Sunday, February 16, 2014

பாலுமகேந்திராவுக்கு ஒரு ஒப்பாரி சில ஞாபகங்களுடன்!

எனக்கு பாலு மகேந்திராவென்றாலே இளம் வயதில் பரிதாபமாக இறந்த நடிகை ஷோபா ஞாபகம்தான் வருது. அதான் பசி படத்துக்கு ஊர்வசிப் பட்டம் பெற்ற நடிகை! தெரியாதா?. முள்ளும் மலரும் படத்தில் ரஜினி தங்கையாக என்னமா நடித்து இருப்பார். ஏணிப்படிகளாக இருக்கட்டும், இல்லைனா நிழல் நிஜமாகிறாதாக இருக்கட்டும் I have never seen such a casual/natural acting with any other actress!

 http://upload.wikimedia.org/wikipedia/en/8/85/Shoba_actress.jpg

இவர் திடீர் மரணமடைந்தபோது பாலு மகேந்திரா மேலே பலசந்தேகங்கள் எழுந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலு மகேந்திராவுக்கும் இவருக்கும் என்ன உறவு (சினிமா தவிர) என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது! ஆனா இன்னைக்கு விக்கில ஷோபா இவருடைய மனைவினு சொல்லிப் போட்டு இருக்காணுக! ஷோபா இறந்தபோது அவருக்கு வயது  17 னு வேற போட்டு இருக்காணுக!  ஷோபா இறந்தபோது இவரிடம் கேள்விகள் பல எழுப்பி போலிஸ் விசாரனை அது இதுனு  நடந்தது.

தமிழ் சினிமாவில்  இளம் நடிகைகள் இப்படி பலியாவதெல்லாம் ரொம்ப சாதாரணம். சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலச்சுமி, லக்ஷ்மி ஸ்ரி, ஷோபா இப்படிப் போயிக்கொண்டே இருக்கும். இதுபோல் இளம் நடிகைகள் பரிதாபமாகச் சாவதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒப்பாரி வைக்க ஒரு பய இருக்க மாட்டான்! ஆனா 74 வயதுக்கப்புறம் ஒரு ஆம்பளை செத்தான்னா ஆளாளுக்குக் கூடி ஒப்பாரி வைப்பாணுக! வச்சுக்கிட்டே இருப்பாணுக!

இப்போ ஒப்பாரி வைக்கிற யோக்கியன்களிடம், ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் என்ன உறவு? னு  கேட்டால்,  ஷோபா அவருடைய மனைவினு சொல்வார்களா என்பதே சந்தேகம்தான். என்ன பதில் சொல்லுவாணுகளோ! மனைவி என்று சொன்னால் என்னுடைய கேள்விகள்.. Did he marry a minor? Was he a sick person then? Or everything said in wiki are all BULLSHIT?


Born Mahalakshmi Menon
23 September 1962
Died 1 May 1980 (aged 17)[1] Chennai, Tamil Nadu, India
Other names Shoba Mahendra, Urvashi Shoba,[1] Baby Mahalakshmi, Baby Shoba
Occupation Actress
Years active 1966-1971, 1977–1980
Spouse(s) Balu Mahendra (1978–1980) her death
Parents K. P. Menon (Father)
Prema (Mother)

மறைந்த பாலுமகேந்திரா ஒண்ணும் இயக்குனராக தமிழ் சினிமாவில் பெருசா கிழிக்கவில்லை என்பதே உண்மை.  soft porn மாரி சொருகப்பட்ட ஒரு கேவலமான சீன்களுடன் சேர்த்து "பொன்மேணி உருகுதே"னு கோர்த்துவிட்ட ஒருபாட்டுதான் மூன்றாம் பிறை யில் மெயின் ப்ளாட்டை விட நம்ம நாட்டான்களைக் கவர்ந்து அந்தப் படத்தை கமர்ஷியல் சக்ஸஸ் ஆக வைத்தது என்பதே உண்மை.

உன் கண்ணில் நீர் வழிந்தால் னு ரஜினி வைத்து இவர் எடுத்த படம் ஒரு படு குப்பை! நிச்சயம் இவர் ஒரு நல்ல கேமராமேன்! அவ்ளோதான். என்ன நம்ம இயக்குனர் பாலா போல சில "சிக் பர்சனாலிட்டி" களை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார். அவனுக எல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறாணுக!

 அழியாத கோலங்கள்னு ஒரு படம் எடுத்துவிட்டாரு. இதுலயும் ஷோபா தான் ஹீரோயின். என்ன வெடலைப் பசங்க அந்த வயதில் அலைவதுபோல ஒரு மலையாளப் பட ப்ளாட். இதை ஆகா ஓகோனு நம்ம க்ரிட்டிக்களெல்லாம் புகழ்ந்து தள்ளிப்புட்டாணுகளாம். இதே எழவைத்தான் ஷங்கர்  Boys ல எடுத்து க்ரிட்டிகளிடம் சப்பு சப்புனு அறை வாங்கினார்.

பாலு மகேந்திராவின் தனித்துவம் என்னனா பொதுவாக ஹாலிவுட் அல்லது பிற மொழிப்படங்களை தழுவி எடுப்பதில் இவர் நம்ம ஒலக நாயகனுக்கு ஒரு படி மேலேனு சொல்லலாம். இவருடைய முக்கிய காண்ட்ரிப்யூஷன்னு என்னைக்கேட்டால் மகேந்திரன் படங்கள் மற்றும் பல படங்களில் இவருடைய ஒளிப்பதிவுனு வேணா சொல்லலாம்.

ஆமா செத்தால்தான் எல்லாரும் நம்ம ஊர்ல கடவுளாகி விடுவார்களே ? இன்னொரு கடவுள் உருவாகி இருக்கிறார் இப்போது.  ஏன் இப்படியும் ஒப்பாரி வைக்கலாமே சில உண்மைகளைச் சொல்லி?! என்ன? என்ன? தெய்வகுத்தம் பண்ணிப்புட்டேனா நான்? :(

8 comments:

Anonymous said...

உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு தான் எனக்கும் ஏற்பட்டது. பாலு மகேந்திரா தனது முதல் படம் கோகிலாவை 1977-யில் இயக்கினார். கன்னடத்தில் உருவாக்கப்பட்டது. கமல் மோகன் சோபா நடித்திருந்தார். சோபா அப்போது ஒரு வளரும் நடிகை, 15 வயது தான். அவர் தாயாரும் ஒரு சிறியளவிலான நடிகையாய் இருந்தவர். அப்போது தான் பாலுவுக்கும் சோபாவுக்கும் பழக்கமானது. அப்போது பாலுவுக்கு வயது 39. கிட்டதட்ட மகள் வயது சோபாவுக்கு. சோபா ஒரு சிறுமி என்றே சொல்லலாம். சோபாவின் தாயாரின் கொடுமைகளில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு பாலுவின் அறிமுகம் ஆசுவசாம் தந்தது. அங்கிள் என்றே அழைப்பார். சோபாவை காதலிக்கத் தொடங்கிய பாலு, சோபாவை வைத்து மேலும் சில படங்கள் பண்ணினார். தாயாரால் பாலியல் தொழிலுக்கும் நடிப்புக்கும் தள்ளப்பட்ட சோபா பாலுவின் கனிவான பேச்சில் மயங்கியதோடு ஒரு கட்டத்தில் தாயாரோடு கோபித்துக் கொண்டு பாலுவை தேடி வந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு வீடு பிடித்து கொடுத்து சின்ன வீடாக வைத்திருந்தார், இவ்வளவு பெரிய மனுசத்தனம் பண்ணத் தெரிஞ்ச பாலுவுக்கு பொண்டாட்டி என்றால் பீப் பயம், கண்ணசைத்தாலே பூனையாய் அடங்குவார், தன் ஆம்பிள்ளைத்தனத்தை இளம் நாயகிகளிடம் தான் காட்டுவார், அன்புக்கு ஏங்கிய சோபா பாலுவை வெறியாய் காதலித்தார், தான் பாலுவை மணந்து கொண்டதாகவும் அறிவித்தார். ஆனால் பாலு மறுத்துவிட்டார், மழுப்பினார், ஆனால் மைனர் பெண்ணோடு குடித்தனம் நடத்தினார். ஒரு கட்டத்தில் சோபா பாலுவிடம் தன்னை மணந்த விடயத்தை உலகுக்கு அறிவிக்குமாறு வேண்டினார், ஆனால் அதற்குள் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார். அப்போது எம்.ஜி.ஆரின் தயவால் குற்றவாளிகள் தப்பியும் விட்டனர். உலகமும் சோபாவை மறந்து விட்டது. தற்கொலை தான் என வழக்கு மூடப்பட்டது. 1984-யில் சோபாவின் தாயாரும் தூக்கில் தொங்கினார். இந்திய அளவில் உயர்ந்திருக்க வேண்டிய நடிகையை தமிழ் சினிமா இழந்தது. சோபாவின் துயரால் மூன்றாம் பிறை எடுத்ததாக பாலு கூறிக் கொண்டாலும், சோபாவின் பிம்பம் ஒன்று கூட அதில் இல்லை. மூன்றாம் பிறை நாயகிக்கு லவ்ஸ் விட்டுக் கொண்டு திரிந்ததாகவே வட்டாரங்கள் கூறுகின்றன. அத்தோடு பாலுவின் அனேக படைப்புக்கள் ஆலிவுட் தழுவல்கள் தான் அப்படியிருக்க உன்னத படைப்பாளி என்ற பில்டப்பு ரொம்பவே ஓவரு. மூடுபனி படம் கூட ஹிட்ச்காக்கின் சைக்கோவின் ரீமேக். சோபாவை பற்றி நன்கறிந்த ஜார்ஜ் என்ற இயக்குநர் சோபாவின் மரணம் குறித்து லேகாவுடைய மரணம்: ஒரு பிளாஷ்பேக் என்ற படத்தை 1984-யில் எடுத்து சோபாவின் மரணத்தில் சர்ச்சை உள்ளது என அறிவித்தார் ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு தட்டிக்கழித்தது. :( இன்று சோபா உயிரோடு இருந்திருந்தால் 52 வயது தான் இருந்திருக்கும் பெரும் நடிகையாய் பல படைப்புகளில் வலம் வந்திருப்பார் என்பது தான் வருத்தமான உண்மை.

வருண் said...

வாங்க இக்பால் செல்வன்!

முதல் மரியாதை படத்துல போலிஸ்ட்ட அந்த கொலைகார அப்பனை பிடிச்சுக் கொடுத்துப்புட்டு,சிவாஜி பேசுற வசனம்தான் ஞாபகம் வருது.

"உன் அப்பன் யாருனு நெனைக்கிற கொலைகாரப்பய!"

அவன் அவன் செலை வச்சுடுவானுக போல "pedophile" க்கு நல்ல கலைஞன் அதுஇதுனு சொல்லிக்கிட்டு

காரிகன் said...

"இதுபோல் இளம் நடிகைகள் பரிதாபமாகச் சாவதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒப்பாரி வைக்க ஒரு பய இருக்க மாட்டான்! ஆனா 74 வயதுக்கப்புறம் ஒரு ஆம்பளை செத்தான்னா ஆளாளுக்குக் கூடி ஒப்பாரி வைப்பாணுக! வச்சுக்கிட்டே இருப்பாணுக!"
எத்தனை உண்மை! என்ன சுடும் உண்மை!
வருண்,

சொல்ல வேண்டியதை துணிந்து சொல்வது சிலருக்கே கைகூடும். பாராட்டுக்கள். பாலு மகேந்திராவைப் பற்றி தேவையில்லாத புனைவு கலந்த பிம்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமுதவன் தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைக்கும் நான் சில பின்னூட்டங்கள் எழுதியுள்ளேன். அதையே இங்கேயும் சொல்லவேண்டாம் என்பதால் மற்றவை. மூன்றாம் பிறை படமே அவருடைய அதி பிரசித்தி பெற்ற படம். அதுவுமே நீங்கள் சொன்னது படி இளையராஜாவின் முக்கல் முனங்கள் இசையில் வந்த கேடு கேட்ட பொன்மேனி உருகுதே மற்றும் பாலுவின் "ரசனை" யான சில்க் சுமிதா கதாபாத்திரம், மற்றும் இறுதி காட்சியில் கமலஹாசனின் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கையான நடிப்பு போன்ற நாலந்தர சங்கதிகளால் அத்தனை பெரிய வெற்றி பெற்றது. இவர் ஒன்றும் உருப்படியான படங்களை தமிழில் செய்யவில்லை. விக்கியில் ஷோபாவின் வயது 17 என்றுதான் இருக்கிறது. அப்படியானால் பாலுவை pedophile என்றுதான் அழைக்கவேண்டும் போல தெரிகிறது.

கோவி.கண்ணன் said...

நல்ல பதிவு. 100 விழுக்காடு உடன்படுகிறேன்.

http://govikannan.blogspot.sg/2014/02/blog-post_17.html

வருண் said...

தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, காரிகன்.

தொடுப்பிற்கும் பின்னூட்டக் கருத்துக்கும் நன்றி, கோவி!

viyasan said...

எனக்கு பாலுமகேந்திரவைப் பற்றி விமர்சனம் செய்யுமளவுக்கெல்லாம் அதிகம் தெரியாது, ஆனால் அவர் இறந்த பிறகு அவரைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. தன்னைவிட மிகவும் வயது குறைந்த (Underage), ஆண் துணையற்ற, இளம் பெண்களைத் தனது பாலியல் வக்கிரங்களுக்குப் பலியாக்கி விட்டு, அதற்கு காதல், தேவதை, துணைவி, அது, இது என்று அவர் நியாயம் கற்பித்தார் என்பதை வாசித்த போது என்னையறியாமலே அவர் மீது ஒரு அருவருப்பான உணர்வு ஏற்பட்டது.

Packirisamy N said...

அப்பட்டமான உண்மைகள். நன்றி.

Anonymous said...

I agree with you.
செயற்கையான ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதில் நம் பத்திரிகைகள் வல்லவர்கள். Thatstamil -இல் பாலுமகேந்திரா மரணம். "அதிர்ச்சியில் திரையுலகம்" என்று தலைப்பு போட்டிருக்கிறார்கள். இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. 70 வயதுக்கு மேல் மரணம் என்பது இயற்கையான ஓன்று தான். அப்படி இல்லன்னாகூட திரையுலகத்த சேர்ந்தவங்க யாரும் அதிர்ச்சி எல்லாம் அடைஞ்சிருக்க மாட்டாங்க. இந்த காலத்திலேயே இப்படி Hypocrisy-ஐ நம் பத்திரிகைகள் வெளியிடுகின்றன என்றால், அந்த காலத்தில் கற்பனை செய்து பாருங்கள். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியிருப்பார்கள். இப்படி தான் சாதாரணமானவர்களையும் செயற்கையாக பெரிய ஆளாக ஆக்கிவிடுவார்கள் நம் மக்கள்.