Monday, May 4, 2009

“ரஜினி - எ வி எம்” மின் கெமிஸ்ட்ரி!

திரையுலகில் எ வி எம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். இவர்கள் சிவாஜி, எம் ஜி ஆர், கமல், ரஜினி என்று எல்லா பெரிய நடிகர்களையும் வைத்து படம் தாரித்துள்ளார்கள்.

அமரர் எம் ஜி ஆர், எ வி எம் முடன் ஒரே ஒரு படம்தான் செய்தார். (சுரேஷ் பின்னூட்டத்தில் சொன்னதற்கு அப்புறம், சரிசெய்யப்பட்டது :-))) )

* அன்பே வா (1966).

அன்பே வா எம் ஜி ஆர் படங்களில் வித்தியாசமான படம் மட்டுமன்றி இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். இருந்தபோதும் அதன்பிறகு எம் ஜி ஆர் படம் எதுவும் எ வி எம் எடுக்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் பராசக்தி யே எ வி எம் தயாரிப்புதான். பிறகு

* பார்த்தால் பசி தீரும் (1962, வெற்றிப்படம்),

* பச்சை விளக்கு (1964, வெற்றிப்படம்),

* உயர்ந்த மனிதன் (1968, வெற்றிப்படம்)

போன்ற படங்களை எ வி எம் சிவாஜியை கதாநாயகனாக வைத்து தயாரித்தது. உயர்ந்த மனிதனுக்குப் பிறகு வேறு படம் எடுத்ததாக தெரியவில்லை.


கமலுடைய முதல்ப் படம் * களத்தூர் கண்ணம்மா எ வி எம் தயாரிப்பு. பிறகு

* சகலகலா வல்லவன் (1982, வெள்ளிவிழாப்படம், வசூலில் சாதனை புரிந்தது)

* தூங்காதே தம்பி தூங்காதே (1983, வெற்றிப் படம்) போன்ற பெரிய வெற்றிப்படங்களை எ வி எம் தயாரித்தது.

அதன் பிறகு

* பேர் சொல்லும் பிள்ளை (1987) என்கிற படம் தயாரித்தது. இது அவ்வளவு வெற்றியடைய வில்லை. அதன் பிறகு கமல் எ வி எம் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கமல் மசாலா படமே நடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.


எ வி எம் ரஜினியை வைத்து எடுத்த முதல்ப்படம் * முரட்டுக்காளை. இது மிகப்பெரிய வெற்றிப்படம். ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் எ வி எம் தயாரித்த இந்தப் படம் முக்கியமான இடம் பெறும். நீண்ட இடைவெளிக்குப்பிறகு படம் தயாரிக்க முடிவு செய்த எ வி எம் ரஜினியை வைத்து எஸ் பி எம் இயக்க, இளையராஜா இசையமைக்க, ஜெய்சங்கர் முதல் முறையாக வில்லனாக அறிமுகமாக வெளிவந்த படம்தான் * முரட்டுக்காளை! இது வரலாறு காணாத வெற்றி பெற்றது! ரஜினிக்கும் சரி, எ வி எம் க்கும் சரி இது ஒரு பெரிய வெற்றிப்படம். இதை அடுத்து ரஜினியை வைத்து எ வி எம் தயாரித்த படங்கள்,

* போக்கிரி ராஜா (1982, வெற்றிப்படம்)

* பாயும் புலி (1983, வெற்றிப்படம்)

* நல்லவனுக்கு நல்லவன் (1984, பெரிய வெற்றிப்படம்)

* மிஸ்டர் பாரத் (1986, வெற்றிப்படம்)

* மனிதன் (1987, வெள்ளிவிழா கொண்டாடிய படம்)

* ராஜா சின்ன ரோஜா (1989, வெற்றிப்படம்)

* எஜமான் (1993, ஓரளவுக்கு வெற்றிப்படம்)

* சிவாஜி (2007, வெள்ளிவிழா கொண்டாடியபடம்)

இதில் ராஜா சின்ன ரோஜா வரைக்கும் ரஜினியின் 7 படங்களுக்கு எஸ் பி முத்துராமன் தான் இயக்குனர். மேலும் கமல் நடித்த 3 படங்களுக்கும் எஸ் பி எம் தான் இயக்குனர்.

எஜமான் படத்தை ஆர் வி உதயக்குமார் இயக்கினார். சிவாஜி யின், இயக்கம் சங்கர்!

1980 ல இருந்து 2007 வரை 9 படங்கள் ரஜினியை வைத்து தயாரித்துள்ளனர். இதுபோல் எந்த ஒரு நடிகருக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எ வி எம் சரவணனுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் “கெமிஸ்ட்ரி” எப்போதுமே நன்றாக வொர்க் அவுட் ஆச்சு என்பதுதான் இதற்கு காரணம்! இது சினிமா உலகில் மிக அரிய விசயம்.

"கலியுலக கர்ணன்" ஜே கே ரித்தீஷ்!

ரித்தீஷ்க்கு "பெரிய மனசு", இவர் ஒரு "கலியுலக கர்ணன்", "வள்ளல் பாரி பரம்பரை" என்று பலரும் சொல்கிறார்களாம் இவர் தொகுதியில். அவரை பார்ப்பது எளிது. பார்த்தால் நிச்சயம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் அவர் என்று இந்த தொகுதி மக்கள் நம்புறாங்க. ரித்தீஷ் ஜெயித்தால் நிச்சயம் தொகுதிக்கு செய்வார் என்றும் நம்பப்படுகிறது.

பலகோடி சொந்தக்காரர்களுக்குத்தான் இந்த முறை எம் பி டிக்கெட் கொடுக்கப்பட்டது! ஜே கே ரித்தீஷ் ஒரு கோடிஸ்வரர் என்பதால்தான் இவருக்கும் கொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இன்றைய கோடீஸ்வரர் ரித்தீஷ்குமார் ஒரு 20 வருடங்கள் முன்னால் ஒரு ஏழை சிவக்குமார். "குமாரு" என்று அழைக்கப்பட்டார். எப்படியோ கிடைத்த ஒரு "லாட்டரி" தொகையை வைத்து "ரியல் எஸ்டேட்" பிஸினெஸ் செய்து குறைந்த நாட்களிலேயே முன்னேறியவர்தான் இன்று கோடிஸ்வரான இந்த ரித்தீஷ் குமார்.

இவர் பரந்த மனது, அள்ளிக்கொடுக்கும் கரம் எல்லாம் தெரிந்த இவர் தொகுதியில் உள்ள மக்கள் பேசிக்கொள்வது..

நம்ம குமார பார்த்தியா? காசு கொடுத்தானா?


அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவதற்கு காரணம் "குமாருடன்" அவ்வளவு "இண்ட்டிமேட்" ஆ பழகுறாங்க மக்கள்

எலக்ஷன் முடிந்ததும் செய்வது எல்லாம் அந்தக்காலம்! எலக்ஷனுக்கு முன்னாலேயே காசு வாங்கிக்கொள்வது இந்தக்கால வாக்காளர்கள்! யார் சொன்னா வாக்காளர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று?

பி ஜே பி இல் இருந்து நிற்கும் முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த திருநாவுக்கரசர்க்கு "நல்ல மனிதர்" என்கிற பெயர் இருக்கு என்பது உண்மைதான். ஆனால் இந்தக்காலத்தில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. அ தி மு க வேட்பாளர் சத்தியமூர்த்தியும் தேவர்தான். இருந்தாலும் "ரித்தீஷ்" அளவுக்கு கொடுக்கும் கரமல்ல இவர் கரம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு இன்னொருவருக்கு ஓட்டுப்போடும் பழக்கம் என்னவோ நம்ம மக்களிடம் இல்லை போல் தோனுது. "கலியுலக கர்ணன்" ரித்தீஷ் வெற்றி பெறுவாரா? பெறுவார் என்று நம்பப்படுகிறது :-))

Friday, May 1, 2009

தசாவதாரத்தின் தோல்வியும் சிவாஜியின் வெற்றியும்!



சிவாஜியும் தசாவதாரமும் மிகப்பெரிய வெற்றிப்படங்கள். 70 கோடி போல செலவு செய்து எடுத்த படங்கள் இரண்டுமே. தயயரிப்பாளர்கள்/விநியோஸ்தகர்களுக்கு 70 கோடிக்குமேல் இலாபம் சம்பாரித்த கொடுத்தப்படங்கள்.

இரண்டுமே தமிழ்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றவை. இரண்டு படங்களுடைய டி வி ரைட்ஸ்ஸையும் கலைஞர் டி வி நெறைய பணம் கொடுத்து பெற்றுவிட்டது.

அப்புறம் ஏன் தசாவதாரம் தோல்வினு சொல்றப்பா?

இருங்க விசயத்துக்கு வரேன்.

கமல், சினிமாவைப் பொறுத்தமட்டில் ரஜினியின் போட்டியாளர் என்று அவரே சொல்லி இருக்கிறார். எங்கே சொன்னார்? படையப்பா 200 வது நாள் விழாவில் கமலஹாஷனே மேடையில் சொன்னார்.

"நானும் ரஜினியும் நண்பர்கள் ஆனால் தொழிலில் எங்களுக்குள் நிச்சயம் போட்டி இருக்கு. படையப்பா வெற்றியை கொண்டாடுகிறோம். ஆனால் இதே போல் ஒரு வெற்றியை நானும் கொடுக்கனும் என்கிற எண்ணம் என்னிடம் இல்லாமல் இல்லை" என்றார்.




சிவாஜியை ஆரம்பித்தது எ வி எம், ஆரம்பம் பூஜையுடன் நல்லா ஆரம்பித்து, சங்கர் கேட்ட டைம், மற்றும் தேவையான பணம் கொட்டப்பட்டு எடுத்து வெளியிட்டார்கள். படம், வெற்றியடைந்தது.

அதோடு முடியவில்லை. 175 வது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது! எ வி எம் அழகாக முடித்தது சிவாஜி அத்தியாயத்தை.

தசாவதாரம் ஆரம்பமும் அதே போல்தான். கே எஸ் ரவிக்குமாருக்கு தேவையான எல்லாமே கொடுக்கப்பட்டு பிரமாண்டமாக வெளிவந்து (இடையில் ஜாக்கி ச்சான் வேற வந்து ஆடியோ கேஸட் வெளியிட்டார்), பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதோட முடிந்துவிட்டது.

100 வது நாள் விழாவோ, 175 நாட்கள் விழாவோ கொண்டாடப்படவில்லை! முந்தாநேற்று பெய்த மழையில் நேற்று மொளைத்த காளான்தான் இந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன். கேவலம் ஒரு வெற்றிவிழாகூட எடுக்காமலே தசாவதாரம் அத்தியாயம் முடிந்துவிட்டது :( கமலுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இது ஒரு சோகமான விசயம்.