என்னைப் பொருத்தவரையில் நம் கருத்துச் சுதந்திரம்தான் பதிவுலகில் நமக்கு முதன்மையானது, முக்கியமானது. மத்ததெல்லாம் ரெண்டாவதுதான்! பதிவுலகில் நீங்க "பெரிய ஆளோ" இல்லை "சின்ன ஆளோ" ஒரு பதிவை வாசிச்சுட்டுட்டு உங்க கருத்தைச் சொல்ல உங்களுக்கு நிச்சயம் உரிமை வேண்டும்! அந்த உரிமை பறிபோகும் நிலை வந்தால் பதிவுலகில் இருப்பதே சுத்தமான வேஸ்ட்!
பதிவுலகில் ஒருவர் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, சுத்தமாக முரணான ஒரு கருத்துள்ள பதிவை எழுதி வெளியிடுகிறார்னு வச்சுக்குவோம். பதிவுலகம் மிகப் பெரியது, நீங்க அதில் ஒரு துரும்புதான். அதனால அவரைப்போலவே சிந்தனைகள் உள்ளவர்கள் பலர் அந்தப்பதிவை ஆஹா ஓஹோனு சொல்லத்தான் போறாங்க. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால் பொதுவா இதுபோல் ஒரு சூழலில் நீங்க இதை கண்டுக்காமப் போயிடலாம். ஆனால் ஒரு சில நேரம் அதை கண்டுக்காமப் போகமுடியாது! அந்தக் கருத்துடன் மாறுபட்ட உங்க கருத்தை சொல்லியே ஆகனும்னு சூழ்நிலை எழுகிறது.
எங்கே சொல்வது? அந்தக் கருத்தை சொன்ன தளத்திலா? ஆமா, வேறெங்கே சொல்வது? அதைத்தான் பின்னூட்டங்களில் வாசகர்களும் சக பதிவர்களும் தெரிவிக்க முயல்றோம். பின்னூட்டத்தில் ஒருவர் நல்லா எழுதியிருந்தால் பாராட்டுறோம். சுத்தமா அதில் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ள முடியலைனா திட்டுறோம். இரண்டுக்குமே உங்க பொன்னான நேரம் செலவிடப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது! ஆனால் உங்க கருத்தை அவ்வளவு ஈஸியா இன்னொரு பதிவர் தளத்தில் சொல்லிட முடியாது!
* சாரு நிவேதிதா, "நான் கடவுளை க் கண்டேன்" னு நித்யானந்தாவைப் பற்றி ஏதோ கேணத்தனமா எழுதுறார்!
* நித்யானந்தாவையும், தந்தை பெரியாரையும் சம்மந்தப்படுத்தி ஒரு சாதிவெறிபிடித்த வம்பர் இஷ்டத்துக்கு லாஜிக் பேசி உளறுகிறார்!
இந்த மாதிரி சூழல்களில் நீங்க உங்க கருத்தை சொல்லியே ஆகனும்! சாரு, தன் தளத்தில் ஜால்ரா இ-மெயில் மட்டும்தான் வெளியிடுவார்! அவர் சொல்றதை கேட்டுக்கிட்டு ஆமா ஆமானு ஜாலரா அடிப்பதுபோல் பின்னூட்டம் இல்லையென்றால் உங்க கருத்தை சொல்ல முடியாதே!
அதேபோல் பெரியாரை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இழுக்கும் இந்த வம்பரிடம் போய் என் மாற்றுக் கருத்தை வெளியிடுங்கனு கெஞ்சனுமா? தீண்டாமை சரினு சொல்றவனிடமெல்லாம் நியாயம் பேச முடியுமா? சாதி வெறி இன்னும் அடங்காமல் இருக்கும் ஒருவனிடம்? சாண்ஸே இல்லை!
ஒரு சில இடங்களில் பாராட்டும் பின்னூட்டம்தான் பொதுவா மாடெரேஷன் கடந்து வெளிவரும். பதிவர் கருத்துடன் உங்க கருத்து சுத்தமா ஒத்துப் போகலைனா (யார் சொல்றது சரி, தவறென்பது வேறு விசயம), உங்க பின்னூட்டம் பொதுவா வெளியே வராது. மேலும் உங்க பின்னூட்டம் பதிவருடைய "அகந்தை"யை தொடுவதுபோல இருந்தாலும் பின்னூட்டம் வெளியே வராது. ஒரு சில நேரம் உங்க பின்னூட்டம் உணர்ச்சி பொங்கி வேகத்தில் எழுதி அநாகரிகமாக இருந்தாலும் வெளியே வராது. உங்க பின்னூட்டத்தை போட்டுட்டு "ஐயா" அப்ரூவ் பண்ணூறாரானு நீங்க வெயிட் பண்ணிட்டு நிக்கனும்!
நாலும் நாலும் பத்துனு சொல்லுவான். நாலு அரைவேக்காடுகள் ஆமா ஆமா னு சொல்லும்! அதை நான் ஏத்துக்கனுமா? என் மாற்றுக்கருத்தை நான் சத்தமாகச் சொல்லனும்!
எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா?
ஒரு பதிவர், அவருடைய தளத்தில் அவர் தன்னை அவமானப்படுத்த அலல்து இறக்க இடம் கொடுக்கனும்னு என்ன இருக்கு? அபப்டியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதில் உள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் (உங்க பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால்), நீங்க அதை சொல்லியே ஆகனும்னு நிலை வருவதுண்டு. அதுபோல் நிலையில் மற்றவர்கள் என்ன செய்வாங்கனு தெரியலை, நான் என் பின்னூட்டத்தில் சொல்ல விரும்புவதை ஒரு பதிவாக எழுதுவதுண்டு!
ஏன் இதுக்கெல்லாம் ஒரு பதிவா? னு பலர் இதை கேலி பண்ணலாம்!
என் பார்வையில் உங்க கருத்தை சொல்ல முடியாத, உங்க கருத்து சுதந்திரம் பறிபோகிற ஒரு அவல நிலையை நீங்க ஏன் ஏற்றுக்கனும்? உங்களுடைய பேச்சுரிமையை எவனோ ஒருவன் பறிப்பதை நீங்க ஏத்துக்க கூடவே கூடாது!
இதற்குத்தான் உங்க தளம் இருக்கு, இல்லையா? உங்க கருத்தை எவனையும் கெஞ்சாமல், எவனோட அப்ரூவலும் இல்லாமல் சத்தமாக அடித்துச் சொல்ல!
7 comments:
என்ணண்ணே மேட்டரு?
என்ன பிரச்சனை வருண் .. மணி அண்ணனை ௬ப்பிடனுமா ?
வாங்க இளா!
வாங்க தளபதி!
ஒரு பிரச்சினைனா வர்றீங்களானு பார்த்தேன். கரெக்ட்டா வந்துட்டீங்க! :)
அம்புட்டுத்தான்! :)
தளபதி: மணியண்ணாவை ஒழுங்கா வேலை பார்க்க விட்டுடுவோம், பாவம் அவரு. :)
என்ணண்ணே மேட்டரு? ;)
***Thekkikattan|தெகா said...
என்ணண்ணே மேட்டரு? ;)
12 November 2010 11:25 AM***
பெருசா ஒண்ணும் இல்லங்க, பதிவுலகில் நம்ம freedom of expression முக்கியம்னு சொல்ல வந்தேன்...:)
பஞ்சாயத்த கூட்டுங்க,
வாங்க எல் கே! :)
டாப் 20 ப்ளாக்ல ரொம மேல இருக்கீங்க! வாழ்த்துக்கள், எல் கே! :)
Post a Comment