இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.
காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை
தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.
**********************
Some internet stuff




Some internet stuff
***************
காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு. ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்? ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.
அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.
இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

4 comments:
சில பேர் சொல்லுவாங்க புனிதமான காதலில் காமம் இருக்காது என்று என்னைப் பொறுத்தவரை காதலில் காமமும் உண்டு ஆனால் அது உப்பை போன்று அளவோடுதான் இருக்க வேண்டும் அதை மீறினால் காதல் கசந்துதான் போகும் எப்படி சுவையான உணவிற்கு சரியான அளவு உப்பு தேவையோ அது போல நல்லதொரு காதலுக்கு உப்பை போல காமமும் வேண்டும்
அவசியமானப் பதிவுதான்.. நன்று.
நல்லதொரு பகிர்வு.
காமமில்லாக் காதல் ஏது. அளவோடு காமம் அதிகக் காதல் சைட் அடிப்பதும் ஸ்டால்க் ஆகுமா
Post a Comment