Sunday, November 21, 2010

விவாதிக்க எதிராளிக்குச் “சுதந்திரம்” மிகவும் அவசியம்!

ஒருவர் தன் தளத்தை பாதுகாக்க மாடரேஷன் எனேபில் செய்வதில் தப்பே இல்லை! ஆனா, “சேர்ந்து வாழுதல்” போன்ற கலாச்சார மாற்றம் பத்தி பேசும்போது, அது சீரியஸான ஒரு விவாதமாகிறது. இதில் விதண்டாவாதம், தனிநபர் தாக்குதல் போன்றவை இடையில் வந்தாலும், மாடெரேஷன் எனாபிள் செய்து மட்டுறுத்தல் செய்யும்போது, சரியாக விவாதம் செய்ய இயலாமல்ப் போய்விடுகிறது, இதில் சூடு தணிந்துவிடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

ஒரு வாதம்னு வரும்போது, அதில் வெற்றி தோல்வி என்பதென்னவோ இல்லை. ஆனால் ஒரு விவாதத்தில் எதிராளியுடைய கருத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் கொடுக்கனும். சும்மா “ஆமா சார், சரியா சொன்னீங்க!” நு ஜால்ரா பின்னூட்டங்களால் எந்தப் பிரையோசனமும் இல்லை. எதிராளியை வாதம் செய்யவிட்டு அவருக்கு தெளிவாக பதில் சொல்வதே அழகு, நாகரிகம்!

ஒரு ஆக்கம், கவிதை, கதைனு வரும்போதுதான் அதுபோல் ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் வருவது படைப்பாளிக்கு நல்ல ஊக்குவிப்பாகத்தான் இருக்கும். ஆனால் விவாதத்தில் ஜால்ரா பின்னூட்டத்தைவிட மாற்று அல்லது எதிர் கருத்துப் பின்னூட்டங்களே அந்தப்பதிவின் தரத்தை உயர்த்தும் என்று நான் நம்புறேன். அதனால் எதிராளி கருத்தை சுதந்திரமாக தொடர்ந்து சொல்லவிடாமல் மாடெரெஷன் எனேபிள் செய்து வைப்பது எனக்கு சரியாகப் படவில்லை!

பதிவர்கள் குடுகுடுப்பை, முகிலன் மற்றும் வால்ப் பையன் (for some time), துமிழ் போன்றவர்கள் மாற்றுக்கருத்தைச் சொல்ல மட்டுறுத்தல் செய்யாமல் இந்தப் பேச்சுச் சுதந்திரம் கொடுத்ததற்கு நன்றி! அம்புட்டுத்தான்!

10 comments:

எல் கே said...

@வருண்

இந்த மாதிரி சூடான விவாதங்களில் தான் மிகக் கேவலமான கருத்துகள் சில சமயம் வருகின்றது. நாம் எப்பொழுதும் கணினி முன்னே இருக்க முடியாது. நாம் இல்லாத சமயத்தில் சில ஜென்மங்கள் வந்து வாந்தி எடுக்கலனம். அதனால்தான் மட்டுறுத்தல் தேவைப் படுகிறது

Philosophy Prabhakaran said...

@ LK
ஆமா சார், சரியா சொன்னீங்க!

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக சரி

வருண் said...

***LK said...

@வருண்

இந்த மாதிரி சூடான விவாதங்களில் தான் மிகக் கேவலமான கருத்துகள் சில சமயம் வருகின்றது. நாம் எப்பொழுதும் கணினி முன்னே இருக்க முடியாது. நாம் இல்லாத சமயத்தில் சில ஜென்மங்கள் வந்து வாந்தி எடுக்கலனம். அதனால்தான் மட்டுறுத்தல் தேவைப் படுகிறது
21 November 2010 5:10 PM ***

உண்மைதாங்க, எல் கே. இதுபோல் ஒரு சுதந்திரம் கொடுக்கும்போதாவது அதை தவறாக பயன்படுத்தாமல் பதிவர்கள் நடந்துக்கிட்டா நல்லாயிருக்குமேனு ஒரு நப்பாசைதான் :)

வருண் said...

***Blogger philosophy prabhakaran said...

@ LK
ஆமா சார், சரியா சொன்னீங்க!

21 November 2010 5:51 PM***

சண்டைய ஜஸ்ட் கருத்துச்சண்டையா மட்டும் எடுத்துக்கிற மனப்பாங்கு வரனும்ங்க! வரும்னு நான் நம்புறேன் :)

வருண் said...

**Blogger பயணமும் எண்ணங்களும் said...

மிக சரி

21 November 2010 9:59 PM**

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, சாந்தி!:)

ஆனந்தி.. said...

வருண்...கருத்து சுதந்திரம் கொடுக்கிறதை கொச்சை வார்த்தைகளில் கக்கிட்டு போகும்போது அது நாகரிகமான ஒரு விஷயமா தோணாது இல்லையா...அதுக்கு தான் சில வேளைகளில் இந்த மட்டுறுத்தல்...மறுமொழி சொல்றவங்க எல்லாருமே எதிர்வாதத்தை நாகரிகமாக சொல்வாங்கன்னு எதிர் பார்க்க முடியாது...எதிர்வாதம் சூடாகவும்,கொச்சை மொழியில் இல்லாமல் இருந்தால் பெண் பதிவர்கள் கூட தாராளமா மட்டுறுத்தல் பண்றதை நிறுத்திக்க முடியும்...இது ஆதங்கம் மட்டுமே வருண்...

ஆனந்தி.. said...

எதிர்விவாதம் யோசிக்க வைக்கிற மாதிரி சூடா கூட இருக்கட்டும்...ஆனால் கொச்சையான வசவுகள் தான் நெளிய வைக்கும் நிலைமை...பதிவுலகில் சீக்கிரம் இந்த நிலைமை மாறலாம்...))

வருண் said...

***ஆனந்தி.. said...

23 November 2010 7:46 PM***

நீங்க சொல்றது உண்மை தாங்க. ஒரு சிலர் அநாகரிகமாக. கொச்சையாக பின்னூட்டமிடுறாங்க. :(
அந்த சூழ்நிலையில் கமெண்ட் மாடெரேசன் நிச்சயம் தவறானதில்லை.

அப்படி நடக்காமல் இருந்தால் இன்னும் சுதந்திரம் இருக்குமே என்கிற ஒரு நப்பாசை தாங்க, ஆனந்தி!

வருண் said...

***ஆனந்தி.. said...

எதிர்விவாதம் யோசிக்க வைக்கிற மாதிரி சூடா கூட இருக்கட்டும்...ஆனால் கொச்சையான வசவுகள் தான் நெளிய வைக்கும் நிலைமை...பதிவுலகில் சீக்கிரம் இந்த நிலைமை மாறலாம்...))

23 November 2010 7:48 PM***

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க! :)