"வாங்க சுனிதா! எப்படி இருக்கீங்க?"
"ஹா ஹா ஹா..நல்லா இருக்கேன். நீங்க?"
"வாங்க போங்கணு" சொல்வதால் உங்களிடம் இருந்து ரொம்ப தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு. ஏன்னு தெரியலை.."
"ஹா ஹா ஹா"
"எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்கவா?"
"கேளுங்க!"
"இல்ல இப்போல்லாம் இந்த மீ டூ காலத்தில் கணவன் மனைவி தனித்தனியா பாங்க் அக்கவுண்ட் வச்சிக்கிறாங்க இல்லை?'
"ஆமா, அதுகென்ன?"
"இல்லை, சப்போஸ் நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால், நம்ம அக்கவுண்டும் அப்படித்தானா?"
"ஆமா. அதிலென்ன சந்தேகம்?"
"இல்லை ஏன் அப்படி? நாளைக்கு நான் காண்டம் வாங்கினால், அதுக்கு பாதிக்காசு நீங்க தந்திருவீங்களா? இல்லை அது என் பணத்தில் தான் வாங்கனுமா?"
"ஹா ஹா ஹா! அதைப் பத்தியெல்லாம் யோசிக்கல?"
"அப்போ எதைப்பத்தி யோசிச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? இல்லை உங்க தோழிகள் எல்லாம் பண்றாங்கனு நீங்களும்?"
"இல்லை நான் உங்களையோ, நீங்க என்னையோ எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கக் கூடாதில்ல? நல்லதுதானே?"
"ஆக, ஒருவரை ஒருவர் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிடக் கூடாது. ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் செலவழிப்பது இன்னொருவருக்கு எரிச்சலாயிருக்கும். அதனால் செப்பரேட் அக்கவுன்ட்?'
"அப்படித்தான்"
"இல்லை அவ்வளவு நம்பிக்கை இல்லாதவனை எதுக்கு கல்யாணம் செய்யனும்? வெறும் செக்ஸ்க்காகவா? பண விசயத்திலேயே நம்ப முடியலைனா.. "
"ஆமா உனக்கு இப்போ என்ன அஜெண்டா?"
"என்ன மரியாதை குறையுது. நான் ஒழுங்கா "வாங்க போங்க"னு சொல்றேன். நீங்கள் ஏன் இப்படி அநாகரீகமா .. சுனிதா?. சரி எதுக்கு இத்தனை நம்பிக்கை இல்லாதவனை கல்யாணம் செய்யனும்? செக்ஸ்க்காகவா?"
"ஆமா, அதுக்குத்தான்"
"இல்ல, ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்தில் செக்ஸ் வேணும்னு தோனாது. ஒரு சில நேரம் உங்களுக்கு ரொம்ப தேவைப்படும். ஒரு சில நேரம் எனக்கு ரொம்ப தேவைப்படும். அந்த மாதிரி சூழலில், செக்ஸ் தேவைப்படுறவங்க எதுவும் காசு கொடுக்கணுமா?"
"வில் யு ஷட் த ஃபக் அப்!!!"
"ஆமா திட்டும்போது மரியாதையா திட்டுறது இல்லையா டார்லிங்?"
"ஷட் அப்!!!"
"இப்படிலாம் கோவிச்சுக்கிட்டா எப்படி? பொறுமையாக பதில் சொல்லுங்க சுனிதா"
"நீ வேணும்னே என்னை "அன்னாய்" பண்ணுற!"
"நான் உண்மையான என் சந்தேகத்தை கேட்கிறேன். சப்போஸ் யு கெட் எ ப்ரமோஷன் அன்ட் கெட் எ 20% ரைஸ், உங்களுக்காக நான் சந்தோஷப் படனுமா? எதுக்கு? Why should I care?"
"இதைப்பத்தி இப்போ பேச இஷ்டமில்ல? இதெல்லாம் உன்னை கல்யாணம் பண்ணினால்த்தானே?"
"இல்லையே. நீங்க யாரைக் கல்யாணம் பண்ணினாலும் இதுபோல் ஒரு சூழல்தானே உருவாகும்?"
"இதைப்பத்தி பேச இஷ்டமில்லைனு சொல்றேன் இல்லை?"
"ஓ கே டார்லிங். நீ கோபத்தில் ரொம்ப அழகா இருக்க"
"சரி கொஞ்ச நேரம் எங்கேயவது போய்த் தொலை!"
-தொடரும்
2 comments:
x y ஆரம்பமாகி விட்டதா...?
வாங்க தனபாலன். காலங்காலமாக நடப்பது இதுதானே? :)
Post a Comment