Monday, May 4, 2009

"கலியுலக கர்ணன்" ஜே கே ரித்தீஷ்!

ரித்தீஷ்க்கு "பெரிய மனசு", இவர் ஒரு "கலியுலக கர்ணன்", "வள்ளல் பாரி பரம்பரை" என்று பலரும் சொல்கிறார்களாம் இவர் தொகுதியில். அவரை பார்ப்பது எளிது. பார்த்தால் நிச்சயம் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் அவர் என்று இந்த தொகுதி மக்கள் நம்புறாங்க. ரித்தீஷ் ஜெயித்தால் நிச்சயம் தொகுதிக்கு செய்வார் என்றும் நம்பப்படுகிறது.

பலகோடி சொந்தக்காரர்களுக்குத்தான் இந்த முறை எம் பி டிக்கெட் கொடுக்கப்பட்டது! ஜே கே ரித்தீஷ் ஒரு கோடிஸ்வரர் என்பதால்தான் இவருக்கும் கொடுக்கப்பட்டது என்பதும் உண்மை. இன்றைய கோடீஸ்வரர் ரித்தீஷ்குமார் ஒரு 20 வருடங்கள் முன்னால் ஒரு ஏழை சிவக்குமார். "குமாரு" என்று அழைக்கப்பட்டார். எப்படியோ கிடைத்த ஒரு "லாட்டரி" தொகையை வைத்து "ரியல் எஸ்டேட்" பிஸினெஸ் செய்து குறைந்த நாட்களிலேயே முன்னேறியவர்தான் இன்று கோடிஸ்வரான இந்த ரித்தீஷ் குமார்.

இவர் பரந்த மனது, அள்ளிக்கொடுக்கும் கரம் எல்லாம் தெரிந்த இவர் தொகுதியில் உள்ள மக்கள் பேசிக்கொள்வது..

நம்ம குமார பார்த்தியா? காசு கொடுத்தானா?


அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவதற்கு காரணம் "குமாருடன்" அவ்வளவு "இண்ட்டிமேட்" ஆ பழகுறாங்க மக்கள்

எலக்ஷன் முடிந்ததும் செய்வது எல்லாம் அந்தக்காலம்! எலக்ஷனுக்கு முன்னாலேயே காசு வாங்கிக்கொள்வது இந்தக்கால வாக்காளர்கள்! யார் சொன்னா வாக்காளர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று?

பி ஜே பி இல் இருந்து நிற்கும் முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த திருநாவுக்கரசர்க்கு "நல்ல மனிதர்" என்கிற பெயர் இருக்கு என்பது உண்மைதான். ஆனால் இந்தக்காலத்தில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. அ தி மு க வேட்பாளர் சத்தியமூர்த்தியும் தேவர்தான். இருந்தாலும் "ரித்தீஷ்" அளவுக்கு கொடுக்கும் கரமல்ல இவர் கரம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு இன்னொருவருக்கு ஓட்டுப்போடும் பழக்கம் என்னவோ நம்ம மக்களிடம் இல்லை போல் தோனுது. "கலியுலக கர்ணன்" ரித்தீஷ் வெற்றி பெறுவாரா? பெறுவார் என்று நம்பப்படுகிறது :-))

2 comments:

ramalingam said...

ரித்தீஷ் மற்ற சமயங்களிலும் நிறையப் பேருக்கு உதவுவதாக கேள்விப்படுகிறேன். அது நல்ல விஷயம்தானே. வேறு எவ்வளவு பேர் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.

வருண் said...

இராமலிங்கம்:

நிச்சயம் அவர் பல பேருக்கு உதவுகிறார்னுதான் சொல்ல வந்தேன். தவறாக இல்லை :-)