கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
நான் இல்லைனு சொல்லுவேன். நீங்க இருக்காருனு சொல்லுவீங்க. அல்லாம்பீங்க, ஜீசஸ்னு சொல்லுவீங்க, அல்லது கிருஷ்ண பரமாத்மானு சொல்லுவீங்க. என்னால உணரமுடியுதுனு சொல்லுவீங்க..என்னோடைய இருக்காரு. அவரில்லாம நாம் ஏது? னு என்னனென்னவோ சொல்லுவீங்க
கடவுள் இருக்காரோ இல்லையோ, ஆனால் ஒரு சிலருக்கு கடவுள் தேவைப் படுகிறார் என்பது மட்டும் ஒத்துக்கொள்ள வேண்டியது. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பரவாயில்லை ஒரு சிலருக்கு கடவுள் அவசியம் தேவைப் படுகிறார்.. இல்லைனா அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவத்தைக் கழுவ முடியாமல் கிறுக்குப் பிடிச்சு அலைவார்கள்.
அவங்களூக்கு தேவைப் படுது அவரை வச்சுக் கொஞ்சட்டும் உனக்கென்ன?ணு போய்விடுவது நல்லதுனு யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
உங்கள் உயிரின் விலை இன்றும் வயதான பிறகும்..
முகநூலில் ஒரு சிலர் டெய்லி எதையாவது "கோட்" பண்ணூறாங்க. அப்படி வாழனும். இப்படி வாழனும். இது பாவம். இது துரோகம் இத்யாதி இத்யாதி
ஆனால் ஊருக்கு உபதேசம் என்பதென்னவோ சரியாகத்தான் இருக்கிறது. மற்றவர்கள நெனச்சுத்தான் இதெல்லாம் செய்றாங்க. தன் முதுகு தனக்குத் தெரியாது என்பார்கள். இவர்கள் யோக்கியதையைப் பார்த்தால் படுகேவலமாகத்தான் இருக்கு..
எனக்குத் தெரிய சொந்தத்தில் ஒருத்தர், ஏதோ லூசு மாதிரி ஊருக்கெல்லாம் சுமங்கலியாக சாவது பெருமை, கணவனுக்கு முன்னால போயிடனும்னு சொல்லிக்கிட்டு இருக்கும். அவரவருக்கு சாவு வரும்போதுதான் சாக முடியும். இதென்ன சுமங்கலியா சாகனும்னு உளறல்னு தோனும்..இப்போ வயதான காலத்தில் அவர்கள் கணவன் படுத்த படுக்கையில் இருக்கிறார். அவருக்கு போதுமான மருத்துவச் செலவு செய்வதில்லை, புலம்பிக்கொண்டே கவனித்துக் கொண்டு இருக்கு. காரணம் என்னனா? கைல காசு இல்லை, வட்டிக்கு வாங்கி எவ்ளோ செலவழிக்க முடியும்? காசு இல்லாமல் எல்லாம் இல்லை. அவருக்கு செலவழிக்க காசு இல்லை. It is the question of priority. நான் பார்க்கும் முதல் கேசு இல்லை இது. அதென்னவோ சம்பாரிச்சுப் போடும்போது நல்லாத்தான் புருஷனைக் கொஞ்சுறாங்க. வயதான குழந்தையானதும் எப்போ போய் சேருவாங்கனுதான் பிள்ளகளும், "அன்பு" மனைவியும் கணக்குப் போடுறாங்க. வயதான பிறகு ஒருவர் உயிருக்கு விலையும் வைக்கிறார்கள் என்பது பரிதாபம்.
வயதான பிறகு இவர்கள் தனக்கென்றூ சேர்த்து வைக்காமல், மனைவி பிள்ளகளுக்கு எல்லாத்தையும் கொடுத்து விடுறாங்க. பின்னால் நோய்வாய் படும்போது இவர்களுக்குத் தேவையான மருத்துவச் செலவுக்கு அவர்கள் யோசிக்கிறாங்க
அவர்கள் உயிருக்கு ஒரு விலை வைக்கிறாங்க. அதாவது ஒரு லட்சம் மேலே செலவழிக்க முடியாது. 10 லட்சம் மேலே செலவழிக்க முடியாது. 50 லட்சம் மேலே செலவழிக்க முடியாதுனு. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விலை இருக்கிறது.
சரி, சுமங்கலியா சாகனும்னு சொன்ன? ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுவியே போய் சேர வேண்டியதுதானே அவருக்கு முன்னால? தன்க்குனு வரும்போது அந்த உபதேசம் எல்லாம் பறந்து போயிடுச்சு. நல்லாத்தான் வாயில வருது.
இதெல்லாம் கதைகளீல் படிப்போம். இப்போ எல்லாம் நம் கண் முன்னாலேயே நிஜத்தில் பார்க்க முடிகிறது. பேசுறது ஒண்ணு செய்றது இன்னொன்னு என்று.
மனிதர்கள் மிக மிக சாதாரணமானவர்கள்தான் னு பல சந்தர்ப்பங்கள்ல திரும்பத் திரும்ப சொல்லி சொல்லி போர் அடிச்சுப் போச்சு.
புதிய வியாதி எனக்கு?
ஒருத்தர் நேத்து வந்து காஷ்மீர் பிரச்சினை பத்தி பேச ஆரம்பித்தார். எப்போவாவதுதான் வருவாரு. நண்பர்னு சொல்ற அளவுக்கு அவரைத் தெரியாது. சரினு சொறதை கேட்டுட்டு இருந்தேன். இப்போ எல்லாம் எல்லாருமே ஒப்பீனியனேட்டட் ஆகத்தான் இருக்காங்க. நானும்தான்.
இவருக்கு இசுலாமியார்கள் மேலே எத்தனை அன்புனு எனக்குத் தெரியும். இதுதான் நியாயம் என்றார். இவருடைய நியாயங்கள் எல்லாம் எனக்கு சரி வராது. சரி இது, இந்த காஷ்மீர் சட்ட திட்ட மாற்றியமைப்புதான் சரியான முடிவுனு சொன்னாரு. பி ஜே பி யை பாராட்டினார். சரி நல்லதுங்க னு சொல்லீட்டேன்.
அதோட அவரும் நிறுத்தி இருக்கலாம்
அதோட விடல. மறுபடியும் அது ஏன் சரினு ஒரு விளக்கம். இப்படியே எனக்கு கொஞ்சம்கூட இண்டரெஸ்ட் இல்லாத டாபிக் பத்தி பேசிக்கிட்டு இருக்கிறார். இது மட்டும் இல்லை. இவர் பேசுற எந்த டாப்பிக்குமே எனக்கு போர் அடிக்கும். வர வர "நண்பர்கள்" எல்லாம் இப்படித்தான் இருக்காங்க.போர் அடிக்கிறாங்க,
சிறூவயதில் என் நண்பன் ரஹீம் பேசினான்னா நாள் கணக்கா கேட்கலாம். சிரித்துக் கொண்டே இருக்கலாம். இக்னோரண்ஸ் தான் வாழ்க்கையில் இனிமை தருகிறது.
இப்போ எல்லாம் 99% எதிரும் புதிருமாகத்தான் இருக்காங்க. பிரச்சினை என்னனா இதுபோல் எனக்கு இஷ்டமில்லாத டாபிக் பத்தி பேசும்போது அதைத் தொடர்ந்து கவனிக்க, கேட்க எனக்கு பொறுமை சுத்தமாக இல்லை. நெஜம்மாவே தலை சுத்துது. நான் சொல்லிப் பார்த்துட்டேன். எனக்கு இந்தியா பாலிடிக்ஸ் எல்லாம் ஆர்வம் இல்லைங்க, அவர்களை யாரும் காப்பாத்த முடியாதுனு. உடனே, இல்லை நான் திரும்பிப் போகலாம்னு இருக்கேன்னு அதுக்கும் ஒரு பதில் வைத்து இருக்கார். அப்போ உங்கள மாதிரி திரும்பிப் போகனும்னு உள்ள மனநிலையில் உள்ளவர்களிடம் இது பத்திப் பேசுங்கனு எடுத்துச் சொல்லவா முடியும்? பிடிக்காத டாபிக், சப்ஜெக்ட், தேவையே இல்லாத லெக்ச்சர் எல்லாம் கேட்டால் தலை சுத்துது.
நமக்குப் பிடிச்சதை படிக்க, கத்துக்கவே நேரமில்லை. ஜெனடிக்ஸ் படிக்கலாம். மாலிகுலர் பயாலஜி படிக்கலாம். எத்தனையோ இன்டெரெஸ்டிங் டாபிக்ஸ் இருக்கு. இதெதுக்கு நாகரீகம் (பொலைட்னெஸ்) என்கிற பேரில் தலை சுத்துற விசயத்தை எல்லாம் கேக்கனும் னு தோனுது.
ஒருவர் 1 மணி நேரம் பேசி என்ன முடிவா சொல்லப் போறார்னு ஒரு நிமிடத்திலேயே புரிந்துவிட்டால் மீதி உள்ள 59 நிமிடங்களும் எனக்கு நரகம்தான். உங்களூக்கு எப்படினு தெரியலை. இது எனக்கு வந்துள்ள வியாதி. ஒன்னு மட்டும் உறூதியாகச் சொல்லலாம், வர வர அமெரிக்கர்களைவிட மோசமாகிவிட்டேன். சுயநலம். பிசினெஸ் மைண்டெட் ஆக ஆகிவிட்டேன்.
1 comment:
தன்னைப்பற்றியே தான் உணர வேண்டிய வியாதி மிகவும் நல்லது - மனதிற்கும் உடம்பிற்கும்... தொடர்க...
Post a Comment