Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, September 24, 2019

எது சரி? எது தவறு?

எனக்குத் தெரிய ஒரு ஃப்ரெண்ட் சொல்லுவான், சரி, தவறல்லாம் அர்த்தமற்றது. காரணம்? அவன் வாழ்க்கையே வேடிக்கையானது. ஹைக்கிளாஸ்ல பிறந்த அவன் வாழ்க்கை பயங்கர காம்ப்லெக்ஸானது. அப்பா ஒரு கல்லுரியில் (ஐ ஐ டி) பெரிய பேராசிரியர். அம்மாதான் பிரச்சினை. அவங்க அப்பா அம்மாக்குள்ள பிரச்சினை. பிரிந்துவிட்டார்கள். ஆனால் முறைப்படி விவாக்ரத்தெல்லாம் செய்தார்களானு தெரியலை.

அவனுடைய அம்மா பத்தி இஷ்டத்துக்கு என்ன என்னவெல்லாமோ சொல்லுவான். எனக்கு புதிய அனுபவம் அது.  எனக்கு அவன் சொல்றதை எல்லாம் கேட்டால் உண்மையா இல்லை சும்மா கதை விடுறானானு தோனும். எனக்கு அதுபோல் பிர்ச்சினை இல்லாததால் என்னால புரிந்துகொள்ளவே முடியாது. என்னடா சொல்ற? உன் அம்மாடா அவங்க?னு திரும்பத் திரும்பச் சொல்லுவேன்.

ஜானகிராமன் கதைகளில் வரும் ரங்கமணி, அலங்காரம், அம்மனி எல்லாம் அவன் அம்மாவை விட ரொம்ப சாதரணமான கேரக்டர்கள். அவன் அப்பாவுடந்தான் வாழ்ந்தான். அப்பாவே அம்மாவை வில்லனாக்கிட்டாரா? என்னனு விளங்கவில்லை.

பிரச்சினை என்னனா, நம்ம நார்மல் அம்மா அப்பாவுக்குப் பிறந்து, சாதாரண வாழ்க்கை வாழும்போது, இவன் சொல்லும் இதுபோல் அம்மா கேரக்டர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. கற்பனையே செய்ய முடியவில்லைனா பிரச்சினைதான். என்னுடைய இயலாமைனு கூட சொல்லலாம்

எனிவே, if someone life is fucked up like this, அவர்கள் நியாய தர்மங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதில்லை. ஊர் உலகில் உள்ள அம்மாக்களை அவன் சரியாகப் புரிந்து கொள்வானா? என்கிற சந்தேகம் எழும் எனக்கு. I have seen people, if their life is fucked up, they will theorize that the whole world is like that only. I think such theories help them feel better. திருமணம் பற்றிப் பேசும்போது நம்ம மேதை கமலஹாசன், திருமணங்கள் உடைகின்றன, திருமணம் அர்த்தமற்றதுனு சொல்வதை நீங்க கவனித்து இருக்கலாம். Because he fucked up he blames the "marriage" rather than himself. Some people like to blame someone or something whenever they fuck up. Kamalahaasan is the best example for that!

 நான் பார்த்தவரைக்கும் பலர் எதைப்பத்தியுமே யோசிப்பதில்லை. இதுபோல் வித்தியாசமான அம்மா பத்தி பேச ஆரம்பித்தால், நமக்கென்ன?  இது அவன் பிரச்சினைனு போயிடுவாங்க. பல ஆண்டுகளுக்குப் பிறகும் எனக்கு மட்டும் இன்னும் அவன் அம்மாவைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
இப்போ உள்ள அமெரிக்க கலாச்சாரத்தில் அது போல அம்மாக்களை பார்க்க முடிகிறது. ஆனால் இன்னொரு கலாச்சாரத்தில் பார்க்கும்போது அது ஒன்னும் பெருசா தோனமாட்டேன் என்கிறது.

 என் நண்பன் என்ன ஆனான்னு தெரியவில்லை. இப்போ எல்லாம் ஒரு காலத்தில் நண்பன், ஒரு காலத்தில் தோழினு தான் பலர் இருக்காங்க. காலப் போக்கில் நம் வாழக்கையில் அவர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் நமக்கும் சம்மந்தமில்லாமல்ப் போய்விடுகிறது. அவர்களிடம் உறவாடிய ஒரு சில நினைவுகள் மட்டும் நம்மிடம் தேங்கி விடுகிறது. அதை எப்போதாவது நாம் அசை போடுகிறோம்..

Monday, July 22, 2019

பிக் பாஸ்! தமிழர்கள்னு ஒரு உறவு?

ஒரு வருடம் முன்னால எனக்கு திடீர்னு ஞானோதயம் வந்தது. எந்நேரமும் என்னப்பா சீரியல்னு இந்த இழவையெல்லாம் போட்டு கொல்றானுகனு விஜய் சன் போன்றவற்றை திட்டிக் கொண்டே இருந்தேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நம்மதானே காசு கொடுத்து இந்த இழவையெல்லாம் சப்ஸ்க்ரைப் பண்ணுறோம்?னு இந்த மரமண்டைக்கு புரிய ஆரம்பிச்சது, அதோட சன், விஜயோட சேர்த்து பிக் பாஸையும் புதை குழிக்கு அனுப்பியாச்சு.

இப்போ இந்த தமிழ் சேனல்கள் இல்லாமல், பொழுது போகாமல் கஷ்டப் படுறேனா?  உள்ள வேலைகளைப் பார்க்கவே நேரத்தைக்காணோம்? நல்ல வேளை தப்பிச்சோம்னு இருக்கு.

இதுபோல் பல பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் (நான்) பல நேரங்களில் யோசிப்பதில்லை. சும்மா தேவையில்லாமல் நமக்குப் பிடிக்காததை  பல நேரங்களில் கட்டி அழுகிறோம்.

பிக் பாஸை ரசித்துப் பார்ப்பவர்களை எல்லாம் விமர்சிக்கிறது தவறு. அவர்கள் ரசனைக்கு அது தீணியாக இருந்தால்.. Why not?

-------------

மொழிக்கு அப்பாற்பட்டு  நட்புறவுக்கு ஒத்த சிந்தனைகள் மிக  மிக அவசியம்

புதிதாக ஒரு தமிழர் அறிமுகமானார். புதியவர் என்பதால் முதலில் கொஞ்சம் உதவி செய்தேன். ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டார். அவரோட பேசும்போது கொஞ்சம் கொஞ்சம் அவர் ரசனை, வீக்னெஸ், ஆசை எல்லாம் புரிய ஆரம்பித்தது. ஒருவரோட பழகனும்னா கொஞ்சமாவது நம் ரசனை, நாம் எதை முக்கியம்னு நினைக்கிறோம், நம் பொழுதுபோக்கு இதில் ஏதாவது ஒத்துப் போகனும். எல்லாமே எதிரும் புதிருமாக இருந்தால், தமிழராக இருந்தாலும் கட்டி அழறது கஷ்டம்- எனக்கு. அது தமிழராக இருந்தாலும் சரி, உங்க நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரி. யாருக்கு வேணா நம்மால ஆன உதவி ஓரளவுக்கு செய்யலாம், ஆலோசனை சொல்லலாம். ஆனால் உக்காந்து ஒரு 10 நிமிடம் ஒருவருடன் பேசனும்னா, கொஞ்சமாவது ரசனை, சிந்தனைகள் ஒத்துப் போகனும். நான் புரிந்து கொண்டது, மேற்படியாரின் ரசனை என் ரசனைக்கு கம்ப்ளீட் ஆப்போசிட் என்பது. என்னடா இது வம்பாப் போச்சுனு கொஞ்ச நாளில் நான் ஹலோ வோட அவரிடம் இருந்து ஒதுங்கிக்கிட்டேன். பார்த்தாலும் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவேன். பாவம், அவருக்கு என்னனு புரியமாட்டேன் என்கிறது. என்னடா இவன் நல்லா உதவிலாம் செஞ்சான். இப்போ என்னடானா ஒதுங்கி ஓடுறான்னு குழம்புகிறார். நேரிடையாக சொல்லிடலாம்தான். இல்லங்க உங்க ரசனையும், உங்க சிந்தனைகளும் வேற மாதிரி இருக்குனு சொல்லிடலாம்தான். இதை எல்லாம் சொல்லித்தான் அவர் தெரிஞ்சுக்கனுமாக்கும்? இதெல்லாம அவரா புரிஞ்சுக்கனும். For me, it is very important. கொஞ்சமாவது சிந்தனைகள் ஒத்துப் போகனும் அப்போத்தான் யாருடனும் கொஞ்சமாவது பழக முடியும். மற்றபடி எனக்கு அவர் மேலே எந்தக் கோபமோ, அல்லது வருத்தமோ கிடையாது. என்னால அவரோட பழக முடியாது.  நான் என்ன சொல்றேன்னா, அவர் அவர் சிந்தனையை ஒத்து சிந்திக்கும் நண்பர்களுடன் பழகனும். This is a big world. He can find many people who have the same "wavelength" as "his". என்னை விட்றனும்.

 Related image

அவரிடம் இதை சொல்லப் போவதில்லை. உங்களிடம் ஏன் சொல்றேன்னா.. நீங்களும் "அவரைப்போல்" யாரு உயிரையாவது வாங்காதீங்க னு சொல்லத்தான்.

 Image result for friends with opposite taste


----------



Sunday, August 3, 2014

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

ரூபாவா? அவளா இவள்! அவளேதான்! இல்லையே அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து ஐந்து வருடமாகிறது! நண்பன் பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை...

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் ராமகிருஷ்ணனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான்! அவன் உலகில்! மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது! நிதர்சனம் அதுதான்! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி, நம் மனதை நாமே மனச்சலவை செய்து வாழும் போலி வாழ்க்கை!

  அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவள்தான் எத்தனை அழகு! அவளைவிட அழகு அந்தக்குழந்தை. ரூபா சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஹாய் சொல்லலாமா என ஒரு நொடி வந்த நினைப்பை தூக்கி எறிந்தான். அஷோக்கைப் பொறுத்தவரையில் இன்று அவள்  ஒரு நாட்கடந்து போன பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! ஆனால் இன்று?  உயிருடன் வாழும் ஒரு அழகான பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இந்த உண்மையைத்  திரும்பத் திரும்பச் சொல்லணுமா என்ன?

*************************

படிச்சாச்சா? அப்போ இதையும் படிங்க!!!

 மறந்து வாழ வேண்டும்!

---------------------------

இது ஒரு மீள்பதிவே!

 இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

Friday, May 16, 2014

பழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி தேடுவது?

நட்பு வட்டம் நாட்கள் ஆக ஆக மாறிக்கொண்டேதான் போகுது. புது நாடு, புது நண்பர்கள் என்று ஆரம்பித்து, புது ஊரு, புது நண்பர்கள்னு ஆகி வாழ்க்கை சக்கரம் ஓடுது. இருந்தாலும் ஒரு சில பழைய நண்பர்களை வாழ்நாள் பூராம் மறப்பது கஷ்டம். திடீர்னு அவரகளுடன் செலவழித்த அந்த இனிமையான நாட்கள் ஞாபகம் வந்து,

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே! 
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்?

னு சேர்ந்து பழசை எல்லாம் பேசணும்போல தோனுது!

 


அவர்களோட அடித்துக்கொண்டு உருண்ட, கருத்து வேறுபாடு வந்து கோபித்துக்கொண்டதெல்லாம் மறந்து போயிடுது.

You just feel like you want to say "Hi" to them. You do expect them to say a "hi" back. As you were a good friend to them you deserve a response back from them. Or not?

சரினு, இ-மெயிலை தோண்டி எடுத்து ஒரு பத்து இருபது இ-மெயில் அனுப்பியும் பதிலே வரலை! ரெண்டு தர ஃபோன் பண்ணி (அது இப்போ யாரு நம்பரோ?) மெசேஜ் விட்டாலும் இ-மெயிலையும் காணோம், ஒரு எழவையும் காணோம்.

சரி, "செத்துட்டான் விடு"னு போகவும் முடியவில்லை! இப்படி ஒரு பதிவை எழுதி "நண்பர்"  வாசிச்சு "ரெஸ்பாண்ட்" பண்ணுவான்னு ஒரு பதிவு இது.

Only in these occasions some of us realize how weak-minded we are though we pretend like that we are very tough! :(

Monday, July 1, 2013

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

அவளா இவள்? ரூபாவா?அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து 5 வருடமாகிறது! பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை.

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் அவனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும், ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!

அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவளைவிட அழகு அந்தக்குழந்தை. அவள் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனால் அஷோக்கைப் பொறுத்தவரையில் அவள் நாட்கடந்து போன ஒரு பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! இன்று? ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இதைத் திரும்பத் திரும்ப சொல்லணுமா என்ன?

Friday, November 5, 2010

மறந்து வாழ வேண்டும்!

அந்தக்காலத்திலேயே அமெரிக்காவுக்கு வந்தவர்களில் பல கிரிமினல்களும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், நாட்ஸிகளுக்குப் பயந்து எப்படியோ உயிரைக் காப்பாத்த வந்தவர்களும்தான் அதிகம். எப்படியோ வந்து செட்டிலாகி, அமெரிக்க இந்தியர்களை அனுப்பிட்டு இன்னைக்கு இந்த சூப்பர் பவரில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

பழசை மறந்து வாழுகிற அமெரிக்கர்கள்தான் அதிகம். தன் மூதாதையார் அடிமையா வாழ்ந்ததை, சித்ரவதை செய்யப்பட்டதை, எந்த ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ரசிக்க முடியும்? இன்னைக்கும் ஒரு சில ஆஃப்ரிக்க நாட்டிலிருந்து வருகிறவர்கள் அந்த நாடுகளில் உள்ள அசிங்கமான அரசியல் சாக்கடையிலிருந்து எப்படியோ உயிரைக் காப்பாற்றி இங்கே வந்து வாழுறாங்க! இந்தியாவில் உள்ள ஜனநாயகம் எல்லாம் அவங்க நாட்டிலே கெடையாது!

செலிப்ரிடீஸ் (பிரபலங்கள்) பலர் சிறுவயதில் செக்ஸுவல் அப்யூஸ் செய்யப்பட்டவங்கதான், பலவிதங்களில் பாதிக்கப் பட்டவங்கதான். இவர்கள் யாருமே சிறுவயது வாழ்க்கையை நெனச்சுக்கூடப் பார்க்க விரும்புவதில்லை.

இது போக காதல் தோல்வி, நடத்தை சரியில்லாத மனைவி அல்லது கணவன் போன்ற அனுபவம் பெற்ற துரதிஷ்டசாலிகள் கடந்தகாலத்தையே நினைத்து நினைத்து "ஒருதலை ராகம்"பாடிப்பாடி வாழ்நாள் பூராம் சாகாமல், பழசை எல்லாம் மறந்து வாழனும் என்பதுதான் பொதுவாக அமெரிக்கன் ஆட்டிடூட்னு சொல்லலாம். அதுதான் அவர்கள் வெற்றிக்கும் காரணம்னு கூட சொல்லலாம்.

shawshank's redumption படத்தில் நம்ம ஹீரோ டிம் ராபின்ஸ் (ஆண்டி) தப்பிச்சுப் போயி பஸிஃபிக் ல கடற்கரையில் தன் கடைசிகாலத்தில் வாழ ஒரு ப்ளான் (பகல் கனவுதான்) வச்சிருப்பார்.

Andy Dufresne: (டிம் ராபின்ஸ்): You know what the Mexicans say about the Pacific?

Red
:(மார்கன் ஃப்ரீமேன்): No.

Andy Dufresne
: They say it has no memory. That's where I want to live the rest of my life. A warm place with no memory.

ஏன் இப்படி சொல்றார்னா அவர் மனைவி, இவர் சரியில்லைனு இன்னொருவனுடன் ஓடிப்போயி உறவு வைத்துக்கொள்ளுவாள். அவளையும், அவளோட பாய்ஃப்ரெண்டையும் யாரோ கொலை செய்ய, ஆனா இவர்தான் கொலை செய்ததா ஃப்ரேம் பண்ணி இவரை ஜெயில்ல போட்டிருவாங்க. இண்னொசண்ட் ஆன இவர் ஜெயிலில் எல்லாவிதமான கொடுமைக்கும் ஆளாகிக்கொண்டு இருக்குபோது எப்படியாவது ஒரு நாள் அங்கிருந்து தப்பிச்சு வெளியே வந்து "பழ்சை எல்லாம்" மறந்து வாழ ஆசைப்படுவார். அதான் இப்படி சொல்றார். அதேபோல் கடைசியில் ஜெயிலில் இருந்து தப்பிச்சுப் போய் பழசை மறந்து பசிஃபிக் ல வாழுவார். அவருக்கு மறதி என்பது ஒரு நல்ல மறந்து. அசிங்கமான அல்லது வளமையில்லாத பழைய வாழ்க்கையை நினைத்தோ கவலைப்பட அவர் இஷ்டபடமாட்டார். சரி, அவர் வாழட்டும்!

நட்பு என்பது உலகத்திலேயே சிறந்த ஒண்ணு. உயிர் காப்பான் தோழன், பழசை மறப்பது தப்பு அது இதுனு நம்ம திருக்குறள்ல இருந்து இன்னைக்கு வரை சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். நான் இல்லைனு சொல்ல வரவில்லை!

உண்மையில் பார்த்தால் சிறுவயதில் நம் அறியாப் பருவத்தில் இருந்த நட்புதான் ஓரளவுக்கு தூய்மையானதுனு சொல்லலாம். தன்னலமில்லாமல் பழகிய அந்தக்காலத்து பழைய நண்பர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்றாங்க. ஆனால் அவங்க எந்தவகையில் அவர்கள் நம் வாழ்வில் வர்றாங்க? னு பார்த்தால்..நெறையப் பேருக்கு அவர்கள் இன்றைய வாழ்வில் வருவதே இல்லை! அந்த நண்பர்களும் அந்த அழியா நட்பும் நம் மனதில் ஒரு ஓரத்தில் உயிருடன் இருந்தாலும் ப்ராக்டிகலா அந்த நட்போ, நண்பர்களோ நமக்கு இன்றைய வாழ்வில் வருவதோ, உதவுவதோ இல்லை, உதவ முடியாத நிலையாகிவிடுகிறது!

வாழக்கை சக்கரத்தில் வெகுதூரம் இருவரும் வேறு வேறு திசையில் போயிருப்போம். பொதுவாக பழைய நண்பரை, எப்போதாவது 5 வருடத்திற்கு ஒரு முறை, பத்து வருடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ளும் போது, ஒவ்வொருடைய வாழக்கையிலும், அவருடைய வாழ்க்கையிலும் நெறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் உங்களால் பழைய நண்பருக்கோ, அவரால் உங்களுக்கோ பெருசா அறிவுரைகள் தரமுடியாது, உங்க பிரச்சினைக்கு இன்னைக்கு தேவையான ஆறுதல் அவரால் சொல்ல முடியாது.

அந்தப் பழைய நண்பரை முன்பிறவியில் சந்தித்ததுபோலவும், அந்த நட்பு ஒரு முன்பிறவியில் நடந்தது போலத்தான் ஆயிடுவது இயல்பு. அந்தக்காலத்தில் எப்போதும் உங்களை சிரிக்க வைக்கும், அதே நண்பர்கள்கூட இப்போ உள்ள சூழ்நிலையில் சோகமாக உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யமுடியாத நிலைமைக்கு காலவெள்ளத்தில் தள்ளப்பட்டு ரொம்பவே மாறிவிடுறாங்க எனப்துதான் நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும், நாடுவிட்டு நாடு போறவங்க, ஏன் ஊர் விட்டு ஊர் மாறுறவங்ககூட, புதுப் புது நண்பர்களுடந்தான் பழகி வாழ்க்கையை தொடருறாங்க!

பதிவுலகிலேயேகூட நீங்க கொஞ்சம் நட்பைப் பத்திப் பார்க்கலாம். நட்புக்கு இலக்கணமா இருந்தவங்க எல்லாம் ஒரு சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிக னால ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பதிவைப்போட்டு அவமானப்படுத்திக் கொள்வதை. நெறையப்பேர் வாழக்கையில் நட்பு ரொம்ப தொலைக்கெல்லாம் போவதுபோல தெரியலை.

நட்பின் சிகரங்கள் எல்லாம் என்னோட சண்டைக்கு வரலாம். ஆனால் இதுதான் நான் கண்டது! இது கற்பனை அல்ல! நெஜம்!

Thursday, December 4, 2008

காதலுடன் - 2

"வேணாம் ரமேஷ்! நான் ஏதாவது சும்மா சொல்லப்போக, அது ஏதாவது வம்பா முடிஞ்சிடும்னு பயம்மா இருக்கு"

"நான் என்ன அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லாதவனா? நான் ரொம்ப மோசமா, சந்தியா?"

"இல்லையே, ஆனால், ரமேஷ் நீங்க கொஞ்சம் சென்ஸிடிவ்தான். பொதுவா நம்மிடம் உள்ள குறைகளை நாமே ஒத்துக்கொள்வோம். ஆனால், இன்னொருவர் அதையே சொல்லும்போது கொஞ்சம் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இங்கே என்னை வைத்து நான் உங்களைப்பற்றி சொல்றேன்"

"சரி சொல்ல வேணாம், சந்தியா. நான் என்ன நினைச்சேன்னு (strange feeling) நானே சொல்லிடவா?"

"சொல்லுங்க, ப்ளீஸ்"

"நீ கோவிச்சுக்கக்கூடாது?"

"அதெப்படி எனக்குத் தெரியும்? சரி, முயற்சிக்கிறேன். சொல்லுங்க" அவள் சிரித்தாள்.

"எனக்கு உன் கல்யாணம் தோல்வியடைந்ததை சொல்லும்போது கொஞ்சம்கூட வருத்தமாக இல்லை. மாறாக ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் என்ன "செடிஸ்டிக்கா" (sadistic) என்னனு தெரியலை"

"ஏன், ரமேஷ், உங்களுக்கு சந்தோஷம்?"

"தெரியலையே. எனக்கு விளங்கும்போது உன்னிடம் வந்து உன் காதில் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக சொல்றேன். சரியா?" என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.

"அவ்ளோ பெரிய ரகசியமா? சரி, நான் காரணத்தை சொல்லவா?"

"சொல்லேன், பார்க்கலாம்"

"என்னோட நீங்க சண்டைபோட்டுவிட்டு, கோபமா இருந்தீங்க இல்லையா? கோபித்துக் கொண்டு இருந்ததால்தான் எனக்கு ஃபோன் நம்பர்கூட கொடுக்காமல் நியூ ஜேர்ஸி மூவ் பண்ணினீங்க, சரியா? அந்தக்கோபம் இன்னும் இருக்கு போல, ரமேஷ். இன்று தியேட்டரில்கூட உங்க கேர்ஃப்ரெண்டோட இருக்கும்போது என்னைப்பார்த்தும் ஒரு ஹாய் கூட சொல்லலை. இல்லையா? அதனால் என்னுடைய தோல்வியில் ஒருவேளை உங்களுக்கு சந்தோஷமா இருக்கலாம்."

" சே சே, நான் அந்த மாதிரி டைப்லாம் இல்லை, சந்தியா. இது வேற மாதிரி ஃபீலிங். ஏய் அவள் என் கேர்ள் ஃப்ரெண்டெல்லாம் இல்லை"

"அப்போ அவள் என்ன பாய் ஃப்ரெண்டா?"

"சும்மா ஃப்ரெண்டு. அவ்ளோதான்!"

"அதென்ன சும்மா ஃப்ரெண்டு? "சும்மா ஃப்ரெண்டு" ஒரு கேர்ளா இருந்தால் "கேர்ள் ஃப்ரெண்டு" நு சொல்லக்கூடாதா, ரமேஷ்?" ஏதோ அப்பாவிபோல கேட்டாள்.

"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"

"விட்டுப்பாருங்களேன்!"

"சரி அப்போ, நீயும் என் ஃப்ரெண்டுதானே? "கேர்ள் ஃப்ரெண்டா" நீ எனக்கு?"

"லக்ஷ்மிட்ட என்னை கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்"

"அவள் தப்பா நெனச்சுக்கிட்டா?"

"அவள் என்ன உங்க மனைவியா? தப்பா நினச்சாத்தான் என்ன? சரி, கேர்ள்-ஃப்ரெண்டுனா அப்படி என்ன தப்பு? ரொம்பத்தான் அந்த லக்ஷ்மிக்கு உருகுறீங்க"

"சரி உனக்கு இன்னொரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்றேன். நேரில் சொன்னால்தான் இதெல்லாம் உனக்கு புரிய வைக்க முடியும்"

"என்னைக்கு?"

"அடுத்த முறை நேரில் பார்க்கும்போது, சரியா? இப்போ என்னை ஆள விடும்மா!"

"சரி, நான் சொல்றதைக்கேளுங்க, ரமேஷ்! என் தோல்வியை நினைத்து அப்படி சந்தோஷம் வருவதால் ஒண்ணும் தப்பு இல்லை ரமேஷ். நாமெல்லாம் மனுஷங்கதானே? இதுக்காக ரொம்ப அழாதீங்க, சரியா ?" அவள் குரலில் கேலி தெரிந்தது.

"இல்லை, அது காரணம் இல்லைனு எனக்கு 100% உறுதியா தெரியும் சந்தியா!"

"சரி நீங்களே காரணத்தை சொல்லிடுங்க!"

"இப்போ உன்னோட என்ன வேணா பேசலாம். ஒருவேளை உன் கல்யாண வாழ்க்கை நல்லவிதமா போயிருந்தா இந்த அளவுக்கு உனக்கு நேரம் இருக்காது. நானும் உன்னோட இதுபோல் ஃப்ரீயா பேசமுடியாது என்கிற என்னுடய சுயநலம்தான்."

"உங்களுக்கு என்னோட பேசுவது அவ்ளோ பிடிக்குமா, ரமேஷ்?" அப்போ ஏன் நியூ ஜேர்ஸி போனதிலிருந்து ஒரு தரம் கூட என்னை கூப்பிடவில்லை? அவள் குரலில் கோபம் தெரிந்தது.

"பேசவில்லை உண்மைதான். ஆனால் உன்னைப்பற்றி நிறைய நினைப்பேனே, சந்தியா?" என்றான் அவளை சமாதானப்படுத்த.

"அப்படியா? என்ன மாதிரி நினைப்பு, அது, ரமேஷ்? சொல்லுங்க ப்ளீஸ்"

"அதெல்லாம் சொல்ல முடியாது, சந்தியா. அப்புறம் உன்னிடம் உதை யாரு வாங்கிறது?"

"அச்சச்சோ! அது என்ன ஒரு மாதிரியான நினைப்பா, ரமேஷ்? நீங்க ரொம்ப மோசமான ஆளா?"

"ஆமாம், நான் ரொம்ப கெட்டப் பையன் தான். கொஞ்சம் கவனமாவே இரு, சந்தியா"

"சரி, சும்மா சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்!"

"நீ வேற! இதெல்லாம் ரொம்ப ப்ரைவேட்"

"ஒழுங்கா மறைக்காம உண்மையை சொல்லுங்க, 'அந்த மாதிரியான' நினைப்பா?"

"அப்படித்தான் நு வச்சுக்கோவேன், என் மனசுக்கு நாந்தானே ராஜா?"

"அதெல்லாம் இல்லை. உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சு பழகினால், இப்படி இருக்கீங்களே, ரமேஷ்"

"எல்லாம் உன் தப்புத்தான், சந்தியா"

"அதெப்படி என் தப்பு?"

"நீ ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிற மாதிரி இருக்க? எல்லோரையும் பார்த்து அப்படியா தோனுது?"

"என்னைப் பார்த்தால் எப்படி தோணுது?"

"சொல்லிடவா?"

"வேணாம், வேணாம்! சரி, ஆம்பளைங்களுக்கு ஏன் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை, ரமேஷ்?"

"ஏன் ஆம்பளைங்கனு சுத்தி வளைக்கிற? "உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை ரமேஷ்"னு சொல்ல வேண்டியதுதானே?"

"மெளனம்"

"என்ன யோசனை?"

"இல்லை, நீங்க என்ன மாதிரி என்னைப்பற்றி நினைத்து இருப்பீங்கனு யோசித்தேன்! உங்களை மாதிரி நினைத்துப்பார்ப்பதால் இப்போ நானும் ரொம்ப கெட்டபொண்ணா ஆயிட்டேன்"

"இது ரொம்ப கண்டேஜியஸ் போலிருக்கு, சந்தியா! சரி, ராஜு நல்ல படித்த, அழகான, உன்னை மணம்முடிக்க தகுதியுள்ள ஆள் தானே? என்ன பிரச்சினை, சந்தியா?"

"வாழ்க்கையை ஆரம்பிக்குமுன், நான் ஒரு சில கேள்விகள் கேட்டேன், கண்டிஷன்ஸ் போட்டேன். அது அவருக்கு பிடிக்கலை, ரமேஷ்!"

"வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பா? கொஞ்சம் புரியிறார்ப்போல சொல்லு, சந்தியா!"

"கல்யாணம் முடிந்தவுடன், அன்று இரவு தனியாக இருக்கும்போது முதலில் எனக்கு அவருடைய எச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட் வேணும்னு சொன்னேன். அப்புறம் சில பொருளாதார சுதந்திரம் எனக்கு தேவைனு ஒரு மாதிரி "ப்ராப்பஸிஷன்" கொடுத்து, அவரின் "அப்ரூவல்" கேட்டேன்!"

"அது சரி!. நீ உன்னுடைய ரிசல்ட்டையும் அப்போ அவருக்கு கொடுக்கனும் இல்லையா, சந்தியா?"

"அதை கொடுக்க ரெடியா இருப்பதால்தான் கேட்டேன் ரமேஷ்! அவர் செய்த தப்புக்கு நான் சாகத்தயாரா இல்லை. அவரும் என் தப்புக்காக சாக வேண்டாம் என்கிற நல்லெண்ணம்தான் ரமேஷ்"

"அதற்கு ராஜூ என்ன சொன்னார்?"

-தொடரும்.

Monday, November 24, 2008

காதலுடன் -1

சந்தியாவுக்கு ஒரே குழப்பமா இருந்தது. இரவு சீக்கிரமே படுக்கைக்கு வந்துவிட்டாள். படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டு யோசித்தாள். அன்று மதியம் அவள் பார்க்கப்போன அந்த தமிழ்படம் "குருவி"யை அவளால் கவனித்துப் பார்க்கவே முடியவில்லை! அவள் நினைவெல்லாம் அவளுக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி உட்கார்ந்து இருந்த ரமேஷ் மற்றும் அவருடன் அமர்ந்திருந்த அந்தப்பொண்ணு பற்றியே இருந்தது. ஏனோ படம் முடிவதற்கு முன்பே தன் தோழியிடம் ஒரு சாக்கு சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டாள்.

இப்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் இங்கே எங்கே வந்தார்? யார் அந்தப் பொண்ணு? ரமேஷோட ஏன் படத்துக்கு வந்திருக்காள்? அவரோட மனைவியா? இல்லை கேர்ள் ஃப்ரெண்டா? சும்மா வெறும் ஃப்ரெண்டோ? எப்போ ரமேஷ் சிகாகோ வந்தார்? சும்மா விசிட் பண்ணுகிறாரோ? அவர் ரமேஷ்தானா? வேறு யாருமா? நிச்சயம் அவர்தான். யார் அந்தப்பொண்ணு? ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா. இப்படி என்னென்னவோ யோசித்து தலையை பிய்த்துக்கொண்டிருந்தாள்.

ரமேஷ், சந்தியாவின் பழைய ஃப்ரெண்டு மற்றும் ரொம்ப நெருங்கிப் பழகியவர். இருவருக்கும் இடையில் ஒரு சின்ன "ஈகோ க்ளாஸ்" ஏற்பட்டு அது ஒரு பெரிய "வைல்ட் டேர்ன்" எடுத்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது ஒண்ணும் அப்படி ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. ஆனால் ஒவ்வொரு சமயம் ஒரு சின்ன சாதாரண விஷயம்கூட இப்படி பெரிதாகி முடிந்துவிடுகிறது. அதன்பிறகு சந்தியாவுக்கு கல்யாணம் முடிவான போது, ஏதோ வேலை காரணமாக ரமேஷ் நியூ ஜேர்சிக்கு வேலை மாற்றலாகிப் போய்விட்டார். ஃபோன் நம்பர் கூட சந்தியாவுக்கு கொடுக்கவில்லை. அல்லது வேணும்னே கொடுக்கலையானு தெரியவில்லை. அவளை அதற்கப்புறம் அவர் கூப்பிடவும் இல்லை. அவள் இன்னும் அதே வீட்டு ஃபோன் நம்பர்தான் வைத்திருந்தாள். அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து தந்திகூட அவரிடம் இருந்து இல்லை. ஒரு வேளை என் பத்திரிக்கை கிடைத்து இருக்காதோ? ஒரு ஈ-மெயில் வாழ்த்துக் கூட இல்லை! அதன் பிறகு இரண்டு வருடமாகிவிட்டது அவரைப் பார்த்து. ரமேஷிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

இதற்கிடையில் சந்தியா திருமண வாழ்க்கையில் வெற்றியடையவில்லை. கல்யாணம் ஆகி 3 வாரம்கூட அவளை மணந்த ராஜுவுடன் சேர்ந்து வாழமுடியவில்லை அவளால். இப்போது இருவருக்கும் விவாகாரத்து ஆகிவிட்டது.

சந்தியாவின் ஃபோன் அலரியது! அவள் ஃபோனை எடுக்காமல் படுத்தே ரமேஷ் யோசனையில் இருந்தாள்.

"ஹாய் சந்தியா! நான் தான் ரமேஷ் பேசுறேன். மூவ்ட் பேக் டு விண்டி சிட்டி! சும்மாதான் கூப்பிட்டேன்" என்று போனது ரமேஷின் மெசேஜ்!

அவசரமாக எழுந்து வந்து ஃபோனை எடுத்தாள், சந்தியா.

"ஹாய் ரமேஷ்! ஹல்லோ!!"

"ஆர் யு தேர் சந்தியா?"

"யா"

"எப்படி இருக்கீங்க?"

"இருக்கேன். நீங்கள்?"

"நான் நல்லா இருக்கேன் சந்தியா. உங்களை இன்று தமிழ்ப்படம் பார்க்கப்போனபோது தியேட்டரில் பார்த்தேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. எப்படி இருக்கீங்க? கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?"

"தியேட்டரில் என்னைப் பார்த்தீங்களா! நானும் உங்களைப்பார்த்தேன் ரமேஷ். ஆனால் பேச முடியவில்லை"

"ஆமா, ஆனால் ஒரு ஃப்ரெண்டோட வந்திருந்தேன். படம் முடிந்த பிறகு உங்களோட பேசலாம்னு நினைத்தேன். ஆனால் உங்களை பிடிக்கமுடியவில்லை"

"நான், படம் முடியும் முன்பே வெளியில் வந்துவிட்டேன், ரமேஷ்! என்ன சிகாகோ பக்கம், ரமேஷ்?"

"இங்கே மூவ்பண்ணிட்டேன், சந்தியா. இங்கேதான் வேலை"

"ஆர் யு சீரியஸ்?"

"யெஸ்"

"எங்கே இருக்கீங்க?"

"ஹில்சைட்' ல இருக்கேன் சந்தியா!"

"ஹு வாஸ் இட்?"

"ஹூ?"

"அந்த பெண்? உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே?"

"ஓ அவளா? ஜஸ்ட் எ ஃப்ரெண்ட், சந்தியா. அவள் பெயர் லக்ஷ்மி. என் கம்பெணியில் வேலை பார்க்கிறாள். அவள்தான் இந்தப் படத்துக்கு என்னை அழைச்சுண்டு வந்தாள்"

"இல்லை யாருனு சும்மாதான் கேட்டேன்" என்று ஏதோ உளறினாள் சந்தியா.

"உங்க ஹஸ்பண்ட் வீட்டில் தான் இருகாரா? நான் பேசலாமா?"

"நோ, ரமேஷ்! நான் தனியா தான் இந்த வீட்டில் இருக்கேன்"

"ரியல்லி?! சாரி, நான் நியூ ஜெர்சி போகும் முன் என் நம்பர் கூட கொடுக்கல"

"இந்த சாரியெல்லாம் இப்போ எதுக்கு, ரமேஷ்? ஐ ஆம் நாட் கோயிங் டு அக்செப்ட் யுவர் சாரி! சரி, இப்போவாவது கூப்பிட்டீர்களே? தேங்க்ஸ்"

"ஹேய், கொஞ்சம் புதிர் போடாமல் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல, ரமேஷ்?"

"உங்க கல்யாண வாழ்க்கைபற்றித்தான்.. என்ன ஆச்சு? ஒன்ஸ் ஐ யூஸுட் டு பி யுவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே? சொல்லக்கூடாதா, சந்தியா?"

"ஒண்ஸா? அப்போ சரி சொல்லக்கூடாதுதான்" என்று சிரித்தாள்.

"ஏய் ஏய், இப்போவும் நான் உன் ஃப்ரெண்டுதான் சந்தியா!"

"அதை ஏன் கேக்குறீங்க, ரமேஷ்! அது ஒரு வாரம்கூட ஒழுங்கா போகலை! ரமேஷ். இட் வாஸ் எ ஃபியாஸ்கோ"

"ஐ ஆம் சாரி டு நோ தட்! சரி ஏன்? என்ன ஆச்சு?"

"ரெண்டு பேரும் கம்ப்ளீட் மிஸ்-மேட்ச்! சேர்ந்து வாழ வழியே இல்லைனு எனக்கு தோனியது. அதனால் டிவோர்ஸ் ஆயிடுத்து. எல்லாம் நன்மைக்கேதான் னு போக வேண்டியதுதான் ரமேஷ்" என்று சிரித்தாள்.

"எனக்கு எதுவுமே தெரியாதே, சந்தியா!"

"சரி இப்போ தெரிந்துவிட்டதில்லையா?"

"இது ரொம்ப ஸ்ட்ரேஞ் சந்தியா"

"எது?"

"சரி விடுங்க"

"ரமேஷ்! ஒரு உதவி செய்ய முடியுமா,ப்ளீஸ்?"

"டெல் மி"

"ப்ளீஸ், பழைய மாதிரியே, வா போ என்றே என்னை கூப்பிடுங்களேன்?"

"எனக்கு நடந்ததை பற்றி எல்லாம் தெரியாது இல்லையா? அதனால் தான்..."

"சரி, இப்போ தான் தெரிஞ்சிடுச்சே?"

"ஓ கே சந்தியா"

"சரி இப்போ என்ன ஸ்ட்ரேஞ்னு சொல்லுங்க?"

"வெளிப்படையா சொல்ல முடியல சந்தியா"

"நீங்க ரொம்ப ஈகோயிஸ்டிக்கா, ரமேஷ்?"

"தெரியலையே! இருந்தாலும் இருக்கும்"

"தெரியலையா? சரி, உங்களைப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?"

"என்னைப்பற்றி என்னோட நெருங்கி பழகியவர்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால நீதான் சொல்லனும்!" ரமேஷ் சிரித்தான்.

"சொல்லவா?"

"ம்ம்"

-தொடரும்

பின் குறிப்பு: இது ஒரு கற்பனை கதைதான். எவ்வளவு தூரம் எழுத முடியும்னு தெரியலை. ஏதோ நேரம் கிடைக்கும்போது எழுதி எல்லோரையும் கொல்லுறேன். சரியா, வாசகர்களே? :-)