"நாந்தான் ஸ்பெஷல்!"
"இல்லை! நாந்தான்!"
"ஆமா, நீ யாரு?"
"நான் ஹைட்ரஜன்! நீ யாரு?"
"நான் ஆக்ஸிஜன்!"
"ஆக்ஸிஜனா? ஆமா நீ ஏன் ஸ்பெஷல்?"
"நான் இல்லைனா இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழமுடியாது! எல்லோருடைய உயிரோட்டமும் என்னால்தானே ஓடுது. இதுகூடத் தெரியாதா?"
"நான் இல்லைனா வாழ்ந்திடுமாக்கும்? தண்ணீரில் ரெண்டு மடங்கு நாந்தான். நீ ஒரு மடங்குதான்! தெரியுமில்ல? பூமியைவிடு! இந்த பிரபஞ்சத்திலேயே நாந்தான் அதிக அளவு இருக்கேன் தெரியுமா?"
"எதாவது ஒளறாதே! ஆக்ஸிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாதுனுதான் சொல்லுவாங்க. ஹைட்ரஜன் இல்லாமல்னு யாராவது சொல்லுவாங்களா?"
"யாரு சொல்றாங்க? மனிதர்களா?"
"ஆமா."
"அதுகளுக்கு ஆறு அறிவுதான். எனக்கு உடம்பெல்லாம் அறிவு!"
"அது சரி."
"கீழே பாரு!"
 |
| இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன் |
"என்ன இது? ஏதோ ரியாக்சன் மாதிரி இருக்கு"
"நீ அந்த ரியாக்ஷன் சீக்வென்ஸில் இல்லாதனால இதெல்லாம் புரியாது உனக்கு! சரிதானே? "
"நான் இல்லைங்கிறது இருக்கட்டும். என்ன நடக்குதுனு சொல்லு!"
"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"
"ஆமா"
"அது எப்படி உருவாகுது?"
"சூரியன்ல இருந்து"
 |
| சூரியன்: இதில் உண்டாகும் ஒளிக்கு மூலகாரணம், ஹைட்ரஜன்கள் இணைந்ஹ்டு உண்டாகும் நியுக்ளியர் ஃப்யூசன் ரியாக்சன் |
"சூரியன்ல இருந்து எப்படி ஒளி உண்டாகுது?"
"ஏதோ நியூக்ளியர் ஃபிஷ்ஷன், நியூக்ளியர் ஃப்பியூஷன்னு சொல்றாங்க!"
"அது யாரு யாரு "சேர்ந்து" "ஒளி சக்தி" உருவாகுது தெரியுமா?"
"யாரு யாரு?"
" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன். ஒளியில்லைனா இந்த உயிரினங்கள் வாழ முடியாது. நான் இல்லைனா உயிரிங்கங்கள் இல்லை! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"
"நீங்க ரெண்டு பேரும் லூசா? ஹைட்ரஜனாம், ஆக்ஸிஜனாம்! மனிதனால் மதிக்கப்படுவது நாந்தான்!"
"ஐயா யாரு?"
"நாந்தான் "கோல்ட்" என்னை "தங்கம்" என்பார்கள் தமிழில்! பார்க்க அழகா இருப்பேன்"
 |
| பொற்காசுகள் (உயிரினங்கள் வாழ அவசியமே இல்லாதது) |
 |
| தங்கம்! மனிதனால் மதிக்கப்படும் விலை உயர்ந்த பொருள் |
"அது சரி, ரொம்ப அழகுதான் நீ! நீ யாருக்கு வேணும்?"
திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள் எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.
இப்படிப் பட்ட மனித முட்டாள்கள் நிறைந்ததுதான் நம் தமிழ் பதிவுலகமும் கூட! அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!
தொடர்புள்ள பதிவுகள்: