“எப்படி?”
* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!
* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.
* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.
* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, ஒருமுறை லீவுக்கு ஊருக்குப் போனேன்.
அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.
“என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ வழக்கம்போல் தண்ணியைப்போட்டுட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை கெட்டவார்த்தைசொல்லி கண்டமேனிக்குத் திட்டினாராம். அப்போ ஒரு 18 வயது பையன், சிறுவன், அப்பாவை திட்டியதை கேட்டவன், தாங்க முடியாமல், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை இவன் இஷ்டத்து திட்டிவிட்டானே?" னு ஒரு கத்தியை வைத்து ஒரே குத்தா குத்தக்கூடாத இடத்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!
என்னங்க, "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா.. ஒரு சின்னப்பையன் இவ்ளோ பெரிய சண்டியரை கொன்னுபுட்டான்" னு சொல்லிச் சிரித்தார்கள்.
“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.
ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?
இது ஒரு மீளாத...
இது ஒரு மீள்பதிவு!
27 comments:
நான் என்கிற தன்னுணர்வு வேறு, அகந்தை வேறு என்று தோன்றுகிறது வருண். சரிதானே?
ஆனாலும் கசப்பிலும் கசப்பான விஷயம் என்வென்றால் beggars can't be chooser:( என்பது போல ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகத்தினர் அல்லது பெண்கள் அப்படி தன்னுணர்வு, சுயமரியாதை என்று சிந்திப்பதே தவறு, அகம்பாவம் என்று தான் இன்றுவரை ஒடுக்கும் நிலையில் இருப்போர் நினைத்துவருகிரார்கள்.
தன்னை தானே தாழ்த்தி கொள்பவன்,உயர்கிறான் என்கிறது பைபிள், எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் என்று நீங்க சொல்ற கருத்தை தான் வள்ளுவரும் முன்னே சொல்லிருக்கார்:)
அகந்தை உட்பட அனைத்தையும் வயது அல்லது அனுபவம் கற்றுக் கொடுத்து விடும்...
அகந்தை கொள்ளாத மனிதன் யாருமில்லை. ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது வெளிப்பட்டே தீரும்.
முதலில் உங்கள் பதிவு ஒரு நல்ல விஷயதைச் சொல்லுகின்றது. இந்த அகந்தை தான் உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது.
நான் என்பதை பல சமயங்களில் நாம் அகந்தை என்ற எண்ணத்தில் பார்ப்பது என்பதாகிவிட்டது. இரண்டிற்கும் சிறிய, ஒரு Hair line அளவு , subtle difference தான். நான் தான் பெரியவ்ன் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை நம் கீழ் கொண்டுவதுவது என்பதோ, கீழ்தரமாக நடத்துவது என்பதோ அகந்தை. எலாமே நான் சொல்லுவதுதான் சரி. னான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்று சொல்லுவது... ஈகோ.
ஆனால் அதே சமயம் இந்த "நான்" அமரிக்கையாக, பணிவோடு - பணிவாக மட்டுமே - அதை அழுத்திச் சொல்ல வேண்டும் -உபயோகிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படுவதுண்டு.குறிப்பாக Sef respect...எவரும் அதை இழக்க பொதுவாக விரும்பமாட்டார்கள். ஆனால் அதை உபயோகிக்கும் முறையும் இருக்கின்றது. கொஞ்சம் அப்படி இப்படி ஆனாலகந்தையைத் தொட்டுவிடும் அபாயம் உண்டு. நிச்சயமாக அதையும் துச்சமாக நினைப்பவர்கள் என்றால் மிகுந்த பக்குவப்பட்ட மனதை உடையவர்களாக இருக்க வேண்டும்.
வேதம் புதிது திரைப்படத்தில் வருமே ஒரு காட்சி....அருமையான காட்சி....சத்தியராஜும் அந்தக் குட்டிப் பையனும் ஆற்றில் கடக்கும் போது...
Ms M K Rengan has thought right. Ego works in different ways with different persons. Not all persons benefit from it: some go down as illustrated in your blog; some go up as not illustrated in your blog.
Ego is positive and negative: it all depends on how it is used; or gets used or moves the person to act in a certain way.
In creative writers, ego is absolutely essential for creativity. Some madness (in our view!) is also required. Without both, his literature will be nothing but stale reproductions and made to order stuff. His ego and his maverick nature agitate your mind, as seen from your blog posts. Not necessary if you read some research into authors'mind. You continue to labor under the illusion that you and a creative artist are of the same stock of mind. In Tamil literary tradition, we don't analyse the mind of artist although a slight attempt has been made in the case of Subramania Bharati. In the West, they make case histories of their minds. Subramania Bhrati's life clearly reveals that he had both ego and madness in abundance. Hence he became a great artist. (Thulasidharan, being a teacher of Literature, may go forward to study the mind of Bhrati - how that reinforced and rejuvenated his art).
You can start with America's foremost intellectual (in the past) Lionel Trilling. He has written en essay titled Art and Neurosis. (Thulsidaran should read that essay. Essential reading for you)
Psychologists attribute the excellences of Dickens to his madness. We should assign a special place, so different from ours, to creative artists.
Creativity can be either spontaneous overflow of powerful emotions; or emotions recollected in tranquillity. In both cases, the emotions come out of ego.
Where the writers earn our wrath is when they allow the ego to overflow into mundane affairs. For e.g. passing opinions in non-literary areas. There ego is not necessary there as it is apt to be abused there, or inappropriate, as only cool thinking like an unbiased intellectuals will do.
As common people, we must be able to distinguish between the correct and incorrect use of ego by the same person; and will remain contented with his correct use. In the case of writers, lets read his creative work; and avoid reading his opinions on all and sundry matters.
A common girl, a local thug and film lyric - are examples to study the matter of ego of common persons only. Ego in such persons, more often than not, works negatively.
The more you read, the more you think. The more you think, the more readable and interesting your blog posts will be. Sure !
வருண் சில சமயம் தன்னம்பிக்கை என்பது அகந்தைபோல் காணப் படும் என்றும் தோன்றுகிறது. மீள்பதிவானால்தான் என்ன. ? வாசிக்காதபலரும் படிக்கலாமே ஆழ்ந்த சிந்தனை.
//தான் என்ற அகந்தை//...என்றுதான் தலைப்பு இருக்கவேண்டுமென நினைக்கிறேன். // நான்//... என்பது பேச்சில். எழுத்தில் //தான்// என்று, அகந்தை பற்றிக்குறிப்பிடும்போது வரும். நான் ஒரு எழுத்தாளரிடம் இதே பொருளைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது (அவர் ஒரு தமிழ் எழுத்தாளர்) அவர் சொன்ன ஒன்று: //தானிலிருந்து பிறப்பதுதான் எல்லாமே! //
இதை நானிலிருந்து பிறப்பதுதான் எல்லாமே என்று சொல்ல முடியுமா?
*** Mythily kasthuri rengan said...
நான் என்கிற தன்னுணர்வு வேறு, அகந்தை வேறு என்று தோன்றுகிறது வருண். சரிதானே?
ஆனாலும் கசப்பிலும் கசப்பான விஷயம் என்வென்றால் beggars can't be chooser:( என்பது போல ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகத்தினர் அல்லது பெண்கள் அப்படி தன்னுணர்வு, சுயமரியாதை என்று சிந்திப்பதே தவறு, அகம்பாவம் என்று தான் இன்றுவரை ஒடுக்கும் நிலையில் இருப்போர் நினைத்துவருகிரார்கள்.
தன்னை தானே தாழ்த்தி கொள்பவன்,உயர்கிறான் என்கிறது பைபிள், எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் என்று நீங்க சொல்ற கருத்தை தான் வள்ளுவரும் முன்னே சொல்லிருக்கார்:)***
என்ன சொல்றது.. நம்மை "நீயெல்லாம் ஒண்ணுமே இல்லை"னு ஒருவர் மட்டம் தட்டும்போது "எனக்கு நாந்தான் உயர்வு" என்கிற "நான் என்னும் சிந்தனை" முதல் வகை. இதை தன்னுணர்வு அல்லது சுயமரியாதை எனலாம்..
"இன்னைக்கு உலகிலேயே நாந்தான் முதலிடத்தில் இருக்கிறேன்" இதுவரை இருந்த எல்லா "ரெக்கார்ட்" களையும்ம் உடைத்துவிட்டேன். "நாந்தான் பெரிய ஆள்' என்பதுபோல் ஒரு எண்ணத்தில் அகந்தையில் இருப்பது இன்னொரு வகை..
The first one is justifiable. The latter one is sort of "silly' would say. Thanks, Mythily :)
***திண்டுக்கல் தனபாலன் said...
அகந்தை உட்பட அனைத்தையும் வயது அல்லது அனுபவம் கற்றுக் கொடுத்து விடும்...***
உண்மைதான் தனபாலன். தன்னையும் பிறரைப் போல் நினைக்கக் கற்றுக்கொண்டால், குறைந்த நாட்களிலேயே சிறந்த அனுபவம் பெறலாம். :)
"இவ்விடத்தில்"தான் பலரும் மாறுபடுவது.
**** கவிப்ரியன் கலிங்கநகர் said...
அகந்தை கொள்ளாத மனிதன் யாருமில்லை. ஏதாவது ஒரு காலகட்டத்தில் அது வெளிப்பட்டே தீரும்.***
உங்க கருத்துக்கு நன்றிங்க.. உங்கள் சிந்தனையை ஒத்த சிந்தனையில் வந்ததுதான் "அப்படி வாழ முடியுமா?' என்னனு தெரியலை என்று சொல்லியிருப்பதுனு நினைக்கி்றேன்.
அகந்தை இல்லாமல் வாழணும் என்கிற சிந்தனையோட அகந்தையுடன் வாழ்பவந்தான் மனிதன்னு சொல்லலாமா? :-)
***Thulasidharan V Thillaiakathu said...
முதலில் உங்கள் பதிவு ஒரு நல்ல விஷயதைச் சொல்லுகின்றது. இந்த அகந்தை தான் உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது.
நான் என்பதை பல சமயங்களில் நாம் அகந்தை என்ற எண்ணத்தில் பார்ப்பது என்பதாகிவிட்டது. இரண்டிற்கும் சிறிய, ஒரு Hair line அளவு , subtle difference தான். நான் தான் பெரியவ்ன் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை நம் கீழ் கொண்டுவதுவது என்பதோ, கீழ்தரமாக நடத்துவது என்பதோ அகந்தை. எலாமே நான் சொல்லுவதுதான் சரி. னான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்று சொல்லுவது... ஈகோ.
ஆனால் அதே சமயம் இந்த "நான்" அமரிக்கையாக, பணிவோடு - பணிவாக மட்டுமே - அதை அழுத்திச் சொல்ல வேண்டும் -உபயோகிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படுவதுண்டு.குறிப்பாக Sef respect...எவரும் அதை இழக்க பொதுவாக விரும்பமாட்டார்கள். ஆனால் அதை உபயோகிக்கும் முறையும் இருக்கின்றது. கொஞ்சம் அப்படி இப்படி ஆனாலகந்தையைத் தொட்டுவிடும் அபாயம் உண்டு. நிச்சயமாக அதையும் துச்சமாக நினைப்பவர்கள் என்றால் மிகுந்த பக்குவப்பட்ட மனதை உடையவர்களாக இருக்க வேண்டும்.
வேதம் புதிது திரைப்படத்தில் வருமே ஒரு காட்சி....அருமையான காட்சி....சத்தியராஜும் அந்தக் குட்டிப் பையனும் ஆற்றில் கடக்கும் போது... ***
வாங்க துளசி! இது நம் அனைவருக்குமே வரும் சிந்தனைதான், துளசி. அப்பப்போ பிறகுக்காக இல்லை என்றாலும் எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. :) வேதம் புதிது ரொம்ப நாள் முன்னால பார்த்ததுங்க. சரியாக ஞாபகம் இல்லை. :)
**** மலரன்பன் said...
Ms M K Rengan has thought right. Ego works in different ways with different persons. Not all persons benefit from it: some go down as illustrated in your blog; some go up as not illustrated in your blog.
Ego is positive and negative: it all depends on how it is used; or gets used or moves the person to act in a certain way.
In creative writers, ego is absolutely essential for creativity. Some madness (in our view!) is also required. Without both, his literature will be nothing but stale reproductions and made to order stuff. His ego and his maverick nature agitate your mind, as seen from your blog posts. Not necessary if you read some research into authors'mind. You continue to labor under the illusion that you and a creative artist are of the same stock of mind. In Tamil literary tradition, we don't analyse the mind of artist although a slight attempt has been made in the case of Subramania Bharati. In the West, they make case histories of their minds. Subramania Bhrati's life clearly reveals that he had both ego and madness in abundance. Hence he became a great artist. (Thulasidharan, being a teacher of Literature, may go forward to study the mind of Bhrati - how that reinforced and rejuvenated his art).
You can start with America's foremost intellectual (in the past) Lionel Trilling. He has written en essay titled Art and Neurosis. (Thulsidaran should read that essay. Essential reading for you)
Psychologists attribute the excellences of Dickens to his madness. We should assign a special place, so different from ours, to creative artists.
Creativity can be either spontaneous overflow of powerful emotions; or emotions recollected in tranquillity. In both cases, the emotions come out of ego.
Where the writers earn our wrath is when they allow the ego to overflow into mundane affairs. For e.g. passing opinions in non-literary areas. There ego is not necessary there as it is apt to be abused there, or inappropriate, as only cool thinking like an unbiased intellectuals will do.
As common people, we must be able to distinguish between the correct and incorrect use of ego by the same person; and will remain contented with his correct use. In the case of writers, lets read his creative work; and avoid reading his opinions on all and sundry matters.
A common girl, a local thug and film lyric - are examples to study the matter of ego of common persons only. Ego in such persons, more often than not, works negatively.
The more you read, the more you think. The more you think, the more readable and interesting your blog posts will be. Sure !***
Thanks for sharing your thoughts, malaranban! :)
***G.M Balasubramaniam said...
வருண் சில சமயம் தன்னம்பிக்கை என்பது அகந்தைபோல் காணப் படும் என்றும் தோன்றுகிறது. மீள்பதிவானால்தான் என்ன. ? வாசிக்காதபலரும் படிக்கலாமே ஆழ்ந்த சிந்தனை. ***
உண்மைதான் சார். :)
அகந்தை எது? தன்னம்பிக்கை எது? அந்தக் கோடு எங்கே வரைவது? என்பதே ஒரு விதாதத்திற்குரியதுனு நினைக்கிறேன்.
தன்னம்பிக்கை/அகந்தை கீழே உள்ளவர்களுக்கு தேவை. அப்போத்தான் அவர்கள் மேலே வரமுடியும்.
அகந்தை மேலே உள்ளவர்களுக்கு அதிகம் இருக்கக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் நாளைக்கு கீழேவிழும்போது அவர்களை அது கொன்று விடலாம்.
***மலரன்பன் said...
//தான் என்ற அகந்தை//...என்றுதான் தலைப்பு இருக்கவேண்டுமென நினைக்கிறேன். // நான்//... என்பது பேச்சில். எழுத்தில் //தான்// என்று, அகந்தை பற்றிக்குறிப்பிடும்போது வரும். நான் ஒரு எழுத்தாளரிடம் இதே பொருளைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது (அவர் ஒரு தமிழ் எழுத்தாளர்) அவர் சொன்ன ஒன்று: //தானிலிருந்து பிறப்பதுதான் எல்லாமே! //
இதை நானிலிருந்து பிறப்பதுதான் எல்லாமே என்று சொல்ல முடியுமா?***
Believe it or not, I was debating myself what would be appropriate? "Naan" or "thaan"?
நாந்தான் பெரிய ஆளுணு எனக்கு ஒரு எண்ணம் இருக்கக்கூடாது.. இது என்னுடைய சிந்தனை..
தாந்தான் பெரிய ஆளுனு அவனுக்கு நினைப்பு. அவனோட அச்சிந்தனையை நான் வெறுக்கிறேன். இதுவும் என் சிந்தனைதான். ஆனால் இன்னொருவனைப் பற்றி.
முதலில் என்னை நான் விமர்சிச்சுகிறேன்.பிறகு மற்றவனைப் பார்க்கலாம்னு யோசிச்சேனா என்னனு தெரியலை.
However your criticism is well taken, malaranban!
It would not appear to be necessary to give importance to film lyrics, however great the lyricist may be. The lyricists (not correct to call them poets in filmy contexts) write for payment. The directors explain to them the scene and the lyricists are to tailor his lyrics to suit the situations. In other words, the lyrics are made-to-order pieces for wages. We need not take such lyrics as general applications.
But the same lyricist, as a poet, does write generally i.e. outside films, for his own satisfaction and to the delight of lovers of literature, just as Kanndadasan did regularly in his journal "'Kannadasan''.
போற்றுவோர் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால்
எடுத்துரைப்பேன் எவர் வரினும்
நில்லேன், அஞ்சேன்.
This stanza was the motto of the journal appearing on the first page in every issue. (BTW, you can take it and post atop your blog as your motto as you like to ride rough shod :-)) It was a pure literary journal and used to conduct poetry contest only for traditional poets i.e. Marabuk kavithai. But such literary songs were known only to his die-hard admirers. Kannadasan had an avatar purely literary, which avatar was completely eclipsed his cine field avatar.
(I don't however want you to believe all filmy lyrics are trash. Many are literary pieces no doubt)
The first line of your blog post extracts a line from a film song and attributes it to Kannadasan. No, it is not he. It is a lyric from Padakotti written by Vaali to make MGR as a mega hero to loom large in the imagination of gullible Tamil masses. The song succeeded in its objective.
***The first line of your blog post extracts a line from a film song and attributes it to Kannadasan. No, it is not he. It is a lyric from Padakotti written by Vaali to make MGR as a mega hero to loom large in the imagination of gullible Tamil masses. The song succeeded in its objective.**
Really?!!
There is a song from aayiraththil oruvan, it has a line I thought.It may have been written by Vaali but I thought it was by kannadasan.
In padagotti??? Are you SERIOUS??
vaali wrote a song "tharai mEl piRakka vaiththaai" in padagotti as far as I know.
அது தவிர படகோட்டியில் வாலி எழுதியது கொட்டுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல்..
***கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!
படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் -
மனம்நிறைய இருளிருக்கும்!
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!***
I dont know which Padagotti you are talking about!
Here is another song lyrics..
****தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்***
Where is that line you are talking about???
நான் என்னும் அகந்தையை கொன்று வாழ்ந்தால் நன்று வாழலாம்... கொண்டு வாழ்ந்தால் இப்படித்தான் ஆகும்...
(அகந்தை ஆணவம் அகம்பாவம் இப்படி இன்னும் .................. தங்களின் கடைசி வரி தானே பதிலும். முடியுமா? நன்று.
)
மலரன்பன் கவிஞர்களைப் பற்றிச் சொல்லும் வாதங்கள் எல்லாம் 50களிலேயே வழக்கொழிந்துபோய்விட்டன. கலைஞர் மற்றும் கண்ணதாசன் வருகைக்குப் பின்னர் திரை அரங்குகள் எல்லாம் தமிழ் மணக்கும் அரங்குகளாக, இலக்கிய அரங்குகளாக இருந்தது ஒரு காலம். அந்தக் காலம் மாறிவிட்டது என்பது வேறுவிஷயம். வசனநடைகள் மாறிவிட்டதே தவிர பாடல்கள் மக்கள் மனதில் அப்படியே தங்கிவிட்டன.
ஒரேயொரு மாலையிட்ட மங்கை படத்தின் பாடல்களுக்குப் பின்னர் கண்ணதாசன் பேசாத இலக்கிய மேடைகளே தமிழ்நாட்டில் இல்லை. திரைப்பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்தை அப்போதே கொண்டுவந்துவிட்டார் அவர்.
அதே சமயம் எளிய பாட்டாளி மக்களுக்கான குரலை பட்டுக்கோட்டையாரும், இலக்கியமணம் கமழும் பாடல்களை சுரதாவும், கிராமியம் கமழும் பாடல்களை மருதகாசியும் இயற்றிவந்ததையும் மறுப்பதற்கில்லை.
காசு வாங்கிக்கொண்டு பாடல் எழுதினார்கள் என்பதெல்லாம் சமூக மாறுதல்களின் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். அதற்காக கண்ணதாசன் இலவசமாக அந்தப் பாடல்களையெல்லாம் எழுதியிருந்தால்தான் நான் ஒப்புக்கொள்வேன் என்று யாரும் பிடிவாதம் பிடிக்கமுடியாது.
போற்றுபவர் போற்றட்டும் பாடலில் ஒரு சின்னத் திருத்தம்.
'போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்'
என்பதுதான் பாடல்.
மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பதுபோல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் பாடலில்தான் அந்த வரிகள் வருகிறது. 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை' என்பது வாலி எழுதிய வரிகள்.
முடியுமா இல்ல முடியாதா என்ற கேள்விகுறிக்கப்பால் ....நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது நல்லது
நல்லது .எல்லா மனுஷங்களுக்குள்ளும் ஒரு சின்ன குட்டி ஈகோ எனும் மிருகம் இருக்கும்..அது வெளிப்டாதவரை /(யாரும் /எதுவும் தூண்டாதவரை ) நல்லது ...
சரியாக சொன்னீர்கள்.எந்த ஒரு காரியமும் தற்காலிகமானதே, சிலர் அதை நிரந்தரம் என்று நினைக்கையில் தரித்திரர் ஆகின்றனர்.
நான் என்கிற ஆய்வு ஒரு பெரும் விசயம் ...
பதிவு அருமை வாழ்த்துக்கள்
சரிதான் தான் சாதித்து விட்டதாய் எண்ணும் போது ஒரு இறுமாப்பு வரும் அது அவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவுவதாய் மட்டுமே இருக்க வேண்டும் மற்றவர்களைச் சீண்டுவதாய் இருக்கக் கூடாது
வருண்,
சொந்த கடமைகளின் காரணத்தால் ஒரு விடுப்புக்கு பின்னர் மீன்டும் வருகிறேன்...
நான்... அகந்தை....
" நான் " மட்டும் தனித்திருந்தால் பிரச்சனை இல்லை என்றுதான் தோன்றுகிறது.... அதே " நான் " என்னால் தான் எல்லாம் என நினைக்கும் போதுதான் அகந்தை ஆரம்பமாகிறது !
நமது சமூகத்தில் இந்த அகந்தையை வளர்த்துவிடுவதற்காகவே ஒரு கூட்டம் கூடவே இருந்து " அய்யாவை போல உண்டா ?! " என சுற்றிலும் குழி வெட்ட காத்திருக்கும் !
இதுவும் மாறும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் வரை அகந்தை அண்டாது. அண்டிய அகந்தையை காலம் நம்மிடமிருந்து ஒடுக்க முடிவெடுத்தால் நமக்கு தாங்காது !
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நான், என்ற அகந்தை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் அதனால்
கெடுவது அவனோ, அல்லது அவனோடு தொடர்புடைய மற்றவரோ,செயலோ ஆகும் ஆனால்
அரசியல் வாதிகள்!அதுவும் ஆளுகின்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு, வந்துவிட்டால் நாடே ஒட்டு மொத்தமாகக் கெட்டு விடும்
Post a Comment