
ஏன் இனிப்பு இனிக்குது? ஏன் மிளகாய் உறைக்கிதுனு பதில் சொல்வது கடினம். ஆனால் சர்க்கரையின் இனிப்புக்காரணம் என்ன? மிள்காயின் உறைப்புக்கு காரணம் என்னனு ஓரளவுக்கு சொல்லிவிடலாம். பொதுவா இதுபோல் தன்மைகளுக்குக் காரணம் ஏதாவது ஒரு கெமிக்கலாகத்தான் இருக்கும்.
இனிப்புக்கு காரணம், க்ளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்பது நமக்கு எல்லாம் தெரியும்!
The structure of D-Glucose is given down here!


அதேபோல மிளகாயின் உறைப்புக்கு காரணமும் ஒரு கெமிக்கல்தான். "நாகா" என்கிற ஒரு மிளகாய்தான் உலகத்திலேயே அதிகமான உறைப்புத்தன்மை கொண்டது.
ஏன் இது மட்டும் அப்படி உறைக்குது என்றால் இதில் உள்ள ஒரு Organic chemical தான் காரணம்! அதன் பெயர் "கேப்சாஸின்".
அதனுடைய வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!


மிளகாய்க்கு உறைப்புத்தன்மையை கொடுக்கக்கூடிய கேப்சாஸின் என்கிற இந்த கெமிக்கல் அதிக அளவு நாகா மிளகாயில் இருப்பதால் இது அதிகமாக உறைக்கிறது. இந்த கெமிக்கலும் இதனுடைய பல டெரிவேடிவ் களும்தான் மிளகாய்களின் உறைப்புத்தன்மைக்கு காரணம்.
9 comments:
உஸ்ஸ்..உரைக்கிறது பதிவு:)!
யார் காரணமா எது காரணமா?
சாரி, உறைக்கிறது பதிவு:)! காரம் இல்லையா, ஆக வல்லினம்தான் சரி:)!
வாங்க ராமலக்ஷ்மி! :)
எழுத்துப்பிழை சரி செய்ய உதவியதற்கு ரொம்ப நன்றிங்க :)
***ராமலக்ஷ்மி said...
உஸ்ஸ்..உரைக்கிறது பதிவு:)!
யார் காரணமா எது காரணமா?***
சும்மா வம்புக்குத்தான் அந்த உறைப்பா இருக்கும் கெமிக்கலை மரியாதை கொடுத்து விளித்தேன் :-))))
நாகா மிளகாய் போலவே பதிவும் ரொம்ப 'கார' சாரமாக இருக்கிறது!
வாழ்த்துக்கள்!
cho.... sweet
நன்றிங்க, கிருஷ்ணமூர்த்தி! :)
வாங்க சுரேஷ்! :)))
இதுக்கு யூஸ் பண்ணலாம்.
Bhut Jolokia
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8119591.stm
****மணிகண்டன் said...
இதுக்கு யூஸ் பண்ணலாம்.
Bhut Jolokia
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8119591.stm***
Interesting news,maNikaNdan!! :-)
Post a Comment