Showing posts with label அனுபவம். சமூகம். Show all posts
Showing posts with label அனுபவம். சமூகம். Show all posts

Saturday, August 17, 2013

பதிவுலகில் புதுசா ஒரு வருண் வந்து இருக்கிறார்!

ஆமா, வருண் என்கிற பேரை நீ என்ன "பாட்டண்ட்" பண்ணி வச்சிருக்கியா? என்ன? மூடுடா! னு சொல்றீங்களா? "வந்துட்டான் வருண் னு இன்னொருத்தன் வந்திருக்கான்!"னு சொல்ல னு நீங்க  எரிச்சலடையிறது தெரியுது. போலி டோண்டுவை வளர்த்துவிட்டவங்க தானே  நீங்க எல்லாம்?  நம்ம தமிழர் களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? உங்களைப் பத்தி தெரிந்தாலும் என் பெயரில் பின்னூட்டங்கள் வருவதால் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?

பதிவுலகில் பல பதிவர்களுக்கு இதுபோல் போலி ஆட்கள் அப்பப்போ வருவாங்க, போவாங்கனு தெரியாது. அதனால நான் சொல்ல வேண்டியதை அவர்களுக்காகவாவது சொல்லணும்.

பதிவுலகில் புதியவர்கள் கவனத்திற்கு..

வருண் என்கிற இந்தப் புது ஐ டி ல அந்த "வின்னி த பூ" படம் இருக்காது!


 My Photo

இந்த வருண் ஐ டி யை நீங்க க்ளிக் செய்தால் உங்களை இந்த வலைதளத்திற்கு  அழைத்து வரும். அதனால, அதுவும்  "இதே வருண்" தான் போல, ப்ரஃபைல் படத்தை மாத்திட்டாரு போலனு ஒரு சிலர் நினைக்கலாம். அதனாலதான் சொல்றேன்.

அப்புறம் இந்த புது "வருண்" என் பின்னூட்டங்களைவிட நாகரிகமாகவும் பின்னூட்டம் இடலாம். என்னைவிட உயர்தரமானவராகவும் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. அதனால அவரை நான் இகழ முடியாது. என் பிரச்சினை, அவர் ஐ டி யை க்ளிக் செய்தால்  உங்களை என் வலைதலத்திற்கு கொண்டுவந்து விடுவதுபோல் செய்து  அவர் என்னைப் போல் நடிப்பதுதான்.

பின்னூட்டம் வேணும்னு ஏங்கிக்கொண்டு இருக்கவங்க, இவர் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். இவரை நாகரிகமாகவும் நடத்தலாம். அதெல்லாம் அவரவர் இஷ்டம். அவரவர்  சுதந்திரம். அவரவர் உரிமை. ஆனால், அவர் கருத்தை என் கருத்தாக மட்டும் தயவு செய்து எடுத்துக்காதீங்க.

ஜெயதேவின் பதிவில், சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!! திரு அமுதவன் பற்றி ஒரு கருத்தை சொல்லியிருக்காரு நம்ம புது வருண்.

சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்
Reply
 இதுல திரு அமுதவனை அவமானப்படுத்துவதுபோல் ஒரு கருத்தை நான் சொல்வதுபோல "அந்த வருண்" எடுத்து வைத்துள்ளார். இதுபோல எங்க எல்லாம் கருத்தைச் சொல்லி இருக்காருனு தேடிக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் இல்லை.

நிற்க, நான் இதைவிட பல மடங்கு அநாகரிக பின்னூட்டமிடுவதுண்டுதான். நான் பெரிய யோக்கியன்னு சான்றிதழ் எல்லாம் என்னால் உங்களுக்குக் காட்ட முடியாது! ஆனால் குதற்கமான ஒரு கருத்தை என் கருத்தைப் போல  முன் வைக்கும் விஷமி இவன் னு எல்லாருக்கும் புரியுமா? என்னனு தெரியவில்லை.

Please understand that I am not responsible for this venomous guy's responses. I am not going to tell you how you should treat him. It is up to you! Thanks, folks.