Monday, March 15, 2010

ஏப்ரல்-2 ல் கார்த்தியின் பையா!



அமீரின் பருத்திவீரனில் அறிமுகமாகி பெரிய ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற கார்த்தி, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் சறுக்கியதென்னவோ உண்மைதான். ஆயிரத்தில் ஒருவன் தெலுகுலயும் ஓரளவுக்குத்தான்ப் போச்சு..மிகப்பெரிய வெற்றியெல்லாம் இல்லை. ஆக மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்திக்கு எந்தவகையில் வெற்றியையோ, பேரையோ பெற்றுத்தரவில்லை.

இப்போது லிங்குசாமியின் "பையா" வில் மறுபடியும் தன்னிலையை உயர்த்த வருகிறார், கார்த்தி. என்னைப் பொருத்தவரையில் லிங்குசாமி ஒரு திறமையான மசாலா இயக்குனர். இ வருடைய * ஆனந்தம், * ரன், *சண்டைக்கோழி மிகப்பெரிய வெற்றிப்படங்கள். எனக்கு பிடித்த, ரசிக்க முடிந்த படங்கள் இவைகள். மேலும் விக்ரமை வைத்து இயக்கிய * பீமா வும் ஓ கே தான். இதை ஃப்ளாப்னு சொல்றாங்க ஆனால் படம் அவ்வளவு மோசமாக இல்லை. ஹரிஸ் ஜெயராஜ் இசையும் நல்லாத்தான் இருந்துச்சு.

இவர் இயக்கிய அஜீத்தின் * ஜீ" யை மட்டும் தோல்விப்படம்னு சொல்லலாம். அதையும் அஜீத் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களானு தெரியலை.

எனக்கென்னவோ கார்த்தி போன்ற ஹீரோவை வைத்து ஒரு நல்ல வெற்றிப்படமாக லிங்குசாமி தரமுடியும்னு முழுமையாக நம்புறேன்.

இந்தப் படத்தில்

ஹீரோயின்: * தமன்னா

இசை: * யுவன் சங்கர் ராஜா

பாடல்கள்:

1) அடடா மழைடா அடைமழைடா அழகா சிரிச்சா

2) என் காதல் சொல்ல நேரமில்லை

3) துளித் துளி மழையாய் வந்தாளே

மூன்றும் யு-ட்யூபில் ஏற்றி இருக்காங்க. ஸ்டில்ஸோட பாடல்களக் கேக்க முடியுது. கேட்பதற்கு பாடல்கள் இனிமையாத்தான் இருக்கின்றன!

I sincerely wish this becomes a super hit movie for Karthi & Tamannah and for Lingusamy! Good luck to the "PayyA" team!

No comments: