தவறாக இருந்தால், மன்னிக்கவும்.

வருண் said...

**** நாளும் நலமே விளையட்டும் said...
கதை ஓட்டத்தை அப்படியே சொல்லி இருகிறீர்கள்.
நல்லா இருக்கு,


ஏன்பா? பார்த்த படத்தில் இப்படி (சுரேஷ்) ஓட்டைக் கண்டுபிடிக்கிறார்!
ஆஸ்கார் பெற்ற ஆங்கிலப் படப் பாத்திரப் படைப்பு எல்லாமே நம்புற மாதிரியா இருக்கு?
எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் நிறைய பேர் ஒரு மகிழ்வில் வாயில் விரல் வைப்பர்.

\உடனே என் நம்பர் எல்லோரும் அப்படி என சொல்ல வந்து விடாதீர்!***

பகிர்தலுக்கு நன்றிங்க.:)

நண்பர்சுரேஷ் சொல்வதுபோல அந்த ரோல் ரொம்ப சுமார் தாங்க. 3 சோலுக்கும் அழகா வித்தியாசம் காட்டி இருப்பாங்க. இருந்தாலும் இந்த 3 வது ரோலை இன்னும் கொஞ்சம் சாதாரணமாக காட்டியிருந்தால் நல்லாத்தான் இருந்திருக்கும் :)

வருண் said...

***A.சிவசங்கர் said...
எண்ணத தியேட்டர்ல ஓடுது ஹாஹாஹ்

நல்ல எழுதி இருக்கிரிங்க

20 March 2010 6:31 AM***

நன்றிங்க, சிவசங்கர் :)

வருண் said...

*** அரவிந்த் said...
நண்பரே, நல்ல விமர்சனம், வித்தியாசமாக இருந்தது. பாடல்களைக் குறிப்பிட்ட விதம் அருமை.

மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் பாத்திரம் (அகோரமான/குள்ளமான) என்பதைத் தவிர, வேறெந்த ஒற்றுமையும் அப்பு - கண்ணன் பாத்திரங்களில் எனக்கு தெரியவில்லை. ஒரு வேலை நீங்கள் தசாவதாரத்தை உதாரணம் காட்டியிருந்தாலும் (மேக்கப்புக்காக) சரி. சிவாஜியை விட கமல் உயர்ந்தவர் என்று யாரோ சொன்னதற்காக நீங்கள் இதைக் கூறியிருந்தால், மன்னிக்கவும். உங்களுக்கும், அவருக்கும் வித்தியாசம் இல்லை. தவறாக இருந்தால், மன்னிக்கவும்.

20 March 2010 7:09 AM***

உங்க "கன்சேர்ன்"புரிகிறதுங்க, அரவிந்த்.

* கண்ணனும் அப்புவும் குறையுள்ளவர்கள்.

* இருவரும் ஒரு அழகான பெண்ணின் அன்பை காதல்னு தவறா புரிந்துகொள்வார்கள்.

* ரூபினி அப்புவிடம் காட்டும் அன்பையும் ஜெ ஜெ கண்ணன் சிவாஜிடம் காட்டும் பரிவையும் அன்பையும் "கம்பேர்" பண்ணாமல் இருக்க முடியவில்லை.

* சிவாஜி ஜெ ஜெவின் அன்பை காதல்னு நெனச்சு "அழகில்லாதவர்களையும் பெண்கள் விரும்புவாங்களா?" னு சுந்தர் ராஜனிடம் ஏங்கும் ஏக்கமும், அப்பு தன் "நண்பர்களிடம்" இதைப்பற்றி பேசுவதையும் என்னால் இணைக்காமல் இருக்க முடியவில்லை.

Moreover in both situatuions,

* "misunderstanding" and

* that if you are not "good-looking" whatever a beautiful girl expresses to you is nothing but "sympathy".

* in both cases eventually they could never find anybody who really love them for what they are and/or ready to share their life with such individual

are what have been shown there. I seriously think there is so much resemblence in those "situations" there :)

R.Gopi said...

இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் என்ன - அவர் இதே ”தெய்வமகன்” படத்திற்காக கெய்ரோவில் நடந்த பட விழாவில் “ஆஃப்ரோ ஆசியா”வின் சிறந்த நடிகர் என்று விருது வாங்கினார்...

வருண் said...

***R.Gopi said...
இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் என்ன - அவர் இதே ”தெய்வமகன்” படத்திற்காக கெய்ரோவில் நடந்த பட விழாவில் “ஆஃப்ரோ ஆசியா”வின் சிறந்த நடிகர் என்று விருது வாங்கினார்...***

Not just this movie, Gopi, there are so many movies for which he deserved national best actor award. He NEVER could win even one???!!! Then there must have been something wrong>

Julia Roberts and Sandra Bullock have been "given" oscars for best actresses but sivaji could not win a single national award?!!!

கிரி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

இன்னோசண்ட் ஓ.கே.., அதுக்காக வாயில் விரலைவைத்து கடித்துக் கொண்டு இருப்பதுபோல ஓவர் இன்னோசண்ட்டாக ஒரு பாத்திரம் படைத்திருப்பார்களே.., //

அது இன்னொசன்ட் என்பதற்காக இருக்காது.. அது அவருடைய மேனரிசமாக இருக்கும்.

ராஜேந்திரகுமார் said...

அந்த பாத்திரம் நிஜவாழ்க்கையில் காணப்பட்ட பாத்திரம்..ஆம் இயக்குனர் ஶ்ரீதர் தான் அவர்..ஶ்ரீதரது நடை உடை நளினம் பாவனை சிகரெட் பிடிக்கும் ஸ்டைலால் கவரப்பட்ட சிவாஜி அவரைப்போலவே நடித்திருந்தார்.

Sivaji murasu.com said...

இயக்குனர் ஸ்ரீதர் ..எப்படிப்பட்ட இயக்குனர்.அவர் விரல் நகத்தை பெரும்பாலும் வாயில் வைத்திருப்பாராம்.அந்த இன்ஸ்பிரேசன் தான் அது.கண்டிப்பாக ஸ்ரீதர் அப்போது குழந்தையில்லை..