Friday, December 14, 2018

நட்பு, காதல், அன்பு, பாசம்

என்னைப் பொருத்தவரையில் எல்லாவற்றூக்கும் அடிப்படை சுயநலம்தான்.

உங்க நண்பர், அல்லது தோழியை ஏன் உயர்வா நினைக்கிறீங்க. பொதுவாக அவர்கள் உங்கள மனது நோகவைக்க மாட்டார்கள் உங்கள உயர்வா நினைப்பாங்க. பிறரிடம் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டாங்க. It is all about YOU!

காதல். இதுக்கும் நட்புக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஹார்மோன்களீன் விளவுகள் மேலும் இதில் கலப்பதால் இன்னும் கொஞ்சம் இமோஷ்னாலாக இருக்கும். மற்றபடி, ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இருப்பதற்கு காரணம், எதுவுமே நமக்குக் கிடைக்கவில்லைனா பெருசாத் தெரியும். அது கிடைத்த பிறகு உண்மை விளங்கிவிடுவதால் அது இன்னும் பலமடைவதைவிட பலஹீனமடைவதே இயற்கை. உன் மனதுக்குப் பிடிப்பதுபோல் அவள் இருப்பதால் அவள ரசிக்கிற, அடிப்படையில் சுயநலம்தான் இதிலும்.

அன்பு.. உங்க மேலே அன்பா இருக்கவங்க மேலேதான் நீங்க அன்பா இருப்பீங்க.  கடவுள் உங்கள கைவிடமாட்டார்னு அவர் மேலே அன்பு. கடவுள் மற்றவாவை உங்களவிட நல்லா ட்ரீட் பண்ணீனால் இன்னொரு கடவுள தேடி ஓடுவீங்க. Again, it is all about YOU!

பாசம், தாய்ப்பாசம். ஒரு தாய் அவள் குழந்தையை உலகில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் குழந்தை ஒரு சாதாரண மனிதஜென்மம்தான். தன் குழந்தை, தன் மகன் என்கிற அடிப்படை சுயநலம்தான் தாய்ப் பாசத்திற்கு அடிப்படை.

எல்லாவற்றூக்கும் அடிப்படைக் காரணம், சுயநலம்தான். ஆனால் சுயநலம் என்பது ஒரு அற்ப (கீழ்மையான) விசயமாக நாம் கருதுவாதால், எதையும் உடைத்து பார்த்து உண்மையை உணர மறூக்கிறோம்.

நம்மை நாமே ஏமாற்றீக் கொண்டு, நம் மனம் பாதிக்காமல் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் நம் வாழ்க்கைக்கு அடிப்படையே சுயநலம்தான்.




7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன இப்படி 'படக்'ன்னு சொல்லிட்டீங்க...!

G.M Balasubramaniam said...

பட்டென்று கூறுவது பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஏற்றுக் கொள்வதற்கு கடினம் என்றாலும் உண்மைதான்

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

என்ன இப்படி 'படக்'ன்னு சொல்லிட்டீங்க...!***

பலவகையில் யோசித்துப் பார்த்துதான் சொன்னேங்க. ஒரு சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என்ன செய்றது.

வருண் said...

***G.M Balasubramaniam said...

பட்டென்று கூறுவது பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை***

உண்மைதான் சார். யோசிக்காமலே மேலோட்டமாக வாழ்ந்துவிட்டுப் போவது ஒரு வகையில் நல்லதுதான்.

வருண் said...

***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஏற்றுக் கொள்வதற்கு கடினம் என்றாலும் உண்மைதான்***

வாங்க, முரளி!

மகிழ்நிறை said...

Varun is Varun. Never ever changes as a simple present tense.