* ஏன் நீங்களே கேள்வியும் கேட்டுக்கிட்டு பதிலும் சொல்லிக்கிறீங்க? நீங்க என்ன லூசா?
ஒரு சில உண்மைகளை பகிர இது ஒரு சின்ன முயற்சி அம்புட்டுத்தான்.
* ஆமா அந்த ஆளு சாகிற போது அவருடன் ஒரு கோடி உயிர்கள் செத்துடுச்சாமே? அவர் என்ன அவ்ளோ பெரிய ஆளா? கதை விடுறானுகப்பா!
அவர் சாகும்போது அவர் உடம்பில் அவரையே நம்பி வாழ்ந்துகொண்டிருந்த கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் எல்லாம் செத்துப் போனதைத்தான் இப்படி பெருமையா சொல்லிக்கிறாங்களாம். (When we die, we dont die alone)
* இன்னைக்கு பதிவுலகில் சரக்குள்ள பதிவர்னா யாருங்க?
சுமார் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் முன்னால, சூடான பதிவில் தன் பதிவை, தன் திறமையான எழுத்துத்திறனால் கொண்டுவந்தவங்க எல்லாம் சரக்குள்ள பதிவர்கள்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஏன் அப்பப்போ அதை சொல்லிக்கிட்டும் திரிஞ்சாங்க. ஆனால் இப்போ அதை தூக்கியவுடன், அதிகம் பேரால் பரிந்துரைக்கப் படுகிற அளவுக்கு எழுதத் தெரிந்தவங்கதான் சரக்குள்ளவர்கள்னு சொல்லலாம்! இதெதுக்கு நமக்கு? "சரக்கை" வச்சுட்டு இருக்கிற பெரிய "பிரபலப் பதிவர்கள்" மேட்டர் இது!
* எந்திரன் அலை ஓய்ந்ததா?
சென்னை, பெங்களூரு, மும்பை, கேரளா, ஹைதராபாத் போன்ற இடங்களில் எந்திரன் இல்லைனா ரோபாட் படத்துக்கு ஈஸியா டிக்கட் கெடைக்கும் நிலை வந்துருச்சு. வீக் டேஸ்ல 40-50% போல தான் தியேட்டர் ஃபுள் ஆகுது. வீக் எண்ட்லயும் முக்கிய திரையரங்குகள் மட்டும் ஹவுஸ் ஃபுல் ஆகுது. அதனால் அநியாய டிக்கெட் வெலைனு பொலம்பினவங்க எல்லாம் இப்போ எந்திரன் படம் பார்க்கலாம்.
இல்ல நான் ஒரு லட்ச ரூபாய் செலவழிச்சு எடுக்கிற சின்ன கலைஞர்களையும், அதுபோல் தியாகிகளையும்தான் வாழ வைப்பேன்னு அடம்பிடிச்சா.. அது அவங்க இஷ்டம்!
ஆமா எந்திரன் அலை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டதுதான். தீபாவளிக்கு வேணா மறுபடியும் பெரிய கூட்டம் சேரலாம் (பெரிய தலைகள் படம் எதுவும் வர்ற மாதிரி தெரியலையே, அதனால). மத்தபடி பொழுதுபோக்குக்காக சினிமாப் பார்க்கிற எல்லாரும் ஒரு வழியா பார்த்து முடிச்சுட்டாங்களாம்.
* உங்கள் தளத்தில் உள்ள ஒரு பழைய பதிவை, புதிதாக வந்தவர்களுக்கும் போய் செல்ல, தமிழ்மணத்தில் மீள் பதிவு செய்றது எப்படி?
தெரியலை. இந்த வலைதளத்தில் இருந்து மறுபடியும் அனுப்பினால் தமிழ்மணத்திற்கு போய் சேர மாட்டேன்கிது. ஆனால் அது ஒரு சினிமாப் பதிவு என்பதால் புரியலை. யாராவது மீள்பதிவு செய்ற எக்ஸ்பர்ட்தான் சொல்லனும்
* நண்பர் நசரேயனுக்கும், நண்பர் குடுகுடுப்பைக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
ஒருத்தர் கமல்னா இன்னொருத்தர் ரஜினி மாதிரி.
* அமெரிக்கா-வாழ் பதிவர்களில், கவிதை எழுதும் திறனுடன், உங்கள மாதிரி இல்லாம,நல்லா எழுத்துப்பிழையில்லாமல் தமிழ்ல எழுதத் தெரிந்தவரும், மேலும் பொது நோக்குடன் நாகரிகமா பதிவு செய்யும் மிஸ்டர் டீஸண்ட் யாருனு தெரியுமா உங்களுக்கு?
பழமை பேசி என்கிற மணியண்ணாவா? :)
* ஆமா அந்த கீழே உள்ள ரெண்டு படத்துக்கும் என்ன சம்மந்தம்?
அந்த மலருக்கு மணம் தருவது இந்த மூலக்கூறுதானாம்! :)
16 comments:
தளபதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்...
PASS!!! :-)
***பழமைபேசி said...
தளபதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்...
28 October 2010 7:25 PM***
வாங்க, மிஸ்டர் டீசண்ட்! :)
தளபதியை வர்ச்சொல்லுவீங்க, அப்புறம் வாசிச்சுத்தான் பின்னூட்டமிடனும்பீங்கனு அவர் இமயமலைக்கே திரும்பவும் போயிட்டாரு போல! :)
***Chitra said...
PASS!!! :-)
28 October 2010 8:43 PM***
வாங்க, சித்ரா :)
சங்கோஜமில்லாத கேள்விகளும் பதில்களும். அருமை.
இவ்வளவு சொல்லி இருக்கீங்க .. உங்க எண்ணையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டீங்கன்னா ரெம்ப சந்தோசப் பாடுவாரு
இடுகைய முழுசா படிச்சேன்ன்னு பழமைபேசி க்கு சொல்லிகிறேன்
***நசரேயன் said...
இவ்வளவு சொல்லி இருக்கீங்க .. உங்க எண்ணையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டீங்கன்னா ரெம்ப சந்தோசப் பாடுவாரு***
என் எண்ணை அண்ணாட்டக் கொடுத்து, "இது உங்களுக்கும் எனக்கும் இடையில் மட்டும் இருக்கட்டுமே"னு நான் சொல்லியிருக்கலாம். மிஸ்டர் டீசண்ட் தன் வார்தையை காப்பாத்த உங்ககிட்ட "எண்ணை" விடாமல் இருக்கலாம்! அப்படி அவர் செய்து இருந்தாலும், நீங்கதான் அவர் "உயிர் நண்பர்" என்கிறதில்லாமல் போகுமா?
ஆமா நீங்க பின்னூட்டம் படிப்பீங்களா? :)
***நசரேயன் said...
இடுகைய முழுசா படிச்சேன்ன்னு பழமைபேசி க்கு சொல்லிகிறேன்
29 October 2010 7:28 AM***
அவர் நம்புறாரோ இல்லையோ, நான் நம்புறேங்க! :)
***V.Radhakrishnan said...
சங்கோஜமில்லாத கேள்விகளும் பதில்களும். அருமை.
29 October 2010 7:22 AM ***
வாங்க வி ஆர்! நன்றி :)
ஆகா.... தளபதி! தலைநகரத்துல குனியுற மாதிரி, தலையக் குனிஞ்சி வணங்கிட்டுப் போயி பொழைப்பு தழைப்பைப் பார்க்க வேண்டியதுதான்... இஃகிஃகி!!!
இன்னைக்கு பதிவுலகில் சரக்குள்ள பதிவர்னா யாருங்க?
சுமார் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் முன்னால, சூடான பதிவில் தன் பதிவை, தன் திறமையான எழுத்துத்திறனால் கொண்டுவந்தவங்க எல்லாம் சரக்குள்ள பதிவர்கள்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஏன் அப்பப்போ அதை சொல்லிக்கிட்டும் திரிஞ்சாங்க. ஆனால் இப்போ அதை தூக்கியவுடன், அதிகம் பேரால் பரிந்துரைக்கப் படுகிற அளவுக்கு எழுதத் தெரிந்தவங்கதான் சரக்குள்ளவர்கள்னு சொல்லலாம்! இதெதுக்கு நமக்கு? "சரக்கை" வச்சுட்டு இருக்கிற பெரிய "பிரபலப் பதிவர்கள்" மேட்டர் இது!//
இதுவும் ஹம்பக், குழு வோட்டுத்தான் அதிகம், நான் ஓட்டுப்போடுவதையே நிறுத்திவிட்டேன், ஆனாலும் எனக்கு ஓட்டுப்போடுவது பெரும்பாலும் நசரேயன்,வானம்பாடிகள் குழு மட்டுமே.
கமல், ரஜினி இரண்டு பேரும் தெளிவாக குழப்புவர்களே, நசரேயனும் , நானும் அப்படியா குழப்பறோம்......
உங்களை பழங்கால நடிகை சாவித்திரியோட ஒப்பிடலாமா?இல்லை மனதில் பட்டதை தெளிவாக சொல்வதற்காக அருந்ததி ராய் மாதிரின்னு வெச்சுக்குவோம்.
பிரபல பதிவர் பற்றிய கேள்வியில் எதோ உள்குத்து இருக்கு போல...
***குடுகுடுப்பை said...
கமல், ரஜினி இரண்டு பேரும் தெளிவாக குழப்புவர்களே, நசரேயனும் , நானும் அப்படியா குழப்பறோம்......
உங்களை பழங்கால நடிகை சாவித்திரியோட ஒப்பிடலாமா?இல்லை மனதில் பட்டதை தெளிவாக சொல்வதற்காக அருந்ததி ராய் மாதிரின்னு வெச்சுக்குவோம்.
29 October 2010 8:31 AM ***
உங்களப் பார்த்தா கமல் விசிறிபோலவும், தளபதியைப் பார்த்தான் ரஜினி விசிறி மாதிரி தெரிந்தது. விசிறிய விட்டதுதான் குழப்பம்! :)
சாவித்திரி தெரியும்- ரொம்ப குடிச்சு குடிச்சு செத்துப்போயிட்டாங்களாமில்ல?
அருந்ததி ராய், யாருனு தெரியாது!
But, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும், கு கு! :)
***philosophy prabhakaran said...
பிரபல பதிவர் பற்றிய கேள்வியில் எதோ உள்குத்து இருக்கு போல...
29 October 2010 6:31 PM***
நான் உண்மையத்தாங்க சொல்லியிருக்கேன். "நீ பிரபலம்" னு நான் சொல்றேன். "நான் பிரபலம்" னு நீ சொல்லு, ரெண்டு பேரும் பிரபல் ஆயிடலாமில்ல? அப்படினு ஒரு பதிவுலக பாலிடிக்ஸ் இருந்ததுங்க. ஆனா இப்போ புதுசா வந்த பலர், அவங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுப் போயிட்டாங்க! சரி விடுங்க, நம்க்கெதுக்கு இதெல்லாம்! :)))
Post a Comment