Tuesday, July 12, 2016

காவிரி மைந்தன் நெஜமாவே பெரியமனுஷனா? இல்லைனா..

காவிரி மைந்தன் அவர் தளத்தில் இதுபோல் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது இதுவல்ல! வயலண்ஸை தூண்டி விடும் இப்பின்னூட்டத்தை இவர் அனுமதித்ததால் இவரை பிடிச்சு உள்ளேகூடப் போட வாய்ப்பிருக்கிறது. இதுபோல் பின்னூட்டமிடுவது தவறு. அதை அனுமதிப்பது அதைவிட பத்து மடங்கு தவறு.

 KS சொல்கிறார்:
if they would have remove 2 or 3 fingers from the book writer this problem could have good end.
still hope is there.

மட்டுறுத்தல் மண்ணாங்கட்டி வைத்துக்கொண்டு என்ன தளம் நடத்துறாரு இந்தப் பெரிய மனுஷன்?

நான் பெருமாள் முருகனுக்கு எதிராக கருத்துச் சொல்லுபவன். ஆனால் இதுபோல் "பொலிட்டிக்கல்லி இன்கரெக்ட்"  "வயலண்ஸை"த் தூண்டும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வெளியிடும் காவிரி மைந்தன் தரம் தாழ்ந்த ஒரு ஆள் என்பதை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். இதுபோல் பின்னூட்டத்தை அனுமதிப்பது  சட்டப்படி குற்றம்.


10 comments:

வருண் said...

என்னடா இப்படி ஒரு பின்னூட்டத்தையே கா ம தளத்தில் "சோ" பதிவில் காணோம்?? வருண் அவனா தயாரிச்சுவிட்ட பின்னூட்டமா!!! னு நெனச்சுடாதீங்க

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் வெளிட்ட அந்தப் பின்னூட்டத்தை தூக்கி விட்டார்!!!

வேணும்னா "ஜோ-பாரிஸ்"னு பின்னூட்டமிடும் பதிவரிடம் கேட்டு அந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டதை "கன்ஃபர்ன்" பண்ணிக்கோங்கப்பா!

'பரிவை' சே.குமார் said...

ஒருவர் குறித்து எதிர்மறையான கருத்து இருக்கலாம்...
இப்படியான கருத்துக்களை வெளியிடுவது தவறு...
உங்கள் பதிவைப் பார்த்தாவது நீக்கியிருக்கிறாரே... நல்லது.

Unknown said...

இந்த மர மண்டைக்குப் புரியவில்லை... தமிழில்,சொல்லுங்க வருண் ஜி !

வருண் said...

***பரிவை சே.குமார் said...

ஒருவர் குறித்து எதிர்மறையான கருத்து இருக்கலாம்...
இப்படியான கருத்துக்களை வெளியிடுவது தவறு...
உங்கள் பதிவைப் பார்த்தாவது நீக்கியிருக்கிறாரே... நல்லது.***

அகற்றியது அவருக்குத்தான் நல்லது, குமார். அவரை கடுமையாக விமர்சித்தாலும் அவருக்கு நான் உதவிதான் செய்திருக்கேன்.

வருண் said...

***இந்த மர மண்டைக்குப் புரியவில்லை... தமிழில்,சொல்லுங்க வருண் ஜி !***

தமிழ்லயா? :( பெருமாள் முருகனை எழுத முடியாத அளவுக்குக் காயப்படுத்தணும்னு சொல்லி இருக்கிறார், எஸ் கே னு ஒருத்தர். இவர் யாருனு தெரியவில்லை. நம்ம கா மை இதை குப்பைத் தொட்டியில் போடாமல், பிரசுரிச்சு இருக்கிறார். இது மாதிரி எல்லாம் எழுதினால் பிடிச்சு உள்ள போட்டுடுவாங்கனு ரெண்டு பேருக்குமே புரிந்த மாதிரி இல்லை. இப்போ புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்.

Unknown said...

புரிந்தது !அதுவும் விரல்களை வெட்டி காயப் படுத்துவதா ?சா'தீய'வாதிகள் ஆட்டம் போடுகிறார்கள் !

ரிஷி said...

இல்லை வருண். அவர் தளத்தில் கமென்ட் மாடரேசன் பண்ணியிருக்கவில்லை. அப்படிப் பண்ணியிருந்து அனுமதித்திருந்தால் தான் தவறு.

வருண் said...

**நண்ப ஜோஹன் பாரிஸ்,

நான் இங்கு பின்னூட்டங்களை எந்தவித
முன் (அதாவது prior ) மட்டறுத்தலும் இன்றி அனுமதிப்பதால், இதைப் பயன்படுத்திக் கொண்டு,
இந்த வலைத்தளத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்,
படிக்கிறவர்களை உணர்ச்சி வசப்பட வைத்து பதிலெழுத
வைக்க வேண்டும் என்கிற தீய எண்ணத்துடன் ஒரு நண்பர்
KS என்கிற பெயரில் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்.
அவர் யார் என்பதை இதுவரை இல்லாவிடினும் இனி
நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


அவர் எதிர்பார்த்தது போலவே நீங்களும் பதிலுக்கு உணர்ச்சி
வசப்பட்டு ஒரு பதில் பின்னூட்டம் எழுதினீர்கள்.
kS என்கிற போலிப் பெயரில் எழுதிய அந்த நபரின் எதிர்பார்ப்பும் இதுவே தான்.

அவருடைய பின்னூட்டத்தை நான் பார்த்தது,
நீங்களும் பதில் எழுதிய பிறகு தான். முதலாவது
பின்னூட்டத்தை நீக்கிய பிறகு உங்கள் பின்னூட்டம்
மட்டும் இருந்தால் அது –
தொடர்பின்றி இருக்கும் என்பதால் –
அதையும் விலக்கி விட்டேன்.

இங்கே பின்னூட்டம் போட்டு விட்டு, அங்கே தன் வலைப்பதிவில், காவிரிமைந்தன் தனது தளத்தில் வன்முறையை தூண்டுகிறார் என்று
ஒரு பதிவும் போட்டு விளம்பரம் தேடுகிறார்….


இவரைப்போன்ற ஆசாமிகளின் பின்னால் போய்
என் நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதில்
எனக்கு விருப்பமில்லை.

அவரை தெய்வம் / இயற்கை பார்த்துக் கொள்ளும்.

நான் முக்கியமாக இதை இங்கு எழுதுவது,
உங்களுடைய பின்னூட்டத்தையும் சேர்த்து நான் நீக்கி இருப்பதன் காரணத்தை உங்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த வலைத்தளத்தை நீங்கள் தொடர்ந்து படித்து வருபவர்
என்பதால், என்னை நீங்கள் ஏற்கெனவே உணர்ந்து தான்
இருப்பீர்கள். எனவே என்னைப் பற்றிய எந்த விளக்கங்களையும் நான் உங்களுக்கு புதிதாகச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

——————————

மற்றவர்கள், தங்களது வலைத்தளத்தில்
தங்கள் கருத்தை வலியுறுத்தி எழுதும்போது,
அவரவர் தாம் விரும்புவதை தங்கள் தளத்தில்
எழுதும் சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு என்பதை
அவர்கள் உணற வேண்டும்.

நான் இந்த வலைத்தளத்தில் அவர்களுக்கு பிடிக்காத கருத்துக்களை எழுதுகிறேன் என்பதற்காக,

முறைகேடான வழிகளில் எனக்கு கேடு செய்ய முனைபவர்களை அந்த இயற்கையே
பார்த்துக் கொள்ளும்.

விமரிசனம் வலைத்தள நண்பர்கள் என்னை நன்கு
அறிவார்கள். எந்தவித விளக்கமும் கொடுக்க
வேண்டிய அவசியம் இல்லாமலே அவர்களுக்கு
இதெல்லாம் என்ன, ஏன் இப்படி நடக்கிறது
என்பதெல்லாம் நன்றாகவே புரியும்….

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்****

தெய்வம் இருந்தால், K S = வருண் என்று புளுகும் இவரைத்தான் மொதல்ல போட்டுத் தள்ளணும்! எங்கே பார்ப்போம் தெய்வம் இருக்கா இல்லையாணு!

வருண் said...

***ரிஷி said...

இல்லை வருண். அவர் தளத்தில் கமென்ட் மாடரேசன் பண்ணியிருக்கவில்லை. அப்படிப் பண்ணியிருந்து அனுமதித்திருந்தால் தான் தவறு. ***

எல்லாம் சரி.

இவரு ஏதோ நாந்தான் K S என்கிற பேரில் பின்னூட்டமிட்டதாக சொல்லிக்கொண்டு அலைகிறார். காமெடிக்கும் ஒரு அளவே இல்லையா?

அதைவிட பாவம் என்னனா, பகவான் பார்த்துக்குவாராம். யார? "K S" என்கிற பேரில் பின்னூட்டம் போட்ட என்னையாம்? :)))

அப்படியே பகவான்/இயற்கை பார்த்து இருந்ந்தாலும், உண்மை தெரிந்ந்த பகவான் எஅன்ன் செய்வாரு?? அநியாயமாக என்னை கே எஸ் னு சொல்லி புளுகும்/பொய் பிரச்சாரம் செய்யும் இந்த ஆளைத்தான் பகவான் நாலு அறை அறைவாரு! இல்லைனா போட்டுத் தள்ளுவாரு னு சொல்லுங்க!

S.Raman, Vellore said...

பாவம் வயசாயிடுச்சு. அவர் "ரொம்ப" நல்லவர்னு வேற நிறைய பேருக்கு தெரிஞ்சு போச்சு. அதனால வேற பதட்டம்.