Friday, May 16, 2014

திமுக வின் வீழ்ச்சி! திராவிடர்களின் வெற்றி?!

எதிர்பார்த்தது போலவே 2 ஜி ஸ்கேண்டல் விளைவால், திமுகவுக்கு அடி விழுந்துள்ளது! என்னதான் சின்னப்புள்ளைத்தனமான அரசியல் செய்து கடைசி நேரத்தில் காங்கிரஸிடம் இருந்து திமுக ஒதுங்கி வந்து தனித்து நின்னாலும், காங்கிரஸை தூக்கி எறிய முன்வந்த மக்கள் திமுகவையும் தூக்கி எறிந்துள்ளார்கள். இன்று காங்கிரஸின் சத்ரு யாரென்றால் அது அதிமுக என்றாகிவிட்டது. அதனால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

* ஈழத்தமிழர்கள், மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாருமே விரும்பியது இதுதான். மேலே மோடியின் ஆட்சி! கீழே அன்னையின் ஆட்சி! ஆக இது திராவிடர்களின் வெற்றி? It is ironic, திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தோல்வி, பார்ப்பனரை தலைவியாகக் கொண்ட ஜெயாவின் வெற்றி, திராவிடர்களின் வெற்றி!!

* ஒருவகையில்  பார்ப்பனர்களின் பொற்காலம் இதுனு சொல்லலாம்!  தான் அறவே வெறுக்கும்  திமுக வீழ்ச்சி இங்கே! தன் பார்ப்பனத் தலைவியின் ஆட்சி வேறு இங்கே! மேலே? தான் விரும்பும்  இந்துத்தவாவின் ஆட்சி! இதைவிட பார்ப்பனர்களுக்குப் பொற்காலம் என்ன இருக்க முடியும்? 

என்ன கூடவே இருந்துகொண்டு அவாளை பிரிக்கிற வருண்? தாயாப் பிள்ளையா பழகிக்கொண்டு இருக்கோம்? னு கதை எல்லாம் சொல்லி செண்டிமெண்டலாக டச் பண்ன வேண்டாம்.  இது அரசியல்! இங்கே உறவுகளுக்கு இடமில்லை! பந்த பாசத்திற்கு  இடமில்லை!புரிந்து கொள்ளவும்!

ஆக, ஒரு பக்கம் திராவிடர்களின் பொற்காலம்!

இன்னொரு பக்கம் பார்ப்பனர்களின் பொற்காலம்! 

ஏன் அவர்களை திராவிடகள், பார்ப்பனர்கள்னு அசிங்கமாச் சொல்லிப் பிரிக்கிற, வருண்? காலங்காலமாக அவா தங்களை பிரித்துகொண்டுதான் நம்முடன்  வாழ்கிறார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதேபோல்தான் வாழ்வார்கள் . யார் பிரிக்கிறா? நானா?

1000 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு என்ன சொல்லும்?

* திமுகவின் தோல்வி திராவிடர்களின் தோல்வி என்றுதான் சொல்லும்!

* பார்ப்பனரை தலைவியாகக் கொண்ட கட்சியின் வெற்றி? வரலாறு என்ன சொல்லும்?  திராவிட முண்டகளுக்கு அறிவு கெடையாது. தன்னை தானே ஆள என்றுமே தகுதி உள்ளதாக இந்த காட்டுமிராண்டிகள் நினைப்பதில்லை! தன்னை ஆள ஒரு பார்ப்பனர்தான் தகுதியானவர் என்பதை ஒப்புக் கொண்டு அவரை வணங்கி வழிபட்ட காலம் இது என்றுதான் வர்லாறு சொல்லும்.

நம்பினால் நம்புங்கள், இப்படித்தான் வரலாறு சொல்லும்! இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒரு அடி முட்டாள்!

34 comments:

suresh said...

very very correct

Hari said...

இந்த திமுக தேர்தலில் எவ்வளவு அடி வாங்கினாலும் மீண்டும் மீண்டும் ஜாதி உணர்வு மத உணவர்வை தூண்டி தூண்டியே பிழைப்பு நடத்துகிறீர்களே? வெட்கமாக இல்லை ? இதென்ன 1960 காலமா? இந்த பேச்செல்லாம் இப்பொழுது மக்களிடம் எடுபடாது. வளர்ச்சியை மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் . அதைவிட்டு விட்டு பிராம்மணர்களை திட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு குடும்ப நலனுக்காக திமுக கட்சி நடத்துகிறது. கருணாநிதி குடும்பம் வளர்ச்சியடையவா மக்கள் இங்கு இருக்கிறார்கள் . உங்கள் பேச்சு நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாதவரை வெற்றியை மீண்டும் திமுக ருசிக்கமுடியாது என்பது உறுதி.

viyasan said...

இது ஒரு குழப்பமான பதிவு. தமிழ்நாட்டை எதற்காக திராவிடர்கள் ஆளவேண்டும். தமிழ்நாட்டைத் தமிழர்கள் அல்லவா ஆள வேண்டும். :-)

வருண் said...

****இந்த திமுக தேர்தலில் எவ்வளவு அடி வாங்கினாலும் மீண்டும் மீண்டும் ஜாதி உணர்வு மத உணவர்வை தூண்டி தூண்டியே பிழைப்பு நடத்துகிறீர்களே? வெட்கமாக இல்லை ? இதென்ன 1960 காலமா? இந்த பேச்செல்லாம் இப்பொழுது மக்களிடம் எடுபடாது. வளர்ச்சியை மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் . அதைவிட்டு விட்டு பிராம்மணர்களை திட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு குடும்ப நலனுக்காக திமுக கட்சி நடத்துகிறது. கருணாநிதி குடும்பம் வளர்ச்சியடையவா மக்கள் இங்கு இருக்கிறார்கள் . உங்கள் பேச்சு நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாதவரை வெற்றியை மீண்டும் திமுக ருசிக்கமுடியாது என்பது உறுதி.****

இது உங்கள் பொற்காலம்!

சந்தோஷமா இருக்காமல் ஏன் இங்கே வந்து சாபம் விட்டுட்டு இருக்கீங்கனு தெரியலை???? :)))

வருண் said...

***இது ஒரு குழப்பமான பதிவு. தமிழ்நாட்டை எதற்காக திராவிடர்கள் ஆளவேண்டும். தமிழ்நாட்டைத் தமிழர்கள் அல்லவா ஆள வேண்டும். :-)***

வாங்கோ வியாசர் அண்ணாச்சி!

இப்படி வேற சொல்லி ஆத்தாவை உங்க "தமிழ் அத்தை"யாக்கிக் கிறீங்களாகுக்கும்?

வந்தஹ்டு வந்தாச்சு, தமிழர், திராவிடர் ஆராச்சியை ஓரமா வச்சுப்புட்டு..இப்போ என்ன உங்க "தமிழ் அத்தையும்" "மோடி மாமாவும்" எப்போ தனி ஈழம் வாங்கித் தரப் போறா? னு சொல்லீட்டுப் போங்க!

viyasan said...

//இப்படி வேற சொல்லி ஆத்தாவை உங்க "தமிழ் அத்தை"யாக்கிக் கிறீங்களாகுக்கும்?///

“தமிழினத்தலைவரை” விட “ஈழத்தாய்” உண்மையான தமிழச்சி என்கிறார்கள் சிலர். உண்மையில் தமிழினத்தலைவர் தமிழனல்ல, தெலுங்கன் என்று பகிரங்கமாக மேடையில் கூறுகிறார் சுப்பிரமணியம் சுவாமி, அதை யாரும் எதிர்ப்பதாகக் காணோம். அதனால் தான், வருண் அண்ணாச்சியும் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டுமென்று கூறுவதற்குப் பதிலாக, திராவிடம், பார்ப்பனம் என்று என்னவோ எல்லாம் பேசுகிறார். :-)


//வந்தஹ்டு வந்தாச்சு, தமிழர், திராவிடர் ஆராச்சியை ஓரமா வச்சுப்புட்டு..இப்போ என்ன உங்க "தமிழ் அத்தையும்" "மோடி மாமாவும்" எப்போ தனி ஈழம் வாங்கித் தரப் போறா? னு சொல்லீட்டுப் போங்க!///

லலிதா அத்தையும், மோடி மாமாவும் தமிழீழம் வாங்கித் தருவார்கள் என்று நாங்கள் ஒருநாளும் கூறியதில்லையே. ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்படும் போது அதைத் தடுக்க முயற்சிப்பது போல் நடித்தவர்கள், ராஜினாமா நாடகம் நடத்தியவர்கள், உண்ணாவிரத பம்மாத்து விட்டவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பெரீயமுட்டையைக் கையில் கொடுத்து வீட்டுக்கனுப்பிய எங்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அதுவும்முள்ளிவாய்க்காலில் களப்பலியான தமிழர்களின் நினைவுநாள் காலத்திலேயே அது நடைபெற்றது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதைத் தவிர இந்தியாவை யார் ஆண்டாலும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித நன்மையுமில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அத்தைக்கு சொன்னதைச் செய்யும் ‘தில்’ இருக்கிறது, நான் தமிழச்சி என்று சொல்லும் திமிர் இருக்கிறது, அதை விட, 7 கோடித் தமிழ்நாட்டுத் தமிழர்களே அத்தையை நம்பி அத்தனையையும் கொடுத்திருக்கும் போது, அவர்களின் முடிவை விமர்சிக்க நாங்கள் என்ன முட்டாள்களா? :-))))

வருண் said...

வியாசர் அண்ணாச்சி:

கருணாநிதி தெலுங்கராக்கும்?

ஆத்தா ஈழத்தாயாக்கும்?

மோடி மாமா தமிழராக்கும்?

இருந்துட்டுப் போகட்டும். இப்போ என்ன? :)

Hari said...

இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் பொற்காலம். நாங்கள் மக்களை பிரித்து பார்ககவில்லை. இன்று எல்லா இன மக்களும் சேர்ந்து தான் வாழ்கிறார்கள். ஜாதி மத உணர்வுகளை தூண்டி கேவலனமான அரசியல் செய்வது இனி மக்களிடம் எடுபடாது. அந்த காலத்தில் மக்களிடம் படிப்பறிவு கம்மி. அதை திமுக தனக்கு சாதகமாக்கி ஜாதி மத துவேஷத்தை வளர்த்து அவர்கள் லாபமடைந்தார்கள். இப்பொது நிலைமை வேறு. அதை திமுக புரிந்துகொள்ளாதவரை இப்படி வயிற்றெரிச்சல் தான் பட வேண்டிவரும். உண்மையாக ஒட்டு மொத்த மக்களுக்காக சிந்தியுங்கள். அப்படி செய்யாதவரை நீங்கள் கரை சேர்வது கடினம்.

பொன் மாலை பொழுது said...


இப்போதெல்லாம் தமிழர்கள் தங்களை "திராவிடர்கள்" என்று சொல்வதும் இல்லை நம்புவதும் இல்லை. தமிழர்கள் தமிழர்கள் மட்டுமே.

ஆரிய-திராவிட அக்கப்போர்களை யாரும் இப்போதெல்லாம் சீரியஸாக எடுதுகொல்வதே இல்லை. இந்த அக்கப்போர் பேசி வயிறு வளர்த்தவர்களை எல்லாம் புறம் தள்ளி விட்டார்கள் தமிழர்கள்.

Anonymous said...

திராவிட மொழி பேசுவோர் எல்லோரும் திராவிடர்கள் தான். தமிழர்கள் திராவிடர்கள் என சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவர்கள் தமிழ் மொழி பேசிக் கொண்டு தமிழர்களாக வாழும் வரை அவர்கள் திராவிடர்கள்.

ஏன் திராவிட அடையாளம் நமக்கு முக்கியப்படுகின்றது எனில், நம்மைச் சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் திராவிட மொழி பேசுபவை. அத்தோடு கலாச்சாரம், புவியியல், பொருளாதாரம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

அதுவும் போக ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் தமிழர்கள் வெறும் 6 சதவீதமே, பெரும்பங்காக இருப்போர் இந்தி பேசுவோரும், ஆரிய மொழி பேசுவோரும் தான். ஆக தனித்து நின்று அவர்களை எதிர்கொள்வதை விட நமது சகோதர மொழிகள் பேசுவோரோடு நிற்பது பலமானது என்பதும் கூட. திராவிட மொழி பேசுவோர் கிட்டத்தட்ட 26 % ஆக, நமது மொழி, புவியியல் நலன்கள், கலாச்சார தனித்துவம், பொருளாதாரம் என்பவற்றில் வலுவாக ஒலிக்க திராவிட மொழி பேசும் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

நீங்கள் வடக்கே எங்கே போனாலும் உங்களை தமிழன, மலையாளி, கன்னடன், தெலுங்கன் என பிரிக்க மாட்டார்கள், ஒரேயடியாக தென்னிந்தியர் மதராசி என்று தான் கூறுவார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென்னிந்தியர் என்ற அடையாளம் நமக்கு உண்டு.

சிங்கப்பூரிலோ, மத்திய கிழக்கிலோ வேலை செய்யும் போது நாம் பாகிஸ்தானியோடோ, வடநாட்டவரோடு சேர்ந்திருப்பதை விட பிற தென்னாட்டவரோடு ஒன்றாக வசிப்போம். ஏன் தெரியுமா, ஒரே மாதிரியான எண்ணம், கலாச்சாரம், உணவு பழக்க வழக்கம், உருவ தோற்றம் நமக்கு இருப்பதால் தான்.

திராவிட நாடு என்ற ஒன்று அமையக் கூடாது என்பதால் தான் தென் மாநிலங்களுக்கு இடையிலான இயற்கை வளப் பிரச்சனைகளை பதற்றமான சூழலில் வைத்திருக்கின்றார்கள் வடநாட்டு அரசியல் வாதிகள். இந்த பதற்றமான சூழலில் இருந்து தான் திராவிட இன அடிப்படையான அரசியல் தோற்று மொழி சாரி இன அடிப்படையிலான அரசியல் கிளர்ந்துள்ளது. மொழி சார் இன அடிப்படை அரசியல் செய்வோர் எப்போதுமே இந்துத்வாவை எதிர்ப்பதில்லை. கருநாடகத்திலும், தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் இது கண்கூடு.

மொழிசார் தேசியம் என்பது அவசியம் என்ற போதும் இந்தியாவைப் பொறுத்தவரை தெனிந்திய சார் புவியியல் அரசியல் மிக முக்கியம். அப்போது தான் நமது அண்டை மாநிலங்களோடு சுமூகமான உறவை வைத்துக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் முன்னுக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்தே அண்ணா உட்பட பலரும் தமிழ் மொழியை மொழி அடிப்படையில் வளர்த்ததோடு புவியியல் நலன்களுக்காக தென்னாட்டு அடையாளத்தையும், இந்திய தேசியத்துக்குள் இணைந்த பயணத்தையும் மிக புத்திசாலித்தனமாக மேற்கொண்டார்.

இன்று நாம் தமிழகத்தில் அரசியல் உரிமைகளை பெற்று அமைதியாக படித்து பட்டம் பெற்று வேலைக்குப் போய் வாழ்வது எல்லாம் ஒரு வரமே. பாருங்கள் இந்த பாக்கியம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆக, திராவிடம் ஆரியம் என்பது வெறும் இன அடிப்படையில் நோக்காமல் புவியியல் மற்றும் பொருளாதாரம் இணைந்த கலாச்சார, மொழி அடிப்படையில் நோக்க வேண்டும்.

viyasan said...

//இன்று நாம் தமிழகத்தில் அரசியல் உரிமைகளை பெற்று அமைதியாக படித்து பட்டம் பெற்று வேலைக்குப் போய் வாழ்வது எல்லாம் ஒரு வரமே. பாருங்கள் இந்த பாக்கியம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. ///

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தம்மை திராவிடர்களாக அல்லாமல் தமிழர்களாக மட்டும் அடையாளப்படுத்தியிருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு என்றொரு தனிமாநிலம் இந்தியாவில் கிடைத்திருக்காதென்கிறீர்களா? ஒரே குழப்பமாக இருக்கிறதே. தமிழ்நாட்டுத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் போலல்லாது உரிமையோடு வாழும் “பாக்கியத்துக்குக்” காரணம் அவர்களுக்கென தனிமாநிலம் இருப்பது தான். அந்த மாநிலத்துக்குப் பெயர் தமிழின் அடிப்படையில் தமிழ்நாடே தவிர, திராவிட நாடல்ல. ஏனைய திராவிடர்களும் (அவர்களும் தமது மொழி அடிப்படையில் தான் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்) தமக்கென தனி மொழிவழி மாநிலங்களைக் கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் எதற்காக திராவிடம் என்ற பெயரைக் கட்டியழுவது மட்டுமல்ல, தமது மாநிலத்தை, அதன் ஆட்சி, அதிகாரத்தை தமிழரல்லாத திராவிட எச்ச்சங்களுடனும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏனைய திராவிட மாநிலங்களில் நடப்பதாகத் தெரியவில்லையே. உங்களின் வாதத்தையும் அதற்கான காரணங்களையும் பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் திராவிடர்கள், அவர்கள் தான் தம்மை இன்றும் திராவிடர் என அழைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இலங்கைத் தமிழர்கள் அல்ல. அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழர் – தமிழர்களுக்கிடையே இடைவெளி ஏற்படுகிறதே.

குலசேகரன் said...

The term 'Dravidars' was used when the four southern states were under one governance called Madras Presidency in the Raj where Telugus, Malayalis, Kannadigas and Tamils had to live together facing common problems: one such problem was the dominance of Brahmins in all spheres. The Brahmins manipulated their proximity with the rulers through knowledge of English language and cornered all opportunities. They were loyal to Sanskrit and Vedic religion and the religion was also used by them to exercise the dominance. Common masses feared the ruthless rulers and the opportunist Brahminis close to the rulers. The Brahmins called themselves Aryars to distinguish themselves from Non-brahmins. Throughout history, they felt alienated from others and the alienation was necessary for them in order to keep their religion active and feel holier than others.

Therefore, when all NBs came together to oppose the dominance, they had to use a single word Dravidars to distinguish from the Brahmins. Also, worthy to note here that the word NON BRAHMINS (bramanarilldhors) was also used. Further, the word Dravidars was already in use by historians who include eminent Brahmins themselves.

Now, Madras Presidency is history. Whether the mindset of the Brahmins - here in TN - is also history now - is a question I leave it to all of you. If it is, the said term is obsolete. If not, it is relevant still.

குலசேகரன் said...

For Harish to note: If it is history, the scathing essay by T.M.Krishna from TTK family in the newspaper The Hindu last week would not have become popular. 100s of harsh comments from Brahmins and welcome comments from Non-Brahmins to his views (see the divide here too!) are eye-openers. Harish and others should read that essay; and also, his interview in Tamil newspaper The Hindu.

I said all the four linguistic groups lived together in the Presidency. Yet only the Telugus and Malayalis and Kanndaigas dominated. It was they who found the Brahmins a hindrance to their social advancement. Hence, it was they who sphere-headed the Anti Brahmin movement: EVR, a Kannadiga, Sankaran Nair, Dr Nair, Malayalis, Prakasam. Even today, the Naidus, the Telugus, are virulent haters of Tamil Brahmins. The Tamil Brahmins never examined the anti Brahmin movement from an objective view. They considered it personally and that is due to their inherent selfishness i.e. they felt their livelihood was in question. If they had thought wisely, they would have reminded fellow Tamils of the Non Tamil dominance in the Presidency and the importance of encountering it together. The Tamil Brahmins would have taken fellow Tamils along to oppose the Non-Tamils: which would have diverted the anti-Brahmin movement into Tamil vs. Non-Tamils social movement, and with Tamils getting included Tamil Brahmins.

So, it is the Tamil Brahmins and their disinclination to consider other Tamils to be taken along with them, that had created EVR and other Brahmin haters.

After indepenence, the four linguistic groups had their own states. But those Non Tamils like EVR, who settled in TN, continued the Anti Brahmin movement using still the word Dravidars. Since some Tamil leaders found some political gain out of it, they joined EVR and history shows they reaped good political returns!

வருண் said...

Have not we seen Harishes??? They always preach "non-religion" "anti-casteism" in PUBLIC!

BUT,

GO, SEE how HARISH lives his PERSONAL LIFE in day to day life! Go, see who he marrying and how he chooses his partner.

Yeah, we have seen millions of Harishes like this! Are they ignorant or liars or just manipulative? You need to come up with your own judgment!

But, when you carefully look at his personal life, you will realize he is fooling others and himself just like any other brahmin!

வருண் said...

வியாசன்:

உங்க அகராதிப்படி கருணாநிதி தெலுங்கர், பெரியார் கன்னடிகா எனதெல்லாம் உண்மையென்றால், வை கோ வும் தெலுங்கர்தாம்.

அதை உமது மரம்ண்டையில் ஏற்றும்!


ஈழத்தமிழர்கள் போல தற்குறிகள், சுயநலத்தின் மறு உருவம் உலகிலேயே இல்லை என்பதற்கு வியாசன்போல் மரமண்டைகளின் கட்டுரைகள் நிதர்சனம்!

viyasan said...

//வை கோ வும் தெலுங்கர்தாம்//

வைகோ தெலுங்கர் அல்ல தமிழர் தான் என்று நான் வாதாடவில்லையே? வைகோ மட்டுமல்ல விஜயகாந்த், பெரியார் கூடத் தான் தமிழர்கள் அல்ல. வைகோ தனது தமிழர்/ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கைகளை சந்தர்ப்பத்துக்கேற்றவாறு விட்டுக் கொடுக்கவில்லை, அதற்காக நாங்கள் அவரைப் போற்றுகிறோம், நன்றியைத் தெரிவிக்கிறோம், அதற்காக அவர் தமிழராகி விட மாட்டார். வைகோ "திராவிடச் சேற்றில் முளைத்த செந்தாமரை" ஆனால் அவர் தமிழன் அல்ல. :-)

குலசேகரன் said...

ஜெயலலிதா கன்னடியர். அவர் தன்னை சீரங்கத்துக்காரி என்று சொல்லிக்கொண்டாலும் 1000 வருடங்களுக்கு முன் மைசூர் சென்ற ஐயங்கார்கள் இன்று தங்களை கன்னடியர்கள் என்று அழைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், கன்னட மொழி இயக்கத்துக்கு தலைவாராகவும் ஒரு ஐயங்கார் இருக்கிறார். மத்திய அமைச்சர் ஜெயராம் தனக்குத் தமிழ் தெரியாது என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டார். அவர் ஒரு மைசூர் ஐயங்கார். இன்று மைசூர் ஐயங்கார்கள் கன்ன்டத்தையே தாய்மொழி என்று சொல்லிகொள்வர்.

வீராச்சாமி, விஜயகாந்த், வைகோ, மற்றும் நிறைய அரசியல்வாதிகள் நாயுடு, நாயக்கர்களே. இவர்கள் என்றுமே தமிழைத்தங்கள் தாய்மொழி என்றழைத்ததில்லை. விஜய்காந்தின் தேசியப்பற்று, அதாவது இந்தி, இதிலிருந்துதான் எழுகிறது. எழுத்தாளரான கி. ராஜநாராயணன் - நாயக்கர் - தெலுங்கே எங்கள் தாய்மொழி, வீட்டுமொழியுமாகும் என்று எழுதியிருக்கிறார்.

சவுராட்டியர்கள் அவர்கள் மொழியைத்தான் பேசிக்கொள்கிறார்கள். 300 ஆண்டுகளுக்குப்பின்னும். மோடியை அழைத்துதான் விழாக்கொண்டாடப்பார்த்தார்கள். அவரால் முடியவில்லையென்றவுடன், கன்னட அமைச்சர் ஒருவரைத் தலைமை தாங்க வைத்தார்கள். அதாவது, தமிழர்கள் அவர்களுக்கு ஒட்டில்லை.

உண்மைத்தமிழர்கள் பிறரால் அடக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல; வந்தேறிகளுக்கு அடிமை செய்து வாழ்ந்தவர்கள். ஹெலிஹாப்டரைப்பார்த்து வணங்கும் வரை சென்றுவிட்டது. இல்லையா?

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//ஈழத்தமிழர்கள் போல தற்குறிகள், சுயநலத்தின் மறு உருவம் உலகிலேயே இல்லை என்பதற்கு வியாசன்போல் மரமண்டைகளின் கட்டுரைகள் நிதர்சனம்//

ஈழத்தமிழர்களில் இருந்த அறிவு ஜீவி தலைவர்களை எல்லாம் சுட்டுக் கொன்ற பின் மிச்சம் மீதி இருப்பது தற்குறிகள், சுயநலத்தின் மறு உருவுகள் தானே. அவர்களுக்கு அரசியல் ஞானமோ, பன்னாட்டு தந்திரமோ கிடையாது. மக்களிடையே சுமூகமாக போவது பொருளாதாரத்தை வளர்ப்பது இன, மொழி, தாயகத்தை காப்பது பற்றிய அறிவு கிடையாது.

சிங்களவரோடு இணைந்து இந்தியர்களை விரட்டினார்கள் முதலில். 1948

இந்தியர்களோடு இணைந்து சிங்களவர்களோடு அடித்துக் கொண்டார்கள். 1978

சிங்களவர்களோடு சேர்ந்து இந்தியர்களோடு சண்டையிட்டார்கள். 1988


இவ்வாறு இரு அண்டையர்களோடும் பகைத்துக் கொண்டதன் விளைவே ஒரு முள்ளிவாய்க்கால் பயங்கரம்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற முதுமொழியினை அறிய முற்பட வேண்டும்.

நமது சுற்றத்தோடு பகைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது கடினம். பக்கத்து வீட்டுக் காரன் மோசமானவனாகவே இருந்தாலும் கூட விட்டுக் கொடுத்து சுமூகமாய் வாழ வேண்டும். எப்போ பார்த்தாலும் சண்டை சச்சரவு எனப் போனால் ஒரு கட்டத்தில் வாழவே முடியாது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களோடும், மக்களோடும் சுமூக உறவை பேண முயல வேண்டும். பிரச்சனைகள் வந்தால் அறிவுப் பூர்வமாக தீர்த்தல் வேண்டும். மாறாக உணர்ச்சி பொங்கினால் அடங்கி விடும் மொத்தமாக.

viyasan said...

//தமிழ் தேசியம் என்பது தமிழ் ஜாதிகள், இந்து மதம் ஆகியவற்றையே பிரதானமாக கொண்டுள்ளது. இது நிச்சயம் தமிழல்லாத ஜாதி மக்களையும், இந்துவல்லாத முஸ்லிம், கிறித்தவ மக்களையும் அந்நியப்படுத்தும். ///

சிங்களவர்களின் சொம்பு தூக்கிகள் தமிழ்தேசியத்துக்கு எதிராக இருப்பது வியப்புக்குரிய விடயமல்ல. ஆனால் மற்றவரகளை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு உளறுவதைப் பார்க்கத் தான் சிரிப்பு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையில் கூட தமிழ்த்தேசியத்துக்கு ஜாதி, மதம் கிடையாது. (இலங்கையில் முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை), அதை விட, தமிழர்கள் அனைவரும் இந்து கிறித்தவ வேறுபாடின்றி தமிழ்த் தேசியத்தின் கீழ் ஒன்றுபட்டுத் தானுள்ளனர். அங்கு மதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. உதாரணமாக, இலங்கையில் கிறித்தவர்கள் தான் தமிழ்த் தேசியத்தில் இந்துக்களை விட முன்னணியில் இருக்கின்றனர். தமிழ்த் தேசியத்தில் தமிழும், தமிழனும் தான் முக்கியமே தவிர அவர்களின் மதமோ, ஜாதியோ அல்ல.

"A major feature of the feeling of oneness of this community is that it cuts across religious barriers. In the contemporary psyche of this society a Christian Sri Lankan Tamil is as important an inheritor of Tamil culture as a Hindu Tamil. More importantly this feeling of being Sri Lankan Tamil does not arise from any notion of classical cultural heritage coming top down but a consciousness that grows from within and arises from a shared tradition of life."

-The making of a Sri Lankan Tamil-

viyasan said...

//நீண்டகால நோக்கில் இலங்கையில் ஏற்பட்டது போல தமிழர்கள் ஜாதி, மத ரீதியாக வலுவாக பிளவடையச் செய்வதோடு, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ///

திராவிடமும் பெரியாரியமும் தழைத்தோங்கும் தமிழ்நாட்டில் உள்ளது போன்று இலங்கையில் தமிழர்கள் மத்தியில் ஜாதி, மதப் பிளவுகள் கிடையாது,தமிழ்நாட்டில் போல் எந்த சாதிக் கொடுமைகளும் கிடையாது, உதாரணமாக யாரும், யாருக்கும் மலம் தீற்றுவதில்லை. செருப்பு போட்டு நடப்பதைத் தடுப்பதில்லை. ஏன் யாரிடமும் சாதிச் சான்றிதழ் கூடக் கிடையாது. தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சாதி இல்லையென்றே கூறி விடலாம். ஆனால் இங்ககு அப்பட்டமாக பொய் சொல்கிறார் கோணங்கிச்செல்வன். எப்படியெல்லாம்ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்கிறார் பார்த்தீர்களா. அவரை விட மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாதென்ற நினைப்பு. அது தான் அவருடைய பிரச்சனை. :-)

viyasan said...

//அங்கு தலைமுறை கடந்து வாழும் எவரும் தாம் ஒரு பிரஞ்சினன் என்ற எண்ணத்துக்குள் கொண்டு வந்துவிடுகின்றார்கள். இதனால் பிரஞ்சு மொழி அடையாளம் வலுப் பெறுகின்றது//

Naturalized Citizenship ஐயும் Ethnicity ஐயும் குழப்பி தனது கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக நினைத்து மற்றவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் கொடங்கிச் செல்வன். உதாரணமாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் பிரான்சில் பிறந்து பிரஞ்சுக் குடியுரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பிரஞ்சு குடியுரிமை பெற்ற Allophone களே தவிர அவர்கள் பிரஞ்சுக்காரர் (French ) அல்ல. வாழும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதால், யாருடைய இனவடையாளமும் மாறி விடுவதில்லை. எத்தனை நூற்றாண்டுகள் தமிழர்கள் பிரான்சில் வாழ்ந்தாலும் அவர்கள் Ethnically பிரஞ்சுக்காரர்களாக மாறவும் முடியாது. அதை பிரஞ்சுக்காரர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. பிரஞ்சு தேசியமும், அவர்களின் மொழிப்பற்றும், தமிழர்களின் மொழிப்பற்றையும் தேசியத்தையும் விட தீவிரமானது என்பது தான் உண்மை.

பிரான்ஸ் நாட்டவன் என்ற எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள் என்று கூறலாமே தவிர, அவர்கள் பிரஞ்சினன் என்ற எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள் என்பது வெறும் பிதற்றல். :-)

viyasan said...

//சிங்களவரோடு இணைந்து இந்தியர்களை விரட்டினார்கள் முதலில். 1948

இந்தியர்களோடு இணைந்து சிங்களவர்களோடு அடித்துக் கொண்டார்கள். 1978

சிங்களவர்களோடு சேர்ந்து இந்தியர்களோடு சண்டையிட்டார்கள். 1988///

இவரது கருத்துக்கள் எல்லாமே ஒருபக்கச் சார்பானவை. சிங்களச் சொம்பு தூக்கிகள் இப்படித் தான் உண்மையைத் திரிப்பார்கள், ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வார்கள். அது தான் அவர்களுடைய வேலைத் திட்டம். பார்த்தீர்களா, இவரின் கருத்தை வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கும், படுகொலைகளுக்கும் அழிவுக்கும் சிங்களவர்கள் காரணமல்ல,. சிங்களவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் நல்லவர்கள். ஈழத் தமிழர்கள் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்று தான் நினைப்பார்கள் அல்லவா. இது தான் சொம்பு தூக்கிகளின் வேலை, இப்படி பிழைப்பு நடத்துவதை விட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். :-)

viyasan said...

//அதே போல இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் இந்தியத் தமிழ் தேசியத்தையும் கலந்து கட்டி இங்குள்ள மாநிலக் கட்சியின் அடையாளங்களை அழித்தொழித்து தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வரலாம். ///

உண்மையில் இங்கு கோடங்கிச்செல்வன் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. இவரது வார்த்தை ஜாலங்களை ஆராய்ந்தால் அதற்குப் பின்னால் எந்தவிதக் கருத்தும் இல்லை என்பது தெரிவாகும். எல்லாமே வெறும் பிதற்றல் தான். :-)

முதல் வசனத்தைப் பார்ப்போம். “இலங்கைத் தமிழர் பிரச்சனையையும், இந்தியத் தமிழ்த் தேசியத்தையும் கலந்து கட்டி” என்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அடிப்படை தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது, தமிழர்களை சாதி, மத வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றிணைப்பது.பாரம்பரிய தமிழ்மண்ணில் (தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும்) ஆட்சியதிகாரம், பொருளாதார ஆதிக்கம் தமிழர்களின் கைகளில் இருப்பதை ஊக்குவிப்பது. அதனால் தமிழ்த் தேசியம் என்பது, இலங்கையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அது ஒன்று தான். அது நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை.

அடுத்ததாக, “இங்குள்ள மாநிலக் கட்சியின் அடையாளங்களை அழித்தொழித்து தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வரலாம்” என்கிறார். இதுவா தமிழ்த்தேசிய வாதிகளின் நோக்கம். அப்படியானால் தமிழ்நாட்டிலுள்ள மாநிலக்கட்சிகள் தமிழ் அடையாளங்கள் அற்றுக் கானபடுகின்றன என்று கூறுகிறாரா, அப்படி இல்லாது விட்டால் தமிழ்தேசியவாதிகள் எதற்காக மாநிலக் கட்சிகளின் அடையாளங்களை அழித்தொழிக்க வேண்டும்.

இந்திய தேசிய நீரோட்டத்துக்குள் இணைப்பதும் அதைப் பலப்படுத்துவதும் தான் தமிழ்த் தேசியத்தின் நோக்கம் என ஒரு முட்டாள் கூடக் கூற மாட்டானே. அப்படி என்றால் தமிழ்தேசியம் பேசுபவர்களை இந்திய தேசியவாதிகள் ஏன் வெறுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களுக்கு உதவுகிறார்களே, அது ஏன்?


//அதனூடாக வடக்கில் இருந்து கொண்டு நான்கு தென் மாநிலங்களையும் அடித்து கொள்ளச் செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கின்றது.///

தமிழ்த் தேசியவாதிகளுக்கா “வடக்கில் இருந்து கொண்டு நான்கு தென் மாநிலங்களையும் அடித்து கொள்ளச் செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கின்றது”. ஒன்றும் புரியவில்லையே. அப்படியானால் தமிழ்த் தேசிய வாதிகளின் நோக்கம் தமிழ்நாட்டை ஆளுவதல்ல, வடக்கிலிருந்து ஆளுவதா? ஒன்றுமே புரியவில்லை, தயவு செய்து விளக்கவும். :-)

viyasan said...

//ஆனால் தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களும் உருவான பின்னர் இக் கொள்கைகளில் மாற்றம் வேண்டியே திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா வடிவமைத்தார். அண்ணாவின் கொள்கை என்பது அனைத்து சாதி, மத, மொழி மக்களும் சுமூகமாக வாழ வேண்டும் என்பதாகவே இருந்தது///


அறிஞர் அண்ணாவை ‘Icon of Tamil Nationalism” என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இவர் என்னடாவென்றால், ஏனைய திராவிடர்கள் தமக்கென, தம்மைத் தாமே ஆண்டு கொண்டு, தமது மொழி கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள தனி மொழிவழி மாநிலங்களைப் பெற்றுக் கொண்ட பின்னரும், தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் ஆட்சியையும், பொருளாதாரத்தையும் திராவிடர்கள் எல்லோருடனும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையை அண்ணா கொண்டிருந்திருந்தார் என்பது போல எழுதுகிறார். அப்படியானால் அவர் எதற்காக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். எல்லோருக்கும் பொதுவாக திராவிடநாடு என்று பெயரிட்டிருப்பார் அல்லவா?


//ஈழத் தமிழ் தேசியத்துக்குள் இந்திய வம்சாவளி தமிழர்களையும், முஸ்லிம்களையும் கூட இணைக்கத் தவறினார்கள்.///

இப்பொழுது இந்தியவம்சாவளித் தமிழர் என்று யாரும் இலங்கையில் கிடையாது. எல்லோரும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமே. இலங்கைத் தமிழ்த் தேசியம் என்று வரும்போது அவர்களும் அதற்குள் இணைந்தவர்கள் தான். மலையகத் தமிழர்கள் தமிழீழத்துக்கு வெளியே வாழ்வதால் தமிழீழப் போராட்டத்தில் மட்டும் தான் அவர்களுக்கு நேரடித் தொடர்பில்லை. ஈழத் தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்வால், தனக்குத் தெரியாத எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி சாம்பார் வைக்கிறார் கோடங்கிச் செல்வன்.

இலங்கை முஸ்லீம்கள், தாம் தமிழர்களே அல்ல என்கிறார்கள். தமிழர் அல்லாதவர்களை தமிழ்த் தேசியத்தில் எப்படி இணைப்பது, தமிழர் அல்லாதவர்களை எல்லாம் தமிழர்களாக்கும் செப்படி வித்தையை இக்குபால் செல்வம் தான் விளக்க வேண்டும். :-)

Anonymous said...

வியாசன் போன்ற அரைவேற்காட்டு வெளிநாட்டு ஈழத்தமிழர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் பலத்த அடி வாங்கி விடுதலைப் புலிகள் தோற்றதால் ஏற்பட்ட மனபிசகு வியாதி தான். புலிகள் உலகின் வல்லவர்கள், வீர சூர பராக்கிரமசாலிகள், தங்களை விட்டால் உலகில் வேறு யாருமே இல்லை என புளுகித் திரிந்தவர்கள், கடைசியில் காணாமல் போனார்கள். அதனால் அந்த தோல்வியினை தாங்கி கொள்ள முடியாமல் அத்தனைப் பழிகளையும் இந்தியா மீது போட்டார்கள்.

விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உட்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவின. ஆனால் இன்றளவும் இந்தியா மட்டுமே உதவின என்பது போல புளுகித் திரிகின்றனர்.

இதனை தமிழகத்தில் உள்ள மூன்றாம் தரக் கட்சிகள் எடுத்துக் கொண்டு எப்படியாவது உசுபேற்றி உசுப்பேற்றி அரசியல் லாபம் அடையலாம் என மல்லுக்கட்டினார்கள். ஆனால் முடியவில்லை. கூடவே மோடி அலையோடு தேசியக் கட்சியின் முதுகில் தாவினார்கள், அதுவும் பலிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டு தமிழர்கள் திராவிட கட்சிகளையே நம்புகின்றனர். திமுக - அதிமுக அவ்வளவு தான். திமுக புலிகளை ஆதரித்த போது அதிமுக எதிர்த்தது திமுக எதிர்த்த போது அதிமுக ஆதரித்தது. திராவிட அரசியலில் இலங்கையின் நிலைமை இவ்வளவு தான்.

ஒரு ஈழத்தமிழரோடு பேசும் போது சொன்னார், எப்படியும் ஜெயலலிதா பிரதமர் ஆகி தமிழீழம் வாங்கிக் கொடுத்திடுவார் என. சீமானின் உசுப்பேற்றல் இது. ஹிஹி. சிரிப்புத் தான் வந்தது. இந்திய அரசியலில் அ, ஆ கூட தெரியாதவர் இப்படித் தான் உளறுவார்கள்.

ஜெ பிரதமரே ஆனாலும் கூட இந்திய அரசு இலங்கை அரசை பகைக்காது இந்தியாவின் கொள்கையே இது தான். சொல்லப் போனால் திமுகவின் அழுத்தமே ஐநா சபையில் இந்தியா எதிர் ஓட்டு போட்டதும் நடுநிலைமை வகித்ததும். இனி பாஜக வந்த பின் அது கூட போய்விடும்.

Anonymous said...

தமிழ்நாட்டில் 100% தமிழ் ஜாதிகள் கிடையாது. இங்கு பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். 15% அதிகமானோரின் பூர்விகம் தெலுங்கு, கன்னடம், மராத்தி, சௌராஸ்ட்ரி உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தோர். இவர்கள் 1956-க்கு முன்னிருந்த இங்கு வசித்து தமிழர்களாக மாறிவிட்ட மக்கள். தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் உண்மையில் தமிழர்களாக மாறிவிட்ட மற்ற மக்களை உள்வாங்க மறுக்கின்றது. காரணம் தமிழ் தேசியமல்ல, போலி தமிழ் தேசியம். இவர்கள் உண்மையில் தமிழ் ஜாதிக் கட்சிகளை வளர்க்கும் நோக்கில் செயல்படுவோராக உள்ளனர்.

தமிழகத்தில் தமிழ் தேசியம் உண்மையாக வருமானால் ஏற்கலாம், ஆனால் போலியாக வரும் தமிழ் தேசியம் ஆபத்தானது. தமிழ் தேசியம் பேசும் பலரின் குழந்தைகளே ஆங்கில வழியில் படிக்கின்றன என்பதது அதிர்ச்சி தகவல்கள். அதாவது ஊருக்கு தமிழ் தேசியம் உள்ளுக்குள் ஜாதி அபிமானம் என்பதாக இருப்பதை கடுமையாக எதிர்க்கின்றோம்.

ஆம் தமிழகத்தில் அண்மையக் காலமாக பிறமாநில தொழிலதிபர்கள் முன்னேறி வருகின்றனர். காரணம் என்ன உள்ளூர் தமிழருக்கு தொழில் செய்ய திராணி இல்லை, தயக்கம் காட்டுகின்றனர். இங்கு வெளியூர் தொழிலதிபர்களுக்கு தனி வரிச்சலுகை, அரசியல் சப்போர்ட் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனால் முன்னேறுகின்றான். நாம் அவனை விட முன்னேற முயல் வேண்டுமே ஒழிய, அவனை விரட்டிவிட்டு கொண்டாடுவதல்ல.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தமிழக மக்கள் அண்டை மாநிலங்களோடு உறவாடுவது பிடிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. ஆனால் தமிழக வளர்ச்சிக்கும் நலனுக்கும் ஈழத்தமிழர்களின் பங்கு 1 சதவீதம் கூட கிடையாது. நமக்கு அண்டை மாநிலங்களின் உறவும், ஒட்டு மொத்த இந்தியர்களுடான ஆதரவும் மிக முக்கியம்.

தமிழர்கள் என்ற முறையில் தார்மீக ஆதரவை நாம் ஈழத்தமிழருக்கு கொடுக்கலாமே ஒழிய, இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகி அப்புறமாக ஈழத்தமிழரை பாதுகாப்போம் என்பதெல்லாம் எதார்த்தம் மீறிய கனவுகள். அதற்குள் அங்குள்ள பாதி பேர் வெளிநாட்டுக்கும் மீதி பேர் சிங்களவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

Anonymous said...

தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கும் புவியியல் வரலாற்று பாதைகள் வெவ்வேறானவை. நமக்கு நமது மொழி, மாநிலம் முக்கியம் என்பதோடு நமது பொருளாதாரம், அரசியல் நிலைத்தன்மை மிக முக்கியம்.

ஆக தமிழகத்துக்குள் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களை அரவணைத்தும், பிற மாநிலங்களோடு, முக்கியமாக நமது அண்டை எல்லைகளில் உள்ள மாநிலங்களோடு உறவுகளைப் பேணி வளர்ச்சியடை முயல்வோமாக.

வெளிநாட்டில் கள்ள கிரெடிட் கார்டு போட்டும், வங்கிகளில் கடன் மோசடி செய்தும், இயக்கத்துக்கு காசு வாங்குவதாய் கூறி வீடு, கடை என வாங்கிப் போட்டு கூலாக சுற்றியலையும் கூட்டத்தின் பேச்சை இங்கு கேட்டு உயிரை விட்டு வீராவேசம் பேசி வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள் அவ்வளவு தான் சொல்வேன்.

Anonymous said...

//இப்பொழுது இந்தியவம்சாவளித் தமிழர் என்று யாரும் இலங்கையில் கிடையாது. எல்லோரும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமே. இலங்கைத் தமிழ்த் தேசியம் என்று வரும்போது அவர்களும் அதற்குள் இணைந்தவர்கள் தான். //

வியாசனின் பொய்களில் இதுவும் ஒன்று இலங்கைத் தமிழர்கள் என்றுமே இந்திய வம்சாவளித் தமிழர்களும் தாமும் ஒன்று எனக் கூறியதும் கூறுவதுமி இல்லை.

1948, 1972-யில் இந்திய வம்சாவளித் தமிழர்களை வெளியேற்றியதில் வாய் திறவாத உடந்தைக் காரர்கள் இவர்கள்.

இன்றளவும் கூட இலங்கை அரசியல் சாசனம் இரு தமிழர்களையும் வெவ்வேறு தேசிய இனங்களாக கருதுகின்றன.

கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாக இரண்டு பிரிவுக்கு பல வேறுபாடுகள் உள்ளன.

ஒரு யாழ்பாணத்து தமிழன் மலையகத்தவரை மணப்பதற்கே ஆயிரம் தடவை யோசிப்பார்கள். வெளியில் மட்டும் தமிழன் என்று பசப்பு வார்த்தை.

viyasan said...

ஆத்தாமல் போனால் மற்றவர்களின் பின்னூட்டங்களை மட்டுமல்ல, அவரது பதில்களைக் கூட அகற்றி விடுவார் கோணங்கிச்செல்வன். முதலில் தனிக்காட்டு ராஜாவாக மட்டுறுத்தல் செய்யாமலே பின்னூட்டங்களை அனுமதித்தார். இவரது உளறல்களுக்கு ஈழத்தமிழர்கள் பதிலளிக்கத் தொடங்கியதும், மட்டுறுத்தலை ஏற்படுத்தினார். இப்பொழுது யாரும் அவரது உளறல்களுக்கு பதில் கூற முடியாத வகையில் பின்னூட்டமிடுவதையே நீக்கி விட்டார். அப்படி அனுமதித்தால் அவரால் தொடர்ந்து சிங்களவர்களுக்கு சொம்பு தூக்கவும் முடியாது, ஈழத்தமிழர்களுக்கெதிராக உளறிக் கொட்டவும் முடியாது. அதனால் தான். :)))))

viyasan said...

ஈழத்தமிழர் பற்றிய கோடங்கியின் பிதற்றல்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பதிவிலேயே பதிலளிக்கிறேன். அவருக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும், பதிலைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் கிடையாது. ஆத்தாமல் போனால், அவரது பதிவையும் சேர்த்து அழித்து விடுவார் போல் தெரிகிறது, இவரெல்லாம் ஏன் தான் நிமிடத்துக்கொரு 'காப்பி பேஸ்ட்' பதிவு போடுகிறார் என்று தான் தெரியவில்லை. :_)))))))

Anonymous said...

புத்தி கொஞ்சமாவது இருப்பவரோடு பேசலாம், வியாசர்வாழ் போன்ற அரைவேற்காடுகளோடு பேசி பயனில்லை. அத்தோடு ஆஸ்திரேலியாவில் இருந்தும் பிரான்சில் இருந்தும் இரண்டு பேர் வந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தால் மட்டறுக்கத் தான் செய்ய வேண்டி வரும்.

வியாசர்வாழ் போன்றோரின் இந்துத்வா பார்ப்பனிய சார்புடைய கருத்துக்களை ஏற்கனவே பலர் அறிந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய புலம் பெயர் நாட்டு இலங்கைத் தமிழர்கள் பலரும் தமிழ் தேசியம் பேசியோரை போய் இந்துத்வா பார்ப்பனியருடம் சரணடைய வைத்து டெப்பாசிட் இழக்கச் செய்தது தான் இவர்களுக்கு எல்லாம் தமிழக மக்கள் கொடுத்த பதில்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனுதாப பட முடியும், தார்மீக குரல் எழுப்ப முடியும் அதை தாண்டி தமிழக மக்கள் ஒன்றும் செய்ய விரும்பவும் இல்லை, செய்யவும் இயலாது.

அவர்களின் பிரச்சனையை அவர்கள் தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தமிழக மக்களை இனம், சாதி, மதமாக பிரிக்கும் குள்ளநரித்தனமான பேச்சை இவர்கள் கைவிட வேண்டும். மாறாது தொடர்ந்து கொண்டே இருந்தால் தக்க பதிலடிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இலங்கைத் தமிழர்களில் புலி விசுவாசிகளுக்கு என்ன ஆசை என்றால் தமிழ்நாட்டு தமிழனும் இவர்களைப் போலவே சண்டையிட்டு பயங்கரவாதம் செய்து அகதிகளாக அலையவிட வேண்டும் என்ற எண்ணம் போலும்.

தமிழர்களை முதலில் மற்ற இந்தியர்களிடம் இருந்து பிரிப்பது, பின்னர் மற்ற தென்னிந்தியர்களிடம் இருந்து பிரிப்பது, அப்புறமா இந்து முஸ்லிம் என பிரிப்பது, அப்புறமா பார்ப்பனியத்தை சேர்ந்தோர் - சேராதோர் என சாதி ரீதியாக பிரிப்பது இப்படியான பிரித்தாளும் குரோத வன்மத்துக்கு தமிழ் தேசியம் என்ற ஒற்றைச் சொல் Sugar Coating போல, இவர்கள் போடும் எலும்பு துண்டுகளை கவ்வ இங்கே தமிழகத்தில் ஒரு டஜன் அமைப்புக்கள் வெந்தும் வேகாமலும் கிளம்பி உள்ளன.

தமிழகத்தில் உள்ள ஒரு டஜன் அமைப்புக்களும் எதோ இலங்கையில் மட்டும் தான் தமிழர்கள் உள்ளது போலவும், அவர்களுக்கு மட்டும் தான் பிரச்சனைகள் என்பது போலவும் சதா கொக்கரித்துக் கொண்டு இருப்பார்கள்.

உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ளார்கள் அவர்களின் நலனுக்காக வாய் திறந்துள்ளார்களா. அதை விடுங்கள் உள்ளூர் தமிழனுக்கே குடிக்க தண்ணீர் இல்லை, வசதிகள் இல்லை, அடிப்படை உரிமைகளை இழக்கின்றனர்.

சிதம்பரம் கோவிலில் கூட தமிழுக்கு அனுமதி இல்லை. ஆனால் சும்மா பேருக்கு ஒரு அறிக்கையை விட்டுவிட்டு காசு பார்க்கப் போய்விடுவார்கள்.

இந்த வகையில் புதிய ஜனநாயக தோழர்கள் எத்தனையோ நற்பணி ஆற்றுகின்றனர். இந்த தமிழ் தேசியம் பேசிக் கொண்டு புலி அபிமானிகளிடம் காசு வாங்கிக் கொண்டு கொக்கரித்த கூட்டத்துக்கு தேர்தலில் பலத்த அடியை வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனியாவது இந்த புலி எலிகள் வாலைச் சுருட்டடும்.

viyasan said...

எப்படி இருந்த கோணங்கிச் செல்வன் இப்படியாகி விட்டார் என்பதை நினைக்கத் தான் கவலையாக இருக்கிறது. அறளை, கிறளை பெயர்ந்து விட்டதோ என்னவோ. ஈழத்தமிழர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வில் அர்த்தமில்லாமல் புலம்புகிறார் போலத் தெரிகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வலைப்பதிவில் தமிழ்தேசியம் பற்றி எழுதி, இனம், சாதி என்று ஏழு கோடித் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரித்து ஆளுக்காள் அடிபட்டுக் கொள்ளச் செய்வது மட்டுமல்ல, அங்கு வாழும் திராவிட எச்சங்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே உள்ள அன்னியோன்ய சகோதர பாசத்தை அறுத்து, அவர்களையும் அடிபடச் செய்து விடுவார்களாம். அந்தளவுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிந்திக்கத் தெரியாத இழிச்சவாயர்கள் என்கிறார் அண்ணன் கோடாங்கி. சிங்களவர்களின் சொம்புதூக்கிகளுக்கு ஈழத்தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு உண்டு, அது எங்களுக்கும் தெரியும், அதற்காக இவ்வளவு முட்டாள்தனமாகவா உளறுவது. :-)

அது தான் போச்சென்று பார்த்தால், தமிழ்நாட்டில் சாதிப்பிளவுக்கும் ஈழத் தமிழர்கள் தான் காரணமாம். 21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஒரு தலித் செருப்பு போட்டுக் கொண்டு நடந்தததற்காக மலம் தீற்றுகிறார்கள், இன்னும் இரட்டைக் குவளை நடைமுறையிலிருக்கிறது, காதலர்களைப் பிரித்து வைத்து ஊரைக் கொளுத்துகிறார்கள், தாயும், தமையனும் சொந்த மகளை, சகோதரியை கொலை செய்கிறார்கள், நாய், நரி கூட நக்கும் தேர்வடத்தை மனிதர்கள் தொடக் கூடாதாம், ஊருக்கொரு சாதி, வீட்டுகொரு சாதி, ஆளுக்கொரு சாதி என்று தமிழ்நாடு சாதிவெறியால நாறிப் போய்க் கொடுக்கிறது, அதையெல்லாம் பற்றி எழுத வக்கில்லை, ஆனால் இப்படி எதுவும் நடப்பதை கனவிலும் கூட நினைத்துக் கூடப் பார்க்கத் துணியாத இலங்கைத்தமிழர்களைப் பார்த்து, ஜ புலிகளுக்கு முன்னே, பின்னே, நடுவிலே ஜாதி, என்றொரு ‘காப்பிபேஸ்ட்’ பதிவைப் போட்டு பினாத்துகிற இந்த மனுசனைப் பார்க்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. :-)))))