Monday, July 1, 2013

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

அவளா இவள்? ரூபாவா?அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து 5 வருடமாகிறது! பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை.

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் அவனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும், ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!

அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவளைவிட அழகு அந்தக்குழந்தை. அவள் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனால் அஷோக்கைப் பொறுத்தவரையில் அவள் நாட்கடந்து போன ஒரு பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! இன்று? ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இதைத் திரும்பத் திரும்ப சொல்லணுமா என்ன?

8 comments:

கவியாழி கண்ணதாசன் said...

ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே//நீங்க சொல்லவதும் சரியாத்தான் படுது

வருண் said...

வாங்க, கவியாழி கண்ணதாசன்!

நல்லவேளை, நான் நட்பென்னும் புனிதமான ஒண்ணை இப்படி விமர்ச்சது தப்புனு நீங்க சொல்லவில்லை! :)

nila said...

//காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!//

முழுக்க உண்மை!!!!

ஒருமுறை உடைந்து போன நட்பு எவ்வளவுதான் முயன்றாலும் ஒட்டாது. "ஹாய், ஹலோ, ஹோவ் ஆர் யூ?" இதோடு நின்றுபோய் விடுகிறது

T.N.MURALIDHARAN said...

நட்பு, காதல் எல்லாமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.அது நிறைவேறாத போது நட்பு பலவீனப் பட்டு போகிறது.
காதலும் இந்த வகையை சேர்ந்ததே.

வருண் said...

***nila said...

//காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!//

முழுக்க உண்மை!!!!

ஒருமுறை உடைந்து போன நட்பு எவ்வளவுதான் முயன்றாலும் ஒட்டாது. "ஹாய், ஹலோ, ஹோவ் ஆர் யூ?" இதோடு நின்றுபோய் விடுகிறது***

Good to see you, nila! :-)

Once the friendship got strained, it is better try not to fix it. Make new friends and move on with (y)our life. Let him/her live happily with other like-minded people!

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

நட்பு, காதல் எல்லாமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.அது நிறைவேறாத போது நட்பு பலவீனப் பட்டு போகிறது.
காதலும் இந்த வகையை சேர்ந்ததே.***

உண்மைதான் முரளி! கீறல் விழுந்த பிறகு ஒதுங்கிப் போவதில் தவறேதும் இல்லை! ஒட்ட வைத்து மறுபடியும் அதே கீறல் உருவாக வைப்பதுதான் தவறு!

சே. குமார் said...

அது சரி...

அருமையான கதை....

வாழ்த்துக்கள்.

ராஜி said...

ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே
//
நிஜம்தான்