Saturday, July 11, 2009

ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோன்!

ஆண்களுக்கு பெரிய பிரச்சினை ஆரம்பிப்பது அவர்கள் இளம் வயதிலேயே தலை முடி உதிர ஆரம்பிக்கும்போது. அதேபோல் பெண்களுக்கு முகத்தில் லேசாக மீசை வளர்வதும் ஒரு சின்ன குறைபாடு. இது இரண்டுமே நடப்பது அவர்கள் உடலில் செக்ஸ் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்த பிறகு. அதாவது பொதுவாக பதின்ம வயதுக்கு மேல். இந்த குறைபாடு ஒரு மாதிரியான ஹார்மோனல் இம்பேலண்ஸால்தான்.

இது இரண்டுக்குமே காரணமான ஒரு ஹார்மோன் டைஹைட்ரோடெஸ்டாஸ்டீரோன் என்கிற ஒரு ஸ்டெராயிட்.



இது ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்ட்டாஸ்டீரோனுடைய மெட்டபொலைட். டெஸ்டாஸ்டீரோனுடைய ரிடக்சன் ப்ராடக்ட்னு சொல்லலாம். ஆனால் இதை டெஸ்டாஸ்டீரோனாக திரும்ப மாற்ற முடியாது. It is an irreversible process.

கொலெஸ்டிரால் (we all know excess of cholesterol presence can cause heart disease) என்கிற ஸ்டெராயிட் மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒரு லிப்பிட். அது இல்லாமல் மனிதன் வாழமுடியாது. கொலெஸ்டிராலில் இருந்துதான் இந்த ஆண் மற்றும் பெண் செக்ஸ் ஹார்மோன்கள் டெஸ்டாஸ்டீரோன் மற்றும் எஸ்ட்ரோஜன்ஸ் உருவாகிறது.

ஆண்களுக்கு டெஸ்டாஸ்டீரரோன் என்கிற ஹார்மோன் கொலெஸ்டிராலி லிருந்து உருவாக்கப்படுகிறது. அதாவது கொலெஸ்டிராலை டெஸ்டோஸ்டீரோனாக மாற்றத் தேவையான என்சைம்கள் ஆண்களிடம் இருக்கின்றன.

அதே சமயம் பெண்களுக்கு எஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்கள் கொலெஸ்டிராலில் இருந்து உருவாகிறது. பெண்களுக்கும் முதலில் டெஸ்டாஸ்டேரோன் தான் உருவாகிறது, பிறகு இது எஸ்ட்ரொஜெனாக மாற்றப்படுகிறது. அதற்கு தேவையான என்சைம், அரொமட்டேஸ் என்கிற ஒன்று. இந்த என்சைம் பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆண்களுக்கு கிடையாது. அதனால் பெண்களுக்கு உருவாகும் டெஸ்டாஸ்டீரோன், அத்தோடு நிற்காமல் எஸ்ட்ரோஜெனாக மாறிவிடுகிறது. இதுதான் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு மற்றும் பல விசயங்களுக்கு காரணமானது. ஆண்களுக்கு அரொமடேஸ் என்கிற இந்த என்சைம் இருப்பது கிடையாது. அதனால் அது டெஸ்டாஸ்டீரோனுடன் நின்றுவிடுகிறது.

Anyway, the point I want to share here is Dihydrotestosterone is believed to be responsible for developing baldness in men and for the growth of facial and body hair in women. This steroid is also important for men for being a "man". When the amount of this steroid becomes little bit more excess it causes baldness in men. Also, females have a very little testosterone compared to men, which is also believed to be responsible for their sexual drive. But if they have little more excess and get converted to dihydrotestosterone, it causes some trouble like facial hair and body hair of that sort of abnormalities. The same DHT is one which is causing the formation facial and body hair in men as well.

4 comments:

Nathanjagk said...

நல்லாயிருக்கு! தலையாய பிரச்சினை பத்தின ​மேட்டராச்சே!

கோவி.கண்ணன் said...

நடுத்தவர வயதில் ஆண்களுக்கு வழுக்கை அழகுதான்.

70 வயது பாட்டிக்கு முகச் சுறுக்கம் அழகு.

:)

வருண் said...

தங்கள் கருத்துகளுக்கு நன்றி, திரு.ஜெகநாதன் & திரு. கோவியார் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா..