Thursday, December 31, 2009

லுங்கியா? அதெப்படி கட்டுறது? -கடலை கார்னர் (37)

"எங்கே அவளைக் காணோம், கண்ணன்?"

"ஸ்டெய்ஸியா? அவ பிஸியா இருக்காள். இன்னைக்கோட இந்த ப்ராஜெக்க்டை முடிக்கனும்னு! "

"இந்த வாரம் முழுவதும் அவ கூடவே இருந்து உதவுறீங்களாமே? நைட் எட்டு மணி வரைக்கும்."

"உன்னிடம் கம்ப்ளையின் பண்ணினாளா?"

"இல்லை இல்லை. அவளுக்கு நீங்க ரொம்ப உதவுறீங்களாம்.."

"வேறென்ன சொன்னாள்?"

"ஒருவழியா ப்ராஜக்ட்டை முடிச்சுட்டாளாம், உங்க உதவியால. ஆமா, ஒரு ஆண் கோவொர்க்கர் இப்படித் தப்புச் செய்தால், இவ்வளவு ஹெல்ப்ஃபுள்ளா இருப்பீங்களா?"

"தெரியலையே. ஏன் கேக்கிற? ஆமா, இன்னைக்கு ஃப்ரைடேதானே? அப்படியே வொர்க் முடிஞ்சதும் என்னோட வந்து தங்குறியா?"

"என்ன திடீர்னு?"

"சும்மாதான். ஒரு துணைக்கு..நைட் பயம்மா இருக்கு"

"சரி வர்றேன்."

"தேங்க்ஸ், பிருந்த்."

****************************

"வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா, பிருந்த்!"

"ஏன் இன்னைக்கு ஏதாவது விசேஷம் நடக்கப்போதா?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை!"

"என்ன குடிக்கிற? கோக் வேணுமா? ஐஸ் போட்டுத்தரவா?"

"ஓ கே, கண்ணன்!"

"என்ன கண்ணன்? மூடு சரியில்லையா?"

"ஆமா. எப்படி கண்டுபிடிச்ச?"

"ஐ கேன் ஸி இட் இன் யுவர் ஃபேஸ்! என்ன ஆச்சு? வொர்க்ல எதுவும் பிரச்சினையா?"

"இல்லடா. அதெல்லாம் நல்லாத்தான் போகுது.. இன்னைக்கு சப்வே ல லஞ்ச் வாங்கப்போகும்போது, ஒரு ஓல்ட் ஃப்ரெண்டை எதிரும் புதிருமா பார்த்துட்டேன்."

"யார் அது?"

"அவள் பெயர் ப்ரியா. க்ராஜுவேட் ஸ்டடீஸ் பண்ணும்போது நல்லாத் தெரியும். நல்ல ப்ரெண்டா இருந்தவள்.."

"ரொம்ப க்ளோஸா இருந்தீங்களா?"

"கொஞ்சம் க்ளோஸ்தான். ஆனா ஒரு முறை ரொம்ப சண்டையாயிருச்சு. அதுக்கப்புறம் அவ்வளவுதான்."

"என்ன ஆச்சு?"

"கொஞ்சம் மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒத்து வரலைனு ஒதுங்கிட்டோம். ஒரு சின்ன விசயம்தான். அது பெரிய ஈகோக்ளாஸ் ஆயிடுச்சு. ஒரு மாதிரி ரிலேஷன்ஷிப் க்ராக் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் அதை ஒட்டவே முடியலை."

"ஏன்?"

"தெரியலை. நான் கொஞ்சம் காம்ளெக்ஸ் பர்சனாலிட்டிடா. சம்டைம்ஸ் ஐ ஜஸ்ட் வாண்ட் எ க்ளீன் கட். ஐ டோண்ட் வாண்ட் டு டீல் வித் எனிமோர். பிடிக்கலைனா ஒதுங்கிக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லததுதானே? எதுக்கு சும்மா ஜவ்வா இழுத்துக்கிட்டு?"

"ரொம்ப சென்ஸிடிவா நீங்க?"

"இல்லைடா. நான் எவ்வளவோ இறங்கிப்ப்போவேன். ஆனால் பிரச்சினைனு வரும்போது எல்லாமே என்னுடைய தவறுனுங்கிற மாதிரிப்பேசினாலோ, நினைத்தாலோ பிடிக்காது. ஏன் னா நான் பொதுவா அப்படிப் பண்ண மாட்டேன். ஒருத்தர் மேலே தப்பா இருந்தாலுமே. அந்த் சூழ்நிலையில் தப்பு இல்லைங்கிற மாதிரி சொல்லி ஆறுதலா இருப்பேன். தான் மட்டும் ரொம்ப பர்ஃபெக்ட்ங்கிற மாதிரி பேசினாலோ, பேசுறதுபோல இருந்தாலோ சுத்தமாகப் பிடிக்காது. ஐ அம் மோர் கம்ஃபர்டபிள் வித் ப்யூப்பிள் ஹு மேக்ஸ் மிஸ்டேக்ஸ். ரொம்ப பெர்ஃபட்டா இருக்கவங்களோட எல்லாம் நட்பா இருக்கிறது கஷ்டம், எனக்கு. அது எனக்கே லேட்டாதான் தெரியும். ப்ரியாதான் அந்த லெஸன் டீச் பண்ணியது."

"என்ன நீங்க, என்னை ரொம்ப பயமுறுத்தாதீங்க?"

"சரி, இதை விடுடா. ஐ ரியல்லி டோண்ட் வாண்ட் டு லுக் பேக். அவளை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகம் வந்தது. எப்படியோ "ஹாய்" சொல்லிட்டு ரெண்டு வார்த்தை பேருக்கு பேசிட்டு வந்துட்டேன். ஆனா கஷ்டமா இருக்கு.."

"தனியாத்தான் வந்து இருந்தாளா?"

"இல்லை, ஒரு ஹாண்சம் டூட் கூட இருந்தான். ஹஸ்பண்ட அல்லது பாய் ஃப்ரெண்டா இருக்கலாம். அவனுக்குக்கூட ஹாய் சொல்லல. அவ்வளவு ரொம்ப பேசலை . சரி, அதை விடு! ஒண்ணுமே நைட் ட்ரெஸ் எடுக்காமல வந்து இருக்க? நைட் இதே ஸ்கேர்ட் டாப்ஸோட தூங்கப்போறியா?"

"இதோட தூங்க முடியாது! நீங்க ஏதாவது எனக்கு ஃபிட் ஆகிறாப்பிலே பஜாமா வச்சிருப்பீங்க இல்லையா? அதை மாட்டிக்கலாம்ங்கிற நம்பிக்கைலதான் வந்தேன்."

"பஜாமாவா? அதெல்லாம் நான் போடுறது இல்லை! உனக்கு ரொம்ப பெரிய பட் டா, பிருந்த். பஜாமா இருந்தாலும் என் பஜாமா எல்லாம் உனக்கு ஃபிட் ஆகாது" னு அவள் பின்னால தட்டினான்.

"நான் என்ன ரொம்ப குண்டாவா இருக்கேன், கண்ணன்?'

"அப்படியா நான் சொன்னேன்? உன் ஹிப் எல்லாம் ந்ல்லா "தின்" னாத்தான் இருக்கு! மேலேயும் கீழேயும்தான் ரொம்ப பெருசா இருக்கு!"

"இதென்ன எனக்கு காம்ப்ளிமெண்டா?"

"இல்லையே.. என் பஜாமா உனக்கு ஏன் ஃபிட் ஆகாதுனு சொன்னேன்."

"அப்படியே என் உடம்பை வர்ணிச்சு ஐஸ் வைக்கனுமாக்கும்?"

"சரி, உனக்கு லுங்கி கட்டத்தெரியுமா? நான் ஒரு காட்டன் சர்ட் தர்றேன். அதையும் மேலே போட்டுக்கிட்டு லுங்கி கட்டிக்கோ! சரியா?"

"லுங்கியா? அதெப்படி கட்டுறது?"

"சேலை கட்டுவதைவிட ஈஸிதான். எதாவது ஆண்லைன்ல "டை" கட்டுறது இண்ஸ்ட்ரக்ஷன் இருக்க மாதிரி, லுங்கி கட்ட இஸ்ட்ரக்ஷன் இருக்கத்தான் செய்யும். யாராவது எக்ஸ்ப்ளையின் பண்ணி இருக்கானுகளானு பார்ப்போம்."

"நீங்களே கட்டி விடுறீங்களா, கண்ணன்?"

"லுங்கியா? உனக்கா?"

"ஆமா"

"மொதல்ல ஆண்லைன்ல தேடி எடுத்து உனக்கு "ப்ரிண்ட் அவுட்" எடுத்துத் தர்றேன். அதை ஃபாளோ பண்ணு! யு ஆர் ஸ்மார்ட். யு வில் லேர்ன் இன் நோ டைம்!'

"சரி ட்ரை பண்ணுறேன். முடியலைனா உங்க உதவி கட்டாயம் வேணும். இல்லைனா நேக்கடாத்தான் தூங்குவேன்"

"சரி, இங்கே வாவேன்!"

"வந்துட்டேன்!"

"உனக்காக ஒரு ட்வின் பெட் வாங்கி போட்டிருக்கேன், பாரு!"

"அதுலயா நான் மட்டும் தூங்கனும்?"

"ஆமா. நீ கன்னிப்பொண்ணு இல்லையா? அப்போத்தான் எந்த தொந்தரவும் இல்லாமல் நீ நிம்மதியா தூங்க முடியும்!"

"நான் உங்களோட இந்த குய்ன் சைஸ் பெட்லயே படுத்துக்கிறேனே? உங்களுக்கும் வார்ம்மா இருக்கும்."

"அதெல்லாம் வேணாம்!"

"உங்க ஹாஸ்பிட்டாலிட்டி நல்லாவே இல்லை. விருந்தினர் விருப்பப்படி நடக்கனும் கண்ணன்"

"அது சரி!"

-தொடரும்

No comments: