ஒரு சில சமயம் நாந்தான் தமிழின துரோகி நம்பர் 1 னோ னு எனக்கு சந்தேகம் வருவதுண்டு. இன்றைய சூழலில் ஹார்வேட் தமிழிருக்கைக்காக லட்சமும் கோடியுமா தமிழர்கள் பணத்தை அள்ளி எறிந்து எப்படியோ அந்த தமிழ் இருக்கையை பெற்றுவிட வேண்டும் என்று நிக்கிறார்கள். அப்படி பெற்றுவிட்டால் தமிழ் காலங்காலமாக் அழியாத ஒரு மொழியாகிவிடுமோ என்னனு தெரியவில்லை!
என்னைப் பொருத்தவரையில் இதெல்லாம் தேவையற்ற ஒன்னு. காசு ரொம்ப இருந்தால் தமிழ்நாட்டில் தமிழ் பிச்சைக்காரர்கள் இல்லாமல்ப் போக ஏதாவது வழி பண்ணுங்க. மும்பையில் போய் கொத்தடிமையாக வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். இல்லைனா ரஜினி செய்யாத காவிரி நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தைக் கொடுத்து நதிகளை இணைக்க உதவுங்கள்.
அமெரிக்காவைப் பொருத்தவரையில் படிப்பு என்பது வியாபாரம். ஹார்வேட் ஒரு பணம் சம்பாரிக்கும் தொழில் நிறுவனம். தமிழ் வளர்க்கிறேன்னு பணத்தை அள்ளி எறிந்து சொல்லிக்கிட்டு ஏன் இப்படி தமிழ் மானத்தை காசு கொடுத்து விக்கிறீங்க?
உடனே தமிழ் மேதைகள் எல்லாம் வந்து,
"உனக்கு புரியலை?'
"இது ரொம்ப ரொம்ப தேவையான, அவசியமான ஒண்ணு. தமிழன் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, தமிழ் வாழணும்னு உனக்குப் புரியலை"
"இன்றைய சூழலில் காசு கொடுத்துத்தான் தமிழ் வளர்க்கணும். இதுகூட தெரியாதா உனக்கு?" னு ஏதாவது உளறிக்கொண்டு என்னை முட்டாளாகப் பார்ப்பார்கள்.
இதெல்லாம் தேவையா?
நான் ஹார்வேட் தமிழ் இருக்கைக்கு ஒரு பைசாக் கூட டொனேட் பண்ணவில்லை! I would rather use that money for something worthy! என்பது உங்களுக்கு கூடுதல் செய்தி!
3 comments:
அயல் நாட்டில் தமிழுக்கு இருக்கை என்பது பெருமைப் பட வைப்பது என்று பலரும் நினைக்கக்கூடும் அயல் நாட்டில் இருந்தே தமிழில் மேல் படிப்பு படிக்கவோ இது ?
தெரியலை சார்.
இதுதான் காரணம்னு சொல்றாங்க..
****Among the 7,102 languages, these 7 are the only ones considered as Classical Languages in the World.
Chinese, Hebrew, Greek, Latin, Persian, Sanskrit. All 6 of these languages meet only 8 of the required criterion to be a “classical” language. Soon, Tamil will have a Chair at Harvard and be the only language to meet all 11 requirements.***
தமிழ்நாட்டின் ஆட்சி மொழி
"தமிழ்" என்று அங்கீகரித்த பின்னும்
நடைமுறைப்படுத்த வில்லையே!
ஹாவார்ட் தமிழுக்கு விளம்பரமே தவிர
"தமிழ்" ஆட்சி மொழியானால் தான்
தமிழ் வாழும் என்பேன்!
Post a Comment