Wednesday, September 16, 2009

"நெஜம்மாவா? நீ குடிகாரியா?!"- கடலை கார்னர் (19)

"கண்ணன், நெஜம்மாவே உங்களுக்கு ஒரு லைன் இருக்கத்தான் செய்து. கேர்ள்ஸ் கெட் அட்ராக்ட்டெட் டு யு ஈஸிலி"

"நான் நம்பிட்டேன், பிருந்தா பொய்கூட ரொம்ப அழகா சொல்ற"

"அதெல்லாம் இல்லை! நீங்க கொஞ்சம் இண்டரெஸ்டிங் பர்சனாலிட்டிதான்"

"ஏய் எதுக்கு இப்படி ஐஸ் வைக்கிற, பிருந்தா?"

"நான் மட்டும் சொல்லல, ஸ்டெய்ஸியே சொன்னாள் கண்ணன்"

"என்ன சொன்னாள்?"

"உங்களோட பேசிக்கொண்டு இருக்க நல்லாயிருக்காம். யு சம்ஹவ் டோண்ட் போர், கேர்ள்ஸ்"

"ஏய், என்னை விட்டுரு, ப்ளீஸ். எனக்கு தலை சுத்துது"

"சரி, வீக் எண்ட் படத்துக்கு போகலாமா?'

"ஏதாவது ரெண்ட் பண்ணி வீட்டிலேயே பார்க்கலாமே? சாட்டர்டே என் வீட்டுக்கு வர்றியா?"

"சரி வர்றேன்"

"நானே வந்து உன்னை பிக அப் பண்ணிக்கிறேன்"

"சரி, எத்தனை மணிக்கு?'

"ஒரு 6 மணி?'

"ஓ கே"

*******************************************************

"ஏய் பிருந்தா! என்ன இதெல்லாம். ஊருக்கு போறமாதிரி பாக் பண்ணி இருக்க?"

"சும்மா ஒரு நைட் ட்ரெஸ், அப்புறம் இன்னொரு செட் எடுத்து வச்சிருக்கேன். அப்புறம் எமர்ஜெண்ஸி ஐட்டம்"

"சரி, வா போகலாம்"

அவள் கதவை அடைக்கும்போது, பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல இருந்த ஒரு பெண் வந்தாள்.

"ஆர் யு லீவிங், பிருந்தா?"

"என்ன வேணும், பானு? இதுதான் கண்ணன்"

"இவர்தானா அது? ஹல்லோ'

"ஹல்லோ பானு"

"பிருந்தாவை எங்கே கடத்திட்டுப் போறீங்க, கண்ணன்?'

"சரி உண்மையை சொல்லிடுறேன். யாரோ பானுவாம்.. பக்கத்தில் இருந்து உயிரை வாங்குறாளாம், இந்த பானு! அவ தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் நிம்மதியா இருக்கனுமாம். கெஞ்சி கேட்டுக்கிட்டாள்.. அதான்.."

"இவர் கதை நல்லாவிடுவாரு, நம்பிறாதே, பானு!"

"இவ சொன்னாலும் சொல்லி இருப்பாள்"

"சரிடி, அப்புறம் பார்க்கலாம்"

அவள், ஒரு சல்வார் காமிஸ் அணிந்து இருந்தாள். அவள் நடியில் எப்போவும்போல் ஒரு நளினம். அவன் முன்னால் நடந்து அவன் ஹாண்டா அக்கார்ட் டில் முன் இருக்கையில் அமர்ந்தாள். காரெல்லாம் அவள் மணம் அடித்தது.

"இந்தியா விசிட் பண்ணலையா?"

"அங்கே போனால் ஒரே தொந்தரவு, கண்ணன்"

"என்ன தொந்தரவு?"

"எங்க அப்பாவுடைய அக்கா இருக்காங்க, அவங்க மகனுக்கு என்னை கட்டி வைக்கனும்னு அப்பாட்ட வந்து சண்டை போடுவாங்க"

"கஸினை எல்லாம் நீங்களும் கல்யாணம் செய்வீங்களா?"

"ப்ராமின்ஸ்லயும் செய்வாங்க கண்ணன். க்ராஸ் கஸினை"

"உனக்கு அவரை பிடிக்கலையா?"

"ஹி இஸ் நைஸ். அதுக்காக கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாது"


********************************

"உள்ள வா பிருந்தா!"

"2-பெட்ரூம் அப்பார்ட்மெண்டா?"

"ஆமா"

"உட்கார் பிருந்தா இந்த சோஃபால! ஏதாவது குடிக்க வேணுமா?'

"என்ன இருக்கு?"

"ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்ச் ஜூஸ், கோக், ரெட் வைன்"

"ரெட் வைன் தாங்க!"

"நெஜம்மாவா? நீ குடிகாரியா?!"

"LOL! ஆமா, ரெட் வைன் ஹார்ட்டுக்கு நல்லதுனு சொல்றாங்க"

"இப்படி ஒரு எக்ஸ்க்யூஸா!'

"அந்த ஆர்டிக்கிள் வேணா தரவா?'

'வேணாம் வேணாம். நல்லா குடி! இரு கொண்டு வர்றேன்"

"குடிச்சுட்டு ஏதாவது உளறினால் அதையெல்லாம் யார்ட்டயும் சொல்லக்கூடாது!"

"இது வேறயா? இரு வர்றேன்"

"இந்தாம்மா நல்லா குடிச்சு உன் இதயத்தை பலப்படுத்து!"

"நீங்கள்?"

"நான் தண்ணி மட்டும் குடிக்கிறேன்"

"எங்கே நான் ஸ்மெல் பண்ணி பார்க்கிறேன். ஏதாவது எத்தில் அல்கஹால் அதில் இருக்கானு. அதான் கலர்லெஸ் ஆச்சே!"

"குடிச்சுட்டு எதுவும் கண்டபடி என்னைத் திட்டாதே!"

"LOL"

-தொடரும்

3 comments:

Prosaic said...

//"உட்கார் பிருந்தா இந்த சோஃபால!//


Junoon tamil! :)

வருண் said...

***Blogger Prosaic said...

//"உட்கார் பிருந்தா இந்த சோஃபால!//


Junoon tamil! :)

16 September, 2009 7:57 AM***

Whatever! :-))))

பிரசன்ன குமார் said...

//LOL//
இப்போலாம் பேச்சுல கூட இது வந்துர்ச்சா :)