Sunday, October 30, 2011

படித்ததில் ரொம்ப ரொம்ப பிடிச்சது!

கல்லூரிப்படிப்பின் போது ஒரு அழகான பெண்ணாகத்தான் கவர்ச்சியாகத் தெரிவாள் "அறிவியல்" .. அவள் அழகில் மயங்கி அருகில் சென்று பார்த்து..இன்னும் பெரிய "மோட்டிவேஷனுடன்" அவளுடன் கலந்து ஆரம்பிக்கும்போது நல்லாத்தான் இருக்கும்.

ஆனால் நாளடைவில் நடப்பதென்ன? ஒருவன் அறியாப்பருவத்தில் கனவுகளுடன் அறிவியல் வாழ்க்கையை எப்படி ஆரம்பிக்கிறான். எப்படியெல்லாம் மிதிபட்டு/அடிபட்டு கடைசியில் இறக்கும்போதுதான் நிம்மதி அடைகிறான் என்பதைத்தான் இந்த கார்டூன்கள் சொல்கினறன.





Source: Chemical and Engineering News published by ACS!

சுதந்திரம் என்பது யாருக்குமே முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதுதான் அறிவியல் வாழ்க்கையிலிருந்து சாதாரண வாழ்க்கை வரை உண்மை. அது பிச்சைக்காரனில் இருந்து பில்கேட்ஸ்வரை உண்மைனு தெரிந்துகொண்டால் மனம்தளராமல் வாழ்வில் நீங்கள் வெல்லலாம்.

வெற்றினா என்ன அது? ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளித்து நிம்மதியாக (அல்கஹால், போதை மருந்து, டாக்டர் அதிகாரப்பூர்வமாக வழங்கியபோதை மருந்து இவைகளுடைய உதவி இல்லாமல்) உங்களால் தூங்க முடியுதா? அதுவே பெரிய வெற்றி தான். பிரச்சினைனா? மன உளைச்சல்தரும்- உடல், மனம் சம்மந்தப்பட்ட- எல்லாமே பிரச்சினைதான்.

புதுசா ஒண்ணும் இந்தக் கார்ட்டூனில் சொல்லப்படவில்லை. அந்தக் காலத்திலேயே சீர்காழி பாடியிருக்கிறார்..

Song: samarasasm ulavum - பாடல்: சமரசம் உலாவும் இடமே
Movie: Rambaiyin kaathal - திரைப்படம்: ரம்பையின் காதல்
Singers: Sirkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Marudhakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: T.R.Pappa - இசை: டி.ஆர். பாப்பா
Year: - ஆண்டு: 1956


சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

1 comment:

Admin said...

உண்மைதான்.. இது கல்விக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களுக்கும் பொருந்தும்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் )