Friday, February 27, 2009

நீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா?

“என்னம்மா வித்யா, மாப்பிள்ளை வரலையா?”

“இல்லைப்பா, நான் மட்டும்தான் வந்தேன்”

“என் மேலே இன்னும் கோபமா இருக்காராம்மா மாப்பிள்ளை?”

“என் கல்யாணத்திற்கு என்ன என்ன செய்வதாக நீங்க அவர் அப்பா அம்மாவிடம் ப்ராமிஸ் பண்ணுனீங்கப்பா?”

“உனக்கு 20 சவரன் போட்டு 2 லட்சம் கொடுப்பதாக சொன்னேன் அம்மா. ஆனா கடைசி நேரத்தில் 75,000 தான் புரட்ட முடிந்தது”

“அதை கல்யாணத்திற்கு முன்பே அவரிடம் சொன்னீங்களா,அப்பா?”

“இல்லைம்மா கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதனால் சொல்ல முடியாம போயிருச்சும்மா”

“எதுகுப்பா இப்போ நீங்க தவறே செய்யாதமாதிரி பேசுறீங்க? இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு, அந்தப்பணம் கொடுத்துட்டீங்களா? தாலிதான் கழுத்துல ஏறிருச்சே!இனிமேல் என்ன? இதுக்காகவா அனுப்பிவிடுவார்னு ஒரு நம்பிக்கை! இல்லைப்பா?”

“இல்லைம்மா பணம் புரட்ட முடியலை. வீட்டு வேலை அது இதுனு செலவாயிடுச்சும்மா”

“ அவர் மேலே தப்பு இல்லைப்பா. வரதட்சணை வாங்குவது தப்புத்தான். ஆனா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கொடுக்காமல் விடுறது அதைவிட கேவலம். அவர் நீங்க ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார்”

“என் கெட்ட நேரம் அம்மா”

“அதெல்லாம் இல்லைப்பா, உங்க பேராசை! உங்களிடம் இருக்கிற சூழ்நிலைக் கேற்றார்போல் நீங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கனும். எதுக்காக அகலக்கால் வைக்கிறீங்க? உங்க தகுதிக்கேத்த ஒரு மாப்பிள்ளை, கொஞ்சம் குறைய சம்பாரிக்கிற ஆம்பளையா பார்க்க வேண்டியதுதானே?”

“என்னம்மா வரதட்சணை வாங்கிறது சரினு சொல்றயா?”

“நீங்க அம்மாவை கல்யாணம் செய்யும்போது நகை போடச்சொல்லி, வரதட்சணை ஒண்ணும் வாங்கலையா அப்பா?”

“இல்லைம்மா, அந்தக்காலத்தில் என் சூழ்நிலை வேறம்மா”

“இதேபோல் தான் அவரும் சொல்றார். நீங்க ஒண்ணும் அழ வேணாம். அவர் இதுக்காக என்னை அனுப்பப்போறதில்லை. இருந்தாலும் உங்களை அவர் வெறுப்பதில் எனக்கு எதுவும் தவறாக தோனலை”

Wednesday, February 25, 2009

நான் கடவுளில் இளையராஜாவின் இசை நல்லாயில்லை- சாரு நிவேதிதா?!!

திரு. சாரு நிவேதிதா “நான் கடவுளு”க்கு ஒரு விமர்சனம் எழுதி இருக்கார்(?). என்ன மொழி யிலே? மலையாளத்தில்! ஏன் தமிழ் படத்துக்கு மலயாளத்தில் தமிழ் தளத்தில் விமர்சனம் எழுதனும்? அதெல்லாம் கேக்க கூடாது. முடிஞ்சா ட்ரேண்ஸ்லேட் பண்ணி புரிஞ்சுக்கோங்க! இல்லைனா போயிக்கிட்டே இருங்க!

நான் கடவுள்? விமர்சனம் எழுதப்போறேன் நு இவர் இரண்டு ஆர்டிக்கிள் எழுதிவிட்டார். இப்போ மலையாளத்தில் ஒரு விமர்சனம்!

என்ன கொடும இது சாரு? னு கேட்கக்கூடாது. யார் உம்மைப் படிக்கச்சொன்னது னு கேட்பார்!

சரி இந்தப்படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஏன் இவருக்கு இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு தயக்கம்?

ஜெயமோஹன் வசனம் எழுதியதாலா? இல்லை இளையராஜா இசை அமைத்ததாலா? ரெண்டுமேவா? யாருக்குத் தெரியும்?

பிரபல பதிவர்கள் பலர் இளையராஜா தான் இதில் ஜொளி க்கிறார் என்றார்கள். இவர்கள் இசை ஞானம் பற்றி எனக்குத்தெரியாது! ஆனால் திரு. சாரு நிவேதிதா சொல்கிறார் (என் மலையாள நண்பர் மொழிபெயர்ப்பின் படி) நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக! But he says that he is NOT commenting badly because of his personal opinion differences with IR. It is strictly business, னு சொல்றார்! நீங்க நம்புறீங்களா? இல்லையா? ஏன்?

Are you proud of being a Tamil? You should be. Don’t ask me why! LOL

See how complicated our artistes and critics are! LOL

ஆஸ்கர், ஒலிம்பிக் அல்ல- கமல்!

ஏ ஆர் இரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசை அமைத்து, பாடியதற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியதை பாராட்டிய கமல், ஆஸ்கர் என்பது ஒலிம்பிக் போல அல்ல அமெரிக்கன் ஸ்டாண்டர்டை பொறுத்தது என்று சொல்லியுள்ளார்.

என்னைப்பொறுத்த வரையில் இது தேவை இல்லாத ஒரு கம்பாரிஷன். தேவையே இல்லாத ஒரு ஸ்டேட்மெண்ட். சும்மா அவரை வாழ்த்திவிட்டு அதோட நிறுத்தி இருக்கலாம். பாவம், ஆஸ்கர் என்றாலே இவர் ஏதாவது இப்படி சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள் எல்லோருமா க சேர்ந்து. அதனால்தான் இப்படி ஏதாவது சொல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.

ஒரு இந்திய நடிகர் ஆஸ்கர் (பெஸ்ட் ஆக்டர்) வாங்குவது சான்ஸே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு நல்ல ஆங்கிலப்படத்தில் நடித்தால், நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஹாலிவுட் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.

நடிகர் கமலஹாசனால், ஒரு பாலா, அமீர், மணிரத்னம் படங்களில் கூட நடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஒரு “பெரிய ஆள்” ஆகிவிட்டார். இவர் எப்படி ஆங்கில டைரக்டர் கீழ் நடிப்பார்? ஆஸ்கரை மறந்து சில நல்ல படங்கள் தமிழிலேயே தந்தால் போதும்.

காதலுடன் -10

"தங்கைக்கு நல்ல வரன் வருதும்மா சந்தியா” என்றார் அப்பா.

“அப்படியா அப்பா? வரப்போற மாப்பிள்ளை என்ன பண்றார்? அவளுடன் வங்கியில் வேலை செய்றாரா?”

“இல்லைம்மா இவர் ஏதோ கல்லூரி பேராசிரியராம். தங்கைக்கும் ரொம்ப பிடிச்சி இருக்குனு சொல்றாள்”

”அப்போ ஏற்பாடு பண்ணி சீக்கிரம் நாள் குறிங்க அப்பா!”

“எப்படிம்மா? உனக்கு கல்யாணம் முடியாமல்?” என்று இழுத்தார்.

“அவளுக்கு முதலில் முடிந்தால் ஒண்ணும் இல்லைப்பா”

“அதெப்படிம்மா? ஊரில் உள்ளவங்க கேக்கிறதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமாம்மா?”

“என்னப்பா இது? ஊர் உலகத்துக்கெல்லாம் பயப்படாதீங்கப்பா”

“உனக்கு இதெல்லாம் புரியாதும்மா. நீ அமெரிக்காவில் இருக்க. நாங்க சொந்த பந்தம் இல்லாமல் வாழ முடியாதும்மா”

“நான் இப்போதைக்குள்ளே கல்யாணம் செய்வதா இல்லைப்பா. சரி லாவண்யா எங்கே?”

“அவ கோயிலுக்கு போயிருக்காம்மா”

“நல்ல இடம்னா உடனே பேசி முடிங்கப்பா. சரி நான் அடுத்த வாரம் பேசுறேன்” என்று ஃபோனை வைத்தாள்.

அவள் செல்ஃபோன் ரிங் பண்ணியது. அவளுக்கு அதை எடுக்க மூடு இல்லை. பேசாமல் விட்டுவிட்டாள். கொஞ்ச நேரம் அப்படியே படுத்து இருந்தாள். ஒரு மாஹ்டிர்யாக இருந்தது மனது. பிறகு போய் முகம் கழுவிட்டு ஒரு காஃபி போட்டு குடித்து வாய்ஸ் மெசேஜ் செக் பண்ணினாள்.

ரமேஷ் தான் அது! “சந்தியா! நாந்தான் சும்மாதான் கூப்பிட்டேன். போர் அடிச்சது அதான் கூப்பிட்டேன். நான் இன்னும் ஒரு 45 நிமிஷத்தில வந்துவிடுவேன். வந்து உனக்கு காஃபி போட்டு தர்ரேன். சரியா?”

காலிங் பெல் அடித்தது. வெளியே யாரு அதுனு பார்த்தாள். ரமேஷ்தான்.

கதவைத்திறந்து, “வாங்க” என்றாள்.

“என்னாச்சு?”

“சனிக்கிழமை, விட்டிற்கு கால்பண்ணி பேசினேன்” என்றாள் அலுப்பாக.

“அப்பா அம்மாலாம் நல்லா இருக்காகங்களா?”

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. தங்கைக்கு ஒரு வரன் வருதாம். அதனால் என்னையும் ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்கிறார் அப்பா”

“பண்ணிக்க வேண்டியதுதானே?"

“என்னை யாரு கட்டிக்குவா ரமேஷ்?”

“ஏன் அழகா இருக்கிற மனைவினா எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்னு யோசிக்கிறாங்களா?”

“என்னைக்கேட்டா? நீங்கதான் சொல்லனும் இந்த ஆண்கள்பற்றி”

“இந்தக்காலத்து ஆண்களா? எல்லாம் போர்ன் பார்த்து பார்த்து பர்வேர்டெட் ஆகி கழண்டுபோய் அலையுறானுக. என்ன ஆகப்போறானுகள்னு யாருக்கு தெரியும்? ஆடி அடங்கி அப்புறம் ஆன்மீகம் சாமினு அலைவானுக”

“அதென்னவோ உண்மைதான். எல்லாம் செஞ்சுட்டு, அப்புறம் தத்துவம் வியாக்யானம் எல்லாம் பேசுவதுதானே ஆண்கள்?”

“பேசாமல் இன்னொரு நல்லபொண்ணா பார்த்து கட்டிக்கோவேன்?”

“செய்யலாம்தான். ஆனால், நான் லெஸ்பியன் இல்லையே” அவள் சிரித்தாள்.

“அப்போ கஷ்டம்தான்”

“என்ன கஷ்டம்?”

“உனக்கு கல்யாணம் ஆவது. ஒண்ணு செய்யலாமா, சந்தியா?’

“என்ன?”

“சும்மா விளையாட்டுக்கு என்னை கட்டிக்கிறயா?"

“விளையாட்டுக்குனா?”

“எந்த கமிட்மெண்ட்ஸ்ம் கிடையாது. எந்த நேரத்திலும் ஒன் ஆஃப் அஸ் கேன் வால்க் ஆஃப். செக்ஸ்லாம் வேணாம்! சரியா?”

“அது ஏன் செக்ஸ் வேணாம்?”

“உனக்கு அதெல்லாம் பிடிக்காதுதானே?"

“உங்களுக்கும் பிடிக்காதா?”

“பின்னால பார்த்துக்குவோம்”

”பின்னாலேனா எப்போ ?”

“நமக்குள்ளே ஒரு நெருக்கம் வந்ததும்!”

“சரி, டீல்!”

“என் பேரெண்ட்ஸை இப்போவே கூப்பிட்டுச் சொல்லவா? எனக்கு ஒரு மாப்பிள்ளை ரெடினு?”

“இப்போ என்ன அவசரம்?"

“என் தங்கச்சி பாவம் இல்லையா? அதான்”

“பக்கத்து இலைக்கு பாயசம் போட சொல்றியா? ஆமா உனக்கு அந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ்லாம் வேணாமா?"

“அதெல்லாம் வேணாம். நம்மதான் செக்ஸ் வச்சுக்கப்போறதில்லையே?”

“ஆமா அதையே மறந்துட்டேன் பாரு”

“அதுக்காக கண்டவள்ட்ட போய் படுத்துட்டு வரக்கூடாது”

“உன்னோட ஒரே கட்டிலில்லயா படுக்கசொல்ற? எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையே”

“ஐயோ, ரொம்பத்தான்! சரி என்னோடவும் படுக்க வேணாம். தனி ருமில் படுங்க"

”நல்ல ஐடியா”

“நான் உங்களுக்கு குக் பண்ணனுமா?”

“எனக்கு குக் பண்ணத்தெரியும்”

“நீங்க எனக்கு குக் பண்ணப்போறீங்களா?"

“உனக்கு ரொம்ப தைரியம்தான். என் சமயலை சாப்பிட ரெடினா?”

”ஒரே நேரத்தில் குக் பண்ணினால் அப்படி இப்படி பார்க்கிறது, உரசறது, அதெல்லாம் கூடாது”

“இதெப்படி இருக்கு தெரியுமா?"

“எப்படி?"

“நான் கிச்சனில் இருக்கையிலே என்னை அங்கே இங்கே பார்த்து என் அழகை அப்ரிசியேட் பண்ணுங்க. முடிஞ்சா தெரியாமல் உரசுற மாதிரி அங்கே இங்கே உரசுங்கனு சொல்றமாதிரி இருக்கு”

“இருக்கும் இருக்கும்”

“என்னடா வேணும் உனக்கு?"

“இப்படியெல்லாம் கொஞ்சாதீங்க ப்ளீஸ்! கொஞ்சினால் எனக்கு அழுகை வந்திடும்"

“சரிடி சந்தியா, இனிமேல் ரூடாவே பேசுறேன்"

“டீ போட்டு பேசினால் ரொம்ப செக்ஸியா இருக்கு”

“அப்படியா?”

“ஏய் பேச்சு மாறக்கூடாது. என்னை கட்டிக்கனும்”

“எங்கே ப்ராமிஸ் பண்ண?"

“தலையிலே"

“தலையில் புரையேறும்போதுதான் அடிக்கனும், அங்கே வேணாம். ஹவ் அபவ்ட் இங்கே?”

“அதெல்லாம் வேணாம்”

“ஏன்?"

“இதென்ன புது மாதிரியா?"

“என்ன தப்பு? தலையைவிட இதுதான் ப்ரஸியஸ் உனக்கு!"

“அதெல்லாம் எனக்கு சென்ஸிடிவ் ஏரியா”

“அப்படியா?”

“என்ன அபப்டியா? உங்களை என்ன செய்யலாம்?”

“சரி என்ன ஆச்சு, காவ்யா மேட்டர்?”

“அவ இன்னும் புலம்பத்தான் செய்றா?”

“குழந்தை பிறந்ததும் “அம்மா” நு அவளை தெய்வீகமா பார்க்கிறார் போல கார்த்திக்”

“நல்ல தெய்வீகம் போங்க!”

“சரி, நீ ஒரு மாதிரியா இருக்க, நான் சூடா காஃபி போட்டுத் தரவா?”

“போடுங்க"

“இண்ஸ்டண்ட் காஃபி ஏதாவது இருக்கா?"

“ப்ரூ இருக்கு”

“சரி நீ இங்கேயே இரு நானே காஃபி போட்டு கொண்டு வரேன்”

-தொடரும்

Monday, February 23, 2009

முத்துக்குமார், சீமான், கருணாநிதி!!!

தமிழர்கள் பல வகை. தலைப்பில் சொல்லப்பட்ட மூவரும் மூன்று வகையான தமிழர்கள். அவர்களின் செயல்கள் அவர்கள், நிலைமை, தகுதி, வயது, உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு ஏற்றார்போல் இருக்குனு தோனுது

இதில் மறைந்த தோழர் முத்துக்குமார் ஒரு வகை. என்னிடம் உங்களுக்கு கொடுக்க ஒண்ணுதான் இருக்கு. அது என் உயிர் என்று தன் உயிரையே ஈழத்தமிழருக்காக கொடுத்துவிட்டு போய்விட்டார் இந்த தமிழர். அதற்கு நம் பதிவர்கள் எல்லாம் மறைந்த உடன்பிறவா சகோதரர் முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டார்கள். அவருடைய வீரச்செயலை பாராட்டினார்கள். நிச்சயம் அவருடைய தியாகம் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியது.

அடுத்த வகை! இயக்குனர் சீமான்! இவர், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து இப்போது சிறையில் இருக்கிறார். அவரையே நாம் தலைவராக்கினால் என்ன? என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். அவர் தலைவராகி, தமிழ் நாட்டு முதல்வர் ஆனா இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவாரா? எப்படி? விளக்கம் சொல்லவும்!

மூன்றாவது வகை, முதல்வர் கருணாநிதி. சமீபகாலமாக, திரு கருணாநிதி மேல் பயங்கர தாக்குதல் நடக்கிறது. அவருடைய அரசியல்தான் தமிழர்களை கொல்லுவதுபோல், அவர் தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று பலர் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே புரியலை. அவர் தமிழின துரோகியா? இப்போ கருணாநிதி என்னதான் செய்ய முடியும்? என்னதான் அவர் செய்யனும் இந்த ஜீனோசைட தடுக்க ? அவருக்கு அவ்வளவு சக்தி இருக்கா?

இந்தியா என்கிற நாட்டின் கொள்கைகளை எதிர்த்து போய், ஈழத்தமிழர்களுக்கு எப்படி அவர் உதவ முடியும்? அவருக்கு உண்மையிலேயே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் மேல் கருணை, அன்பு இல்லாமல் எப்படிப் போகும்?

நான் ஒண்ணும் முதல்வரின் ஜால்ரா கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை அவர் ஆசைப்பட்டாலும் அதை அவரால் மட்டும் தீர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

என்ன, அவர் ஒரு தியாகம் பண்ணலாம், ஈழத்தமிழருக்காக அவர் ஆட்சியை இழந்து, ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியும். அதைத்தான் எல்லோரும் எதிர் பார்க்கிறார்களா? அப்படி அவர் செய்தால் அவர் தமிழினத்தைக் காப்பாற்ற உதவியதாக ஆகுமா?

அப்படி ஆட்சி இழந்து, ஜெயலலிதா வந்தால், அவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை!

என்னைக்கேட்டால் மேலே சொல்லப்பட்ட மூன்று தமிழர்களுமே, ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள். ஒவ்வொருவருடைய நிலைமையும் வேறு வேறு! ஒருவர் தன் உயிரை இழந்து தியாகியானர். ஒருவர் சிறை சென்று இருக்கிறார். இன்னொருவர் தன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாத நிலையில் இந்தியா என்கிற நாட்டு துரோகியாகாமல் இருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!

மூன்று ஆஸ்கர்கள்! இரண்டு இந்தியர்கள்!

ரெஷூல் பூக்குட்டி என்கிற ஒரு மலையாளி (?) இந்தியரும், மற்றும் நம் தமிழர் ஏ ஆர் ரகுமானும் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றனர்! தமிழர்கள் இந்தியாவுக்கு பெரிய விருதுகள் பெற்றுக்கொடுப்பது அரிது. ஆஸ்கர் என்பதெல்லாம் நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்று பச்சையாகவே ஒரு சிலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நல்லவேளை, ஏ ஆர் ரகுமான் அதுபோல் ஆஸ்கர் எல்லாம் நமக்கு கிடைக்காது என்று அர்த்தமில்லாத தேவை இல்லாமல் வார்த்தைகளை என்றுமே விடவில்லை.

தமிழர் ஏ ஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது [பெஸ்ட் ம்யூசிக்கல் ஸ்கோர் மற்றும் பெஸ்ட் சாங் (ஜேய் ஹோ)]. ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் வழங்கிய அலிஸா கீஸ், இரகுமான் என்கிற தமிழ்ப் பெயரை அழகாக உச்சரித்தார்.

தமிழருக்கே உள்ள தனிப் பெருமை, தனி சிக்னேச்சர் என்னவென்றால் நமக்கு ஒரு பெயர்தான் (பர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்றெல்லாம் நாம் குழப்புவதில்லை)! இரகுமான் என்கிற ஒரே பெயர்தான் சொல்லப்பட்டது (இனிஷியலுடன்).

உண்மையிலேயே எல்லாமே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஆஸ்கர் பரிசை அவர் பெற்றுக்கொள்ளும் போதும் ரொம்ப உணர்ச்சிவசப் படாமல், தமிழில் ஒரு வரியுடன் அவர் நம்பும் கடவுள் அருள்தான் எல்லாம் என்றும், கடவுளுக்குத்தான் எல்லாப் புகழும் என்று அடக்கமாக சொன்னார்.

பூக்குட்டி என்கிற இன்னொரு இந்தியர் (மலையாளி?) "சவுண்ட் மிக்ஸிங்"க் காக ஆஸ்கர் பரிசு பெற்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்டாலும் என் இந்திய நாட்டிற்கு அற்பனம் என்றார். அதுவும் கேக்க நன்றாகவே இருந்தது.

கடைசியாக பெஸ்ட் பிக்ச்சர் பெற எல்லோரும் குடும்பமாக வந்தார்கள். இந்தியர்களாக (அனில் கபூர் மற்றும் ஸ்லம்டாக் மில்லினர் நடிக நடிகர்கள்) ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாக நின்றது மிகவும் நன்றாக இருந்தது!

ஸ்லம் டாக் மில்லியனர் நாமினேட் பண்ணிய எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்றது- ஒன்றே ஒன்றைத்தவிர (சவுண்ட் எடிட்டிங், "டார்க் நைட்" க்கு கொடுக்கப்பட்டது).

Slumdog millionaire won 8 Academy awards out of nominated 9 (10) for different categories! The BEST Picture and best director and cinematogrpahy and editing are other big ones!

By the way, Sean Penn has won another oscar for actor in reading role! I was surprized when he was anounced as the winner for the film MILK! Not long ago, he has won one for Clint Eastwood's Mystic river! I thought "best actor award" would go to someone else! People say sean Penn is a very good human being!

Saturday, February 21, 2009

ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைக்கலைனா?

ஏ ஆர் ரகுமானுக்கு கோல்டன் க்ளோப் கிடைக்கும்னு எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. திடீர்னு ஸ்லம்டாக் மில்லியனருக்கும், ஏ ஆர் ரகுமானுக்கும் கோல்டன் க்ளோப் கொடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் நம்ம எல்லோருமே ஒரு தமிழர் கோல்டன் க்ளோப் வாங்கினார் என்று ரொம்ப சந்தோஷப்பட்டோம் பெருமிதம் அடைந்தோம்.

நாளைக்கு ஆஸ்கர் வின்னர்களை அறிவிக்கப்போறாங்க. கோல்டன் க்ளோப் கொடுத்ததால் ஆஸ்கர் கெடைக்கும்னு ஒன்றும் உத்திரவாதம் இல்லை. ஓப்ரா வின்ஃப்ரீ ஷோவில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று சொல்கிறார். சும்மா எல்லாம் இவர் சொல்லமாட்டார். இது ஒரு புது மாதிரியான வித்தியாசமான படம். ஹாலிவுட்க்கு இது ஒரு புது ப்ளாட். அதனால் இதுக்கு ஆஸ்கர் கெடைக்க நெறையவே வாய்ப்பிருக்கு. பெஸ்ட் பிக்ச்சர் ஆஸ்கர் ஸ்லம்டாக் மில்லியனருக்கு கெடச்சா நிச்சயம் ஏ ஆர் ரகுமானுக்கும் கெடைக்க வாய்ப்பு இருக்கு.

நெறைய நல்ல படங்கள் கம்பீட் பண்ணுவதால் கெடைக்காமாகப் போகவும் வாய்ப்பிருக்கு. கோல்டன்க்ளோப் கிடைச்சா ஆஸ்கர் கெடைக்கனும்னு இல்லை. அப்படி ஏ ஆர் ரகுமானுக்கு கெடைக்க வில்லைனாலும் மனம் தளராமல் இருங்கப்பா! ஆஸ்கர் கம்மிட்டியை ஆளாளாக்கு திட்ட ஆரம்பிச்சுறாதீங்க. அதானே நம்ம எப்போதும் செய்வோம்?

Friday, February 20, 2009

சுப்பிரமணியபுரம் vs நான் கடவுள்

ஒரு விசயம் சொல்றேன் கேட்டுக்கோங்க! என்னனா, நீங்க எதுலயுமே பெரிய ஆளா ஆகம, பிரபலமாகாம இருப்பது நல்லது. ஒருவர் பிரபலமானதும் அவருக்கு திமிர் அதிகமாவது ஒருபுறமிருக்கட்டும், அவரிடம் இருந்து மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாயிடும். இந்த எதிர்பார்ப்பு அதிகமானதும் வாசகர்கள் ரசிகர்கள் விமர்சகர்களை திருப்திப்படுத்துவது ரொம்பக் கடினம்.

சினிமா உலகில் இதை கண்கூடாகப் பார்க்கலாம். இயக்குனர் மணிரத்னத்தின் மெளனராகம், நாயகன் போன்ற படங்கள் அவர் பிரபலமாகுமுன்பு வந்தன. அதுக்கு முன்னாலே வந்த இதயக்கோயில், பகல் நிலவெல்லாம் இவர் இயக்கியதுதான். அவைகளை யாரும் பெருசாக்கூட பேசலை. கோவைத்தம்பியின் இதயக்கோயில் பார்த்துட்டு, ஆர். சுந்தர்ராஜன் (இவர்தான் கோவைத்தம்பி படமெல்லாம் வரிசையாக எடுத்தார்) படங்கள் அளவுக்கு இல்லை என்று சொன்னார்களாம்! ஆனால் மெளனராகம், நாயகனுக்கு அப்புறம் மணிரத்னம் எங்கோ போயிட்டார். அக்னிநட்சத்திரம், தளபதி போன்றவைகள் கமெர்ஷியல்லா பெரிய ஹிட் ஆச்சு.

அதுபோல்தான் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, அவர் யாருனே தமிழ் சினிமாவுக்கு தெரியாதபோது வந்த படம். அவருடைய 5 வது படம் நிழல்கள்தான் தோல்வியைத்தழுவியது.

பாலாவின் சேது, அதேபோல்தான் சசியின் சுப்பிரமணியபுரமும் போன்றவையும், அதில் உள்ள குறைகளை ஒதுக்கி பாராட்டப்பட்டன. இப்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தன.

ஆனா ஒருவர் பிரபலமானவுடன் மக்கள் எதிர்பார்ப்பு அளவுக்கு மிஞ்சிவிடும். மணிரத்னம் இன்னைக்கு தமிழ்ப்படம் தைரியமாக எடுக்க முடியலை. அவரால் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. அதனால் ஹிந்திக்கு ஓடிவிட்டார்! சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ப்படங்கள் எதுவுமே க்ரிடிக்க்லாகவோ கமர்ஷியலாகவோ வெற்றியடையவில்லை.

இப்போ பிரபலமாகிவிட்ட பாலாவின் நான் கடவுளுக்கு சசியின் சுப்பிரமணியபுரத்திற்கு கெடச்ச வரவேற்பு கிடைக்கவில்லை! மாயாவி சொன்னதுபோல சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர். இந்தப்படமும் செட்டிங்ஸ் எல்லாம் போடாமல் பாலாவின் ஸ்டயிலில் எடுக்கப்பட்டது. ஆனால் திரைக்கதையில் சாதாரண மனிதர்களைப்பற்றி மட்டுமே சுற்றி இருந்தது கதை. அவர்கள் உணர்ச்சிகள் எல்லாம் ரொம்ப புரியும்படி இயற்கையாக இருந்தது. சினிமாத்தனம் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சசி ஒரு "அந்நியனையோ" அல்லது "அகோரியையோ" காட்டப்படவில்லை!

ஆனால் பாலாவிடன் நான் கடவுள் ஒரு 3 வருடம் "மாஞ்சி மாஞ்சி" எடுக்கப்பட்ட படம். இது பாலாவின் 4 வது படம். இதனால் பாலாவிடம் எதிர்பார்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமானது. அது ஒரு பெரிய பிரச்சினை இந்தப்படத்துக்கு. என்னைப்பொறுத்தவரையில் இன்னொரு காரணம் என்னவென்றால் ஒரு சாமியாரை பெரிய ஹீரோவாக காட்டியது. சுப்பிரமணியபுரத்தில் வருகிற அனைத்துமே இயற்கையில் நடப்பது. அதில் எந்தவிதாமான செயற்கைத்தனமும் இல்லை. ஆனா, இங்கே ஒரு அகோரி சாமியார் வந்து காப்பாத்துறார். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்கிற இயற்கையான ஒண்ணு இல்லை. வீட்டுக்கு நடுவில் உக்காந்து கஞ்சா கசக்கினால், பெத்த மகனே என்றாலும் செருப்பால அடிவிழும். பாசம், அன்பு என்றால் என்னனே தெரியாத ஒரு ஆளை பெத்த அம்மா பார்த்து உருகுவதெல்லாம் சும்மா சினிமாத்தனம். அதுபோக சாமியார்னாலே பொதுவாக என்னைப்போல மக்களுக்கு மற்றும் நம்ம திராவிட பாரம்பரிகத்தில் இருந்து வருபவர்களுக்கு பிடிக்காது.

சாமியார் என்றாலே ஏமாற்றுக்காரகள் என்று நம்புகிறது நம் தமிழ் மண்ணில் வாழும் மறத்தமிழர்கள்.

நம்ம தந்தை பெரியார் அகோரி சாமியார் ஹீரோவைப் பார்த்தா என்ன பண்ணுவார்?

பாராட்டுவாரா?

கெட்டவார்த்தை சொல்லி திட்டுவாரு!

பாலாவையும் சேர்த்து திட்டுவாரு! இல்லைனு சொல்ல யாருக்காவது தில்லு இருக்கா?


இப்படி இருக்கும் நம் தமிழ் மண்ணில், மறத்தமிழர்கள் வாழும் சூழலில் ஒரு காசியில் வளர்ந்த தமிழ் சரியாகப் பேசத்தெரியாத ஒரு சாமியார் (அதுவும் கஞ்சா குடித்து மூளையை எரித்த சாமியார்) வந்து இல்லாத உணர்ச்சிகளை காட்டி காப்பாத்துவதுபோல் இருப்பது தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வட இந்திய சாமியார் வந்து நம்ம தமிழர்களுக்கு புத்திபுகட்டுவது போல இருக்கு. நவீன காலத்து ராமாயணமானு தோனுது. அதுலதான் நம்ம தமிழர்களை இவ்வளவு கேவலமா காட்டுவார்கள்.

சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர்! காரணம் அதில் வந்த ஹீரொ ஒரு சாதாரண தமிழ் சண்டியர். நான் கடவுள் அதுபோல் ஒரு ப்ளாக் பஸ்ட்டராக முடியவில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்!

பின்குறிப்பு: நான் கடவுளை பிடிச்சு ரொம்பவே தொங்கியாச்சு, இதை விட்டு தொலையலாம்னு இருந்த என்னை தூண்டிவிட்டு இந்தப் பதிவை எழுத வைத்த பெருமை, திரு. மாயாவி மற்றும் திரு. மணிகண்டனைச் சேரும்

Thursday, February 19, 2009

தமிழ்மணமும் "அமெரிக்கன் ஐடலு"ம்

பிரபல ப்ளாகர்கள்/பதிவர்கள் மற்றும் திறமைமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி வேணா பெரிய ஆளாகிவிடுவார்கள். ஏன்னா அவர்களுக்கு சரக்கும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும் அதிகம். அவர்கள் வளர்வதற்கு தமிழ்மணம்போல் ஒரு திரட்டியின் உதவி தேவையா என்னனு எனக்குத் தெரியலை.

தமிழ்மணம், "அமெரிக்கன் ஐடல்"என்கிற ஃபாக்ஸ் டெலிவிஷனில் வருகிற ஷோ போல என்பேன்!

என்ன திடீர்னு என்னனென்னவோ சொல்றனு யோசிக்கிறீங்களா?

என்னைப்போல் ”அமெச்சூர் மற்றும் அரைகுறைகள்” தங்கள் எண்ணங்களை கொட்டி, தங்களிடம் இரண்டு வரி சில எழுத்துப்பிழையுடனாவது எழுத திறமை இருக்கிறதா? மேலும் ஒருவர் தன் உணர்வுகளை வெளி உலகத்திற்கு சொல்லத்தெரியுதா? என்பதையும் அறிய இப்படி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறோம். நான் அப்பப்போ புலம்புவதை இதன் மூலம் உலகமெங்கும் புலம்புவதற்காக, கயல்தான் இந்த ப்ளாக் ஆரம்பித்தது! ஏதாவது எழுதி என்னவோ பண்ணுனு என் தலையில் கிறுக்கிற வேலை எல்லாத்தையும் கட்டிவிட்டு இப்போ அவள் வேலையில் ரொம்ப பிஸியாயிட்டாள் :( . எப்படியோ சம்பாரித்து என்னை கண் கலங்காமல் பார்த்துக்கிட்டா சரிதான். :-) சரி ப்ளாக் ஆரம்னபிச்சு எதை எதையோ எழுதி பதிவு செய்றோம். இந்த ப்ளாகை தேடி கண்டுபிடிச்சு ஒரு 10 பேர் படிப்பார்கள். இது பல நூறுபேருக்கு போய் சேருவதுக்குள்ளே நமக்கு வயசாகிவிடும்.

இதில் நாங்கள் கிறுக்குவதை பல ஆயிரம் வாசகர்களுக்கு கொண்டு சென்று அவர்களை பின்னூட்டங்கள் எழுத ஊக்குவிப்பததும் தமிழ்மணம்தான். மேலும் பல வாசகர்களை அமைதியான விசிட் பண்ணவைத்து, அதன்மூலம் மேலும் மேலும் எழுத ஊக்குவிப்பது தமிழ்மணம் என்கிற இந்த திரட்டியால்தான். மற்றவர்களுக்கு எப்படியோ, ரிலாக்ஸ் ப்ளீஸ் ப்ளாக்ல செய்கிற பதிவுகளை இத்தனை தமிழ்மக்களுக்கு கொண்டு சென்ற பெருமை, தமிழ்மணத்தைத்தான் சாரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நம்ம கலாச்சாரத்தில நன்றி என்று வாயளவில் சொல்வதில்நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. நன்றி சொல்வதற்கும், அதை தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளவும் தயங்கும். ஷையாக ஃபீல் பண்ணும் மக்கள வாழும் கலாச்சாரம் நம்முடையது. ஆனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் உள்ளத்தில் உள்ள நன்றியை வாய்விட்டு சொல்வதில் தவறில்லை இல்லை சொல்லனும் என்கிறார்கள். மனதில் உள்ளதை வெளியில் சொன்னால் தவறில்லை என்கிறார்கள். நல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும் இல்லையா?

இங்கு நான் கிறுக்குவதை வாசிக்க வரும் வாசகர்கள், தோழ, தோழியர் அனைவருக்கும் நன்றி!

உங்கள் சேவைக்கு நன்றி தமிழ்மணம்! வாழ்க தமிழ்மணம்!

Wednesday, February 18, 2009

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!

ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.

கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.

நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!

சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?

இல்லை என்கிறார்கள்!

ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை. :(

இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!

நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!

இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?

Tuesday, February 17, 2009

நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?

நான் கடவுள் படம் தமிழ் நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக, விமர்சகர்கள் மற்றும், சாமியார்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் மத்தியில்.

அடுத்த வருடம் ஃபாரின் ஃபில்ம்ஸ்க்கு கொடுக்கப்போகிற ஆஸ்கர் இந்த படத்திற்குத்தான் என்று உறுதியாக நம்புகிறார்கள் பாலா மற்றும் இளையராஜா ரசிகர்கள்!

சாமியார்களும், பிச்சைக்காரர்களும் பாலாவுக்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்களாம்.

இதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும்போது, திரு ரஜினிகாந்த் அவர்கள் இந்தப்படத்தை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதினாராம். "கடவுளுக்கு" இப்படி ஒரு கெட்ட நேரமா? ரஜினி என்றாலே தமிழர்களுக்குத்தான் ஆகாதே! இவர் என்ன சொல்வது? நான் என்ன பார்ப்பது? என்கிற தமிழர்கள் வைராக்கியம் வெற்றியடைந்ததால், நல்லா ஓடிக்கொண்டிருந்த நான் கடவுள் இப்போது ஃப்ளாப் ஆகிவிடும் நிலைமை வந்துவிட்டதாம்! :(

நம்ம அகோரி(கஞ்சா) சாமியார்கள்தான் காப்பாத்தனும்! :(

Sunday, February 15, 2009

ஐ டி வேலை இழப்புகளும் முதலைக்கண்ணீரும்!

ஒரு சாதாரண என் ஜி ஜி வோ வேலை பார்ப்பவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கியில் வேலை செய்பவர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் எல்லோரும் ஐ டி மற்றும் கால் செண்டரில் வேலை பார்ப்பவர்களைப் பார்த்து வயிறெரிந்தார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, ஃப்ரீ செக்ஸ் கல்ச்சர் இதை எல்லாம் பார்த்து கோபமாக இருந்தார்கள். ஆனால், இன்றைய நிலைமையில், இதுபோல் மென்பொருள் தொழில் வள்ளுனர்கள் பலர் வேலை இழக்கும் நிலையில் இருக்கிறார்கள், பலர் வேலை இழக்கிறார்கள். ஒரு சாதாரண தொழிலாளி வேலை இழந்தால், அதற்கு சமமான சம்பளம் இன்னொரு வேலையில் பெறுவது எளிது. ஏன்னா அவன் வாங்கிய சம்பளம் யாராலையும் ஈடுகட்ட முடியும். ஆனால் ஐ டி தொழிலாளியின் வேலை இழப்புக்கு இன்னொரு ஐ டி வேலைதான் ஈடுகட்ட முடியும். ஏன்னா இவர்கள் வாங்கும் சம்பளம் அப்படி. வேற எந்த வேலையிலும் இவர்களுக்கு அதற்கு ஈடான சம்பளம் கொடுக்க இயலாது.

இப்போ, இவர்கள்தான் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள், பணம் வருதுனு தலைகால் தெரியவில்லை என்று எரிச்சலுடன் இருந்த 90% மக்கள், இன்று வேலையிழக்கும் இந்த தொழிலாளிகளைப் பார்த்து கவலைப்படுவார்களா?

இல்லை, இவனுக ஆடிய ஆட்டம் தாங்க முடியலை. இப்போவாது அடங்குகிறார்களா பார்ப்போம் என்று எண்ணுகிறார்களா?

மனிதர்கள் பொதுவாக கேவலமானவர்கள். பலர் இன்று ஐ டி வேலை இழப்புகளைப் பார்த்து சந்தோஷமடைகிறார்கள் என்பது கசப்பான உண்மை!

ஆனால், அண்ணாமலையில் ரஜினி சொல்வது போல், “கெட்டுப்போனவன் நல்லா வாழலாம்! நல்லா வாழ்ந்தவன் கெடக்கூடாது” என்ற தத்துவம் உண்மைதான்.

ஈடுகெட்ட முடியாத இழப்பு, வரக்கூடாத வியாதி, இதுபோல் வேலை இழப்பு வரும் சூழ்நிலையில் மனிதன் தனிமையாகத்தான் இருக்கிறான்- அவனை சுற்றி பலர் இருந்தாலும். ஒருவரின் தன்னம்பிக்கையும், எதையும் தாங்கும் இதயமும்தான் முக்கியம். மற்றவர்விடும் முதலைக்கண்ணீரோ, கொடுக்கும் ஆறுதலோ நிலைமையை சமாளிக்க உதவாது.

Saturday, February 14, 2009

எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா!

இது காதலர் தின கதை! கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கும்! நீங்க வயதுவந்தவர் தானே?

-------------------------------------------------------


“ஏன்டா பொறுக்கி இப்படி என் உயிரை வாங்கிற?”

“ஐ லவ் யு வெர்ரி மச் ப்ரியா”

“இதையே ஆயிரம் தர சொன்னாலும் உனக்கு இப்போ கிடைக்காது. ச்சீ அங்கேலாம் கையை வைக்காதேடா பொறுக்கி!”

“ஏன் அங்கே வச்சா என்ன?”

“ஏன்னா, எனக்கு இப்போ மூடு இல்லை”

“அவ்ளோதானா?”

“என்ன அவ்ளோதானா? உனக்கு ஏன் அறிவே இருக்க மாட்டேன்கிதுனு சொல்லுடா?”

“ப்ரியா, எனக்கு நெறையா அறிவு இருந்துச்சு. அதான் படிச்சு இவ்ளோ நல்ல வேலையில் இருக்கேன். ஆனா உன்னை காதலிச்சதும் என் அறிவெல்லாம் உன்னிடம் போயிருச்சு! உன் அறிவு எனக்கு வந்துருச்சு. உன் மனசு என்னிடம் வந்ததால இப்போலாம் கெட்ட கெட்ட நெனைப்புத்தான் வருது”

“ஸ்ஸ், சும்மா இருடா! கையை வச்சுக்கிட்டு”

“ஏன் மூடு வந்துரும்னு பயமா, செல்லம்? நான் கேட்கும்போதெல்லாம் தருவ இல்லை?”

“இன்னைக்கு கிடையாது”

“அதான் ஏன்?'

“நான் உன் மேலே ரொம்ப கோபமா இருக்கேன்”

“ஏன் கோபம், செல்லம்?”

“இன்னைக்கு காதலர் தினம், ஒரு 4 ரோஸ் வாங்கி வந்தியா? ஏன்டா உனக்கு அப்படி எதுவும் தோன மாட்டேங்கிது?'

“ஏன் நு தெரியலை. ஆனா நான் உன்னைத்தானே எல்லா நேரமும் நெனச்சுண்டு இருக்கேன்”

“பொய்”

“எதுடா பொய்?”

“நீ சொல்வதுதான்”

“இப்ப சொல்லு பொய்யா மெய்யானு?” அவன் அவளை கட்டி அணைத்து அவள் இதழ்களில் தன் உதடுகளைப்பதித்தான், பிறகு கன்னம். கழுத்து, என்று கீழே போனான் பாதம் வரை. பிறகு அவள் பின்புறம்போய் அவள் காலில் இருந்து மேலே ஒவ்வொரு இஞ்சாக போயி பின் கழுத்துவரை முத்தமிட்டான்.

அவளிடம் இருந்து பேச்சு எதுவுமே வரவில்லை அப்படியே சிலையாக நின்றாள், ப்ரியா.

அவன் முத்தம் கொடுத்து நிறுத்தியதும்...

“ஏன்டா அதுக்குள்ள நிறுத்திட்ட?”

“அளந்தாச்சு!”

“எதைடா அளந்த, பொறுக்கி?'

“என் இதழால் உன் உடலை அளந்தாச்சு!”

“ச்சீ நீ ரொம்ப ரொம்ப மோசம்டா”

“அதென்ன முன்னால விட பின்னால 10 முத்தம் அதிகமா கொடுத்தேன். அது ஏன்டா உனக்கு முன்னாலயும் பின்னாலயும் சமமா இல்லை, செல்லம்?'

“கேள்வியைப்பாரு! உனக்கு வெட்கமே இல்லையாடா?”

“அதெல்லாம் இருந்தால் ஒரு நல்ல காதலனா இருக்க முடியாது செல்லம்”

"அப்படியா?"

“ஆமா, அது ஏன் கவுண்டிங்ல இந்த “டிஃபெரென்ஸ்”?

“தெரிந்த கேள்விக்கெல்லாம் பதில்சொல்ல மாட்டாள் இந்த ப்ரியா”

“சரி நான் போய் நீ கேட்ட ரோஸ் வாங்கிட்டு வரேன்”'

“ச்சீ போடா லூசு, ரோஸ்லாம் யாருக்கு வேணும்?”

“வேறென்ன வேணும்?”

“ஏண்டா இப்படி பாதில நிறுத்துற பாவி”

“ஐ லவ் யு சொல்லு”

“சொல்லலைனா?”

“நான் ரோஸ் வாங்க போயிடுவேன், அப்புறம் பசங்க வந்துடுவானுக”

“ரோஸ்லாம் வேணாம்டா”

“இப்போ வேறென்ன வேணும்?”

“ஆரம்பிச்சத முதலில் ஒழுங்க முடிடா பொறுக்கி!”

“நான் உன்னை லவ் பண்ணுறேனா?”

“முதல்ல ஆரம்பிச்சத ஒழுங்கா முடி, அப்புறம் சொல்றேன்”

சிறிது நேரத்திற்கு பிறகு...

“சரி இப்போ சொல்லு. எவ்ளோ லவ் பண்ணுறேன். 1-10 ஒரு நம்பர் சொல்லு!”

“12!”

“அவ்ளோ நல்லா இருந்ததா?”

“ரொம்ப ரொம்ப”

“நீ வெட்கப்படும்போது இந்த வயசுலயும் ஒரு மாதிரி செக்ஸியா இருக்க”

“பசங்க வர்ற நேரமாச்சு டார்லிங்”

"சொல்லிட்டு போ!"

"ஐ லவ் யு டா பொறுக்கி!"

“மம்மி!”

பசங்க வந்துட்டாங்க! நான் போய் அவனுகளை கவனிக்கிறேன் ஸ்வீட் ஹார்ட்! என்று பிள்ளைகளை நோக்கி ஓடினாள், ப்ரியா!.

Friday, February 13, 2009

Feb 14! இன்று காதல் பொங்கி வழியனும்!

“ஏங்க! இன்னைக்கு “காதலர் தினம்”

“அப்படியா?”

“என்னங்க இது இன்னைக்கு ஸ்பெஷலா எதுவும் இல்லையா?”

“எனக்கு காதலர் தினம் அன்று காதல் கம்மியாத்தான் வருது. அதுவும் இன்னைக்கு வொர்க்ல ஒரு பிரச்சினை. அதை எப்படி ரிசால்வ் பண்ணுவதுனு ஒரே கவலையா இருக்கு”

“இல்லைங்க நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. அதுக்குள்ளே உங்களுக்கு “காதலர் தினம்” அன்றுகூட என் மேலே காதல் இல்லாமப் போச்சா?”

“ஒண்ணு கேக்கிறேன் பதில்சொல்றியா?”

“கேளுங்க!”

“வென் டிட் வி ஹேவ் தி பெஸ்ட் செக்ஸ் இன் அவர் லவ்லைஃப்?'

“அப்படினா?”

“எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது இல்லையா? அதுக்கு இருவர் மனமும், இருவர் உடம்பும் பர்ஃபெக்ட்டா இருக்கனும். அது ஒவ்வொரு நாள்தான் நல்லா அமையும். சரி, நீ நிறைய முறை உச்சமடைந்து, அதை நினைத்து நினைத்து ரசித்த ஒரு நாள்”

“அது என் டைரியைத்தான் பார்க்கனும். நிச்சயம் எழுதி வச்சிருப்பேன்”

“நிச்சயமா அது காதலர் தினம் அன்று அல்ல!”

“அதனால?”

“நம்ம அந்த நாளைத்தான் காதலர் தினமா கொண்டாடனும். சும்மா ஒரு நாள "சூஸ்" பண்ணி என்னை இன்னைக்கு நெறைய லவ் பண்ணுங்கனு சொன்னா எனக்கு லவ் வராது”

"என்னவோ போங்க நான் டைரியை வாசிக்கிறேன்" என்று ஓடினாள் அவள்.

Thursday, February 12, 2009

நான் கடவுள் இல்லை! கஞ்சா சாமியார்!

“நான் கடவுள்” பார்த்தியா?

நான் தெரியாமத்தான் கேக்கிறேன், பகுத்தறிவுவாதினு வாய்கிழிய பேசுறவன் எல்லாம் இந்த சம்ஸ்கிரதம் பேசும் கஞ்சா சாமியார் படத்துக்கு ஜால்ரா அடிக்கிறானுகளே அது ஏன்?

“அதை விடு! படம் பார்த்தியா?”

“பார்த்தேன். அதிலே ஒண்ணும் பெருசா இல்லை. ஏதோ ஒரு முட்டாப்பயமகன் ஒரு தரித்திரம் சொன்னான்னு அவன் மகன காசில கொண்டுபோய் பிச்சை எடுக்க விட்டுட்டு வந்துட்டானாம். அவன் “அகோரி” (கஞ்சா சாமியார்) யாயிட்டாராம். விட்டுட்டு வந்த்வனுக்கு ஒருநாள் ஞானம் வந்து அவன் நல்லா வளர்ந்த பிறகு போய் திரும்ப ஒரே வினாடியில் கண்டுபிடிச்சு அழச்சுட்டு வர்றாராம். அப்புறம் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்காங்க! அவர்களை வஞ்சிக்கும் சில மிருகங்களையும், ஒரு கஞ்சா சாமியார் காப்பாதுறார்.

“அப்புறம்? கஞ்சா சாமிதான் கடவுளா?”

"ஆமா போதையிலே எல்லோரும் கடவுளாகலாம் இல்லையா?"

"கதையை சொல்லு"

“அவன் ஒரு கஞ்சா அடிக்கிற மிருகமா இருக்கான். அதை வீட்டுக்கு கூட்டிவந்து அந்த மிருகத்திடம் தாய் பாசத்தை அள்ளிக்கொட்டுறாங்க அவன் அம்மா. இதுக்கு மேலே அதுலவுள்ள செண்டிமெண்ட்ஸ் பேச மூடு இல்லை!”

“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”

“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”

“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”

“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”

“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”

அதான் நல்லாயிருக்கு. இதோ எந்தன் தெய்வம் (பாபு), ஏன் ஏன் (வசந்த மாளிகை) அப்புறம் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (எம் ஜி ஆர் படம்).

“இந்தப்படத்தில் என்னதான் மெசேஜ்?”

“ஒரு மண்ணும் இல்லை! இனிமேல் பிச்சைக்காரன் அதிகமாயிடுவானுக. They will be proud of their profession! அப்புறம் கஞ்சா சாமியார்லாம் சும்மா நெஞ்ச தூக்கிகிட்டு திரிவானுக. ஏன்னா அவனுகளுக்கு புது வாழ்வு கொடுக்குது இந்தப் படம்"

Tuesday, February 10, 2009

ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும்!

ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி பொதுவாக விமர்சிக்கும்போது ஒரு ஆங்கிலேயக்குழு நம் இந்திய அடிமட்ட மக்கள் வாழ்க்கையை காட்டி கேவலப்படுத்திவிட்டார்கள் என்று எல்லோருக்கும் கவலை எரிச்சல். இப்படி ஒரு படத்தை எடுத்து வெள்ளைக்காரகள் நம்மைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறார்கள் என்று ஒரே ஒப்பாரி, பொலம்பல் கேட்டது.

http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_18.html


இப்போ நம்ம ஊர் பாலா பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி நம்ம ஊர் சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் ரசித்து ரசித்து படமாக எடுத்து உள்ளார். பாலா படங்கள் பொதுவாக என்னால் ரசிக்க முடியாதுதான். என் மட்டமான ரச்னை ஒருபுறம் இருக்கட்டும். இதுவரை நம்ம பாலாவின் "நான் கடவுள்" படத்துக்கு வந்த விமர்சனங்களைப் பார்ப்போம்.

* தமிழ்சினிமா.காம் (5 ஸ்டார்ஸ் *****)

* SIFY (Outstanding)

* Rediff (***)

பொதுவாக எல்லா விமர்சனங்களிலும் இந்தப்படத்தை பாராட்டியுள்ளார்கள். இதுபோக நம்ம ரசினியும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு புகழோ புகழ்னு புகழ்ந்து தள்ளிவிட்டார். பாலாவைத் தவிர வேற யாரும் இதுபோல் எடுக்க முடியாது (இதெல்லாம் ரொம்ப அதிகம்). பாலாவுடைய தைரியத்தை பாராட்டனும். பாலா ஒரு தலைசிறந்த கலைஞன் என்ற புகழாரம்தான் எங்கும் கேட்கிறது.

இதற்கிடையில் பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்கள் பலர் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லைனு சொல்ல பயப்படுகிறார்கள். ஒரு சில் இசைஞானி ஜால்ராக்கள், ஏ ஆர் ரகுமானை தேவையே இல்லாமல் இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.

சரி விசயத்துக்கு வருகிறேன். இப்போ, ஒருவேளை இந்தப்படத்துக்கு (நான் கடவுள்) அடுத்த வருடம் ஆஸ்கர் வழங்குறாங்கனு வச்சுக்குவோம் ந்ம்ம இசைஞானிக்கும் சேர்த்து. அப்போவும் நம் பிச்சைக்காரர்கள் கலாச்சாரம் உலகறியும்! நம்ம சாமியார் கலாச்சாரமும் உலகம் அறியும். உலகமே இந்தியா ஒரு பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று சிரிக்கும்.

அந்த மாதிரி ஒரு நிலைமை உருவாகும்போது, இன்னைக்கு ஸ்லம்டாக் மில்லியனரை எடுத்து எங்களை கேவலப்படுத் திட்டாங்கனு புலம்பியவர்கள், அந்தப்படக்குழுவை தூற்றியவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது என் கேள்வி.

நம்மூர் பாலாவை தூற்றுவார்களா இல்லை போற்றுவார்களா?

Sunday, February 8, 2009

நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா?

“என்னப்பா மாணிக்கம் தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வரலையா? மதுரைக்கு உன் மனைவி வித்யா வீட்டுக்கு வந்துவிட்டு அப்படியே பாம்பே போயிடுவியா?” என்றாள் அம்மா சத்யா அழுகையுடன்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா. காரைக்குடிக்கு வர முயற்சிக்கிறேன்” என்றான் மாணிக்கம் வருத்தத்துடன்.

“என்னவோ நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்ப்பா. அது போதும் அம்மாவுக்கு. நீ தீபாவளி செலவுக்கு அனுப்பிய பணம் கிடச்சதுப்பா” என்றாள் சத்யா.

“சரிம்மா நான் மதுரை வந்து உங்களைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனை ஹேங் அப் பண்ணினான்.

மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகி 6 வருடமாகிவிட்டது. மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த அவனை எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

அவன் அம்மா சத்யாதான் வித்யாவை இவனுக்கு சரியான மணமகள் என்று தேர்ந்தெடுத்தது. வரதட்சணை எல்லாம் மாணிக்கம் வாங்கவில்லை. அதை அசிங்கமாக நினைப்பவன் தான் அவன். ஆனால் வித்யாவின் பெற்றோர்கள் மகளுக்கு நெறைய நகைபோட்டு கல்யாணம் செய்துவைத்தார்கள். மகளுக்கு நகை போட்டு பெருசா செய்யலைனா அவர்களுக்கு அவமானம் என்று அவர்களா செய்தது அது. அவனைப் பொருத்தமட்டில் அவைகள் அவள் நகைகள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் கொடுத்தது. மாணிக்கம் அதை தொடப்போவதுகூட இல்லை. அது அவனுக்கு தேவையும் இல்லை. அதை அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

கல்யாணம் நடக்குமுன் அவன் மனைவி வித்யாவின் அம்மா, சித்திகள் மற்றும் சொந்தக்காரர்கள் எல்லோருமே அவன் அம்மா சத்யாவிடம் மதிப்பும் மரியாதையுடன் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கொஞ்சம் தள்ளிய சொந்தம்தான். அவன் அம்மா சத்யா மேல் உயிராக இருப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் மாணிக்கத்துக்கு அப்போவே தெரியும், அவர்கள் அன்பெல்லாம் வெறும் நாடகம் என்று. அவன் நினைத்ததுபோலவே, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே, எல்லாம் மாறிவிட்டது. மாணிக்கம் என்னவோ இனிமேல் அவர்களுக்குத்தான் சொந்தம் போலவும், அவன் அம்மா சத்யா வேண்டாதவளாக மாறிவிட்டாள். அதை மாணிக்கமே கண் கூடாகப்பார்த்தான். அவன் அம்மாவிடம் வித்யாவின் அம்மா மற்றும் தங்கைகள் பேசுறவிதம், கொடுக்கிற மரியாதை எல்லாமே ஒரே நாளில் மாறியது. இதேபோல் அவர்கள் அவன் அம்மாவை கல்யாணத்திற்கு முன்பு நடத்தி இருந்தால், நிச்சயம் வித்யாவை கல்யாணம் செய்து இருக்க மாட்டான், மாணிக்கம். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.

ஆனால் மாணிக்கத்தின் அம்மா அவனிடம் வித்யாவின் ரிலேட்டிவ்ஸ் பற்றி சொல்லி குறைசொல்லும்போது. என்னம்மா இது? உங்களுக்காகத்தான் நான் இவளையே கல்யாணம் செய்தேன்? நீங்கதானே இவளை கல்யாணம் செய்யனும்னு சொன்னது? இப்போ நீங்களே வந்து அழுதால் என்னம்மா அர்த்தம்? என்றான் எரிச்சலுடன். இருந்தாலும் அவனுக்கு புரிந்தது, வித்யா கழுத்தில் தாலி ஏறியதும் வித்யா வீட்டை சேர்ந்தவர்கள் அவன் அம்மாவிடம் திமிருடன் பேசுவது, அலட்சியமாக நடந்து கொள்வது எல்லாமே. ஏதோ இவனை மட்டும் மஹாராஜன் போல் நடத்திவிட்டு அவன் அம்மாவை மட்டமாக நடத்தினால், இவன் எதையும் கண்டுகொள்ளமாட்டான் என்ற நினைப்பா என்னனு தெரியலை. மாணிக்கத்துக்கு எல்லாமே புரிந்தது. இருந்தும் அவன் பொறுமை யாகத்தான் இருந்தான். அவனால் எதுவும் செய்யவும் முடியவில்லை என்பது உண்மை.

நாலு வருடங்கள் முன்னால் வித்யாவின் தங்கை பிரபா திருமணத்துக்கு கடைசி நிமிடத்தில் தேவையான 6 லட்ச ரூபாய் இவன் அக்கவுண்ட்ல இருந்துதான் போனது. ஆறு லட்ச ரூபாய் வித்யா தங்கை கல்யாணத்திற்கு இவன் கொடுத்தது மாணிக்கத்தின் அம்மா அப்பாவிடம் அவன் அதை சொல்லவில்லை. இதுபோல் பெரிய பணம் கொடுக்கும் விசயத்தை அவன் அம்மாவிடம் இருந்து மறைத்ததே இல்லை. ஆனால் இன்று இதைச்சொன்னால் தேவையில்லாத பல குழப்பங்கள் வரும் என்று அவன் அம்மா அப்பாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். கல்யாணம் ஆனபிறகுதான் அவன் இதுபோல் நிறையவே பொய் சொன்னான். உண்மைகளை மறைத்தான். கல்யாணம் ஆன பிறகு அவன் தரம் குறைந்துகொண்டு போவது அவனுக்கே புரிந்தது.

அவன் மனைவி வித்யா ஒண்ணும் பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் அவளொரு நல்ல மனைவி, மற்றும் நல்ல தாய் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான நிலைமையில் பண உதவி செய்ததால் இவனுக்கு வித்யா அம்மா அப்பா மற்றும் அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடம் இருந்து தனி மரியாதை எல்லாமே கிடைத்தது. அவன் கொடுத்த அந்தப்பணம் திரும்பி வரப்போவதில்லை என்றும் தெரியும் அவனுக்கு.

வித்யா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு மாணிக்கத்தின் அம்மா அப்பா மட்டும் எது செய்தாலும் தப்பு. மாணிக்கத்தின் அம்மா அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது, முன்புபோல் அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பார்த்தால் வித்யா அம்மாவைவிட ஒரு அரைலூசு உலகத்தில் யாரும் இல்லை. மாணிக்கம் தனக்குள் சிரித்துக்கொள்வான். வரதட்சணை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் முட்டாள்கள் பலர் இதுபோல் மருமகனிடம் இருந்து பணத்தையெல்லாம் பெற்று சில மனைவிகள் தன் குடும்பத்தை நடத்துவது எங்கே தெரியப்போகிறது? என்று. இதுபோல் இவனுடைய பல நண்பர்களும் உதவி செய்ததாகவும் அவன் கேள்விப்பட்டான்

மதுரை வந்து இறங்கினார்கள் அவனும், மனைவியும், 4 வயது மகள் ராஜியும். வித்யா அப்பா ராமன் வந்து அவர்களை டாக்ஸி பிடித்து அழைத்து சென்றார். வித்யா வீட்டிற்கு வந்தவுடன் வித்யா தங்கை பிரபா அவர் கணவன் ராஜேஷ் எல்லோரும் அவனை அன்புடன் வரவேற்றார்கள். தீபாவளிக்கு என்ன படம் பார்ப்பது, எப்போ கோயிலுக்கு போவது எங்கே ஷாப்பிங் போவது என்று பலவிதமான ப்ளான்கள்.

வித்யாவுடன் தனியாக பேச நேரம் கிடைத்தது அவனுக்கு.

“வித்யா! நான் தீபாவளிக்கு காலையில் இங்கே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி காரைக்குடிக்கு எங்க வீட்டுக்கு போறேன் அம்மா அப்பாவை பார்க்க” என்றான் மாணிக்கம்.

“என்னங்க படத்துக்குப்போக டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள் வித்யா.

“அங்கேயும் இதே படம் ரிலீஸ் ஆகுதாம், என் தங்கச்சி மாப்பிள்ளை சொன்னார். நீ இங்கே பாரு நான் அங்கே பார்த்துக்கிறேன், வித்யா”

“இல்லைங்க தீபாவளி அன்று சேர்ந்து படம் பார்க்காம. அடுத்த நாள்வேணா நீங்க போகலாம் இல்லையா?”

“தீபாவளி அன்று என் அம்மா அப்பாவை பார்க்கனும் வித்யா. என்னைப் பெற்றவர்கள் அவர்கள். உனக்காக அவர்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் இருக்கமுடியாது! அவர்கள் குறையுள்ள சாதாரண மனுஷ ஜென்மம்தான். ஆனா எனக்கு அவங்க அம்மா அப்பா! இதையெல்லாம் சொன்னாத்தான் புரியுமா? உனக்கு அறிவு இல்லையா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்க வீட்டில் எனக்கு எதுவும் வசதியா இருக்காது” என்றாள் வித்யா.

“உண்மைதான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணலைனா நான் இதுவரை சம்பாரித்த பணத்தை வைத்து நல்ல வீடுகட்டி அவர்களை ராஜா ராணி போல என்னால் பார்க்க முடிஞ்சிருக்கும். என் சம்பாத்யம் எல்லாம் நம் ஆடம்பர செலவுக்கே போவதால்தான் அவங்க கஷ்டப்படுறாங்க” என்றான் மாணிக்கம்.

“எனக்கு அங்கே வசதியா இல்லை! பாத்ரூம் கூட ஒழுங்கா இல்லை!” வித்யா கண்ணில் வழக்கம்போல கண்ணீர்.

“நம்ம கல்யாணத்திற்கு முன்பும் இதே பாத்ரூம்தான் இருந்தது. உங்க அம்மா அப்பா இந்த பாத்ரூமைப்பற்றி எந்தக்குறையும் அப்போ சொல்லவில்லை! நீயும் எதுவும் சொன்னதில்லை. உன் தங்கை கல்யாணத்திற்கு நாம் கொடுத்த 6 லட்சத்தை வைத்து இதைவிட பலமடங்கு நல்ல வசதியா எல்லாம் என் வீட்டில் கட்டி இருக்கலாம். அதை இன்றுவரை நான் என் அம்மாவிடம் சொன்னதில்லை” என்றான் மாணிக்கம்.

“நான் வரலை அங்கே. ராஜியும் என்னோடதான் இருக்க ஆசைப்படுவாள்” என்றாள் வித்யா.

“இந்தா பாரு! நீ வரலைனா இங்கே யாரும் அழப்போறதில்லை. வேணும்னா இங்கேயே பர்மணண்ட்டா உங்க அம்மா அப்பாவுடன் இருந்துக்கோ. உன் மகளையும் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே புறப்பட்டான் மாணிக்கம்.

“ஹல்லோ”

“யார்ப்பா மாணிக்கமா? நல்லபடியா மதுரை வந்து சேர்ந்தீங்களா?”

“ஆமாம்மா. எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீபாவளிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வர்றேன் ம்மா”

“வித்யாவும், உன் மகள் ராஜியும் கூட வர்றாங்களாப்பா?”

“நான் வர்றேன். அது போதாதா உனக்கு? அவங்க வர்றாங்க இல்லை தொலையுறாங்க. நான் தானே உன் பிள்ளை?” என்றான் மாணிக்கம் எரிச்சலாக

“ஏன்ப்பா இப்படிகோவிச்சுக்கிற?' என்றாள் அம்மா.

“பின்னே என்னம்மா நீங்கதான் இந்த சனியனை என் தலையில் கட்டி வச்சீங்க. இப்போ ஏதோ நான் தப்பு செய்துவிட்டது போல பேசுறீங்க? அவளுக்கும் அறிவே இல்லை. உங்களுக்கும் என் நிலைமை புரியலை. உங்கரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு என் நிம்மதி போச்சு” என்றான்.

“இல்லைப்பா அவங்களும் உன்னோட சேர்ந்து வந்தாத்தானே நல்லா இருக்கும்?”

“ஆமா. ஒண்ணு வேணா பண்ணலாம் அம்மா?”

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு அவளைவிட நீங்கதான் ரொம்ப முக்கியம். உங்க மேலே ஆணை. ஆனால் அவளோ அவ குடும்பமோ உங்களை என்றுமே மதிக்கப்போவதில்லை. ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! அவளோ, அவ அம்மா அப்பா அப்புறம் அவங்க கூட்டமோ உங்கமேலே உள்ளன்போட இருக்கப்போவதில்லை! நான் அவளை விவாகரத்து பண்ணிடவா? அப்படி பண்ணிட்டா நிச்சயம் எப்போவும் போல் என் இஷ்டப்படி என்ன வேணா செய்யலாம் இல்லையா?”

“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுற? நீ நல்லா சந்தோஷமா இருந்தால்தானே அம்மாவுக்கு சந்தோஷம்?”

“சந்தோஷமாவா? உங்களுக்கோ அவளுக்கோ இது புரியப்போவதில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவுடன் வருவது கஷ்டம்மா. அவ உங்களை ஒரு போதும் புரிஞ்சுக்கப் போவது இல்லை. உங்களுக்கு அந்த ஏமாற்றப்பட்ட உணர்வு ஒரு போதும் போகப் போவதில்லை”

“அவங்க மாறியதைத்தான் நீயே பார்த்தியேப்பா?'

“நான் இல்லைனு சொல்லம்மா. அவங்க என்னை தாங்கோ தாங்குனு தாங்கிக்கொண்டு உங்களை மதிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்களா? எனக்கு உங்களை மதிக்காத யாரையுமே பிடிக்காது. ஆனால் நான் சொல்வது உங்களுக்கு புரியலை. இதுக்கு நான் சொன்ன ஒரே ஒரு முடிவுதான்”

“நீ உன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமா இருப்பதுதான் எனக்கு நிம்மதிப்பா. விவாகரத்து செய்தால் நிச்சயம் அம்மா சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடுமைக்காரி இல்லை” அழுகையுடன் வந்தது அவன் அம்மா வார்த்தைகள்.

“நான் சந்தோஷமா இருக்கேனா? ஏதோ இருக்கேன் அம்மா. ஆனால் நீங்க இப்படி அழுதுகொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமா இல்லை. சரிம்மா தீபாவளிக்கு மதியம் பார்க்கலாம்” என்று முடித்தான் மாணிக்கம்.

அங்கே இருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தான். அவனுக்கு சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நல்லாவே தெரியும். அவன் மனைவியும், அவன் அம்மாவும் அவனுக்கு தினமும் ரத்தக்கொதிப்பு கொடுக்கிறார்கள். அவன் தூக்கத்தை தினமும் கெடுக்கிறார்கள். அவன் உடல்நலத்தைக்கெடுக்கும் அவர்களை அவனால் தூக்கி எறியமுடியவில்லையே? பாவம் இந்த சிகரெட் மட்டுமா உடல் நலத்தைக் கெடுக்குது? என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் மாணிக்கம்.

Thursday, February 5, 2009

காதலுடன் 9

"சந்தியா! ஏய் நீ நெனைக்கிறாப்பில அதிலே ஒண்ணும் இல்லை. சும்மா சில பழைய தமிழ்ப்படங்கள் இருக்கு. நான் சும்மாதான் ஒரு மாதிரியான படம்னு சொல்லி ட்ரிக் பண்ணினேன்"

"அப்படியா?"

"என்ன ரொம்ப குரல் டவுன் ஆயிடுத்து? ஆமா என்ன படம்னு நெனச்ச நீ?" அவன் சிரித்தான்.

"ஒரு மாதிரினா, "அந்த ஒரு மாதிரி" படம்னு நெனச்சேன்"

"அந்த ஒரு மாதிரினா?"

"ஒரு நாள் வீட்டுக்கு வாங்க என்ன மாதிரி படம்னு போட்டுக்காமிக்கிறேன்"

"அச்சச்சோ! நீ ரொம்ப மோசமான பொண்ணா? அந்த மாதிரிப் படம்லாம் பார்ப்பியா?"

"உங்க அளவுக்கு மோசம் இல்லை. சரி இந்த டிவிடில என்ன படம் இருக்கு?"

"அதில் காதலிக்க நேரமில்லை, அடுத்த வீட்டுப் பெண் ரெண்டு படம் இருக்கு"

"ரொம்ப பழைய படமா? நீங்களா பர்ன் பண்ணியதா?"

"இல்லை இந்தியாவில் வாங்கியது. எங்க ஊரிலே இப்படித்தான் விக்கிறாங்க"

"நல்லா இருக்குமா இந்தப்படங்கள்?"

"எனக்குப்பிடிக்கும் சந்தியா. பாட்டெல்லாம் நல்லா இருக்கும். அந்தக்காலத்து காமெடிப்படங்கள். உனக்கு என்ன வாங்கிட்டு வர்றதுனு தெரியலை. அதான் இதைக்கொண்டு வந்தேன்"

"நல்ல வேளை என்னை கொலைகாரியா ஆக்கல நீங்க"

"சும்மா நடிக்காதே, சந்தியா! உனக்கு அந்த மாதிரிப் படம் பிடிக்கும்னு எனக்கு தெரியும்"

"பிடிக்காதுனு சொல்லல. பெண்களுக்கு மட்டும் க்யூரியாஸிட்டி இருக்கக்கூடாதா என்ன? அதான் எங்கே இருந்தாலும் பார்க்கலாமே? அதுக்காக நீங்க கொண்டு வந்து அதை கொடுத்து என்னை கேவலப்படுத்தனுமா என்ன?"

"சரி சரி நீ அதை போட்டுபார்க்காததுல இருந்தே நீ நல்ல பொண்ணுனு ப்ரூவ் பண்ணிட்ட"

"நான் நல்ல பொண்ணுனெல்லாம் சொல்லல"

"நீ சொல்ல வேணாம் நான் சொல்றேன்"

"எதுக்கு இந்த ஐஸ்?"

"ஏய், ராம் கதை கேட்டயா?"

"Yeah, he dumped that white girl, Caroline and he is going to do an arranged marriage! May be he does it for getting a BIG DOWRY. What a cheap bastard he is! I wish his bride to be is sleeping with 10 other guys in India now!"

"ஏய் ஏய் ஏன்ப்பா இந்த கொலைவெறி உனக்கு?"

"பின்ன என்ன? இவன் பண்றதை அவன் வைஃப் பண்ணினா என்ன தப்பு? பொண்ணுங்களுக்கு இது ரொம்ப ஈஸி தெரியுமா?. ஆம்பளைங்கதான் எங்கபார்த்தாலும் நாக்க தொங்கப் போட்டுகிட்டு அலையுறானுகளே"

"May be he would not care to marry a slut"

"I know him, Ramesh. He is a very closed-minded idiot! May be his parents are getting some 40 lakhs dowry"

"ஏன் இவ்ளோ கோபமா இருக்க?'

"பின்ன என்ன ரமேஷ்? இவனுகளுக்கு என்ன வேணும்?"

"I don't think they ever sit down and think about it, Sandhya"

"You know, Americans are much better than these half-baked desi morons!"

"I agree. சரி விடு சந்தியா! Relax please"

"Sorry, Ramesh. It is because I don't see any valid reason for him to dump her"

"I know, but I would blame her too for falling in love with a cheap guy like this"

"She is very innocent Ramesh"

"என்னவோ போ. வேற ஏதாவது விசேஷம் உண்டா?"

"எனக்கு நீங்க சிகாகோ வந்ததுதான் விசேஷம்"

"ஏய், நானும் ஒரு ஹால்ஃப்பேக்ட் தேஸி மோரான் தான்"

"நீங்க பரவாயில்லை. என்ன மாதிரி ஒரு ஃப்ரெண்டு இருக்கதாலே ஒழுங்கா இருக்கீங்கனு நினைக்கிறேன்" அவள் சிரித்தாள்.

"நேரம்தான். எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்"

"Why don't you marry me, and educate me "that stuff" Ramesh?" சந்தியா சிரித்தாள்.

"Yeah, why don't I? You really have got something which turns me on very badly"

"அப்படியா? என்ன அது?"

"சரி யாருக்கும் கேட்காமல் உனக்குமட்டும் கேட்பதுபோல சொல்றேன்"

"சொல்லுங்க"

அவன் அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் மெதுவான சொன்னான்.

"ச்சீ நீங்க ரொம்ப மோசம், ரமேஷ்" அவள் குரலில் அவள் முகம் சிவந்தது தெரிந்தது ரமேஷுக்கு

-தொடரும்