Thursday, March 4, 2010

கடவுள் அயோக்கியனானார்!

பாவம் இந்த நித்யானந்தா கடவுளை நம்பி ஏமாந்ததுல மிகப் பெரிய ஏமாளி நம்ம சூப்பர் ஸ்டார் திரு. சாரு நிவேதிதா அவர்கள்தான். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவர் "இடி" போல தாக்கிய இந்த நித்யலீலையிலிருந்து அவர் கற்றபாடம் அவருக்கு மட்டுமல்ல! நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம்தான்.

நானும் என்னுடைய பதிவுல கடவுளைக் காணமுடியலைனு சொன்னேன். எவன் கேட்டான்? நாந்தேன் சும்மா சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்! நீ குருட்டுப்பயனு எல்லாரும் என்னை திட்டினாங்க! மேலும் என் பதிவைப் பார்த்து கே எஸ் னு ஒரு பக்தர் மற்றும் அறிவுக்கொளுந்து பயங்கர கோவத்துடன் என்னுடன் சண்டைக்கு வந்து "நீ தான் முட்டாள்" என்பதுபோல் திட்டிவிட்டுப் போனார்!

நிதயானந்தா சாதனைகளை நம்பியவர்களில் அவரையும், சாரு நிவேதிதாவையும் என்னால் மறக்கவே முடியாது. தவறு செய்வது மனித இயல்பு. நம்பி ஏமாறுவது மேலும் கடவுளை நம்பி ஏமாறுவது இன்னைக்கு நேத்தா நடக்குது? ஏமாறுவர்களைப் பார்த்து சிரிப்பது மிருகத்தனம் இல்லையா?

அதனால நேற்றைய கடவுள் இன்று அயோக்கினாவது நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடமாக அமையட்டும். Let us learn from our mistakes!

இந்த "கடவுளை" நம்பி ஏமாந்த சாருவுக்கும் நம்ம கே எஸ் என்கிற பகதசிகாமணியும் இந்த அதிரிச்சியில் இருந்து மீண்டு வந்து தங்கள் தமிழ்த் தொண்டை தொடரட்டும்!

No comments: