க்ளோனிங் செய்யும்போது அப்பா அல்லது அம்மாவிடம் உள்ள ஒரு செல் (46 க்ரோமோசோகளும் ஒருவரிடமே இருந்து வருகிறது) எடுத்து அதை வளர்த்து பல செல்லாக ஆக்கி ஒரு குழந்தை உருவாக்குவது. அப்படி உருவாகும் குழந்தை யாரிடம் இருந்து பெறப்படுகிறதோ அவரைப் போலவே 100% இருக்கும். அதாவது இன்னொரு ஐன்ஸ்டைன், இன்னொரு ரஜினியை அப்படியே உருவாக்குவதுதான் க்ளோனிங்.
இதுபோல் மனிதர்களை உருவாக்குவது தவறு என்கிற எத்திக்க்ஸ் பிரச்சினையால் க்ளோனிங் கில் அமெரிக்காவெல்லாம் மிகவும் பின் தங்கி உள்ளது. சைனா அதைப்பற்றி கவலைப்படாமல் இப்போ ஒரு குரங்கை இல்லை ரெண்டு குரங்கை உருவாக்கியுள்ளார்கள்.
குரங்கை உருவாக்க முடிந்தால் மனிதனையும் உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு மட்டுமல்ல உண்மையும்கூட. இது எங்கே போய் முடியப்போதுனு தெரியலை.
முக்கியமான ஒரு விசயம்..
நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் க்ரோமோசோம் (46 அல்லது செக்ஸ் செல்களில் 23) உள்ளது. இதில் டி என் ஏக்கள் உள்ளது. அந்த டி என் எ களில் லட்சக்கணக்கான ஜீன்ஸ் (சின்ன சின்ன டி என் எ செக்மெண்ட்) உள்ளது. அந்த ஜீன்ஸ்ல நம் உடலுறுப்பில் ஒவ்வொரு செல்லையும் உருவாக்க "ரெசிப்பி" இருக்குனு சொல்லலாம். அதாவது ஜீனில் தேவையான ப்ரோட்டீன் செய்ய ரெசிப்பி இருக்கு. ப்ரோட்டீன்கள் எல்லா வேலையும் செய்து நம்மை உருவாக்கிவிட முடியும். ஆக க்ளோனிங்கா இருக்கட்டும், சாதாரண உடலுறவில் உருவாகும் ஃபெர்ட்டிலைசேஷன் ஆக இருக்கட்டும், ஒரு செல்தான் வேணும்.
1 comment:
இந்த செய்தியை பார்த்தேன் இதை பற்றி எழுதலாம் என நினைத்தேன் அதற்குள் நீங்கள் அழகாக எழுதி வெளியிட்டுவிட்டீர்கள் இந்த குளோனிங்க வருங்கலாத்தில் என்ன விதமான பிரச்சனைகள் ஏற்படப் போகிறதோ
Post a Comment