Thursday, July 9, 2009

மைக்கேல் ஜாக்சனின் தோல் வியாதி!

பல உண்மைகள் இப்போ வெளியே வருகிறது. மைக்கேல் ஜாக்சன் எப்படி வெள்ளையா மாறினார்? உடம்பை ப்ளீச் பண்ணிவிட்டார் அது இதுனு சொன்னார்கள். இப்போ அவருடைய டெர்மடாலஜிஸ்ட் சொல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருந்தது என்று.

வெண்குஷ்டம் (vitiligo) என்று சொல்வார்கள் நம்ம ஊரில். இதற்கும் லெப்ரோஸிக்கும் சம்மந்தமே இல்லை. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது. ஒட்டுவார் ஒட்டி அல்ல! மேலும் ஒரு பயங்கர வியாதியே இல்லை. ஆனால், உடம்பில் ஏற்படும் அந்த வெள்ளை நிற பாட்ச்சஸ் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். ஒரு சிலருக்கு இதை சரிப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு இது மிகவும் வேகமாகப் பரவும், அதனால் க்யூர் பண்ண முடியாது. வைட்டமின் குறைவுதான் இந்த காரணம்.

இவருக்கு அந்த வியாதி வந்ததால், அதை சரிப்படுத்த முடியாத நிலையில், உடம்பு முழுவதும் அதைப்பரப்பி முழுவதுமாக வெள்ளையாகிவிட்டார் என்பதுதான் உண்மை என்கிறார்கள்.

11 comments:

ராமலக்ஷ்மி said...

எது எப்படியோ அவரைப் சுற்றி எழுப்பபட்ட சர்ச்சைகள் ஏராளம். அவரது சாதனைகளுக்கும் புகழுக்கும் அவர் கொடுத்த விலை அது என்றாகி விட்டது!

துளசி கோபால் said...

இதைத்தான் பாண்டு ரோகமுன்னு பழங்காலத்தில் சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம்.

மகாபாரதத்தில் வரும் அரசர் பாண்டு வுக்கும் இப்படி இருந்துச்சாம்.

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

எது எப்படியோ அவரைப் சுற்றி எழுப்பபட்ட சர்ச்சைகள் ஏராளம். அவரது சாதனைகளுக்கும் புகழுக்கும் அவர் கொடுத்த விலை அது என்றாகி விட்டது!***

இவ்வளவு புகழ் இருந்தும் நிம்மதி இல்லாமல் பல குழப்பங்களும் குறைபாடுகளுடன் இருந்ததுபோல் தெரிகிறது. அடுத்த உலகத்திலாவது அவருக்கு நிம்மதி கிடைக்கட்டும்ங்க ராமலக்ஷ்மி!

வருண் said...

***துளசி கோபால் said...

இதைத்தான் பாண்டு ரோகமுன்னு பழங்காலத்தில் சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம்.

மகாபாரதத்தில் வரும் அரசர் பாண்டு வுக்கும் இப்படி இருந்துச்சாம்.***

இப்போதுதான் பாண்டுவுக்கும் இருந்ததாக கேள்விப் படுகிறேன் டீச்சர்!

நித்தி .. said...

MJ appa moondravathu postmosterm ku appeal pannatha kelvi pataen...
irantha pinnum vidatha sogam...

வருண் said...

***நித்தி .. said...

MJ appa moondravathu postmosterm ku appeal pannatha kelvi pataen...
irantha pinnum vidatha sogam...***

ட்ரக்ஸ் பயன்படுத்தி இருப்பார்னு தோனுது. அது ப்ரிஸ்க்ரிப்ட் ட்ரக்கா இருக்கலாம். 3 வது போஸ்ட் மார்ட்டம் எதுக்கு கேட்டிருக்கார்னு தெரியலை, நித்தி

ரவி said...

என்னுடைய கமெண்டு எங்கே வருண் ?

ரவி said...

என் கமெண்டு, மற்றும் அதை ரசித்த ஒரு ரசிகரின் கமெண்டு என்று ரெண்டு கமெண்டை ரிமூவ் பண்ணிட்டீங்க போல..

ஆபாசம் இருந்ததா, தனிநபர் தாக்குதல் இருந்ததா, என்ன காரணத்துக்காக எடுத்தீங்க ?

உங்களிடம் இருந்து அடிப்படை நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்

வருண் said...

மன்னிக்கவும், திரு. ரவி. நான் ரொம்ப சீரியஸான விசயம் எழுதி இருக்கேன். உங்க ஜோக்கும், அதற்கு பின் பாட்டும், சீரியஸ்னெஸை குறைக்கிறது, ரவி. அதனால் அதை எடுத்துவிட்டேன். கோவிச்சுக்காதீங்க!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Prosaic said...

//மன்னிக்கவும், திரு. ரவி. நான் ரொம்ப சீரியஸான விசயம் எழுதி இருக்கேன். உங்க ஜோக்கும், அதற்கு பின் பாட்டும், சீரியஸ்னெஸை குறைக்கிறது, ரவி. அதனால் அதை எடுத்துவிட்டேன். கோவிச்சுக்காதீங்க!//

http://en.wikipedia.org/wiki/Michael_Jackson%27s_health_and_appearance

Check this link first. Michael Jackson's skin problem was recorded in public forums decades back and in fact he himself spoken about it when answering to the allegation of changing his skin colour based on racist reasons. Your post says as if it was kept secret and made public only recently, which is absolutely a false news. And the topic of the post is itself disgusting. There is numerous ways to put forth your thoughts, but certainly this choice of words is not sounding good.

Considering these points, I dont and didnt think Ravi's comments were of bad taste or irrelevant.