Monday, November 29, 2010

நல்லவேளை நந்தலாலாவை சன் நெட்வொர்க் தயாரிக்கலை!

ஜப்பானிய மொழிப்படத்தை தழுவி மிஸ்கின் (ராஜா) இயக்கி மற்றும் இசை ஞானி இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள ஒரு தரமான சினிமாதான் நந்தலாலா! யாருக்கு? பொதுமக்களுக்கு எப்படினு இன்னும் தெரியலை. ஆனால் உலக சினிமா, கொஞ்ச காசுபோட்டு நல்ல சினிமா த்ரனும்னு நெனைக்கிறவங்களுக்கு!

இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அப்படி ஆஹா ஓஹோனு புகழ்ந்து எல்லோரும் எழுதியுள்ளதால், இனிமேல் இந்தப் படத்தை நெகட்டிவாக விமர்சிக்க இப்போதைக்கு சாருநிவேதிதாக்குக் கூட தைரியம் வராது.

ஆமா ஜப்பானியப் படத்தை தழுவி எடுத்த படமாமே?

மிஸ்கின் ஜப்பானியப் படத்தை சுட்டு இருகிகாராமே?

அப்படியே இருந்தால் என்ன? இல்லை ஜீனியஸ் மிஸ்கின் காப்பியடிச்சா தான் என்ன பெரிய தப்பு? அதெல்லாம் பெரிய தப்பில்லை! ஆனா இதே வேலையை (தழுவலை) நம்ம கமல் செஞ்சிருந்தா? இந்நேரம் கமலுக்கு கண்ணா பின்னானு திட்டு விழுந்து இருக்கும். அதென்னவோ தெரியலை ரொம்பப் பெரிய ஆளாயிட்டாத்தான் இந்தத் தழுவல் பிரச்சினை அதிகம்.

சரி, காப்பியடிச்சா அந்த ஸ்டில்லைக் கூட அப்படியே காப்பி அடிக்கனுமா என்ன? இல்லை இல்லை தழுவினால் அந்த ஸ்டில்லைக்கூட விடக்கூடாதா?..

பதிவுலகில் ஒரு சில விமர்சகர்கள் இருக்காங்க. இவங்க எப்படினா சன் நெட்வொர்க் ஒரு படத்தை விநியோகம் செய்தால், அதை அறவே வெறுத்து, அவர்கள் மேலே உள்ள வெறுப்பில் அந்தப் படத்தை நியாயமாக விமர்சிக்காமல், கேவலமான ஒரு விமர்சனத்துடன் வருவது போலிருக்கும். ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!

நான் சன் மற்றும் மு க குடும்பத்தினருக்கு வக்காலத்தெல்லாம் வாங்கவில்லை! "வ" குவாட்டர் கட்டிங் போன்ற படங்கள் ஃப்ளாப் ஆனதில் சந்தோஷப் பட்ட முதல் ஆள் நாந்தான். இதே நந்தலாலா படத்தை சன் நெட்வொர்க் அல்லது யாராவது மு க குடும்பம் தயாரித்து இல்லைனா விநியோகம் செய்து இருந்தால் இதற்கு நொடிக்கொருமுறை விளம்பரம் கொடுத்து இருந்தால்? அதன் விளைவு நந்தலாலாவுக்கு பதிவுலகில் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தேன்.
ஒரு சில பதிவர்களின் விமர்சனமே இப்போது வந்துள்ளதுக்கு எதிர் மாதிரியாக வந்திருக்கும்!

எந்திரனாக இருக்கட்டும், நந்தலாலாவாக இருக்கட்டும் இல்லைனா மைனாவாக இருக்கட்டும், தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்துப் படத்தை படமாகப் பார்த்து விமர்சிக்கும் நிலை வந்தால் நல்லாயிருக்கும்! ஒரே படத்தை சன் குழுமும் எடுத்தால் ஒரு மாதிரியும், ஞாநி தயாரித்தால் ஒரு மாதிரியும், ப்ரமிட் சாய்மீரா தயாரித்தால் ஒரு மாதிரியும் விமர்சிக்க வேண்டியதில்லை!

14 comments:

Chitra said...

எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும், சாமி. நிஜமா இந்த படம், நல்லா இருக்கா - இல்லையா? :-)

வருண் said...

எங்க ஊர்ல இந்தப்படம் போடலைங்க. Waiting for the dvd to come out. ஆனால் பிற தளங்களில் messages படிக்கும்போது, பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தை தருமாம். தமிழ் சினிமா எப்ப்டியெல்லாம் யிருக்கனும்னு கனவு காண்பவற்களுக்கு பிடிக்குமாம்.

அதாவது உங்களுக்கு பிடிக்காது because it is a very strong subject! :)))

Philosophy Prabhakaran said...

நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் நான் விமர்சனம் செய்வது கிடையாது... எனக்கு எல்லாமே ஒண்ணுதான்... சொல்லப்போனால் மிஷ்கின் துணை இயக்குனர்களை பேசிய விதமும், ஜப்பானிய படத்தை தழுவி எடுத்ததும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை... இருப்பினும் அதை எனது விமர்சனத்தில் வெளிக்காட்டவில்லை...

வெற்றி நமதே said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

வந்தியத்தேவன் said...

சைக்கோ சாரு வழக்கம் போல் இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்க்கு தடை என்கின்றார்.

karthik said...

//ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!//

100/100 உண்மை
அதெல்லாம் எப்பிடி முடியும்! தான் அதிக ஹிட்ஸ் வாங்குவதற்கும் விரைவில் பிரபலம் ஆவதற்கும் இப்பிடி மனசாட்சி இல்லாத வேலை பார்த்தால் தானே முடியும் (சில நேர்மையான பதிவர்களும் உள்ளனர்)

வருண் said...

***philosophy prabhakaran said...

நீங்கள் சொல்வது மாதிரி எல்லாம் நான் விமர்சனம் செய்வது கிடையாது... எனக்கு எல்லாமே ஒண்ணுதான்... சொல்லப்போனால் மிஷ்கின் துணை இயக்குனர்களை பேசிய விதமும், ஜப்பானிய படத்தை தழுவி எடுத்ததும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை... இருப்பினும் அதை எனது விமர்சனத்தில் வெளிக்காட்டவில்லை...
29 November 2010 9:23 PM ***

நான் உங்களை சொல்லலைங்க. உங்க விமர்சனம் வந்து பார்க்கிறேன். :)

வருண் said...

***PALANI said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

29 November 2010 10:23 PM**

என்னங்க பிரச்சினை, பழம் நீ?

வருண் said...

***Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

29 November 2010 11:02 PM***

நன்றி, தமிழ் உலகம் :)

வருண் said...

***வந்தியத்தேவன் said...

சைக்கோ சாரு வழக்கம் போல் இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்க்கு தடை என்கின்றார்.

30 November 2010 12:19 AM***

இனிமேல் இவரு இளையராஜா இசையை திட்டியே ஆகனும் என்கிற ஒரு முடிவு எடுத்துட்டார் போல இருக்கு. நன்றி வந்தியத்தேவன். நன்ன என்னனு பார்க்கிறேன் :)

sharfu said...

sun pictures gives unnecessary hype to a below average film or even a worse film.

can u say that enthiran is a complete entertainer or world class movie.

its an empty a asafoetida tin.

வருண் said...

***karthik said...

//ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!//

100/100 உண்மை
அதெல்லாம் எப்பிடி முடியும்! தான் அதிக ஹிட்ஸ் வாங்குவதற்கும் விரைவில் பிரபலம் ஆவதற்கும் இப்பிடி மனசாட்சி இல்லாத வேலை பார்த்தால் தானே முடியும் (சில நேர்மையான பதிவர்களும் உள்ளனர்)
30 November 2010 3:35 AM ***

உண்Mஐதாங்க, இப்போ ஒரு சில பதிவர்கள், விருப்பு வெறுப்பை தள்ளி வைத்துவிட்டு ஒழுங்கா படத்தைப் பார்த்து எழுதிறாங்க.

நன்றி, கார்த்திக் :)

வருண் said...

***widthdoesmatter said...

sun pictures gives unnecessary hype to a below average film or even a worse film.

can u say that enthiran is a complete entertainer or world class movie.

its an empty a asafoetida tin.

30 November 2010 9:23 AM ***

OK, so be it. Why would one's review get influenced by sun picture?

I see that as "reviewer's weakness"! :)

Katz said...

//இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அப்படி ஆஹா ஓஹோனு புகழ்ந்து எல்லோரும் எழுதியுள்ளதால், இனிமேல் இந்தப் படத்தை நெகட்டிவாக விமர்சிக்க இப்போதைக்கு சாருநிவேதிதாக்குக் கூட தைரியம் வராது.
//

ha ha