Friday, November 5, 2010

மறந்து வாழ வேண்டும்!

அந்தக்காலத்திலேயே அமெரிக்காவுக்கு வந்தவர்களில் பல கிரிமினல்களும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், நாட்ஸிகளுக்குப் பயந்து எப்படியோ உயிரைக் காப்பாத்த வந்தவர்களும்தான் அதிகம். எப்படியோ வந்து செட்டிலாகி, அமெரிக்க இந்தியர்களை அனுப்பிட்டு இன்னைக்கு இந்த சூப்பர் பவரில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

பழசை மறந்து வாழுகிற அமெரிக்கர்கள்தான் அதிகம். தன் மூதாதையார் அடிமையா வாழ்ந்ததை, சித்ரவதை செய்யப்பட்டதை, எந்த ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ரசிக்க முடியும்? இன்னைக்கும் ஒரு சில ஆஃப்ரிக்க நாட்டிலிருந்து வருகிறவர்கள் அந்த நாடுகளில் உள்ள அசிங்கமான அரசியல் சாக்கடையிலிருந்து எப்படியோ உயிரைக் காப்பாற்றி இங்கே வந்து வாழுறாங்க! இந்தியாவில் உள்ள ஜனநாயகம் எல்லாம் அவங்க நாட்டிலே கெடையாது!

செலிப்ரிடீஸ் (பிரபலங்கள்) பலர் சிறுவயதில் செக்ஸுவல் அப்யூஸ் செய்யப்பட்டவங்கதான், பலவிதங்களில் பாதிக்கப் பட்டவங்கதான். இவர்கள் யாருமே சிறுவயது வாழ்க்கையை நெனச்சுக்கூடப் பார்க்க விரும்புவதில்லை.

இது போக காதல் தோல்வி, நடத்தை சரியில்லாத மனைவி அல்லது கணவன் போன்ற அனுபவம் பெற்ற துரதிஷ்டசாலிகள் கடந்தகாலத்தையே நினைத்து நினைத்து "ஒருதலை ராகம்"பாடிப்பாடி வாழ்நாள் பூராம் சாகாமல், பழசை எல்லாம் மறந்து வாழனும் என்பதுதான் பொதுவாக அமெரிக்கன் ஆட்டிடூட்னு சொல்லலாம். அதுதான் அவர்கள் வெற்றிக்கும் காரணம்னு கூட சொல்லலாம்.

shawshank's redumption படத்தில் நம்ம ஹீரோ டிம் ராபின்ஸ் (ஆண்டி) தப்பிச்சுப் போயி பஸிஃபிக் ல கடற்கரையில் தன் கடைசிகாலத்தில் வாழ ஒரு ப்ளான் (பகல் கனவுதான்) வச்சிருப்பார்.

Andy Dufresne: (டிம் ராபின்ஸ்): You know what the Mexicans say about the Pacific?

Red
:(மார்கன் ஃப்ரீமேன்): No.

Andy Dufresne
: They say it has no memory. That's where I want to live the rest of my life. A warm place with no memory.

ஏன் இப்படி சொல்றார்னா அவர் மனைவி, இவர் சரியில்லைனு இன்னொருவனுடன் ஓடிப்போயி உறவு வைத்துக்கொள்ளுவாள். அவளையும், அவளோட பாய்ஃப்ரெண்டையும் யாரோ கொலை செய்ய, ஆனா இவர்தான் கொலை செய்ததா ஃப்ரேம் பண்ணி இவரை ஜெயில்ல போட்டிருவாங்க. இண்னொசண்ட் ஆன இவர் ஜெயிலில் எல்லாவிதமான கொடுமைக்கும் ஆளாகிக்கொண்டு இருக்குபோது எப்படியாவது ஒரு நாள் அங்கிருந்து தப்பிச்சு வெளியே வந்து "பழ்சை எல்லாம்" மறந்து வாழ ஆசைப்படுவார். அதான் இப்படி சொல்றார். அதேபோல் கடைசியில் ஜெயிலில் இருந்து தப்பிச்சுப் போய் பழசை மறந்து பசிஃபிக் ல வாழுவார். அவருக்கு மறதி என்பது ஒரு நல்ல மறந்து. அசிங்கமான அல்லது வளமையில்லாத பழைய வாழ்க்கையை நினைத்தோ கவலைப்பட அவர் இஷ்டபடமாட்டார். சரி, அவர் வாழட்டும்!

நட்பு என்பது உலகத்திலேயே சிறந்த ஒண்ணு. உயிர் காப்பான் தோழன், பழசை மறப்பது தப்பு அது இதுனு நம்ம திருக்குறள்ல இருந்து இன்னைக்கு வரை சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். நான் இல்லைனு சொல்ல வரவில்லை!

உண்மையில் பார்த்தால் சிறுவயதில் நம் அறியாப் பருவத்தில் இருந்த நட்புதான் ஓரளவுக்கு தூய்மையானதுனு சொல்லலாம். தன்னலமில்லாமல் பழகிய அந்தக்காலத்து பழைய நண்பர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்றாங்க. ஆனால் அவங்க எந்தவகையில் அவர்கள் நம் வாழ்வில் வர்றாங்க? னு பார்த்தால்..நெறையப் பேருக்கு அவர்கள் இன்றைய வாழ்வில் வருவதே இல்லை! அந்த நண்பர்களும் அந்த அழியா நட்பும் நம் மனதில் ஒரு ஓரத்தில் உயிருடன் இருந்தாலும் ப்ராக்டிகலா அந்த நட்போ, நண்பர்களோ நமக்கு இன்றைய வாழ்வில் வருவதோ, உதவுவதோ இல்லை, உதவ முடியாத நிலையாகிவிடுகிறது!

வாழக்கை சக்கரத்தில் வெகுதூரம் இருவரும் வேறு வேறு திசையில் போயிருப்போம். பொதுவாக பழைய நண்பரை, எப்போதாவது 5 வருடத்திற்கு ஒரு முறை, பத்து வருடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ளும் போது, ஒவ்வொருடைய வாழக்கையிலும், அவருடைய வாழ்க்கையிலும் நெறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் உங்களால் பழைய நண்பருக்கோ, அவரால் உங்களுக்கோ பெருசா அறிவுரைகள் தரமுடியாது, உங்க பிரச்சினைக்கு இன்னைக்கு தேவையான ஆறுதல் அவரால் சொல்ல முடியாது.

அந்தப் பழைய நண்பரை முன்பிறவியில் சந்தித்ததுபோலவும், அந்த நட்பு ஒரு முன்பிறவியில் நடந்தது போலத்தான் ஆயிடுவது இயல்பு. அந்தக்காலத்தில் எப்போதும் உங்களை சிரிக்க வைக்கும், அதே நண்பர்கள்கூட இப்போ உள்ள சூழ்நிலையில் சோகமாக உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யமுடியாத நிலைமைக்கு காலவெள்ளத்தில் தள்ளப்பட்டு ரொம்பவே மாறிவிடுறாங்க எனப்துதான் நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும், நாடுவிட்டு நாடு போறவங்க, ஏன் ஊர் விட்டு ஊர் மாறுறவங்ககூட, புதுப் புது நண்பர்களுடந்தான் பழகி வாழ்க்கையை தொடருறாங்க!

பதிவுலகிலேயேகூட நீங்க கொஞ்சம் நட்பைப் பத்திப் பார்க்கலாம். நட்புக்கு இலக்கணமா இருந்தவங்க எல்லாம் ஒரு சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிக னால ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பதிவைப்போட்டு அவமானப்படுத்திக் கொள்வதை. நெறையப்பேர் வாழக்கையில் நட்பு ரொம்ப தொலைக்கெல்லாம் போவதுபோல தெரியலை.

நட்பின் சிகரங்கள் எல்லாம் என்னோட சண்டைக்கு வரலாம். ஆனால் இதுதான் நான் கண்டது! இது கற்பனை அல்ல! நெஜம்!

12 comments:

முகுந்த்; Amma said...

//நான் பார்த்தவரைக்கும், நாடுவிட்டு நாடு போறவங்க, ஏன் ஊர் விட்டு ஊர் மாறுறவங்ககூட, புதுப் புது நண்பர்களுடந்தான் பழகி வாழ்க்கையை தொடருறாங்க!//

உண்மை தாங்க, நட்புகள் ரொம்ப தூரம் வருவதில்லை.

பழமைபேசி said...

பழையதையே நாடும் சிலரும் இருக்காங்கோன்னு தளபதி ஒரு இடுகை இடலாம்... ஆனா, அவர்தான்.... அவ்வ்வ்......

வருண் said...

முகுந்த் அம்மா said...

*** //நான் பார்த்தவரைக்கும், நாடுவிட்டு நாடு போறவங்க, ஏன் ஊர் விட்டு ஊர் மாறுறவங்ககூட, புதுப் புது நண்பர்களுடந்தான் பழகி வாழ்க்கையை தொடருறாங்க!//

உண்மை தாங்க, நட்புகள் ரொம்ப தூரம் வருவதில்லை.

5 November 2010 3:28 PM**

வாங்க, முகுந்த் அம்மா!

பரவாயில்லை, இந்த சிந்தனையுடன் நான் மட்டும் தனியாக இல்லை என்ற ஆறுதல் தர்றீங்க! நன்றி :)

வருண் said...

***பழமைபேசி said...

பழையதையே நாடும் சிலரும் இருக்காங்கோன்னு தளபதி ஒரு இடுகை இடலாம்... ஆனா, அவர்தான்.... அவ்வ்வ்......

5 November 2010 3:52 PM***

நீங்க பேசலைங்க, உங்க பேர் தான். ("பழமை பேசி") பழமையின் பெருமையை விட்டுக்கொடுக்குமா? :)

எஸ்.கே said...

நட்பு ஒரு வித்தியாசமான அனுபவம். 15 வருட நட்பு கூட ஒரு சிறு சம்பவத்தால் பிரிந்து விடும். ஒரு சிறு சந்திப்பு கூட நீண்ட கால நட்பை உண்டாக்கும்!

ILA (a) இளா said...

ஐ, கருத்து சொல்றாங்கடோய்ய்ய்ய்ய்ய்

ILA (a) இளா said...

நட்புக்காக நான் எழுதிய ரெண்டு கவுஜங்க.. 1.....
..2..
Self promotion is more important

வருண் said...

***ILA(@)இளா said...

ஐ, கருத்து சொல்றாங்கடோய்ய்ய்ய்ய்ய்

7 November 2010 6:16 AM***

இப்படி பத்தி பத்தியா சொன்னா அது கருத்து. உங்கள மாதிரி ஸ்டாண்ஸா வா சொன்னா அது கவிதை :))

வருண் said...

**ILA(@)இளா said...

நட்புக்காக நான் எழுதிய ரெண்டு கவுஜங்க.. 1.....
..2..
Self promotion is more important**

அவைகளை ஏன் "கவுஜங்க"னு சொல்றீக? ரெண்டு கவிதைகளும் நன்னாத்தான் இருக்கு! :)

Avargal Unmaigal said...

///உண்மையில் பார்த்தால் சிறுவயதில் நம் அறியாப் பருவத்தில் இருந்த நட்புதான் ஓரளவுக்கு தூய்மையானதுனு சொல்லலாம். தன்னலமில்லாமல் பழகிய அந்தக்காலத்து பழைய நண்பர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்றாங்க. ஆனால் அவங்க எந்தவகையில் அவர்கள் நம் வாழ்வில் வர்றாங்க? னு பார்த்தால்..நெறையப் பேருக்கு அவர்கள் இன்றைய வாழ்வில் வருவதே இல்லை! அந்த நண்பர்களும் அந்த அழியா நட்பும் நம் மனதில் ஒரு ஓரத்தில் உயிருடன் இருந்தாலும் ப்ராக்டிகலா அந்த நட்போ, நண்பர்களோ நமக்கு இன்றைய வாழ்வில் வருவதோ, உதவுவதோ இல்லை, உதவ முடியாத நிலையாகிவிடுகிறது!

வாழக்கை சக்கரத்தில் வெகுதூரம் இருவரும் வேறு வேறு திசையில் போயிருப்போம். பொதுவாக பழைய நண்பரை, எப்போதாவது 5 வருடத்திற்கு ஒரு முறை, பத்து வருடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ளும் போது, ஒவ்வொருடைய வாழக்கையிலும், அவருடைய வாழ்க்கையிலும் நெறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் உங்களால் பழைய நண்பருக்கோ, அவரால் உங்களுக்கோ பெருசா அறிவுரைகள் தரமுடியாது, உங்க பிரச்சினைக்கு இன்னைக்கு தேவையான ஆறுதல் அவரால் சொல்ல முடியாது.

அந்தப் பழைய நண்பரை முன்பிறவியில் சந்தித்ததுபோலவும், அந்த நட்பு ஒரு முன்பிறவியில் நடந்தது போலத்தான் ஆயிடுவது இயல்பு. அந்தக்காலத்தில் எப்போதும் உங்களை சிரிக்க வைக்கும், அதே நண்பர்கள்கூட இப்போ உள்ள சூழ்நிலையில் சோகமாக உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யமுடியாத நிலைமைக்கு காலவெள்ளத்தில் தள்ளப்பட்டு ரொம்பவே மாறிவிடுறாங்க எனப்துதான் நிதர்சனம்!////

இதையும்தான் நான் என் பதிவில் சொல்ல நினைத்தேன் பதிவு மிகப் பெரிதாகிவிடும் என்பதால் சொல்லவில்லை. இதில் நீங்கள் சொல்லியதுதான் நான் நினைப்புதும் எந்த விசயத்தில் நமக்கு ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்த விசயத்தில் நாம் இருவரும் ஒத்து போகிறோம் பாஸ்

Avargal Unmaigal said...

பாஸ் உங்களின் பதிவுகளில் எனக்கு பிடித்ததை எனது தளத்தில் மறுபதிப்பாக உங்கள் பெயருடன் நேரம் கிடைக்கும் போது வெளியிட நினைக்கிறேன் அனுமதி உண்டா?

வருண் said...

தல: என்ன அனுமதி அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம்? உங்களுக்கு இல்லாத காப்பி ரைட்ஸா? :) ஆகட்டும், தல! :)